ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!

+8
M.Saranya
கோ. செந்தில்குமார்
rajirani
ராஜா
Aathira
ayyasamy ram
krishnaamma
சிவா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Empty போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!

Post by சிவா Fri Feb 20, 2015 11:09 pm

 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Untitled%209%28255%29

கடந்த ஜனவரி 27 ஆம் தேதி கரூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர் ஒருவர், மது போதையில் பள்ளி உடையோடு போதையில் மயங்கி கிடந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருச்சி ஜங்ஷன் பகுதியில் நேற்று மாலை போதையில் ஒரு பெண் ரோட்டில் மயங்கி கிடந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய கரூர் மாணவர், கரூர் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றபோது போதையின் உச்சத்தால் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் மயங்கி கீழே விழுந்து கிடந்தார். பள்ளி சீருடையில் மாணவர் ஒருவர் போதையில் மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த மாணவனை தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றும் அவரால் எழ முடியவில்லை. இதையடுத்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து அந்த மாணவனை அழைத்துச் சென்றனர்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதும், உடனே அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த அந்த மாணவரிடமும், அவரது பெற்றோரிடமும், பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். அத்தோடு, பள்ளிக்கு ஒழுங்காக வராமை, பள்ளிச் சீருடையில் மது அருந்தி போதையில் மயங்கி கிடந்தது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களுக்காக பள்ளியில் இருந்து அந்த மாணவரை நீக்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் திருச்சி ஜங்சன் பகுதிகளில் நேற்று மாலை சிவகாமி என்ற பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) போதையில் நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்து கிடந்தார். போலீஸாரும், பொதுமக்களும் வேடிக்கை பார்த்தனர். நீண்ட நேரத்திற்கு பின் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண், கையில் காசு கிடைக்கும்போதெல்லாம் சரக்கு வாங்கி குடிப்பது வழக்கமாம். நேற்று காசு அதிகமாக கிடைத்ததால் கொஞ்சம் ஓவராக போயிடுச்சு என்று போதை தெளியாமல் உளறி இருக்கிறார். சமூகத்தின் அடித்தளமாக விளங்கும் பெண்களும் இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்களே என்று அங்கிருந்தவர்கள் கூறிச் சென்றனர்.

புள்ளி விவரங்கள் என்ன சொல்கிறது...

இந்தியாவில் 1950-60களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் இளமைப் பருவத்தில் குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் 19.5 சதவீதம். இதுவே, 1981-86-க்கு இடையே பிறந்தவர்கள் தங்கள் இளமைப் பருவத்தில் குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோர் 74.3 சதவீதம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மேலும் மது மட்டுமல்லாமல், எந்தவொரு கெட்டப் பழக்கமும் வீட்டிலிருந்தே துவங்குகிறது என்கிறார்கள் ஆய்வர்கள்.

தற்போதெல்லாம் பிறந்த நாள், திருமணம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு என எதற்கெடுத்தாலும் நண்பர்களுக்கு 'பார்ட்டி' கொடுப்பது என்பது ஒரு கட்டாய நிகழ்வாகவே உள்ளது. அதிலும் அந்த பார்ட்டிகளில் முக்கிய இடம் பிடித்திருப்பது மதுபானம்தான்.

மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மதுக்கடைகளின் விற்பனை மற்ற நாட்களைவிட நான்கு மடங்கு அதிகரிக்கிறது. போதைப் பழக்கத்துக்கு அடிமையாவோர் பணிபுரியும் இடம், வீடு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும், சுற்றத்தாரிடமிருந்து ஒதுக்கி வைக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

உலக அளவில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர் என்றும், இவர்களில் 12-25 வயதில் உள்ளோர் அதிகம் உள்ளனர் என்றும், நகர்ப்புறங்களிலேயே இவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில், இளைஞர்களுக்கு அடுத்தபடியாக, போக்குவரத்து பணியில் ஈடுபடுவோர், தெருவோரங்களில் வசிக்கும் சிறுவர்கள் இப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

உலக அளவில் போதை பொருட்களை உட்கொள்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 90 லட்சமாம் (15 முதல் 64 வயது). இதுமட்டுமல்லாமல், 25 கோடியே 10 லட்சம் பேர் வாழ்க்கையில் ஒருமுறையாவது போதை மருந்து பயன்படுத்தி இருக்கிறார்களாம். கடந்த 2008 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், 439 கோடியே 60 லட்சம் பேர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக ஐ.நா. அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சகத்தின் நேஷ்னல் சர்வே நிறுவனம் 4,648 பெண்களிடம் நடத்திய ஆய்வில் 8 சதவிகித பெண்கள் போதையால் சீரழிந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது தோராயமாக, 6.25 கோடி பெண்களில் 10 லட்சம் பெண்கள் நாடுமுழுக்க குடி பழக்கத்திற்கு அடிமையாக ஆரமித்துள்ளார்கள் என எச்சரித்துள்ளது. உலக அளவில் நடைபெறும் தற்கொலைகளில் 50 விழுக்காடு மது குடிப்பதனாலோ அல்லது போதைப்பொருட்களாலோ ஏற்படுவதாக ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறார்கள். இதில், இளம் வயது தற்கொலைகளே அதிகமாக காணப்படுகிறது.

மது பழக்கம் நமது சமூகத்தையே சீரழித்து வருகிறது. மதுவினால் தங்களது தாலிக்கு ஆபத்து வருகிறது என்று மதுக்கடைகளை மூட போராட்டம் நடத்தும் பெண்களில் ஒரு பிரிவினரே, தற்போது தாராளமாக மது அருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆண்களுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று போதையில் தள்ளாடும் பெண்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர்.

அரசாங்கம் தனது வருமானத்திற்காக மதுக்கடைகளை தாராளமாக திறந்து வைத்துள்ளதால் முதலில் ஆண்கள் மதுவிற்கு அடிமையானார்கள். அது வேகமாக வளர்ந்து தற்போது மாணவர்கள் மற்றும் பெண்களிடமும் பரவி அவர்களையும் சீரழிக்க ஆரம்பித்துள்ளது. விரைவில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டுவருவதே இதற்கான தீர்வாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

சி.ஆனந்தகுமார் @ விகடன்


 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Empty Re: போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!

Post by krishnaamma Fri Feb 20, 2015 11:13 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 'அம்மா' ஆட்சி சூப்பர் ...வேற என்னத்த சொல்றது?.............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Empty Re: போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!

Post by ayyasamy ram Fri Feb 20, 2015 11:16 pm

அநியாயம் அநியாயம்
-
 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! JpKvHdmwRDGO73rE8Dg2+Indian-Wines-1024x668
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Empty Re: போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!

Post by Aathira Fri Feb 20, 2015 11:17 pm

ஐயகோ....  இழிந்த தமிழகமே..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் என்ன கொடுமை சார் இது அநியாயம் என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது அநியாயம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Empty Re: போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!

Post by ayyasamy ram Fri Feb 20, 2015 11:19 pm

krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 'அம்மா' ஆட்சி சூப்பர் ...வேற என்னத்த சொல்றது?.............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1121741
-
குஜராத், மணிப்பூர், மிசோரம்,
நாகாலாந்து மாநிலங்களில்
மட்டும்தான் மதுவிலக்கு அமுலில் உள்ளது
-
நம் அண்டை மாநிலங்களில்
நிலைமை எப்படி என்று ஆராய வேண்டும்...!!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Empty Re: போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!

Post by ராஜா Sat Feb 21, 2015 1:18 pm

லக்க்ஷனாவின் வகுப்பு தோழியின் பெற்றோர் குஜராத்தை சேர்ந்தவர்கள் , அவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கு மதுவிலக்கு அமுலில் இருப்பதால் மது விற்பனை கிடையாது. ஆனாலும் கள்ளசந்தையில் கிடைக்கும் மாட்டிகொண்டால் தண்டனை அதிகம் என்பதால் வாங்குபவர் கூட மற்றவர்களுக்கு தெரியாமல் வீட்டிற்குக் கொண்டு சென்று குடித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் உறங்கி விடுவர் என்று சொன்னார்.

இது போல தான் நான் சிறுவயதில் எங்கள் கிராமத்தில் இருந்த போது நடக்கும், இப்ப பள்ளி மாணவர்களே குடித்துவிட்டு மயங்கி கிடக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டது தமிழகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Empty மது போதை

Post by rajirani Sat Feb 21, 2015 2:15 pm



மது கடைகளில் வரும் வருமானத்தில்தான் அரசாங்கம் ஓடுவதை போல
மது கடைகளை எடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது.

தற்போது வரும் சினிமாக்களில் 95% படங்களில் மதுவும், மது கடையும் இல்லாத படமே இல்லை. ஏன் சினிமா துறையினரும், தணிக்கை குழுவினரும் இதை யோசனை செய்வதில்லை.

முன்பும் தற்பொழுதும் நல்ல படங்கள் வந்தன, வந்துகொண்டுதான் இருக்கிறது, ஆனால் மது இல்லாமல் சினிமா இல்லை என்ற நிலை வந்து விட்டது. இதை பார்க்கும் மாணவர்கள் சந்தோசத்திற்காக ஒரு நாள் குடித்து விட்டு பிறகு அதையே வழக்கமாக செய்கிறார்கள்.

அனைவரும் தவறு செய்து அதை பல்கி பெருகி பழக்கத்திற்கு கொண்டு வந்துவிட்டு மாணவனையும், பெண்களையும் குற்றம் கூறி என்ன பயன்.

அரசாங்கம் தனது வருமானத்திற்கு வேறு திட்டத்தில் அந்த வருமானத்தை ஈட்ட யோசனை செய்ய வேண்டும்.

அணைத்து மது கடைகளையும் மூட வேண்டும். இதை செய்யுமா அரசாங்கம்.

முக்குக்கு 3 கடைகளை திறந்து வைத்துவிட்டு வாகனங்களில் வருபவர்களை சோதனை செய்து அதற்கு அபராதம் விதிப்பது, மாணவன் விழுந்து கிடக்கிறான், பெண் விழுந்து கிடக்கிறாள் என்று கூறுவதால் இந்த பிரசனை தீர்ந்து விடுவதில்லை.

இதை அனைவரும் யோசனை செய்வார்களா, அவரவர் தங்களுக்கு பிடித்திருக்கும் பணம், பதவி என்னும் போதை தெளிய செய்தாலே மது என்னும் போதை ஓடி விடும்.
ராஜி ராணி
rajirani
rajirani
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Back to top Go down

 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Empty Re: போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!

Post by கோ. செந்தில்குமார் Sat Feb 21, 2015 2:23 pm

தனி மனித ஒழுக்கம் வேண்டும். அதுவே இந்த அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Empty Re: போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!

Post by M.Saranya Sat Feb 21, 2015 3:38 pm

கலைஞர் ஆட்சியும் சரி அம்மா ஆட்சியும் சரி மது கடைகளை மூட எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை... போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

அவருக்கு குடும்ப பிரச்சனை சோகம் சோகம் சோகம் ..இவருக்கு சொத்து பிரச்சனை அழுகை அழுகை அழுகை ....ஆனால் நம் மக்களுக்கு என்ன பிரச்சனையோ தெரியவில்லை, மது கடையே கதி என்று இருக்கின்றனர்.... அழுகை அழுகை அழுகை

மது கடைகளை எந்த அரசு முதலில் மூட உத்தரவு இடுகிறதோ அப்போது தான் நமக்கு ஒரு நல்ல அரசாங்கம் கிடைக்கும், நம் மக்களின் வாழ்வு தெளியும் .... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Empty Re: போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!

Post by murugesan Sun Feb 22, 2015 7:41 pm

rajirani wrote:

மது கடைகளில் வரும் வருமானத்தில்தான் அரசாங்கம் ஓடுவதை போல
மது கடைகளை எடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது.

தற்போது வரும் சினிமாக்களில் 95% படங்களில் மதுவும், மது கடையும் இல்லாத படமே இல்லை. ஏன் சினிமா துறையினரும், தணிக்கை குழுவினரும் இதை யோசனை செய்வதில்லை.

முன்பும் தற்பொழுதும் நல்ல படங்கள் வந்தன, வந்துகொண்டுதான் இருக்கிறது, ஆனால் மது இல்லாமல் சினிமா இல்லை என்ற நிலை வந்து விட்டது. இதை பார்க்கும் மாணவர்கள் சந்தோசத்திற்காக ஒரு நாள் குடித்து விட்டு பிறகு அதையே வழக்கமாக செய்கிறார்கள்.

அனைவரும் தவறு செய்து அதை பல்கி பெருகி பழக்கத்திற்கு கொண்டு வந்துவிட்டு மாணவனையும், பெண்களையும் குற்றம் கூறி என்ன பயன்.

அரசாங்கம் தனது வருமானத்திற்கு வேறு திட்டத்தில் அந்த வருமானத்தை ஈட்ட யோசனை செய்ய வேண்டும்.

அணைத்து மது கடைகளையும் மூட வேண்டும். இதை செய்யுமா அரசாங்கம்.

முக்குக்கு 3 கடைகளை திறந்து வைத்துவிட்டு வாகனங்களில் வருபவர்களை சோதனை செய்து அதற்கு அபராதம் விதிப்பது, மாணவன் விழுந்து கிடக்கிறான், பெண் விழுந்து கிடக்கிறாள் என்று கூறுவதால் இந்த பிரசனை தீர்ந்து விடுவதில்லை.

இதை அனைவரும் யோசனை செய்வார்களா, அவரவர் தங்களுக்கு பிடித்திருக்கும் பணம், பதவி என்னும் போதை தெளிய செய்தாலே மது என்னும் போதை ஓடி விடும்.
ராஜி ராணி
மேற்கோள் செய்த பதிவு: 1121904

உண்மை...உண்மை...உண்மை...உண்மை...உண்மை...
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! Empty Re: போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» காட்டில் மயங்கி கிடந்த பெண் சிறுத்தைப்புலியை காப்பாற்ற மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வனத்துறையினர்
» நடுரோட்டில் மயங்கி கிடந்த கல்லூரி மாணவியிடம் வாலிபர்கள் சில்மிஷம்
» திண்டுக்கல்- திருச்சி வந்த பஸ்சில் தூக்க மாத்திரை தின்று மயங்கி கிடந்த பள்ளி மாணவி: ஆஸ்பத்திரியில் சிகிச்சை
» போதையால் பாதை மாறும் மாணவர்கள்
» போதையால் பாதை மாறும் மாணவர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum