ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்!

+2
சிவா
krishnaamma
6 posters

Go down

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! Empty வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்!

Post by krishnaamma Sat 21 Feb 2015 - 0:51

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்!

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! SPtcIAa3Rbuyl193CIvB+pshop02

போட்டோஷாப் வெள்ளிவிழா காண்கிறது தெரியுமா? அப்படியா, இந்த சாப்ட்வேர் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதா? என்று வியக்கத்தோன்றுமே தவிர, போட்டோஷாப்பா? அது என்ன? என்று ஒருவரும் கேட்க வாய்ப்பில்லை.

இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர்களில் ஒன்றாக இருக்கும் போட்டோஷாப், அதிகம் அறியப்பட்ட சாப்ட்வேராகவும் இருக்கிறது. விண்டோஸ், மேக், நெட்ஸ்கேப் போல மென்பொருள் உலகில் புதிய யுகத்தை கொண்டு வந்த மகத்தான மென்பொருள்களில் ஒன்றாக போட்டோஷாப் போற்றப்படுகிறது.

புகைப்படத்தை திருத்த பயன்படுத்தப்படும் இந்த மென்பொருள் எத்தனை ஆயிரம் புகைப்படங்களை நேர்த்தியாக ஆக்க பயன்பட்டிருக்கிறது என தெரியாது. ஆயிரமா? லட்சமா? கோடியா? எத்தனை கோடி ? தெரியாது. புகைப்படத்தில் கைவைக்க வேண்டும் என்றால் சராசரி இணையவாசிகள் முதல் கிராபிக்ஸ் வல்லுனர்கள் வரை அனைவரும் நாடுவது போட்டோஷாப் தான். இவ்வளவு ஏன்...? டிஜிட்டல் கலைஞர்கள் போட்டோஷாப்பை நவீன் தூரிகையாக கொண்டு மெய்மறக்க வைக்கும் டிஜிட்டல் ஓவியங்களை உருவாக்கி வருகின்றனர். வடிவமைப்பாளர்களை பொருத்தவரை இதை ஆறாவது விரல் என்றும் சொல்லலாம்.

அதிகம் பயன்படுத்தப்படும் மென்பொருளாக இருப்பதுடன் மட்டும் அல்லாமல், அதிகம் சர்ச்சைக்குள்ளாகும் ஒன்றாகவும் போடோஷாப் இருக்கிறது. மிக அழகாக தோன்றும் பல புகைப்படங்கள் இயற்கையை மீறிய அழகோ என சந்தேகிக்க காரணமாவதும் போட்டோஷாப் தான். புகைப்படங்கள், அவற்றில் மறைந்திருக்கும் போட்டோஷாப் லீலைகளுக்காக விவாதத்திற்கு உள்ளாகி, சர்ச்சைக்கும் இலக்கானது உண்டு.

இப்படி மென்பொருள் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் போட்டோஷாப், இந்த வாரம் தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! XKE8CqyoSsqU6VvSFZMC+pshop03

எப்படி கூகுள் என்றால் தேடல் என்றாகி விட்டதோ, எப்படி நகலெடுப்பது என்றால் ஜெராக்ஸ் என சொல்லப்படுகிறதோ, அதே போலவே புகைப்படத்தில் திருத்தங்களை செய்வது என்றால் போட்டோஷாப் என்று பொருள் கொள்ளப்படும் அளவுக்கு அந்த பெயர் ஒரு வினைச்சொல்லாகவே உருவெடுத்திருக்கிறது.

அடோப் நிறுவனத்தின் அங்கமாக அதன் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் போட்டோஷாப் பிறந்த விதத்திற்கு பின் சுவாரஸ்யமான கதை இருக்கிறது.

மென்பொருள் உலகின் மைல் கல்லாக அமைந்திருக்கும் போட்டோஷாப், ஒரு இளைஞரின் பொழுதுபோக்காகதான் உருவானது. அமெரிக்காவைச் சேர்ந்த வாலிபரான தாமஸ் நால் என்பவர் அப்போது (1980) மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்தார். கம்ப்யூட்டர் விஷன் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தவர், தனது சகோதரர் ஜானுக்காக புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தக்கூடிய புரோகிராமை, தனது ஓய்வு நேரத்தில் உருவாக்கி கொடுத்தார். இதற்கு முதலில் டிஸ்பிளே என அவர் பெயர் சூட்டியிருந்தார். ஜான், ஹாலிவுட் இயக்குனர் ஜார்ஜ் லூகாசின் விஷுவல் எபெக்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தில் இருந்தவர்கள் புகைப்படத்தில் திருத்தங்களை செய்யக்கூடிய இந்த புரோகிராமால் சொக்கிப்போய் பயன்படுத்த துவங்கினர்.

1988ல் சிலிக்கான் வேலியில் செயல்பட்டு வந்த மென்பொருள் நிறுவனமான அடோப், இந்த புரோகிராமை வாங்கி கொள்ள முன்வந்தது. இதனையடுத்து தாமஸ் நால் அந்த புரோகிராமை மேலும் மெருகேற்றி முழுமையாக்கினார்.

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! MPVECcXnRcyUxTPdSQSW+pshop04

இதன் விளைவாக நால், தனது ஆய்வு படிப்பை முடிக்காமால் போனாலும், அந்த மென்பொருளை முழுமையாக உருவாக்கி கொடுத்தார். அதுதான் அடோப் நிறுவனத்தால் 1990ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி போட்டோஷாப் எனும் பெயரில் வெளியிட்டது.

வெளியாகும் போதே சூப்பர் ஹிட்டாகும் திரைப்படம் போல, போட்டோஷாப் அறிமுகமானவுடனே அதன் பயனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அது மட்டுமா... கம்ப்யூட்டர் உலகில் ஏற்பட்டு வரும் கால மாற்றத்திற்கு ஈடுகொடுத்து வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக்கலை சார்ந்தவர்கள் நாடும் மென்பொருளாக இருந்து வருகிறது.

புகைப்படங்களை திருத்தும் கலையோ, அதற்கான உத்தியோ புதிதும் அல்ல, போட்டோஷாப்பால் பிறந்ததும் அல்ல. புகைப்படக்கலை கண்டுபிடித்தவுடனேயே அதனை மேம்படுத்தும் உத்திகளும் புழக்கத்திற்கு வந்துவிட்டன. ஆனால் அவை ஸ்டூடியோக்களின் இருண்ட அறையில் மேற்கொள்ளப்பட்ட சிக்கலான உத்திகளாக இருந்தன. போட்டோஷாப் அதை கம்ப்யூட்டருக்குள் கொண்டு வந்து இந்த நுட்பத்தை வெகுஜனமாயமாக்கியதுதான் அதன் சாதனை. மேலும் ஆரம்ப கட்டத்தில் புகைப்பட திருத்த சேவைகள் கைக்கெட்டாத விலையில் இருந்தபோது, போட்டோஷாப்பின் கட்டணம் அவற்றோடு ஒப்பிடும் போது குறைவாகவே இருந்தது.

விளைவு பிரபல பத்திரிகையின் அட்டை படத்தை அலங்கரிக்கும் செய்தி புகைப்படத்தில் துவங்கி, ஃபேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படம் வரை எண்ணற்ற புகைப்படங்கள் போட்டோஷாப்பின் டிஜிட்டல் தூரிகையால் மெருக்கேற்றப்படுகின்றன.

எல்லாம் சரி, போட்டோஷ் செய்யப்பட்ட முதல் புகைப்படம் எது தெரியுமா? அது 1988; போரா போராவில் எடுக்கப்பட்ட ஜெனிபர் இன் பார்டைஸ் எனும் பெண்ணின் புகைப்படம்தான். அழகான கடற்கரையில் ஒரு பெண் முதுகை காட்டியபடி இருக்கும் படம் அது. படத்தில் இருப்பவர் வேறு யாருமல்ல, இப்போதைய திருமதி. ஜெனிபர் நால்.

- சைபர்சிம்மன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! Empty Re: வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்!

Post by சிவா Sat 21 Feb 2015 - 0:57

போட்டோஷாப்பா? அப்படி என்றால் என்ன? அய்யோ, நான் இல்லை

போட்டோஷாப் குறித்த தகவல்களை அளித்ததற்கு நன்றி அக்கா & சைபர்சிம்மன்!


வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! Empty Re: வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்!

Post by krishnaamma Sat 21 Feb 2015 - 13:55

சிவா wrote:போட்டோஷாப்பா? அப்படி என்றால் என்ன? அய்யோ, நான் இல்லை

போட்டோஷாப் குறித்த தகவல்களை அளித்ததற்கு நன்றி அக்கா & சைபர்சிம்மன்!
மேற்கோள் செய்த பதிவு: 1121751

ஹேய்............சிவா...........கலாட்டா செய்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா?.....................உங்களுக்கு.....போட்டோஷாப்...தெரியாது.....ம்.....நம்பிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! Empty Re: வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்!

Post by ராஜா Sat 21 Feb 2015 - 14:25

சிவா wrote:போட்டோஷாப்பா? அப்படி என்றால் என்ன? அய்யோ, நான் இல்லை

போட்டோஷாப் குறித்த தகவல்களை அளித்ததற்கு நன்றி அக்கா & சைபர்சிம்மன்!
நான் கூட ...

முருகன் இட்லி கடை போல இதுவும் ஏதோ போட்டோ விற்கும் கடை என்று நினைத்து தான் படித்தேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! Empty Re: வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்!

Post by ayyasamy ram Sat 21 Feb 2015 - 15:00

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84832
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! Empty Re: வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்!

Post by M.Saranya Sat 21 Feb 2015 - 17:13

நான் ஒருதடவை பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்...
அதோடு அந்த பக்கம் போகவே முடியவில்லை....

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! 103459460 வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! 103459460


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! Empty Re: வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்!

Post by ஜாஹீதாபானு Sat 21 Feb 2015 - 17:30

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! 103459460 வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! Empty Re: வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்!

Post by krishnaamma Sat 21 Feb 2015 - 20:16

ராஜா wrote:
சிவா wrote:போட்டோஷாப்பா? அப்படி என்றால் என்ன? அய்யோ, நான் இல்லை

போட்டோஷாப் குறித்த தகவல்களை அளித்ததற்கு நன்றி அக்கா & சைபர்சிம்மன்!
நான் கூட ...

முருகன் இட்லி கடை போல இதுவும் ஏதோ போட்டோ விற்கும் கடை என்று நினைத்து தான் படித்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1121881

ம்..இந்த 'பகடி' தானே வேண்டாங்கிறது புன்னகை............ஜாம்பவான்களே இப்படி சொன்னால்?????????????புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! Empty Re: வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்!

Post by krishnaamma Sat 21 Feb 2015 - 20:21

M.Saranya wrote:நான் ஒருதடவை பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்...
அதோடு அந்த பக்கம் போகவே முடியவில்லை....

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! 103459460 வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1121914

நான் கிருஷ்ணாவிடம் கற்று வருகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! Empty Re: வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்!

Post by krishnaamma Sat 21 Feb 2015 - 20:22

ayyasamy ram wrote:வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! 103459460

நன்றி ராம் அண்ணா புன்னகை

ஜாஹீதாபானு wrote:வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! 103459460 வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1121920

நன்றி பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்! Empty Re: வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum