புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10 
58 Posts - 79%
heezulia
ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10 
10 Posts - 14%
E KUMARAN
ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10 
396 Posts - 79%
heezulia
ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10 
8 Posts - 2%
prajai
ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2015 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில்வே பட்ஜெட் 2015


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 26, 2015 6:11 pm

ரயில்வே பட்ஜெட் 2015: முக்கிய அம்சங்கள்

ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்ப்புக்கு இணங்க பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால், புதிய ரயில் அறிவிப்பு ஏதும் இடம்பெறவில்லை.

அதேவேளையில், ரயில் நிலையங்கள், ரயில்களின் சுகாதாரம், புதிய சேவை, வசதிகள் மற்றும் கட்டுமான மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், புதிய ரயில்கள் அறிவிக்கப்படாதது ஏன்? என்பது குறித்த விளக்கத்தை ரயில்வே அமைச்சர் தனது பட்ஜெட் உரையிலேயே வேளியிட்டார்.

2015- 16 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மக்களவையில் பகல் 12.10 மணிக்கு ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் அவரது நிர்வாகத் திறமையை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் - நிகழ்நேரப் பதிவுகள் வடிவில்:

13.15 PM: வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோர் வசதிக்காக வீல் சேர்களை ஆன்லைனில் புக் செய்து கொள்ளும் வசதி.

13.10 PM: விவசாயிகளுக்காக கிசான் யாத்ரா ரயில் சேவை துவக்கப்படும்.

13.05 PM: ரயில்வே கார்டுகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும்.

13.03 PM: முதியோர் ஊனமுற்றோருக்கு கீழ் படுக்கை வசதி கிடைக்க முன்னுரிமை.

13.02 PM: பெரு நகரங்கள் சாட்டிலைட் ரயில்வே முனையங்கள் அமைக்கப்படும்.

13.01 PM: 4 பல்கலைக்கழகங்களில், ரயில்வே ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.

12.59 PM: புதிய ரயில்களுக்கான அறிவிப்பு இல்லை.

12.58 PM: புறநகர் ரயில்களில் ஏ.சி. பெட்டிகள் அமைக்கப்படும்.

12.55 PM: பட்ஜெட் அளவு 52% அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. அதாவது இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் அளவு ரூ.1,11,000 ஆக உள்ளது.

12.50 PM: தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தடங்களில் பயணிக்கும் பயணிகள் ரயிலின் வேகம் மணிக்கு 110 கி.மீ-ல் இருந்து மணிக்கு 160 முதல் 200 கி.மீ.-வரைஅதிகரிக்கப்படும்.

12.47 PM: நாடு முழுவதும் 3438 ஆள் இல்லா லெவல் கிராஸிங்குகளை ஒழிக்க ரூ.6,750 கோடி ஒதுக்கப்படும்.

12.46 PM: 108 ரயில்களில் இ-கேட்டரிங் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட இந்த ரயில்களில் பயணிக்க முன் பதிவு செய்யும் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தங்கள் உணவுக்கான ஆர்டரையும் பதிவு செய்யலாம்.

12.45 PM: குறிப்பிட்ட சில ரயில்களில் பொது பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

12.42 PM: ரயில் புறப்படும், வரும் நேரம் குறித்து பயணிகள் மொபைல் போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.

12.41 PM: சிமென்ட், யூரியா, இரும்பு உள்ளிட்ட 15 வகையான பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான சரக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

12.40 PM: பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புறநகர் ரயில்களிலும், குறிப்பிட்ட தடங்களில் செல்லும் பயணிகள் ரயில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். | விரிவான செய்திக்கு - ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு புதிய திட்டங்கள் |

12.38 PM: நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் வை-ஃபை சேவை வழங்கப்படும்.

12.37 PM: பயணிகள் மேல் அடுக்கு படுக்கையில் சுலபமாக ஏற வசதியாக ரயில் பெட்டிகளில் மடக்கு ஏணி வழங்கப்படும்.

12.36 PM: அனைத்து ரயில்களிலும் பொது வகுப்புப் பெட்டிகளிலும் மொபைல் சார்ஜர் வசதி செய்யப்படும்.

12.36 PM: ரயிலில் பயணிக்கு பெண்கள் பாதுகாப்பான திட்டங்களுக்காக 'நிர்பயா நிதி' பயன்படுத்தப்படும்.

12.35 PM: இனிமேல் 60 நாட்களுக்கு பதிலாக 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யலாம்.

12.31 PM: ரூ.96,182 கோடி மதிப்பில் 9,400 கி.மீ உள்ளிட்ட இரு வழி / மூன்று வழி / நான்கு வழி பாதைகளுக்கான 77 திட்டங்களுக்கு ஒப்புதல். | விரிவான செய்திக்கு - ரூ.96,182 கோடியில் 77 புதிய ரயில்வே திட்டங்கள் |

12.31 PM: பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கான ஒதுக்கீட்டில் 67% அதிகரிப்பு

12.30 PM: முன் பதிவு செய்யாமல் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், ரயில் நிலையத்துக்குள் நுழையும் அடுத்த 5 நிமிடங்களுக்குள் ரயில் டிக்கெட்டை பெறுவதை உறுதி செய்யும் வகையில், 'ஆபரேஷன் 5- மினிட்' என்ற சேவை தொடங்கப்படுகிறது.

12.25 PM: பயணிகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை பதிவு செய்ய கட்டணமில்லா சேவை எண் '182' அறிமுகப்படுத்தப்படுகிறது.

12.24 PM: ரயில்வே உதவி எண் '138', அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

12.23 PM: ரயில்வே இருப்புப் பாதை தூரம் 20 % அதிகரிக்கப்படும்.

12.22 PM: தூய்மையான, சுகாதாரமான குடிநீர் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

12.21 PM: ரயில் நிலையம், ரயில் தூய்மையை மேம்படுத்த தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும்.

12.20 PM: 7000 கழிப்பறைகள் பயோ டாய்லட்டுகளாக தரம் உயர்த்தப்படும். பல்வேறு ரயில் நிலையங்களில் 650 கழிப்பறைகள் அமைக்கப்படும்.

12.20 PM: ரயில் நிலையங்களின் தூய்மையைக் கண்காணிக்க, மேம்படுத்த தனியாக ஒரு துறை உருவாக்கப்படும்.

12.15 PM: பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் சுரேஷ் பிரபு

12.15 PM: நாட்டின் மிகப் பெரிய பொதுப் போக்குவரத்து நிறுவனமான ரயில்வே துறையை பல்வேறு வகைகளிலும் மேம்படுத்த அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்பு கோரப்படுகிறது.

12.14 PM: அடுத்த 5 ஆண்டுகளில், ரயில்வே துறையில் ரூ.8.50 லட்சம் கோடி முதலீடு பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12.14 PM: அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

12.14 PM: அடுத்த ஐந்து ஆண்டுக்கான லட்சியம்:

1.வாடிக்கையாளர் சேவை மேம்படுத்தப்படும்.

2. ரயில் பயணிகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

3. ரயில்வே கட்டுமானம் நவீனப்படுத்தப்படும்.

4. ரயில் இருப்புப் பாதை தூரம் நீட்டிக்கப்படும்.

12.13 PM: ரயில்வே துறையை தொடர்ந்து முடக்கி வரும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.

12.12 PM: ரயில்வே துறையில் கட்டுமானம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். நிதிப் பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பல முடங்கிக் கிடக்கின்றன: அமைச்சர் தகவல்.

12.11 PM: ரயில்வே துறை இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்.

12.10 PM: 2015 - 16 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு மக்களவையில் பகல் 12.10 மணியளவில் தாக்கல் செய்தார்.

11. 46 AM: ரயில்வே துறையின் நீண்ட கால திட்டங்களையும், சாமான்ய மக்களின் எதிர்பார்ப்புகளையும் சமன் செய்யும் வகையில் ரயில்வே பட்ஜெட் அமையும்: சுரேஷ் பிரபு.

11.45 AM: ரயில் பயணிகள் பாதுகாப்பு, ரயில்வே கட்டுமானம் மேம்பாட்டில் இந்திய ரயில்வே துறை சர்வதேச தரத்துடன் முன்மாதிரியாக இருக்க வேண்டும்: சுரேஷ் பிரபு.

11.42 AM: ரயில்வே பட்ஜெட் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்.

11.40 AM: ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றத்துக்கு வந்தடைந்தார் அமைச்சர் சுரேஷ் பிரபு

11.30 AM: நாடாளுமன்றத்துக்கு வந்த அமைச்சர் சுரேஷ் பிரபு, "பயணத்தை சரியான பாதையில் துவக்க வேண்டும். கொல்கத்தா செல்ல வேண்டுமென்றால் கொல்கத்தா ரயிலில் ஏற வேண்டும்.

மாறாக சென்னை ரயிலில் அமர்ந்து கொண்டிருந்தால் எதுவும் நடக்காது. இது துவக்கம். இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. முதல் ஆண்டிலேயே எல்லா எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியாது" என்றார்.

11.00 AM: கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சியினர் அமளியால் மக்களவை அடுத்தடுத்து இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

10.50 AM: ரயில்வே பட்ஜெட் மீதான எதிர்ப்பார்ப்பினால் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் நேரத்தில் சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்ந்து 29,069.13. புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி 18.80 புள்ளிகள் உயர்ந்து 8,786.05 புள்ளிகளாக இருந்தது.




ரயில்வே பட்ஜெட் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 26, 2015 6:14 pm

பயணிகள் நலன் பேணும் ரயில்வே பட்ஜெட்: பிரதமர் பாராட்டு

இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட், பயணிகள் நலன் பேணும் வகையிலும், எதிர்கால நலனை உறுதி செய்யும் வகையிலும் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் மோடி கூறும்போது, "தேசத்தின் மிகப் பெரிய பொதுப் போக்குவரத்து அமைப்பான ரயில்வே துறையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி காணும் வகையில் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்ஜெட் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனை பட்ஜெட். ஏனெனில், வெறும் ரயில் அறிவிப்புகள் பற்றி பேசுவதில் இருந்து மாறுபட்டு ரயில்வே துறையின் சீர்த்திருத்தை முன்நிறுத்தி ஒரு முன்னுதாரண மாற்றத்துக்கு இந்த பட்ஜெட் வித்திட்டுள்ளது.

ரயில்வே பட்ஜெட்டில் முதன் முறையாக தொழில்நுட்ப மேம்பாடு, நவீனப்படுத்துதல் தொடர்பாக திடமான தொலைநோக்கு அறிவிப்புகள் வெளியாகியிருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

சாமானிய மக்கள் மீதான அக்கறையுடன் ரயில்வே பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பு, வாடிக்கையாளர் சேவை, ரயில்களின் வேகம் என அனைத்தும் ஒரே இருப்புப் பாதையில் நிறுத்தப்பட்டுள்ள பட்ஜெட் இது" இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.



ரயில்வே பட்ஜெட் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 26, 2015 6:15 pm

'கனவு' காணும் ரயில்வே பட்ஜெட்: காங்., திரிணமூல் கருத்து

தொலைநோக்குப் பார்வையில்லாத, புதிய திட்டங்கள் இல்லாத வகையில் ரயில்வே பட்ஜெட் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தினேஷ் திரிவேதி ஆகிய இருவரும் 'ரயில்வே பட்ஜெட் கனவு போல் உள்ளது. அதில் உறுதியான அறிவிப்புகள் ஏதும் இல்லை' என தெரிவித்துள்ளனர். இருவருமே ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகக்து.

நாடாளுமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, "பட்ஜெட் உரை நேர்த்தியான வார்த்தைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் தொலைநோக்குப் பார்வையில்லை.

ரயில்வே அமைச்சர் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும், பில்ட் ஆபரேட் டிரான்ஸ்பர் முறை ஊக்குவிக்கப்படும் என பேசியிருக்கிறார். அடுத்தவரை நம்பியிருந்தால் எப்படி இலக்குகளை அடைய முடியும். புதிய ரயில்கள் அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. வளர்ச்சி என்பது குட்டையில் நிற்கும் தேங்கிய நீர் போல் இல்லாமல் தெளிவான நீரோட்டமாக இருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

தினேஷ் திரிவேதி கூறும்போது, "பட்ஜெட் என்ற பெயரில் கனவுகளைப் பற்றி பேசியிருக்கிறார் அமைச்சர். நிலாவுக்கு செல்ல வேண்டும் என்பது கனவு, எப்படிச் செல்வது என்பதே திட்டம். இங்கு கனவு சொல்லப்பட்டிருக்கிறது. கனவை நனவாக்க திட்டம் ஏதுமில்லை. கஜானா காலியாக இருக்கும் ஏர் இந்தியா பாதையில் ரயில்வே துறையும் சென்று கொண்டிருக்கிறது" என்றார்.

பிஜு ஜனதா தள கட்சித் தலைவர் தத்தகாடா சட்பதி கூறும்போது, "ரயில்வே பட்ஜெட் வெற்றறிக்கை. ஏமாற்றம் அளிக்கும் அறிக்கை. 10-க்கு 2 மதிப்பெண்கள் மட்டுமே தருவேன். ரயில்வே அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை முன்வைத்தார். ஆனால், அவற்றை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை சொல்லாமல் விட்டுவிட்டார்" என்றார்.



ரயில்வே பட்ஜெட் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 26, 2015 6:15 pm

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்குக: விஜயகாந்த்

நிலுவையில் உள்ள தமிழகத்தின் அனைத்து ரயில்வே திட்டங்களுக்கும் போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசின் 2015-2016 நிதி ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட மாட்டது என்பதும், ஏழை எளிய மக்களின் பயணத்திற்கு ஏதுவாக பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்பதும், பெண்களின் பாதுகாப்பிற்கும் மற்றும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கும், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்பதும், முன்பதிவு கால அவகாசத்தை 120 நாட்களாக நீடித்ததும், பயணிகளின் வசதிக்காக 67 சதவிகிதம் கூடுதல் நிதி ஒதுக்கியதும், ரயில் பெட்டிகளின் உள்கட்டமைப்பில் நவீன மாற்றங்கள் செய்வதும் வரவேற்கத்தக்கதாகும்.

ரயில் பாதைகளை மேம்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 8.5 லட்சம் கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரயில்வே துறைக்கு தேவையான நிதியை ஒதுக்க, நிதிஅமைச்சகத்திற்கு சிரமம் இருப்பதாகவும், அதற்காக வேறு வழியில் நிதி திரட்டப்படும் என்று அறிவித்திருப்பது, ரயில்வேயை தனியார் மயமாக்குவதற்கு முன்னோடியாக இருக்குமோ என்ற ஐயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களின் தூய்மை வசதி தனியார் மயம் ஆக்கப்படும் என்று சொல்லியிருப்பதே இச்சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. தமிழகத்திற்கென புதிய திட்டங்கள் ஏதும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

மேலும், நாடு முழுவதும் 96 ஆயிரம் கோடி மதிப்பில் 77 திட்டங்கள் விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, சர்வே முடிந்த நிலையில் சென்னை-ஸ்ரீபெரும்பதூர், மதுரை-கோட்டயம் உள்ளிட்ட சுமார் 24 திட்டங்கள் கைவிடப்பட உள்ளதாகவும், பணி நடந்து வரும் நிலையில் சென்னை-கடலூர், பழனி-ஈரோடு உள்ளிட்ட சுமார் 9 திட்டங்கள் கைவிடப்பட உள்ளதாகவும் பல்வேறு செய்திகள் வருகின்றன. இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து இத்திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தமிழகத்தில் தற்போது நடந்து வரும் சென்னை-கன்னியாகுமரி இரட்டை ரயில்பாதை திட்டம் உள்ளிட்ட பல ரயில் பாதை திட்டங்களுக்கு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், இதுவரையிலும் அத் திட்டங்களுக்காக சுமார் 700 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மிகக் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி "யானைப்பசிக்கு சோளப் பொரியாகத்தான்" இருந்துள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட நிலுவையில் உள்ள தமிழகத்தின் அனைத்து ரயில்வே திட்டங்களுக்கும், போதுமான நிதியை ஒதுக்கி இவற்றை நிறைவேற்ற உதவுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.



ரயில்வே பட்ஜெட் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 26, 2015 6:16 pm

காகித அறிவிப்பாக காட்சி தருகிறது ரயில்வே பட்ஜெட்: வைகோ

எதிர்பார்ப்புகளுடன் இருந்த மக்களுக்கு, ரயில்வே பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்து இருக்கின்றது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2014 ல் பா.ஜ.க. அரசு பதவி ஏற்ற உடனேயே பயணிகள் கட்டணம் 14.2 விழுக்காடு, சரக்குக் கட்டணம் 6.5 விழுக்காடு உயர்த்தப்பட்டது. தற்போது பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 60 விழுக்காடு சரிந்துள்ள நிலையில், பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணத்தைக் குறைப்பதற்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முயற்சிக்கவில்லை.

ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு ஐந்து ஆண்டுகளில் 8.5 இலட்சம் கோடி ரூபாய் நிதி ஆதாரம் தேவை என்றும், தனியார ்- அரசு பங்கேற்புடன் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துவிட்டு, ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படாது என்று கூறுவது முரணாக இருக்கிறது.

ரயில்வே துறையின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அந்நிய நேரடி முதலீடுகளும் பெறப்படும் என்று அறிவித்து இருப்பதால், உண்மையில் ரயில்வே துறை தனியார் மயம் நோக்கிப் போய்க்கொண்டு இருப்பது தெளிவாகிறது.

பிரதமர் மோடி அறிவித்துள்ள ‘தூய்மை இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம்’ ஆகிய திட்டங்களுக்கு ரயில்வே முன்னுரிமை கொடுக்கும் என்று ரயில்வே அமைச்சர் கூறுகிறார். ஆனால், இத்திட்டங்களை முழுக்கமுழுக்கத் தனியார் துறையின் பங்கேற்பில் மட்டுமே நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்த அவசரச் சட்டம் கொண்டு வந்த மோடி அரசு, அதே நோக்கத்திற்காக ரயில்வே துறையின் நிலங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் ஆபத்து உருவாகி இருக்கின்றது.

தமிழ்நாட்டின் இன்றியமையாத தேவைகளான இராயபுரத்தில் புதிய முனையம் அமைப்பது, சென்னை-கன்னியாகுமரி இரட்டை வழிப்பாதை, அகலப்பாதைத் திட்டங்கள், ஆய்வு செய்யப்பட்ட புதிய வழித்தடங்கள் அமைத்தல், தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் புதிய ரயில் சேவை, மற்றும் புறநகர் ரயில்சேவை விரிவாக்கம் போன்றவை குறித்து இந்த ரயில்வே பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் பற்றி அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று ரயில்வே அமைச்சர் குறிப்பிட்டு இருப்பது, இதுவரையில் இல்லாத நடைமுறை ஆகும்.

ரயில்வே திட்டங்களுக்காக மாநிலங்கள், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து கையேந்த வேண்டிய நிலைமையை மோடி அரசு உருவாக்கி உள்ளது.

ரயில்வே துறை மேம்பாட்டுக்காக வங்கிக் கடனுடன், லட்சக்கணக்கான ஊழியர்களின் ஓய்வூதிய நிதியைத் திருப்பி விடுவது ஏற்கத்தக்கது அல்ல.

ரயில்வே துறையை நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்துதல், பயணிகள் குறை தீர்க்க இலவச தொடர்பு எண்கள் அறிவிப்பு, இணைய வழி சேவைகள் அறிவிப்பு போன்றவற்றை வரவேற்கலாம்.

ரயில்வே துறையின் மூலம் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்தல், ரயில் நிலையங்களைத் தூய்மைப்படுத்துதல், பசுமைக் கழிவறைகள் ஏற்படுத்துதல், பெண் பயணிகள் பாதுகாப்பு, முக்கிய ரயில் நிலையங்களில் வைஃபை வசதி, குறைந்த விலையில் தரமான குடிநீர் விற்பனை போன்றவை அனைத்தும் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்று இருந்தன. ஆனால், நடைமுறைக்கு வரவில்லை.

மொத்தத்தில் ரயில்வே பட்ஜெட், காகித அறிவிப்பாகவும், கானல் நீராகவும் காட்சி அளிக்கின்றது.'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.



ரயில்வே பட்ஜெட் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 26, 2015 6:17 pm

புதிய ரயில்கள் அறிவிக்கப்படாதது ஏன்?- ரயில்வே பட்ஜெட்டில் அமைச்சர் விளக்கம்

புதிய ரயில்கள் அறிவிக்கப்படாது குறித்து ரயில்வே பட்ஜெட்டில் அமைச்சர் சுரேஷ் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

2015-16-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில் அறிவிப்பு ஏதும் இடம் பெறதாது குறித்து அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பட்ஜெட் உரையில் கூறும்போது, "புதுப்பிக்கப்பட்டு வரும் ரயில்வே இருப்புப் பாதை பணிகள் நிறைவு பெற்றால்தான் புதிய ரயில்களை இயக்குவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள முடியும்.

ரயில்வே இருப்புப் பாதை அதிகளவில் பயன்படுத்தப்படுவது, புதிய இருப்புப் பாதைகள் பணி தேக்கமடைந்துள்ளது, வேகக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஆகியன புதிய ரயில்களை அறிவிப்பதில் சிக்கல் ஏற்படுத்தியுள்ளன.

எனவே, இந்த ஆய்வு முடிந்த பிறகு நடப்பு கூட்டத்தொடரிலேயே புதிய ரயில்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்" என்றார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.

ரயில்வே பட்ஜெட்டில் தங்கள் மாநிலத்துக்கு புதிய ரயில்களை அறிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் குவிந்திருந்த வேளையில் முதல் முறையாக புதிய ரயில் அறிவிப்பு இல்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் அமைச்சர் சுரேஷ் பிரபு.



ரயில்வே பட்ஜெட் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 26, 2015 6:19 pm

ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு புதிய திட்டங்கள்

ரயில்வே பாதுகாப்பு தொடர்பான முக்கிய திட்டங்கள் சிலவற்றை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று வெளியிட்டார்.

2015 - 16 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்தார்.

அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பட்ஜெட் உரையில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான வெளியிட்ட அறிவிப்புகள்:

ரயில் பாதைகளில் பாதுகாப்பு எச்சரிக்கை முறை, மோதல் தவிர்ப்பு முறை

* குறிப்பிட்ட ரயில் பாதைகளில் ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை முறை, ரயில்கள் மோதல் தவிர்ப்பு முறைகளை அமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதனை விரைவில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

* ரயில் பெட்டிகளில் தீ பிடிப்பதைத் தடுக்கவும், விபத்துக்களின்போது ரயில் பெட்டிகள் ஒன்றின் மேல் ஒன்று மோதுவதை தடுக்கவும் புதிய முறைகளை கண்டுபிடிக்குமாறு ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர நிலைகள் அமைப்பிணை கேட்டுக்கொண்டுள்ளது.

* ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குளாகும் சம்பவங்களைத் தடுப்பதற்காக முதன்மை பாதைகளைப் புதுப்பிக்கும் அதேநேரம், கனமான தண்டவாளங்கள் கொண்ட நவீன பாதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிறந்த வெல்டிங் தொழில்நுட்பங்களும் ஊக்குவிக்கப்படுகிறது.

மேலும், தண்டவாளங்களைச் சோதனை செய்ய அனலாக் இயந்திரங்களுக்கு பதிலாக மிகவும் நம்பகமான டிஜிட்டல் வகை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

* பெண் பயணிகள் பாதுகாப்பை அதிகரிக்க இந்திய ரயில்வே நிருபயா நிதியை உபயோகிக்கும். பெண் பயணிகள் பாதுகாப்புக்காக அவர்களின் சுயமரியாதை பாதிக்காத வகையில், கண்கானிப்பு கேமராக்கள் குறிப்பிட்ட ரயில் பெட்டிகளிலும் புறநகர் ரயில்களின் பெண்கள் பெட்டிகளிலும் பொறுத்தப்படும்.

பயணிகள் குறைதீர்க்க 138 - 24 மணி நேர உதவி

அனைத்து பயணிகளின் குறைகளைத் தீர்க்கும் '138' என்ற 24 மணி நேர உதவி தொலை பேசி எண் செயல்படுத்தப்படும். ரயில் பயணம் செய்யும்போது, பயணிகளுக்கு ஏதேனும் குறை ஏற்பட்டால் இந்தத் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.

மார்ச் 1, 2015 முதல் வடக்கு ரயில்வேயில் இதனை முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளிடமிருந்து பெறப்படும் ஆலோசனைகளின்படி இது பிற ரயில் நிலையங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

பாதுகாப்பு குறித்த குறைகளுக்கு '182' என்ற கட்டணம் இல்லாத தொலை பேசி எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்று அமைச்சர் தெரிவித்தார்.



ரயில்வே பட்ஜெட் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 26, 2015 6:20 pm

நல்ல விரிவான பதிவு சிவா, நன்றி ! புன்னகை
.
.
.
நாம் முதல் பதிவு மட்டும் தான் படித்தேன்....அதற்குள் இவ்வளவு போட்டுவிட்டிர்கள் புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 26, 2015 6:25 pm

ரூ.96,182 கோடியில் 77 புதிய ரயில்வே திட்டங்கள்

9400 கி.மீ தூரத்துக்கு இரு வழி / மூன்று வழி / நான்கு வழி பாதைகளுக்கான 77 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே பட்ஜெட்டில் அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

2015 - 16 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்தார்.

அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பட்ஜெட் உரையில், "நாட்டின் கடைகோடி எல்லை வரை ரயில் இணைப்பு அமைக்கும் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 7000 கி.மீ இரண்டு / மூன்று / நான்கு வழி தடங்களை அமைப்பதற்க்கான ஒப்புதல் பெற்ற திட்டங்களை விரைவு படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2015 - 16ல் 1200 கிலோமீட்டர் அளவிலான ரயில் தடங்கள் ஏற்படுத்தப்படும். மூலதன முதலீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி கடந்த ஆண்டில் அளிக்கப்பட்டதைவிட 84 சதவீதம் அதிகமாகும்.

800 கிலோமீட்டர் தூரத்துக்கு ரயில்வே பாதையை மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். 9400 கி.மீ உள்ளிட்ட இரு வழி / மூன்று வழி / நான்கு வழி பாதைகளுக்கான 77 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை மின்மயமாக்குதலுடன் சேர்த்து இந்த திட்டங்களுக்கு மொத்தம் ரூ.96,182 கோடி செலவாகும். கடந்தத இரு நிதி ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட இது 2700% அதிகமாகும்.

பாதைகளில் உள்ள நெரிசல்களை அகற்றுதல், அதிக வருவாய் ஈட்டுதல், கொள்திறனை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு இந்த திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை நியமிக்கப்பட்டுள்ள குழு உறுதி செய்யும். இந்த திட்டங்கள் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்" என்று அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.



ரயில்வே பட்ஜெட் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக