ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ மாணவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு

Go down

மருத்துவ மாணவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு Empty மருத்துவ மாணவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு

Post by Powenraj Wed Feb 25, 2015 2:37 pm

'ஈ.எஸ்.ஐ என்பது தொழிலாளர் நலனுக்கான மருத்துவ உதவிகளை வழங்கும் கழகம். இதன் நோக்கம் மருத்துவக் கல்வி அளிப்பது அல்ல; எனவே, இதன்கீழ் செயல்படும் கல்லூரிகளை நடத்த முடியாது’ என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, அந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மருத்துவ மாணவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு Da0LxJrJRXyrDysiHxs8+p40

கடந்த வாரம் மத்தியத் தொழிலாளர் நல இணை​அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவை, டெல்லியில் அவருடைய அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர் தமிழக மாணவர்கள். தமிழகத்தில் மட்டுமல்லாது டெல்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஹரியானா ஆகிய இடங்களிலும் மாணவர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சென்னை ஈ.எஸ்.ஐ கல்லூரி மாணவர்களைச் சந்தித்தோம்.

மருத்துவ மாணவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு LEYZCoT0S0WojOXSx4VE+p40a

''ஈ.எஸ்.ஐ கழகம் தொழிலாளர்களுக்கு மருத்துவச் சேவை அளிப்பதற்காக அவர்களிடம் இருந்து பெறப்பட்ட நிதிமூலம் தொடங்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஈ.எஸ்.ஐயின் கீழ் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் நர்சிங், பல் மற்றும் பொது மருத்துவத்துக்காக 13 மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2011-ம் ஆண்டு சென்னையில் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் தொழிலாளர் காப்புறுதி திட்ட கழகத்தின் 163-வது கூட்டத்தில், 'மருத்துவ சேவைதான் எங்களுக்கு முக்கியம். இனி, புதிதாக எந்த ஒரு ஈ.எஸ்.ஐ கல்லூரிகளும் தொடங்கப்படாது. ஏற்கெனவே, இருக்கும் கல்லூரிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை இருக்காது’ என்ற அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு. இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள், நாடு முழுவதும் உள்ள ஈ.எஸ்.ஐ கல்லூரிகளில் போராட்டத்தைத் தொடங்கினோம். இதன் காரணமாக 'இந்தக் கல்லூரிகளை ஏற்று நடத்த, மாநில அரசுக்குப் பரிந்துரைக்கிறோம்’ என்று ஜனவரி 31-ம் தேதி வரை கெடு அளித்தனர். ஆனால், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. டெல்லியில் மத்திய இணையமைச்சரைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தோம். இருந்தும் 18-ம் தேதி நடந்த ஈ.எஸ்.ஐ கழகத்தின் 164-வது கூட்டத்திலும் எங்களின் கோரிக்கைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவேதான் நாங்கள் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம்'' என்றார் ஈ.எஸ்.ஐ கல்லூரி முதுகலை மாணவி வீணா வேதனையுடன்.

மருத்துவ மாணவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு Q3v1YJyhR2Kwq7eO2yAE+p41

இளங்கலை மாணவரான பாலாஜி, ''இந்தக் கல்லூரியில் முதுகலை, இளங்கலை இரண்டையும் சேர்த்து மொத்தம் 228 பேர் படித்து வருகிறோம். 12 பேர் முதுகலைப் படிப்பு முடித்து ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கும் தக்க சான்றிதழ் வழங்கப்படவில்லை. மத்திய அரசின் தற்போதைய முடிவால் எங்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்தக் கல்லூரிகள் மூடப்பட்டால், இந்தியா முழுவதும் உள்ள பல ஈ.எஸ்.ஐ கல்லூரி மாணவர்களின் படிப்பு விரயமாகும். எங்களின் கோரிக்கை என்னவென்றால், இந்தக் கல்லூரிகளை மத்திய அரசோ, மாநில அரசோ நடத்த வேண்டும் என்பதுதான். முதலில் கல்லூரியை நாங்கள் ஏற்று நடத்துவோம் என்று கூறி இருந்த கர்நாடக அரசும் நிதிநிலை, வழிமுறைகள் காரணமாகப் பின்வாங்கிவிட்டது.

மருத்துவ மாணவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு 3XaL5YMTNWGGyWTJIReA+p41a

மாநில அதிகாரிகளைச் சந்தித்தோம். இது மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு, நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கைவிரித்து​விட்டார்கள். இவர்களுக்கு மருத்துவச் சேவைதான் முக்கியம் என்கிறார்கள். அப்படி என்றால், அதற்கான மருத்துவர்களை எங்கிருந்து உருவாக்குவார்கள்? எங்களின் படிப்புக்கு அரசு வழி செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம்'' என்று கூறினார்.

மருத்துவ மாணவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு EiKMYp8BSbCIg6jqJakq+p41b

ஈ.எஸ்.ஐ போர்டு உறுப்பினர் சந்திர பிரகாஷ் சிங், ''மாநில அரசுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு அவர்கள் இதில் போதிய ஆர்வம் காட்டவில்லை.

அதுமட்டு​மல்லாமல் அதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அதனால், இதை நாங்களே தொடர்ந்து நடத்துவது பற்றி விவாதித்து வருகிறோம். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் எங்கள் முடிவு இருக்கும்'' என்றார்.

அந்த நல்ல முடிவை விரைவாக எடுங்கள்.

நன்றி-ஜூனியர் விகடன்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசு மீது மோடி குற்றச்சாட்டு
» அரசு மருத்துவ கல்லூரிக்கு விவசாயிகள் உடல் தானம்
» 8 மாணவர்களை குத்திக் கொன்ற மருத்துவ ஊழியர் - சீனாவில் பயங்கரம்
»  அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு
» மாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum