ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

+4
சிவா
விமந்தனி
M.Saranya
Powenraj
8 posters

Go down

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! Empty அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by Powenraj Tue Feb 24, 2015 2:02 pm

நீதிபதி குமாரசாமி காட்டம்!

29 நாட்கள் கடந்தும் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணை அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா தரப்பு சார்பாக வழக்கறிஞர்கள் சுதந்திரம், குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், அன்புக்கரசு, பன்னீர்செல்வம், திவாகர், நாகராஜன், பரணிகுமார், செல்வக்குமார், தனஞ்செயன், மகேஷ்வரன் இவர்களோடு எம்.பி நவநீதகிருஷ்ணனும் ஆஜராகி வருகிறார்கள். தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் சிறப்புப் பணி அமர்த்தல் ஐ.ஜியான குணசீலனும், டி.எஸ்.பியான சம்பந்தமும், இவர்கள் தரப்பு சார்பில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும் ஆஜராகி வருகின்றனர்.

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! IS3TkZfNScaGMcTNL0YN+p18

''1 ரூபாய் சம்பளம் விளம்பரத்துக்காக வாங்கினாரா?'

குமார்: போயஸ் கார்டன், அங்குள்ள கூடுதல் கட்டடம் மற்றும் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் உள்ள வீடுகள் பராமரிப்புப் பணிகளின் செலவை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் ரூ.13,65,31,900 என தவறாக மதிப்பீடு செய்திருக்கிறார்கள். இது அரசியல் ரீதியாகப் போடப்பட்ட பொய்யான வழக்கு.

நீதிபதி: தொடர்ந்து பொய் வழக்கு என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்பதற்கு இதுவரை எந்த ஓர் ஆதாரத்தையும் கொடுக்காமல் வாய்மொழியாகவே பொய் வழக்கு என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பில் 259 சாட்சியங்களின் வாக்குமூலத்தைக் கொடுத்திருக்கிறார்கள். உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விதமாக 2,341 ஆவணங்களைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால், நீங்கள் 99 சாட்சிகளையும் 385 ஆவணங்களையும் மட்டுமே தாக்கல் செய்திருக்கிறீர்கள். தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கான ஆதாரங்கள் திருப்திக​ரமாக இல்லை.

குமார்: நாங்கள் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வகையில் ஆதாரங்களை சமர்ப்பித்து இருக்கிறோம்.

நீதிபதி: தமிழ்நாட்டில் முதல்வருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது?

குமார்: அதுபற்றி எனக்குத் தெரியாது.

நீதிபதி: (நவநீத​கிருஷ்ணனைப் பார்த்து) உங்களுக்கெல்லாம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது?

நவநீதகிருஷ்ணன்: ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய். அது தவிர, நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும்போது ஒரு நாளைக்கு ரூ.2,000 கொடுக்கிறார்கள்.

நீதிபதி: அதனால்தான் நாடாளுமன்றத்தில் வாதிடாமல் நீங்கள் கையெழுத்தைப் போட்டுவிட்டு வந்துவிடுகிறீர்களோ?

நவநீதகிருஷ்ணன்: இல்லை யுவர் ஆனர். எங்க அம்மா கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் ஆரம்பம் முதல் இறுதி வரை இருந்து கவனிப்பதோடு, நிறை, குறைகளை சுட்டிக் காட்டி பேச வேண்டும்.

நீதிபதி: (குமாரைப் பார்த்து) உங்கள் மனுதாரர் முதல்வராக இருந்தபோது எவ்வளவு சம்பளம் வாங்கினார்?
அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! YZzf62ayRniExK4IEukY+p19
குமார்: ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினார்.

நீதிபதி: அதுதான் சம்பளம் கொடுக்கிறார்களே வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே. 1 ரூபாய் சம்பளம் விளம்பரத்துக்காக வாங்கினாரா? சம்பளம் வாங்காமல் வேலை பார்த்தால், பொது ஊழியராகக் கருதப்பட மாட்டார்கள். ஆனால், மாதம் ஒரு ரூபாய் வீதம் 24 ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதால், பொது ஊழியராகவே கருதப்படுவதால் இந்த நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். 1 ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு எப்படி ரூ.66 கோடி மதிப்புள்ள சொத்துகள் வந்தன? அதைத் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அதை மறுப்பதற்கு உங்கள் தரப்பில் எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை.

குன்ஹா வழங்கிய தீர்ப்பையே நானும் வழங்குவேன்!

குமார்: சுதாகரன் திருமணத்துக்கு ரூ.6.45 கோடி செலவு செய்துள்ளதாகத் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் குற்றம்சாட்டியுள்ளார்கள். அதை கீழமை நீதிமன்ற நீதிபதி தன் தீர்ப்பில் ரூ.3 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த இரண்டு மதிப்பீடுகளும் தவறானது. ஜெயலலிதா ரூ.29 லட்சம்தான் செலவு செய்தார். அவர் அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் முதல்வர் என்ற முறையில் கலந்துகொள்ளும் திருமணம் என்பதால், அலங்கார வரவேற்பு வளைவுகள், பேனர்கள், மின்விளக்கு அலங்காரங்கள், வாழைத்தோரணங்கள், உணவு பரிமாறுதல் உட்பட பல செலவுகளை கட்சித் தொண்டர்களும் மணப்பெண்ணின் தாய் மாமா ராம்குமாரும் தந்தை நாராயணனும் செய்தார்கள். அதற்கு வருமானவரித் துறையில் அவர்கள் கணக்கும் காட்டி இருக்கிறார்கள். அதன் மொத்த செலவு ரூ.2.36 கோடி. அதற்கும் ஜெயலலிதாவுக்கும் சம்பந்தமில்லை.

நீதிபதி: (குமாரைப் பார்த்து) இத்தனை கோடி செலவு செய்து இவ்வளவு பிரமாண்​டமாக திருமணம் செய்ய சுதாகரன் என்ன அ.தி.மு.க தொண்டரா இல்லை, ஜெய​லலிதாவின் மகனா?

குமார்: மௌனம்.

நீதிபதி: இந்த வழக்கு கடந்த மாதம் 1-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது.

மணிசங்கர்: இல்லை. ஜனவரி 5-ம் தேதியில் இருந்து நடைபெறுகிறது.

நீதிபதி: சரி, ஜனவரி 5-ம் தேதியில் இருந்தே வைத்துக்கொண்டாலும் இன்று வரை 28 நாட்கள் வாதிட்டு வருகிறீர்கள். கீழமை நீதிமன்ற நீதிபதி தவறாகத் தீர்ப்பு வழங்கியுள்ளதாகக் குற்றம்சாட்டுகிறீர்கள். ஆனால் அவர் வழங்கியுள்ள தீர்ப்பில், உங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தவறு என்று இந்த 28 நாட்களில் உங்களால் ஆதாரத்தோடு உறுதிப்படுத்த முடியவில்லை. இப்படி இருந்தால் நான் மட்டும் என்ன செய்ய முடியும்? கீழமை நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பையே நானும் உறுதிசெய்ய வேண்டிய சூழ்நிலையாகத்தான் இருக்கிறது. ஜெயலலிதா ரூ.66 கோடிக்கு சொத்துகள் சேர்க்கவில்லை என்று சொல்வதற்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லையே? இப்படியே வாய்மொழியாக பேசி நீதிமன்ற நேரத்தை வீணாக்காமல், வாதத்துக்குத் தேவையான ஆதாரங்களைக் கொடுங்கள். இல்லையென்றால், நானே ஆடிட்டரை நியமனம் செய்து கணக்குகளைச் சரி பார்க்கிறேன். இதில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் வாதமும் அவசியமில்லை. நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்பு வழங்கிவிடுவேன். இது தவிர, எனக்கு வேறு வழி தெரியவில்லை.

குமார்: அடுத்த விசாரணையின்போது எங்கள் தரப்பு நியாயத்தை அட்டவணையாகக் கொடுக்​கிறேன்.

நீதிபதி: கீழமை நீதிமன்ற நீதிபதி எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்கிறீர்கள். ஆனால் கட்டட கட்டுமானச் செலவுகளில், ரூ.13 கோடியில் 20 சதவிகிதத்தைக் குறைத்துத்தான் எடுத்துக்​கொண்டிருக்கிறார். 1994ம் ஆண்டுக்குரிய கட்டுமானச் செலவுகளின் விவரங்களை சாதாரணமான பில்டிங் கான்ராக்டர்களிடம் கேட்டால்கூட கொடுத்துவிடுவார்கள்.

சுற்றி வளைத்து ஜெயலலிதாவுக்காகவே வாதிடுகிறீர்கள்!

(சுதாகரன், இளவரசி சார்பாக அவர்களது வழக்கறிஞர் சுதந்திரம் வாதிட்டார்.)

சுதந்திரம்: அட்டவணை 2-ல் உள்ள 306 சொத்துப் பட்டியலில் ஏ3 சுதாகரனுக்கும், ஏ4 இளவரசிக்கும் தனிப்பட்ட சொத்துகள் 63 அயிட்டங்கள் உள்ளன. சுதாகரனின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.1,38,31,961ம், இளவரசியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.6,91,81,200ம், சுதாகரனும் இளவரசியும் பங்குதாரராக இருந்த மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், லெக்ஸ் பிராபர்டிஸ், ரிவர்வே அக்ரோ உட்பட 6 கம்பெனிகளின் சொத்து மதிப்பு ரூ.4,60,24,439 எனவும் ஆக மொத்தம் ரூ.12.90 கோடி என தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை குறிப்பிட்டுள்ளது. இந்தப் பணம் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது என்றும் ஜெயலலிதாவின் பினாமிகளான சுதாகரன், இளவரசி பெயரில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் ஜெயலலிதாவுக்கும் என் மனுதாரர்களாகிய சுதாகரன், இளவரசிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நீதிபதி: மறைமுகமாக ஏ1 ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவே வாதிட்டுக்​ கொண்டிருக்​கிறீர்கள். உங்கள் மனுதாரருக்காக வாதிடுங்கள்.

சுதந்திரம்: ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி கம்பெனிகள் என அனைவரின் சொத்துகளையும் பொதுவாகக் காட்டி இருப்பதால் ஏ1 ஜெயலலிதாவை மையமாக வைத்துத்தான் இந்த வழக்கை வாதிட முடியும்.

நீதிபதி: உங்கள் மீதுள்ள கேஸ் என்ன? ஊழல் தடுப்புச் சட்டம் 13(1)இ, கூட்டுச் சதி 120(பி), குற்றம் செய்ய உடந்தையாக இருத்தல் 109. இதன் அடிப்படையில்தான் தண்டனை வழங்கப்பட்டி​ருக்கிறது. இதைப் பற்றி தெளிவாகப் பேசாமல் பினாமி சட்டம், கம்பெனி சட்டம், வருமானவரிச் சட்டம் போன்றவற்றையே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.

சுதந்திரம்: என் மனுதாரர்கள் அரசு ஊழியர்கள் கிடையாது. அதனால் அவர்களுக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 13(1)இ வராது. அதேபோல கூட்டுச் சதியோ, குற்றம் செய்ய உடந்தையாகவோ இருந்ததில்லை. அதனால் என் மனுதாரர்களுக்கு 13(1)இ-யும், 120(பி) மற்றும் 109-ம் பொருந்தாது.

நீதிபதி: ஊழல் தடுப்புச் சட்டம் 13(1)இ பற்றி விளக்குங்கள்?

சுதந்திரம்: ஊழல் தடுப்புச் சட்டம் 13(1)இ, அரசு பொது ஊழியர்களுக்குத்தான் பொருந்தும். இந்த வழக்கில் ஏ1 ஜெயலலிதா​தான் அரசு பொது ஊழியர். அதனால் இதைப்பற்றி வாதிட்டால், நீங்கள் ஜெய​லலிதாவுக்​காக வாதிடுவதாகச் சொல்வீர்கள்.

நீதிபதி: (குமாரைப் பார்த்து) ஏ3 சுதாகரன், ஏ4 இளவரசி ஆகியோரின் தனிப்பட்ட வருமானம் என்ன, செலவுகள் என்ன, அதற்கு ஆதாரங்களைக் கொடுங்கள்?

குமார்: ஒவ்வொரு பாயின்டையும் ஆதாரங்களோடு விளக்கி இருக்கிறோம்.

நான் அமைதியாக இருந்துவிட்டு தீர்ப்பை வழங்க முடியாது!

நீதிபதி: நான் அமைதியாக இருந்துவிட்டு தீர்ப்பை வழங்க முடியாது. ஏன் உங்களிடம் இவ்வளவு கேள்விகளைக் கேட்க வேண்டும்?

சுதந்திரம்: நீங்கள் இதுபோன்ற கேள்வி​களைக் கேட்பதால்தான் உங்களுடைய மன​நிலையைப் புரிந்துகொண்டு நாங்கள் நன்றாக வாதிட முடிகிறது. ஆனால், வெளியில் உள்ள சில மீடியாக்கள் இந்த வாத, விவாதங்களைத் தவறான செய்திகளாக வெளியிட்டு வருகிறார்கள்.

நீதிபதி: அவர்களுடைய பணியை அவர்கள் செய்கிறார்கள். உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள். நீதிமன்றத்துக்கு வெளியில் நடப்பதைப் பற்றியெல்லாம் பேச வேண்டிய அவசியமில்லை. நாளை செவ்வாய்க்கிழமை சிவராத்திரி விடுமுறை.

சுதந்திரம்: மூச்சுவிட ஒரு நாள் விடுமுறை கிடைத்தது. நன்றாகப் படித்து வந்து வாதிடுவோம்.

புதிய கணக்குகளைக் காட்டக் கூடாது!

(சுதாகரன், இளவரசி ஆகியோரின் தனிப்பட்ட சொத்துகள், வருமானம், செலவினங்கள் பற்றிய விவர அட்டவணை தயாரித்து வழக்கறிஞர் சுதந்திரம் நீதிபதிடம் கொடுத்து வாதிட்டார்.)

சுதந்திரம்: ஏ3-யின் கணக்குகளைப் பற்றி விரிவாகப் பேசப் போகிறேன். தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் கொடுத்த சொத்துப் பட்டியல் 2வது அட்டவணையில் ஏ3-யின் தனிப்பட்ட சொத்துகள் 12 அயிட்டங்கள் இருக்கின்றன.

நீதிபதி: இதுபற்றி கீழமை நீதிமன்றத்தில் வாதிட்டு இருக்க வேண்டும். இது கீழமை நீதிமன்றம் இல்லை. மேலோட்டமாகவும் சுருக்கமாகவும் ஆணித்தரமாகவும் உங்கள் வாதத்தை வையுங்கள். அதற்கு முன்பு இதென்ன மஞ்சள் கலர் சீட், பச்சை கலர் சீட்?

சுதந்திரம்: மஞ்சள் கலர் சுதாகரனுடைய கணக்குகள், பச்சை இளவரசியோட கணக்குகள்.

நீதிபதி: இந்த அட்டவணையில் கடைசிப் பக்கத்தை விவரியுங்கள்.

சுதந்திரம்: தமிழக ஊழல் தடுப்பு போலீஸார், வழக்கு காலகட்டத்தின் இறுதியில் ஏ3யின் சொத்துகள் ரூ.1,19,89,961. இதில் ரூ.9,85,000ஐ கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஆக, வழக்கு காலகட்டத்தின் இறுதியில் ஏ3யின் சொத்து மதிப்பு ரூ.1,10,04,961. அதேபோல ஏ3 சுதாகரன், சூராஜ் மஸ்தா வேன் வாடகைக்கு விட்டதில் ரூ.12,86,474 கிடைத்தது. தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ரூ.9,18,910 என்று குறிப்பிட்டுள்ளனர். அதனால் என் மனுதாரர் சுதாகரனின் வருமானத்தில் ரூ.3,67,564 சேர்க்க வேண்டும்.

நீதிபதி: திரும்பத் திரும்பச் சொல்கிறேன். இதுபற்றியெல்லாம் இங்கு சொல்ல வேண்டாம். கடைசிப் பக்கத்தில் உள்ள மொத்த மதிப்பீடுகளைச் சொல்லுங்கள். (கால்குலேட்டரை அழுத்தியவாரே) உங்கள் சொத்து மதிப்பு என்ன?

சுதந்திரம்: ரூ.1,10,04,961

நீதிபதி: செலவுகள் என்ன?

சுதந்திரம்: ரூ.74,68,058

நீதிபதி: 4 வருட வருமானம் என்ன?

சுதந்திரம்: ரூ.2,12,47,978. மொத்த சொத்து மதிப்பு = ரூ.1,10,04,961 ரூ.74,68,058 = ரூ.1,84,73,019. கை இருப்பு = ரூ.2,12,47,978 ரூ.1,84,73,019 = ரூ.27,74,959.

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! J1oARqvTp6ZjBHpTyvEU+p20

நீதிபதி: ஓகே. வரிமானவரித் துறையின் ஆவணத்தைக் கொடுங்கள். அது வருமான​வரித் துறை கணக்கீட்டுக்கு ஒத்துப்போகிறதா?

சுதந்திரம்: (மௌனத்துக்குப் பிறகு) இல்லை.

நீதிபதி: பிறகு ஏன் இந்தக் கணக்குகளை எல்லாம் என்னிடம் சொல்கிறீர்கள். கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கணக்குகளைத்தான் இங்கேயும் தாக்கல் செய்ய வேண்டும். புதிதாக ஒரு கணக்கு தயாரித்து காட்டக் கூடாது. இந்தக் கணக்குகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

அம்மா முதல்வர்; மகனுக்கு அரசு டெண்டர்...

சுதந்திரம்: என் மனுதாரர் சுதாகரன் சூப்பர் டூப்பர் டி.வியின் இயக்குநராக இருந்தார்.

1994-ல் தஞ்சையில் 8வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு சுற்றுலாத் துறை வளர்ச்சிக் கழகத்தின் மூலம் முறையாக டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரை சூப்பர் டூப்பர் டி.வி நிறுவனம் ரூ.42 லட்சத்துக்கு எடுத்தது. அதற்கு தமிழ்நாடு சுற்றுலாத் துறை வளர்ச்சிக் கழகம் அட்வான்ஸாக 39,60,000 ரூபாய் சூப்பர் டூப்பர் டி.வி நிறுவனத்துக்குக் கொடுத்தது.

நீதிபதி: அதற்கான ரசீதைக் கொடுங்கள்?

சுதந்திரம்: (வக்கீல் செந்தில் நீதிமன்ற ஆவணத்தில் தேடினார்!) அதைத் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் கைப்பற்றி எடுத்துப் போய் விட்டார்கள்.

நீதிபதி: கைப்பற்றியதற்கான கடிதத்தைக் காட்டுங்கள்.

சுதந்திரம்: (தேடினார்)

நீதிபதி: சுதாகரனின் அம்மா முதல்வர். தமிழ்நாடு சுற்றுலாத் துறை வளர்ச்சிக் கழகம் முதல்வரின் கீழ்தான் வருகிறது. மகனுக்கு அரசு டெண்டர் விட்டிருக்கிறார்கள் என்றால், அட்வான்ஸ் கொடுத்ததற்கான ரசீது கொடுக்காமலா இருந்திருப்​பார்கள்? அதைக் காட்டினால், மட்டுமே இந்தத் தொகையைக் கணக்கில் எடுத்துக்கொள்வேன்.

செந்தில்: (தமிழ்நாடு சுற்றுலாத் துறை வளர்ச்சிக் கழகம் வழங்கிய ரூ.39,60,000க்கான ரசீதை எடுத்து நீதிபதியிடம் கொடுத்தார்.)

நீதிபதி: இவ்வளவு பெரிய தொகைக்கு நீங்கள் ரசீது வைத்திருக்க வேண்டாமா?

சுதந்திரம்: தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் இந்த ரசீதை முத்திரையிடாத ஆவணமாக வைத்திருந்ததால், அதை எடுக்க முடியவில்லை.

நீதிபதி: இந்தத் தொகையை நான் ஏற்றுக்கொள்கிறேன். இப்படித்தான் ஆதாரங்களைக் கொடுத்து வாதிட வேண்டும்.

சுதந்திரம்: 100 சதவிகிதம் சரியாக யாராலும் வாதிட முடியாது. நீங்கள் அனுமதித்தால் இதற்கு ஒரு ஜோக் சொல்கிறேன்.

நீதிபதி: நீதிமன்றத்துக்குத் தேவையில்​லாதவை​களைப் பேசக் கூடாது.

சூப்பர் டூப்பர் டி.வி-யின் பண பரிமாற்றம்

சுதந்திரம்: என் மனுதாரர் சூப்பர் டூப்பர் டி.வி நிறுவனம், ராம்ராஜ் அக்ரோ, ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சைனோரா, இந்தோ தோஹா கெமிக்கல் உள்ளிட்ட பல நிறுவனங்களில் இயக்குநராக இருந்தார். அதில் சூப்பர் டூப்பர் டி.வி நிறுவனத்துக்கு பல சந்தாதாரர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலம் வந்த டெபாசிட் தொகை ரூ.5 லட்சத்தைத் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ஏற்றுக்கொள்ளவில்லை. தஞ்சை வண்டம்பாளையத்தில் உள்ள ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் நிறுவனத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தலா ரூ.1,20,000 கட்டி ஷேர்கள் வாங்கினார்கள். 3 பேரும் வாங்கிய மொத்த ஷேர்கள் ரூ.3,60,000. ஆனால், தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ரூ.18,42,000 என்று பதிவு செய்திருக்கிறார்கள். அதைக் கழிக்க வேண்டும்.

அதேபோல சூப்பர் டூப்பர் டி.வி நிறுவனம், பரணி பீஸ் ரிஸார்ட் நிறுவனத்துக்கு நிகழ்ச்சி தயாரித்துக் கொடுத்ததற்கு காசோலை மூலமாக ரூ.22 லட்சம் கொடுத்துள்ளது. அதை வருமானவரித் துறை தீர்ப்பாயம், ரூ.22 லட்சம் கொடுப்பதற்கான தகுதி பரணி பீஸ் ரிஸார்ட்டுக்கு இருக்கிறதா என்று ஆய்வு செய்து ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், அந்தத் தொகையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை!''

இவ்வாறு விவாதம் தொடர்ந்து வருகிறது!

வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

பவானி சிங் ஆடிட்டர் செல்போன் பறிமுதல்

நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றுக்கொண்டு இருந்​தபோது பத்திரிகையாளர்போல வந்து நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தார் ஒருவர். திடீரென அவருடைய செல்போன் ரிங் ஆக... நீதிபதி, ''யாருடைய செல்போன் ரிங் அடிக்கிறது? அந்த செல்போனை பறிமுதல் செய்யுங்கள்'' என்றார். நீதிமன்ற ஊழியர்கள் அவரிடம் செல்போனை பறிமுதல் செய்தார்கள். இறுதியில் உணவு இடைவேளை விடும்போது செல்போன் வைத்திருந்தவரை நீதிபதி அழைத்து, ''நீங்கள் யார், எதற்காக வந்திருக்கிறீர்கள், நீதிமன்ற வாதத்தை ரெக்கார்டு செய்கிறீர்களா'' என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த அவர், ''நான் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஆடிட்டர். அவருடைய வருமானங்களைத் தணிக்கை செய்ய சில ஆவணங்கள் தேவைப்பட்டதால், அதை வாங்கிச் செல்ல வந்தேன். நான் ரெக்கார்டு எதுவும் செய்யவில்லை. ரிங் அடித்ததற்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்றதும் செல்போன் திரும்பக் கொடுக்கப்பட்டது.

நன்றி -ஜூனியர் விகடன்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! Empty Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by M.Saranya Tue Feb 24, 2015 2:16 pm

அனல் பறக்கவே வாதம் நடை பெறுகிறது.....
அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! 3838410834 அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! 3838410834


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! Empty Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by விமந்தனி Tue Feb 24, 2015 2:47 pm

அடேயப்பா..... நீதிபதி கறாராக தான் இருக்கிறார். நியாயமான தீர்ப்பு வழங்கினால் சரி.


அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! Empty Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by சிவா Tue Feb 24, 2015 3:16 pm

இதுவரை குன்கா வழகிய தீர்ப்பு மேல்முறையீட்டில் வெற்றிபெற்றதில்லை!

இந்த வழக்கிற்கும் இவ்வாறே நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன்!


அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! Empty Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by முனைவர் ம.ரமேஷ் Tue Feb 24, 2015 3:27 pm

பணத்தொகையை கொஞ்சம் குறைச்சி குறைச்சி தான் பேசறாங்க...

அவரும் கொஞ்சம் கொறைச்சி 75 கோடியும் 3 ஆண்டு சிறை தண்டனையும் கொடுத்துவிடுவார் பாருங்களேன்...

இன்று பேனர்களைப் பார்தால் கோபம்தான் வந்தது...

சின்னதாக மக்களின் என்று எழுதிவிட்டு பெரியதாக முதல்வர் என்று ஜெயலலிதாவை போற்றி போற்றி பேனர்கள்... இவர்களின் பேனர்கள் மட்டும் மாதக் கணக்கில் வைத்து இருக்கிறார்கள்...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! Empty Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by ராஜா Tue Feb 24, 2015 3:46 pm

சிவா wrote:இதுவரை குன்கா வழகிய தீர்ப்பு மேல்முறையீட்டில் வெற்றிபெற்றதில்லை!

இந்த வழக்கிற்கும் இவ்வாறே நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1122449 நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! Empty Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by கோ. செந்தில்குமார் Tue Feb 24, 2015 4:42 pm

சிவா wrote:இதுவரை குன்கா வழகிய தீர்ப்பு மேல்முறையீட்டில் வெற்றிபெற்றதில்லை!

இந்த வழக்கிற்கும் இவ்வாறே நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1122449

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! Empty Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by பாலாஜி Tue Feb 24, 2015 4:45 pm

சிவா wrote:இதுவரை குன்கா வழகிய தீர்ப்பு மேல்முறையீட்டில் வெற்றிபெற்றதில்லை!

இந்த வழக்கிற்கும் இவ்வாறே நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1122449

அப்படிதான் நிகழும் போல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! Empty Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by கோ. செந்தில்குமார் Tue Feb 24, 2015 4:57 pm

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

அய்யா...! சரியா சொன்னீர்கள். முதலில் அதை செய்யுங்கள்.
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்! Empty Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு விடுமுறை பட்டியலில் இருந்து காந்தி ஜெயந்தியை நீக்கம் செய்து கோவா அரசு உத்தரவு
» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
»  2ஜி வழக்கு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய மத்திய அரசு வழக்கறிஞர் நியமனம் -
» ஜெயலலிதா அரசுக்கு சரியான ஆலோசனை இல்லை: உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு வழக்கறிஞர்
» ஜெயலலிதா வழக்கு தோல்விக்கு யார் காரணம்?- அரசு வழக்கறிஞர் பவானி சிங் சிறப்பு பேட்டி!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum