ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா?

+8
M.Saranya
ராஜா
சிவனாசான்
krishnaamma
CHENATHAMIZHAN
ஜாஹீதாபானு
பாலாஜி
சாமி
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? - Page 2 Empty தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா?

Post by சாமி Mon Feb 23, 2015 3:13 pm

First topic message reminder :

உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள் இன்று 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரபூர்வமாக உள்ளன.

உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

தாய்மொழிக்கான இடம் எது?

பல மொழிகளோடு பிறந்து வளர்ந்து, தன் தோழமை மொழிகள் எல்லாம் சிதைந்த போதிலும் இன்றளவும் தன் இளமைத் தன்மையை இழக்காமல் வாழ்ந்து வளர்ந்து நிற்கும் ஒற்றை மொழி வாழும் செம்மொழி நம் தமிழ் மொழிதான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியத்திலும் பேச்சுவழக்கிலும் இருந்த ஒரே மொழி இன்றளவும் இருக்கிறதென்றால் அது தமிழ்தான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

ஆனால், இந்த வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க தாய்மொழியைப் பேசுவதற்குத்தான் நாம் தயங்குகிறோம். தமிழில் பேசினால் தரம் குறைந்துவிடும் என்று தப்புக்கணக்கு போடுகிறோம்.

ஆங்கிலம்தான் அறிவா?

சிந்தனையின் தொடக்கப்புள்ளி தாய்மொழி என்று தெரிந்துகொண்ட நாம் நம் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைப்பதைத்தான் பெருமையாக கருதுகிறோம்.

ஆங்கிலம் மட்டும்தான் அறிவு. ஆங்கிலமொழியில் படித்தால்தான் அறிவு மேம்படும். வேலை வாய்ப்பு கிடைக்கும். நல்ல சம்பளம் வாங்க முடியும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஆங்கிலம் கற்றால்தான் அகிலமே மதிக்கும் என்பது எந்த விதத்திலும் உண்மை இல்லை. ஆனால், இதைப் புரிந்துகொள்ளாததால்தான் இன்றைய பெற்றோர்களின் மனநிலை வேறு திசையில் பயணிக்கிறது.

'என்னாலதான் தஸ் புஸ்னு இங்கிலீஷ் பேசுற மாதிரி படிக்க முடியலை. என் குழந்தையாவது படிக்கட்டும்' என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்கிறார்கள். அதையே பெருமைக்கான அடையாளமாக கருதுகிறார்கள்.

உண்மையில், அப்படிப் படிக்கும் மாணவர்கள் இயல்பாக சிந்திக்க முடிகிறதா?

கல்வி என்பது அறிவை மேம்படுத்துவதற்காக அமைய வேண்டுமே அல்லால் ஒருவனின் மனப்பாட திறனை வெளிப்படுத்துவதாக அமையக்கூடாது. ஆனால், ஆங்கில மொழி நமக்குள் புரிந்துகொள்ளும் திறனை வளர்க்காமல் மனனம் செய்யும் முறையை மட்டும் கற்றுக்கொடுக்கிறது.

தாய்மொழி மூலமாகவே ஒருவர் தான் கூற விரும்பும் கருத்தை தெளிவாகவும் ,முழுமையாகவும் ,ஆழமாகவும் தெரிவிக்க முடியும் . ஒவ்வொருவரும் சிந்திப்பது தன் சொந்த தாய்மொழியில்தான். அதுதான் இயல்பான அடிப்படை புரிதலைக் கொடுக்கும். அதுவே அந்த குழந்தையின் படைப்பாற்றலை வளர்த்தெடுக்கும்.

ஆனால், அந்த சூழலை வளர்த்தெடுக்க வேண்டிய தமிக அரசு எந்த வித அக்கறையும் காட்டாததுதான் வருத்த்ததின் உச்சம். ஒரு மாநிலத்தின் ஆட்சி மொழியை ஒரு பாடமாகக்கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற அவலநிலை தமிழகத்தில் நிலவுவது எவ்வளவு பெரிய முரண்.

"தாய் மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை

தாய் மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை " என்பது உலகறிந்த உண்மை.

தேவை என்றால் ஆங்கில மொழியில் அனைத்து பாடங்களையும் படிப்பதை ஊக்கப்படுத்துவதை விட ஆங்கில மொழி அறிவை மேம்பட செய்யலாம்.இந்த நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, எந்த ஒரு குழந்தைக்கும் தாய்மொழிக் கல்விதான் சிறந்தது என்பதை நாம் செயல்படுத்துவோம்.

இந்த தருணத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?

அனைத்து தனியார் அரசுப் பள்ளிகளுக்கும் தமிழ் வழிக் கல்வி கட்டாயம் என்பதை சட்டமாக்குதல் வேண்டும். ஆங்கிலம் மொழிப் பாடமாகவும் , தமிழ் பயிற்று மொழியாகவும் இருத்தல் வேண்டும் .

மம்மி, அங்கிள் என்று குழந்தைகளை அழைக்கச் சொல்லி பெருமைப்படுவதை கொஞ்சம் மாற்றி, அழகுத் தமிழில் அன்பை வளர்ப்போம். முடிந்தவரை தமிழை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்போம். தமிழில் பேச பயிற்சி தருவோம்.

தமிழில் பேசுவதே தகுதி என்பதை நம் அடுத்த தலைமுறைக்கு உணர்த்துவோம்.

ஏன் தமிழின் பெருமையை உணர்த்த வேண்டும்?

எந்த மொழிக்கும் இல்லாம மென்மையும், ஆழமும், அர்த்தமும் தமிழ் மொழிக்கு இருக்கிறது.

சித்தப்பா, மாமா என்ற இரண்டு உறவுகளும் வெவ்வேறு அர்த்தம் தருபவை. ஆனால், ஆங்கிலத்தில் இருவரையும் அங்கிள் என்றே அழைப்பது உறவின் அர்த்தத்தையே மாற்றி விடுகிறது.

யானைக்கு தமிழில் வேழம், களிறு, பிடி என்று எத்தனையோ வார்த்தைகள் இருக்கின்றன. இங்கிலாந்திலே இல்லாத ஒரு உயிரினம் யானை. ஆனால், அந்நாட்டு மொழியில் எலிபேண்ட் (elephant) என்று அழைப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்?

மிகப்பெரிய ஆங்கில அறிஞர்கள் கூட தங்கள் படைப்புகளில் கண்ணுக்கு கண்: பல்லுக்குப் பல் என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், திருவள்ளுவர் மட்டும்தான் உனக்கு தீமை செய்தவனுக்குக் கூட ,அவன் வெட்கப்படும் படி நல்லது செய் என்று சொல்கிறார்.

''நாம் பயிலும் கல்வி தாய்மொழியில் இருந்தால் மட்டுமே சிந்திக்கும் திறன் சிறப்பாக அமையும்'' என்றார் மகாத்மா காந்தி. இனியும் தமிழில் பேசுவது தகுதியா?தரக்குறைவா? நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே...
- thehindutamil
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? - Page 2 Empty Re: தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா?

Post by விமந்தனி Tue Feb 24, 2015 2:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி  சூப்பருங்க அருமை, அருமை சரண்யா.

.ஒரு கவர்ச்சி தன்மையினை ஆங்கில மொழி கொடுத்தாலும் அதில் ஆழ் மன உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது இயலாத காரியம்.
வெகு அழகாக, தெளிவாக சொல்லிவிட்டீர்கள்.

நிஜம் தான் இப்போது ஏதேதோ அழகழகான ஆங்கில வார்த்தைகளை எல்லாம் போட்டு பேசுகிறார்கள். மேக்கப்போடு இருக்கும் நடிகை போல கவர்ச்சியாக தான் இருக்கிறது. ஆனாலும், நம் எண்ணங்களை தமிழை தவிர எந்த மொழியாலும் நாம் நினைத்தபடி வெளிபடுத்த முடியாது....... மறுபடியும், சூப்பர்ப் சரண்யா! நன்றி


தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? - Page 2 Empty Re: தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா?

Post by M.Saranya Tue Feb 24, 2015 2:25 pm

தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி அக்கா....

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? - Page 2 1571444738 தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? - Page 2 1571444738


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? - Page 2 Empty Re: தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா?

Post by சாமி Tue Feb 24, 2015 3:39 pm

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? - Page 2 3838410834

M.Saranya wrote: .... ஆங்கிலம் பேசினால் ஒரு மேன்மை என்றே எல்லா மொழியினரும் கருதுகின்றனர்..ஒரு கவர்ச்சி தன்மையினை ஆங்கில மொழி கொடுத்தாலும் அதில் ஆழ் மன உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது இயலாத காரியம்....  
மேற்கோள் செய்த பதிவு: 1122420

ஆங்கிலேயர்களைப் பொறுத்தவரை "ஏய்ச்சுப்பிழைப்பதுதான் அவர்களது மூலதனம்"
ஆங்கிலம் பேசுவது ஒரு மேன்மை என்பது இதேபோல் ஏய்ச்சுப்பிழைக்கும் உத்தி.
இவர்களோடு உள்ளூர் மொழி எதிரிகளும் கைகோர்த்துக் கொள்ளும்போது நிலைமை ரொம்ப மோசமாகிவிடுகிறது.

ஆங்கிலேயர்களிடம் (மேலை நாட்டவர்கள்) இருந்து வந்த எந்த ஒரு விசயமும் கேவலம்தான். அது எதுவாக இருந்தாலும்!!!!!!! எல்லாவற்றையும் "வியாபாரமாக" பார்ப்பதுதான் அவர்களது உத்தி புத்தி எல்லாம்!!!!! உள்ளூரில் இருப்பதை அழித்துவிட்டு தங்களதை உன்னதம் என்று பொய்பரப்புவார்கள்.

ஒரு சில எடுத்துக்காட்டு:
ஆங்கில மருத்துவம் (அலோபதி)...
ஆங்கில உணவுகள்...
ஆங்கிலக் கல்வி...
ஆங்கில உடை...
ஆங்கில இலக்கியங்கள்...
மேல்நாட்டு வாழ்க்கைமுறை...
ஆங்கில மொழி...

.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? - Page 2 Empty Re: தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா?

Post by ராஜா Tue Feb 24, 2015 3:56 pm

விமந்தனி wrote:நிஜம் தான் இப்போது ஏதேதோ அழகழகான ஆங்கில வார்த்தைகளை எல்லாம் போட்டு பேசுகிறார்கள். மேக்கப்போடு இருக்கும் நடிகை போல கவர்ச்சியாக தான் இருக்கிறது. ஆனாலும், நம் எண்ணங்களை தமிழை தவிர எந்த மொழியாலும் நாம் நினைத்தபடி வெளிபடுத்த முடியாது....... மறுபடியும், சூப்பர்ப் சரண்யா! நன்றி
உண்மை உண்மை ... அப்படி பேசினால் தான் "தனக்கு எல்லாம் தெரியும் என்று மற்றவர் எண்ணுவார்கள் " என்று மனப்பான்மை தான் காரணம் அக்கா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? - Page 2 Empty Re: தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா?

Post by கோ. செந்தில்குமார் Tue Feb 24, 2015 4:51 pm

தமிழில் பேசுவது தகுதியும் அல்ல... தரக்குறைவும் அல்ல...

உலகில் முதன்முதலில் தோன்றிய மனிதன் தமிழன். அவன் பேசிய மொழி தமிழ். நாம் நம்மை முதலில் மனிதன் என்போம். தமிழ் நம் அடையாளம். தமிழை அறிந்தவன் யாரோ அவனே மனிதன். மனிதன் மட்டுமல்ல புனிதன். தமிழை அறியாதவர்கள் மனிதரே அல்லர்...!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? - Page 2 Empty Re: தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா?

Post by ayyasamy ram Wed Feb 25, 2015 8:01 am

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? - Page 2 103459460
-
வருங்கால முதல்வர்
அன்புமணி ராமதாஸ் தனது குழந்தைகளை
தமிழ் கற்றுத் தராத,
ஆங்கிலப் பள்ளியில் ஏன் படிக்க வைத்தார்...??
-
தமிழின் பெருமை அவருக்குத் தெரியாமலா
இருந்திருக்கும்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? - Page 2 Empty Re: தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா?

Post by அறிவுடை நம்பி Wed Feb 25, 2015 9:20 am

வணக்கம் நண்பர்களே,

நான் இத்தளத்திற்குப் புதியவன். இவ்விணையதளம் படிப்பதற்கு நன்றாக உள்ளது. அதனால், உடனே எனது பெயரை பதிவு செய்து பின்னூட்டம் இடுகிறேன்.

தமிழில் பேசுவது பெருமையேயன்றி, எக்காலத்திலும் தரக்குறைவாகாது. "தரக்குறைவு" என்ற வார்த்தையே என்னுள் வலியை ஏற்படுத்துகிறது.

முதலில் நாம், முடிந்தவரையில் ஆங்கிலக்கலப்பில்லாமல் தமிழிலேயே உரையாட முயற்சி செய்யவேண்டும். ஏனெனில், நம்மையும் அறியாமல் பலவகைகளில் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

இதனைச்செய்தாலே, தமிழ் நம்மில் நிலைக்கும்.

நன்றி!

அன்பன்,
அறிவுடை நம்பி
அறிவுடை நம்பி
அறிவுடை நம்பி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 25/02/2015

Back to top Go down

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? - Page 2 Empty Re: தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum