ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனேகன் - விமர்சனம்

+3
ராஜா
krishnaamma
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அனேகன் - விமர்சனம் Empty அனேகன் - விமர்சனம்

Post by சிவா Sat Feb 21, 2015 11:49 pm


கதையின் கரு: ஜென்ம ஜென்மமாக வரும் காதல் பந்தம்.

ரொம்ப நாளைக்கு அப்புறம், தமிழ் சினிமாவில் ஒரு மறு ஜென்ம கதை. பர்மாவின் தலைநகரான ரங்கூனில் கதை ஆரம்பிக்கிறது. அங்குள்ள ஒரு பொருட்காட்சியின் ராட்டினம் அறுந்து விழ-அதில் அமர்ந்திருந்த அமைராவின் உயிரை காப்பாற்றுகிறார், தனுஷ். இரண்டு பேருக்கும் காதல் வருகிறது.

தனுஷ், கூலி தொழிலாளி. அமைரா, போலீஸ் அதிகாரி முகேஷ் திவாரியின் மகள். இவர்கள் காதலுக்கு முகேஷ் திவாரி எதிர்ப்பு தெரிவிக்கிறார். காதலர்கள் பர்மாவை விட்டு இந்தியாவுக்கு கப்பலில் தப்பியோட முயற்சிக்கிறார்கள். அவர்களை சுட்டுக் கொல்கிறார், முகேஷ் திவாரி.

கொல்லப்பட்ட தனுசும், அமைராவும் சென்னையில் மறுஜென்மம் எடுத்து, ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அமைராவுக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் திரும்புகின்றன. அதில், நான்கு ஜென்மங்களாக அவரும், தனுசும் காதலர்களாக இருப்பதும், ஒரு ஜென்மத்தில் இவர்களுக்கு வில்லனாக இருந்தவரே அடுத்த ஜென்மத்திலும் வில்லனாக உருவாகியிருப்பதும் தெரியவருகிறது.

அந்த வில்லனிடம் இருந்து தனுசும், அமைராவும் தப்பினார்களா, இல்லையா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.

மூணா ரூணா-சமுத்ரா, காளி-கல்யாணி, இளமாறன்-செண்பகவல்லி, அஸ்வின்-மது என நான்கு தலைமுறை காதலர்களாக வருகிறார்கள் தனுசும், அமைராவும். படத்தின் நீளம் கருதி இளமாறன்-செண்பகவல்லி ஜோடியின் கதை நீக்கப்பட்டு, ஒரு பாடல் காட்சியில் மட்டும் இடம் பெறுகிறார்கள்.

பர்மா தமிழர் மூணா-ரூணாவாக மீசையில்லாத தனுஷ், தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். ராட்சத ராட்டினம் அறுந்து விழும் காட்சியில், அவர் உயிர் பணயம் வைத்து ஒரிஜினலாக நடித்திருப்பது, சிலிர்க்க வைக்கிறது.

சாப்ட்வேர் என்ஜினீயர் அஸ்வின் கதாபாத்திரத்தில் மென்மை காட்டும் அவர், காளி வேடத்தில் அமர்க்களப்படுத்துகிறார். அந்த குத்தாட்டத்திலும் சரி, மார்க்கெட் சண்டையிலும் சரி, கண்ணுக்குள் நிற்கிறார். கார்த்திக் முன்பே அவரைப்போல் பேசி நடித்துக் காட்டும் இடத்தில், தனுசைப் பார்த்து கார்த்திக்கே மிரள்கிறார்.

அமைரா வட இந்திய முகம் என்பதால், பர்மா சமுத்ரா பாத்திரத்துக்கு பாந்தமாக இருக்கிறார். பிராமணப்பெண் கல்யாணி வேடத்துக்கு அவர் பொருந்தவில்லை. தலையில் பொருத்தப்பட்ட 'விக்,' காட்டிக் கொடுக்கிறது.

படத்தில், கதாநாயகன் தனுசுடன் போட்டி போட்டு இருக்கிறார், கார்த்திக். லிப்ட் அறுந்தததால் கூடி நிற்பவர்களைப் பார்த்து, ''ஏன் கால்கள் இல்லையா, நடந்து போக?'' என்று ஸ்டைலாக கூறும்போதும், ''என் வாழ்க்கையில் எத்தனையோ பெண்கள் கடந்து போயிருக்கிறார்கள்...மேகம் மாதிரி'' என்று சொல்லும்போதும், கார்த்திக் கார்த்திக்தான் என்று கைதட்டுகிறார்கள்.

காமெடியை தனுஷ், கார்த்திக் இருவரும் பங்கு போட்டுக் கொள்வதால், ஜெகனுக்கு அதிக வேலை இல்லை.வசன வரிகளுக்கு தியேட்டரில், அமோக வரவேற்பு. ''உன் அளவு அவளுக்கு எப்படி தெரிந்தது?'' என்று அம்மா கேட்க- ''அதான் என்னை அவள் தினமும் பார்க்கிறாளே...'' என்று தனுஷ் சொல்லும் இடம், ஒரு உதாரணம்.

பர்மா சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாசின் உழைப்பு தெரிகிறது. பாடல்களிலும், பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார், ஹாரிஸ் ஜெயராஜ். ''ரோஜா கடலே,'' ''ஆத்தாடி,'' ''தொடுவனம்'' ஆகிய பாடல்களில், கவிஞர் வைரமுத்துவின் வார்த்தை ஜாலங்கள், வசீகரிக்கின்றன.

அடுத்தடுத்த ஜென்மங்களின் கதை என்பதால் சில குழப்பங்களும், தேக்கமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. புதைக்கப்பட்ட உடல்கள் எலும்புக்கூடாகியுள்ள நிலையில், கைவிரல் மட்டும் எப்படி 'பளிச்' மோதிரத்துடன் தப்பியது? அந்த மோதிர விரலை போலீஸ் அதிகாரி ஆசிஷ் வித்யார்த்தி மறைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன? போன்ற கேள்விகளுக்கு படத்தில், விடை இல்லை.

எதிர்பாராத ஆரம்பமும், அபூர்வமாக சொல்லப்பட்ட மறுஜென்ம திரைக்கதையும், தனுஷ்-கார்த்திக் இருவரின் நடிப்பும் படத்துக்கு ஜீவனாக அமைந்திருக்கின்றன. அநேக காட்சிகளில், டைரக்டர் கே.வி.ஆனந்தின் முத்திரைகள்.

தினதந்தி


அனேகன் - விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனேகன் - விமர்சனம் Empty Re: அனேகன் - விமர்சனம்

Post by சிவா Sat Feb 21, 2015 11:51 pm



அனேகன் - விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனேகன் - விமர்சனம் Empty Re: அனேகன் - விமர்சனம்

Post by krishnaamma Sun Feb 22, 2015 12:12 am

அருமையான படம் சிவாபுன்னகை.......சூப்பர் ஆக இருக்கு !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனேகன் - விமர்சனம் Empty Re: அனேகன் - விமர்சனம்

Post by ராஜா Sun Feb 22, 2015 11:09 am

நன்றி தல ... waiting for HD print புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அனேகன் - விமர்சனம் Empty Re: அனேகன் - விமர்சனம்

Post by M.M.SENTHIL Mon Feb 23, 2015 3:29 am

நன்றி

அப்படியே டவுன் லோடு லிங்க், கிடைத்தால் மகிழ்ச்சி


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அனேகன் - விமர்சனம் Empty Re: அனேகன் - விமர்சனம்

Post by krishnaamma Mon Feb 23, 2015 9:50 am

M.M.SENTHIL wrote:நன்றி

அப்படியே டவுன் லோடு லிங்க், கிடைத்தால் மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1122119

சுமாராய் பார்த்தால் போதும் என்றால் tamilgun போங்கள் ........நல்ல தரமானது வேண்டும் என்றால் காத்திருங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனேகன் - விமர்சனம் Empty Re: அனேகன் - விமர்சனம்

Post by M.Saranya Mon Feb 23, 2015 9:56 am

நானும் படத்தை பார்க்கணும் அம்மா ......


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அனேகன் - விமர்சனம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

அனேகன் - விமர்சனம் Empty Re: அனேகன் - விமர்சனம்

Post by krishnaamma Mon Feb 23, 2015 10:07 am

M.Saranya wrote:நானும் படத்தை பார்க்கணும்  அம்மா ......
மேற்கோள் செய்த பதிவு: 1122151

இதோ லிங்க் சரண்யா புன்னகை

http://tamilgun.com/video/anegan-hq/

மேலே உள்ளதில் 'oops ' என்று போட்டிருப்பார்கள்...நம்ப வேண்டாம்...இன்னும் கொஞ்சம் கிழேவந்தால் இருக்கும் புன்னகை..enjoy ! ..முதலில் இதை பாருங்கள் பிறகு பிடித்திருந்தால் காத்திருந்து மறுபாதி   HD quality  இல் பாருங்கள் புன்னகை


Last edited by krishnaamma on Mon Feb 23, 2015 10:38 am; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனேகன் - விமர்சனம் Empty Re: அனேகன் - விமர்சனம்

Post by விமந்தனி Mon Feb 23, 2015 10:21 am

சூப்பருங்க நானும் பார்கிறேன். பட் in HD qly


அனேகன் - விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅனேகன் - விமர்சனம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அனேகன் - விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அனேகன் - விமர்சனம் Empty Re: அனேகன் - விமர்சனம்

Post by முனைவர் ம.ரமேஷ் Mon Feb 23, 2015 10:31 am

படம் பாக்க எங்க நேரம்... இப்படி விமர்சனம் படிச்சிக்கிட்டாதான் உண்டு...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அனேகன் - விமர்சனம் Empty Re: அனேகன் - விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum