ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை - by krishnaamma :)

+3
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குழந்தை - by krishnaamma :) Empty குழந்தை - by krishnaamma :)

Post by krishnaamma Thu Feb 26, 2015 5:55 pm

அருணும் விசாலியும் மனமொத்த தம்பதிகள். கல்யாணம் ஆகி 6 வருடங்கள் ஆகியும் குழந்தை பேறு கிடைக்கலை என்கிற மனவருத்தம் விசாலிக்கு உண்டு. என்றாலும் சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள். பேப்பரிலும்,  மற்றவர்களும் சொல்வதைக்கேட்டும்  விசாலி தாங்களும் கருத்தரிப்பு மையத்துக்கு  சென்று, குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டாள்.

"வாழ்க்கை என்றால் அது குழந்தை மட்டும் இல்லை விசாலி, குழந்தை ஒரு பகுதி தான், நாம் நம் பார்வையை விசாலமாக்கி வைத்துக்கொண்டால் பலதும் தெரியும்...........மேலும், நாம் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்யலை , எனவே, நமக்கு எப்போ எது கொடுக்கணும் என்று பெருமாளுக்குத் தெரியும்....... ஸோ,  எப்போ வேண்டுமானாலும் நமக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.............கவலைப்படாதே"............. நீ சொல்லும் treatement .... அது கொஞ்சம் 'ரிஸ்க்' என்று கணவன் சொன்னதையும்,  தன் கெஞ்சல் கொஞ்சல் என்று கொஞ்சமாய் அடம் பிடித்து அவனையும் சம்மதிக்க வைத்தாள்.

ஆச்சு டாக்டரிடம் போய் செக் அப்  செய்து கொண்டார்கள்,  அவர்கள் சொன்னபடி நாட்களை தேர்ந்து எடுத்து சிகிச்சை பெற்றுக் கொண்டார்கள். பல மாத போராட்டம், பல லக்ஷம் பண செலவு எல்லாம் ஆனது. அதன் விளைவு இதோ இன்று காலை விசாலி ஒரு ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள். ஏதோ உலகையே வென்றது போல உணர்ந்தாள்.

வீடே மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தது. ஆனால் ஒன்று தான் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது...குழந்தையை பார்க்க வந்தவர்கள் அனைவரும் ஒன்று போல " என்னடி இது, உங்க யார் ஜாடையுமே இதுக்கு இல்லையே'? என்றார்கள்.

ஆனால் விசாலி இன் அம்மா , பிறந்ததும் தெரியாது.....கொஞ்ச நாள் போகணும் " என்று சொன்னாள். ஆனாலும் நாள் தான் போச்சே தவிர ஜாடை வரக்காணும்....விசாலிக்கு ரொம்ப பயமாய் இருந்தது...'அவள் விகடனில்'   படித்த செய்திகள் நினைவுக்கு வந்தது.

//''பெண்ணின் கருமுட்டை உற்பத்தியைத் தூண்டுகிறேன் என்று அளவுக்கதிகமான ஹார்மோன் ஊசிகள் போடுவதும், மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும்... சினைப்பை புற்றுநோயை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, முடிந்தவரை இதையெல்லாம் தவிர்ப்பதுதான் நல்லது. 'குழந்தை இல்லை என்பது ஒரு குறையே இல்லை' என்கிற மனநிலைக்கு வருவதுதான்... சம்பந்தபட்ட பெண்ணின் உடல்நிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை சிந்தித்து உணரவேண்டும். சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றிருக்கும் தம்பதியருக்கும், இப்போது பரவலாக எழும் விந்தணு மாறுதல் பற்றிய விழிப்பு உணர்வு தேவை. அதாவது டெஸ்ட் டியூப் முறையில் கருத்தரித்தவர்கள், அந்தக் குழந்தை சம்பந்தப்பட்ட தம்பதியின் வாரிசுதானா என்பதை 'டி.என்.ஏ' (DNA) பரிசோதனை மூலம் தெரிந்துகொள்வது, தேவையற்ற சந்தேகம் எழுவதை ஆரம்பத்திலேயே தவிர்க்கும்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மருத்துவர் பிரியதர்ஷினி.//

இது நினைவுக்கு வந்ததும், விசாலிக்கு பயம் அதிகமானது, கணவனிடம் சொல்லவும் பயம். ஏற்கனவே இதுல  நிறைய 'ரிஸ்க்' இருக்கு என்றான்......அப்போ ஒரு மூடில் 'ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல' என்று அவனை கலாட்டா செய்து சிரித்ததும் நினைவுக்கு வந்தது அவளுக்கு. இப்போ என்ன செய்வது என்று குழம்பினாள்.

எவ்வளவு நாள் தான் அவனும்  இந்த 'ஜாடை' விஷயத்தை கவனிக்காதது போல இருப்பான்?.....அவனிடமும் எல்லோரும்  கேட்கிறார்களே?................ ஒருநாள் வேறு ஏதோ பேச்சில் இது வெளியே வந்து விட்டது..........."முளைத்து மூணு  இலை விடலை..........அடத்தை பார்............ சொன்னா கேட்பதில்லை உன்னைப்போலவே இருக்கான் உன் பிள்ளை..... என் பிள்ளையானால் கேட்பான்" என்று சொல்லி விட்டான். இது எல்லோர் வீடுகளிலும் நடப்பது தான், பிள்ளை சொல்பேச்சு கேட்டால் என் பிள்ளை என்பதும் கேட்கா விட்டால்  உன் பிள்ளை என்பதும்.ஆனால் இங்கு ஏற்கனவே கொஞ்சம் குழப்பம் இருந்ததால், சாதாரண பேச்சு அசாதாரணமாகவும், அர்த்தம், அனத்தமாகவும்  ஆனது............... விளைவு?............ விபரீதம் ஆனது.

இருவரும் குழந்தையின் DNA  செக் செய்ய போனார்கள்....................ரிசல்ட் ......அருணுடையது போல இல்லை ......அவ்வளவுதான்.....வானுக்கும் பூமிக்கும் குதித்தான் அருண்............டாக்டரிடம் கேட்டால், நீங்க அம்மா தானே அந்த குழந்தைக்கு அது போராதா.....இப்படி எப்போதாவது தவறு  நடக்கும் தான் என்று சொல்லி விட்டாள்.

அவள் மேல் கேஸ் போடுவது என்று முடிவு செய்தார்கள்....அந்த டாக்டர் அதற்கு பயப்படவே இல்லை, போடுங்கள் என்றுசொல்லி விட்டாள். .......ஆனால் குழந்தை?????????????இதை என்ன செய்வது?...........விசாலியால் குழந்தையை விடவும் முடியவில்லை, கணவனையும் விட முடியலை.....இருதலை  கொள்ளி எறும்பு போல ஆனாள்............வீட்டில் நிதமும் எப்படி இருப்பது?...கணவன் தன்னை வெளியே அனுப்பிவிடுவானா? .............அல்லது குழந்தையை எங்காவது சேர்த்து விடுவானா?...தெரியலை...............

குழம்பித் தவித்துக் கொண்டிருந்த போது ஏதோ ஒரு மணி சத்தம் இடைவிடாமல் ஒலித்தது............தொடர்ந்து தன்னை அன்புடன் கூப்பிடும் அருண் குரலும் கேட்டது.............இவ்வளவு அன்பாய் இவர் கூப்பிட்டு எத்தனை நாளாகிவிட்டது என்று நினைத்தவாறே கண்விழித்தால் விசாலி.

"என்னம்மா, ரொம்ப துக்கமா? இன்று டாக்டர் வீட்டுக்கு போக வேணாமா?...................மறந்துட்டியா?...கிளம்பணுமே, எழுந்திரு சீக்கிரம்".............என்றான் அருண்...........

இவளுக்கு தூக்கி வாரி போட்டது.......எதுக்கு டாக்டர் என்று, சுற்றும் முற்றும் பார்த்தாள்......'குழந்தை' என்றாள்........." ஆமாம், அதுக்குத்தானே apointment  வாங்கி இருக்கோம்".என்றான் அருண்.

சுயநினைவுக்கு வர 2 நிமிடம் பிடித்தது விசாலிக்கு.......'கடவுளே! அத்தனையும் கனவா?.............அப்படிஎன்றால்'..........இன்னும் நாம் டாக்டரிடமே போகலையா? என்றாள் கணவனிடம்.

அவன் கேட்டான்" என்ன ஆச்சு உனக்கு" ?...........என்று.

அவள் பெருமுச்சு விட்டவாறே, " வேண்டாங்க, நமக்கு எப்போ எது தரணும் என்று அந்த பெருமாளுக்கு தெரியும், வலுவில் போய் நாமே எடுத்துக்கொண்டால் பிரச்சனை தான் வரும் என்று புரிந்து கொண்டேன்" என்று சொல்லி தன் கனவை சொன்னாள்.

"இவ்வளவு அன்பான கணவனையும் குடும்பத்தையும் ஒரு குழந்தைக்காக இழக்க மாட்டேன்..எல்லோருக்கும் இப்படி ஆகும் என்றுசொல்லலை, இப்படி ஆகிவிட்டால்?..நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது ".என்று சொன்னாள், அருண் அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டான்.

படுக்கை இல் அவள் இரவு படித்த அவள் விகடன் இருந்தது புன்னகை

கிருஷ்ணாம்மா புன்னகை

பி.கு.: டாக்டர் இப்படி சொன்னது நிஜம்....எங்களின் friend  வீட்டில் நடந்திருக்கு இப்படி சோகம்  "நீங்க அம்மா தானே அந்த குழந்தைக்கு அது போராதா.....இப்படி எப்போதாவது தவறு  நடக்கும் தான் என்று சொல்லி விட்டாள். "


Last edited by krishnaamma on Sat Feb 28, 2015 11:27 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தை - by krishnaamma :) Empty Re: குழந்தை - by krishnaamma :)

Post by T.N.Balasubramanian Thu Feb 26, 2015 7:52 pm

நடைமுறையில் நடக்க சாத்யகூருகள் உண்டு என்பதை அழகாக சொல்லிருக்கிறீர்கள் .
நன்றாக உள்ளது .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குழந்தை - by krishnaamma :) Empty Re: குழந்தை - by krishnaamma :)

Post by krishnaamma Thu Feb 26, 2015 8:21 pm

T.N.Balasubramanian wrote:நடைமுறையில் நடக்க சாத்யகூருகள் உண்டு என்பதை அழகாக சொல்லிருக்கிறீர்கள் .
நன்றாக உள்ளது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1122966

நிஜம் ஐயா ..............நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தை - by krishnaamma :) Empty Re: குழந்தை - by krishnaamma :)

Post by ஜாஹீதாபானு Fri Feb 27, 2015 2:26 pm

வாவ் சூப்பர் மா ... இப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்கு தான்.... சாதாரண டெஸ்ட்டையே மாத்தி குடுத்த்துறாங்க ...

குழ்ந்தை விசயத்தில் கவனமா இருக்கணும். இல்லனா வில்லங்கம் வீடேறி வந்துடும்....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குழந்தை - by krishnaamma :) Empty Re: குழந்தை - by krishnaamma :)

Post by விமந்தனி Sat Feb 28, 2015 10:23 pm

கதை மிகவும் அருமை கிருஷ்ணாம்மா. தற்போது குழந்தை வரம் வேண்டி பணத்தையும், நிம்மதியையும் தொலைத்து கொண்டிருக்கும் தம்பதியருக்கு விழிப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது உங்கள் கதை. விஷயத்தின் விபரீதத்தை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு இதை படிக்கும் போது 13 வருடங்களுக்கு முன் நடந்த ஒன்று நினைவுக்கு வருகிறது.

சீக்கிரமே அதையும் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வருகிறேன்.


குழந்தை - by krishnaamma :) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுழந்தை - by krishnaamma :) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குழந்தை - by krishnaamma :) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

குழந்தை - by krishnaamma :) Empty Re: குழந்தை - by krishnaamma :)

Post by Dr.S.Soundarapandian Sat Feb 28, 2015 10:43 pm

குழந்தை - by krishnaamma :) 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

குழந்தை - by krishnaamma :) Empty Re: குழந்தை - by krishnaamma :)

Post by சிவா Sat Feb 28, 2015 11:01 pm

பெண்ணின் கருமுட்டை உற்பத்தியைத் தூண்டுகிறேன் என்று அளவுக்கதிகமான ஹார்மோன் ஊசிகள் போடுவதும், மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும்... சினைப்பை புற்றுநோயை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு.

கதையிலும் சிறந்த கருத்தைத் தெரிவித்துள்ளீர்கள் அக்கா! மிக அருமை!

கதையில் ஏகப்பட்ட சிக்கல்கள் வரப்போகிறது என்று நினைத்துப் படித்துக் கொண்டிருக்கும்போதே அது கனவு என்று தெரிந்ததும் மனம் சற்று ஆறுதலானது!

மிகவும் அருமை! சமையலரசி என்ற நிலை மாறி இப்பொழுது கதையரசி ஆகிவிட்டீர்கள்! பாராட்டுக்கள் அக்கா!

உங்களின் கதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடுங்கள் அக்கா!


குழந்தை - by krishnaamma :) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தை - by krishnaamma :) Empty Re: குழந்தை - by krishnaamma :)

Post by krishnaamma Sat Feb 28, 2015 11:18 pm

விமந்தனி wrote:கதை மிகவும் அருமை கிருஷ்ணாம்மா. தற்போது குழந்தை வரம் வேண்டி பணத்தையும், நிம்மதியையும் தொலைத்து கொண்டிருக்கும் தம்பதியருக்கு விழிப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது உங்கள் கதை. விஷயத்தின் விபரீதத்தை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு இதை படிக்கும் போது 13 வருடங்களுக்கு முன் நடந்த ஒன்று நினைவுக்கு வருகிறது.

சீக்கிரமே அதையும் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வருகிறேன்.

நன்றி விமந்தனி........உங்களின் பகிர்வுக்காக காத்திருக்கிறேன் புன்னகை ............ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தை - by krishnaamma :) Empty Re: குழந்தை - by krishnaamma :)

Post by krishnaamma Sat Feb 28, 2015 11:18 pm

Dr.S.Soundarapandian wrote:குழந்தை - by krishnaamma :) 1571444738

நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தை - by krishnaamma :) Empty Re: குழந்தை - by krishnaamma :)

Post by ayyasamy ram Sat Feb 28, 2015 11:20 pm

ஜாஹீதாபானு wrote:வாவ் சூப்பர் மா ... இப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்கு தான்.... சாதாரண டெஸ்ட்டையே மாத்தி குடுத்த்துறாங்க ...

குழ்ந்தை விசயத்தில் கவனமா இருக்கணும். இல்லனா வில்லங்கம் வீடேறி வந்துடும்....
மேற்கோள் செய்த பதிவு: 1123100
-
ரொம்ப சரி...
-
கதை... குழந்தை - by krishnaamma :) 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குழந்தை - by krishnaamma :) Empty Re: குழந்தை - by krishnaamma :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» 10 மாத ஆண் குழந்தை கடத்தல் - சென்னையில் தொடரும் குழந்தை களவு
» ஒரு வயது குழந்தை வயற்றில் மற்றும் ஒரு குழந்தை
» குழந்தை விருதை பெரும் 3 வயது குழந்தை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum