புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
manikavi
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Pampu
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
216 Posts - 42%
heezulia
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
18 Posts - 3%
sugumaran
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Fri Feb 20, 2015 11:42 am

First topic message reminder :

இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.

தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்


  • தகுதிவாய்ந்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு இன்றே அடியெடுத்து வைக்கத் தொடங்குங்கள்.


  • சுய முயற்சியினால், முழுமையான நிறைந்த முன்னேற்றத்தை சாதிக்கக்கூடிய ஒரு மனிதன் இவ்வுலகிலே கண்டிப்பாக இருக்கிறான். அது நீதான்.


  • உலக வரலாற்றைப் பாருங்கள். மேன்மையாக ஏதாவது சாதித்த அனைவரும் மிகுந்த முயற்சியுடன் உழைத்தனர் என்பதைக் காண்பீர்கள்.


  • வெற்றி என்பது தற்செயலாக நிகழ்வதல்ல. அது, இடைவிடாது செய்யும் முயற்சிக்குக் கிடைத்த வரமாகும்.


  • உண்மையான பயனும், இடைவிடாத முயற்சியும் எப்போதும் இணைபிரியாதவை.


  • இடைவிடாத முயற்சியினால் மட்டுமே உயர்ந்த, விலைமதிப்பற்ற பொருளைப் பெறமுடியும்.


  • எந்தத் துறையாயினும், உயர்ந்த சாதனையை சொல்லிலும், செயலிலும் வேறுபாடற்ற, ஓய்வற்ற முயற்சியினாலேயே பெற இயலும்.


  • நாம் செய்யும் செயலிலே பயனைப் பெறவேண்டுமெனில் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் அதனைச் செய்யவேண்டுமென்ற உறுதியுடன் முன்னேற வேண்டும்.


  • செய்யும் வேலைகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்யுங்கள்.


  • எதிர்கால இன்பம், கனவுகளை கற்பனை செய்துகொண்டு சோம்பேறியாக உட்கார்ந்து கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.


  • இந்த நாள் நல்ல நாள். நிகழ்காலம் மட்டுமே நம் கையில் உள்ளது. அதனை எல்லாவிதங்களிலும் முயன்று, நல்ல முறையிலே பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.


  • எதிர்காலத் திட்டங்களிலே வெற்றிபெற வேண்டுமானால் நிகழ்காலத்தை நன்கு, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


  • நிகழ்காலத்தில் செயலாற்றினால் மட்டுமே சராசரியானவன் திறமைசாலியாக முடியும்.


  • முழுமையாக செயலாற்றுவதற்கு நீங்கள் கற்றுக் கொண்டால், நீங்கள் யாரைப்பற்றியும் பயப்படத் தேவையில்லை.
    உங்களின் திறமையில் நம்பிக்கை வையுங்கள்.


  • நம் வாழ்வின் வெற்றியென்பது, ஒவ்வொரு நாளின் ஒவ்வொருமணியிலும், ஒவ்வொரு நொடியிலும் நாம் வாழும் முறையினைச் சார்ந்தே உள்ளது.


  • நீங்கள் வாழும் முறையைச் சிறிது திறனாய்வு செய்துகொள்ளுங்கள். சிறிது விழிப்புணர்வுடன் உங்கள் நோக்கத்தைக் கண்டுகொள்ளுங்கள்.


  • உங்களிடம் அடங்கியுள்ள ஆற்றலை, தட்டியெழுப்ப வேண்டுமெனில் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும்.


  • உங்கள் நோக்கத்தைக் குறித்த தெளிவான அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்.


  • உங்களின் இலக்கைக் குறித்த தெளிவு உங்களுக்கு இருந்தால், உங்களின் மன ஆற்றல் அந்த திசை நோக்கி பாயத் தொடங்கும்.


  • சிரத்தையுடன் முயற்சி செய்தால் எதையும் அடையமுடியும்.


  • தீவிரமான ஆசை மற்றும் தீவிரமான விருப்பங்களே இலக்கை சாதிப்பதற்கான சூழ்நிலைக்கு உங்களை இழுத்துச் செல்கின்றன.


  • மனிதன் எதை ஆசைப்படுகிறானோ அதையே அடைகிறான்.


  • உங்களுக்கு என்ன வேண்டுமோ, அது கண்டிப்பாகக் கிடைக்கும். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உறுதி செய்துகொண்டு, அதை அடைவதற்கு உடனே செயலில் இறங்குங்கள்.



subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 24, 2015 8:11 am

தன்னம்பிக்கை சூப் 9 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • உங்கள் உள்மனமானது உங்களுக்கு சேவைபுரிவதற்காக எப்போதும் தயார்நிலையில் உள்ளது.

  • உள்மனம் எப்போதும் சோர்வடைவதில்லை.

  • உங்களின் ஒவ்வொரு எண்ணமும் அலைகள்போல் வெளியேறி ஆற்றலாக மாறுகிறது.

  • மன உறுதி படைத்தவன் நம்பிக்கையுடன் முன்னேறுகிறான்.

  • ஒரு வேலையில் முழுமனதோடு ஈடுபட்டால் அந்த வேலை எளிதாக முடியும்.

  • மனதை ஒருநிலைப்படுத்தி செயல்படுத்தினால் அந்தச் செயல் சிறப்பாக அமையும்.

  • செய்யும் செயலில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டால் மனம் தானாகவே ஒருநிலைப்படுகின்றது.

  • வேலை என்று எதைச் செய்தாலும், அதை முழு ஆர்வத்துடன் செய்யவேண்டும்.

  • ஒரு வேலையைச் செய்ய முற்பட்டால் அதில் ஆர்வம் தரும் அம்சத்தை தேடிச் செயல்படுங்கள்.

  • ஒரு வேலையைத் தொடங்கும்போதே ஆர்வத்தை உருவாக்கிக் கொண்டால் வேலை மிகவும் சுலபமாக முடியும்.

  • மனதை தன்வயப்படுத்திய ஒருவன் அதன் சக்தியை தான் விரும்பும் எந்தச் செயலிலும் திருப்பிவிட முடியும்.

  • மனதின் ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்துபவர் மற்றவர்களைவிட அதிக வருமானம் பெறுவார்.

  • உள்ளுணர்வோடு கூடிய சக்தியைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் சாதனை படைக்க முடியும்.

  • நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதைப் பெறுவதற்காக உழைக்க வேண்டும்.

  • ஒரு மனிதன் தன்னைத்தானே உயர்த்திக் கொள்வதற்கு முன் தன்னுடைய சிந்தனைகளை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

  • துடிப்புமிகுந்த முனைப்பும், செயல் திறனும் உடையவர்கள் கண்டிப்பாக வெல்வார்கள்.

  • விருப்பம் நிறைந்த தனித்தன்மைக்கு எதுவும் தடையில்லை.

  • எந்த ஒரு மனிதனும் உலகில் பிறக்கும்போதே தனக்கான ஒரு வேலையில்லாமல் பிறப்பதில்லை.

  • அரிய செயல்களைச் செய்வதற்கான வாய்ப்பு வழங்காத நாளே இதுவரை தோன்றியதில்லை.

  • உங்களுக்கு எதைப்பற்றி கனவு காண முடியுமோ அதை இப்போதே தொடங்குங்கள்.

  • பெருமைக்குரிய வெற்றி வாய்ப்பையே எப்போதும் எதிர்பாருங்கள்.

  • உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தவற விட்டு விடாதீர்கள்.

  • உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்.

  • சரியான முடிவெடுத்தலும், முழுமையான செயல் திறனும் உடையவர்கள் மட்டுமே தங்களுக்கு முன் இருக்கும் இடர்களைக் களைந்து சாதனை புரிகின்றனர்.

  • உங்களுக்குக் கிடைக்கும் சாதாரண வாய்ப்புகளைப் பற்றிக் கொண்டு அதையே மிகப்பெரிய வாய்ப்பாக மாற்றுங்கள்.

  • வாய்ப்புகள் அடிக்கடி வருகின்றன. நீங்கள் விருப்பப்பட்டு செயலில் இறங்கும்போது மட்டுமே அவற்றை சரியானபடி பயன்படுத்தி உயர்வடைய முடியும்.

  • ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வாய்ப்புகள் நிறைந்து கிடக்கின்றன.

  • தனக்குப் பொருத்தமான நேரமோ, வாய்ப்போ கிடைக்கவில்லையென்று சோம்பேறிதான் சொல்லுவான். உழைப்பாளி ஒரு நாளும் அப்படிச் சொல்ல மாட்டான்.

  • யாருமே தன்னுடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓர் அரிய வாய்ப்பை சந்திக்காமல் இருந்ததில்லை.

  • பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் வாய்ப்புகளைத் தவறவிட மாட்டார்கள்.

  • நல்ல வாய்ப்பை நல்லவிதமாக எதிர்கொள்ளுங்கள்.

  • எப்போதும் விழித்திருக்கும் கண்கள் வாய்ப்புகள் எங்கிருந்தாலும் கண்டுகொள்ளும்.


subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 24, 2015 9:35 pm

தன்னம்பிக்கை சூப் 10 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • தன்னுடைய வாய்ப்பை செழுமைப்படுத்துபவர் பின்னாளில் பயன் பெறுவது நிச்சயம்.

  • கடுமையான உழைப்புக்கு முன்னால் மிகச்சிறிய வாய்ப்புகள் கூட விலை மதிப்புள்ளவை.

  • மனதை உறுதிப்படுத்திக் கொண்டால் எதுவுமே கடினமானதல்ல.

  • உங்கள் விருப்பங்களையெல்லாம் வலிமை நிறைந்த உறுதியான மனநிலைக்கு இட்டுச் செல்லப் பழகுங்கள்.

  • ஒரு தீர்மானமான முடிவோடு உங்கள் பயணத்தைத் தொடங்கினால் உங்கள் ஒவ்வொரு கருத்தும் மிகச் சரியானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  • தன் திறமையின்மீது கொண்ட நம்பிக்கையைவிட அதிக ஆற்றல் பெற்றது எதுவுமில்லை.

  • உங்களை நம்புங்கள், உங்கள் ஆற்றலை நம்புங்கள்.

  • ஒரு நாளில், நேரத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி வேலைகளை முடிப்பதால் சோர்வு ஏற்படுவதில்லை.

  • யார் நேரத்தை மிச்சப்படுத்துகிறாரோ அவர் எல்லா நன்மைகளையும் அடைவார்.

  • தடைகள் எதுவாக இருந்தாலும் அவை நீக்கப்படக்கூடியவையே என்பதை மறந்துவிடாதீர்கள்.

  • செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைத்துச் செயல்படுங்கள்.

  • எந்தப் பொறுப்பையும் தைரியமாகவும், உறுதியுடனும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

  • ஒரு மனிதனுடைய அனைத்துச் சிறப்பியல்புகளுக்கும் ஆதாரமாக இருப்பது அவனுடைய ஆழ்மன ஆற்றலாகும்.

  • எதற்கும் ஒரு வழி உண்டு. நாம் அதைத் தேடிக் கண்டுபிடித்துச் செயல்பட வேண்டும்.

  • உங்கள் வாழ்வின் குறிக்கோளை அடைந்துவிட்டதாக அடிக்கடி கற்பனை செய்து பாருங்கள்.

  • மனதை ஒருநிலைப்படுத்திவிட்டால் மனிதனின் ஆற்றலானது பல மடங்கு அதிகமாகி விடுகின்றது.

  • மனதை ஒருநிலைப்படுத்திவிட்டால் ஆற்றலை நம் தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.

  • முன்னேறுவது உறுதி என்பதில் முழு நம்பிக்கை வைத்துச் செயல்புரியுங்கள்.

  • அற்புத சக்தியானது ஒவ்வொரு மனிதனிடமும் நிறைந்துள்ளது.

  • எண்ணங்கள் மனித உடலில் ஆழமாகச் செயல்படுகின்றன.

  • ஒரு வேலையை செய்து முடிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டாலே பாதி வேலை முடிந்துவிட்டதாக அர்த்தம்.

  • நீ நீயாக இரு. உன் வழிமுறைகளால், உன் எண்ணங்களால் முடிந்ததைச் செய்.

  • இந்த உலகத்திற்கு உன் இயலாமை தேவைப்படாது. ஆனால் உன்னிடமுள்ள அரிய திறமைகள் தேவைப்படும்.

  • வேலை செய்வது என்பது ஒவ்வொரு மனிதனின் கடமை.

  • உள்மனமே திறமைகளுக்கு ஆதாரமாக உள்ளது.

  • சிறு காரியங்களையும் செம்மையாகச் செய்து வந்தீர்களேயானால் பெரிய சாதனைகள் தாமாகவே நடைபெறும்.

  • வாழ்க்கையின் பொன்னான விதி “ஆர்வம் கொள்” என்பதுதான். எந்தக் காரியமாக இருந்தாலும் ஆர்வமுடன் செயல்படுங்கள்.

  • முயற்சி திருவினையாக்கும்.

  • செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும்.

  • வாழ்க்கையில் வெற்றிபெறுவது, ஆர்வம் காட்டுதல் என்ற இரண்டு வார்த்தைகளில் அடங்கியுள்ளது.

  • நிகழ்காலத்தைவிட வேறு நல்ல நேரம் கிடையாது.

  • எந்தவொரு வேலையையும் கவனத்துடன், முழு ஈடுபாட்டுடன் செய்தால் விரைவாகச் செய்து முடித்து விடலாம்.


subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 25, 2015 8:19 am

தன்னம்பிக்கை சூப் 11 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • நீங்கள் வெற்றிபெற ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது உங்களை நம்புவது.

  • நம்பிக்கை வைத்து புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டலாம்.

  • மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

  • உங்களுடைய உண்மையான குறிக்கோள்களுக்கான கட்டளைகளுக்கு உள்மனமானது அடிபணியும்.

  • இதற்குமேல் செல்லமுடியாது என்ற எல்லையை நீங்கள் அடைந்துவிட்டாலும் தொடர்ந்து பயணம் செய்ய முயற்சி செய்யுங்கள்.

  • மனம் எதை வேண்டுமானாலும் உங்களை சாதிக்க வைக்கும்.

  • நீங்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கிறது.

  • திட்டவட்டமான குறிக்கோளுடன் உங்கள் எண்ண அலைகள் இயங்கிக் கொண்டிருந்தால் உங்கள் எண்ணம் நிறைவேறுவது நிச்சயம்.

  • வெற்றி பெறும்வரை ஓயமாட்டேன் என்று உறுதிகொள்ளுங்கள்.

  • நீங்கள் ஒரு செயலுக்காக நிஜமாகவே தயாராகும் சமயத்தில் அந்தச் செயல் நிகழ்கிறது.

  • வெற்றியின் பாதை எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருங்கள்.

  • வெற்றி, வெற்றி என்று எப்போதும் அதே சிந்தனையில் இருப்பவர்களை வெற்றி வந்தடைகிறது.

  • அசைக்கமுடியாத மன உறுதியோடு உங்கள் இலட்சியத்தை அடைய கடுமையாக முயற்சி செய்யுங்கள்.

  • உங்கள் கனவை யாரும் சிதைத்துவிட ஒருபோதும் இடம் கொடுக்காதீர்கள்.

  • உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு அதன்மூலம் பலனடைவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கித் தருவது செயல்வேகம் மட்டுமே.

  • நீங்கள் செய்யவிரும்புவது சரியானதாக இருந்தால் அதைத் தொடர்ந்து செய்யுங்கள்.

  • ஒவ்வொரு தோல்வி வரும்போதும், அதனுடன் வெற்றிக்கான விதையைக் கொண்டு வருகிறது.

  • இந்த உலகில் ஏராளமான வாய்ப்புக்கள் குவிந்துள்ளன.

  • வாழ்வில் வெற்றியடைந்த 90 சதவிகிதம் பேர் தோல்வியில் ஆரம்பித்து மனதை ரணப்படுத்தும் போராட்டங்களுக்குப் பிறகே சாதித்திருக்கிறார்கள்.

  • உங்கள் மனதில் நம்பிக்கையை நிரப்புங்கள்
.
  • தகிக்கும் ஆசைக்குள்ளேயே, அதை நடைமுறை சாத்தியமாக்குவதற்கான பல்வேறு வழிவகைகள் அடங்கியுள்ளன.

  • நம்பிக்கையும், கனவாகத் தகிக்கும் ஆசையும் சேர்ந்து நிஜமாக்க முடியாதது என்று எதுவுமே இல்லை.

  • நம்பிக்கையும், எண்ணமும் ஒன்றாகக் கலக்கும்போது உருவாகும் அதிர்வலையை ஆழ்மனம் உடனே கிரகித்துக் கொள்கிறது.

  • திரும்பத் திரும்ப ஆழ்மனதிற்கு அனுப்பப்படும் எந்த எண்ணத்தையும் அது ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்படும்.

  • உங்களின் உறுதியான நம்பிக்கைதான் ஆழ்மனதை செயல்பட வைக்கும் அச்சாணி.

  • ஆழ்மனதை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் அதனிடம் நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அது கிடைக்கும்.

  • நம்பிக்கை என்பது ஒருவித மனநிலை. உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளும் சுய கட்டளையின்மூலம் அதை வளர்த்துக்கொள்ள முடியும்.

  • எதிலும் வெற்றிபெறுவதற்கான முதல் கட்டம் நம்பிக்கை.

  • உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்காக தினமும் ஒருமணி நேரம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் நீங்கள் பெற்ற வெற்றிகளை திரும்பத் திரும்ப நினைத்து மகிழுங்கள்.


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Feb 25, 2015 11:25 am

மிகவும் பயனுள்ள பகிர்வு........

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 1571444738 தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Thu Feb 26, 2015 8:09 am

தன்னம்பிக்கை சூப் 12 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • உங்கள் மூளையில் முடங்கிக் கிடக்கும் அபாரமான சக்தியைத் தட்டியெழுப்பி நீங்கள் நினைப்பதை சாதிக்க முடியும்.

  • முழு நம்பிக்கை உணர்வுடன் இடப்படும் எந்தக் கட்டளையையும் ஆழ்மனம் ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்படும்.

  • நம்பிக்கை என்பது அதிக நன்மை தரக்கூடிய வலுவான உணர்ச்சி.

  • தன்னுடை ய ஆழ்மனதை வசப்படுத்தும் சக்தி ஒவ்வொருவருக்கும் உண்டு.

  • வெற்றி பெறுபவரைத்தான் உலகம் போற்றுகிறது.

  • வெற்றியும், தோல்வியும் நமது பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.

  • உங்களால் கற்பனை செய்ய முடிந்த எதையும் உங்களால் நிஜமாக்க முடியும்.

  • கற்பனை வளத்தை எந்த அளவிற்கு வளர்த்துக் கொண்டு பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு அது பயன்கொடுக்கும்.

  • உங்கள் ஆசையை நனவாக்கும் முயற்சியில் முதல்படி திட்டமிடுதல்.

  • திட்டவட்டமான எந்தக் குறிக்கோளும் வெற்றியடையும்.

  • திட்டவட்டமான குறிக்கோள், தெளிவான திட்டம் ஆகியவை வெற்றியை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும்.

  • உங்கள் மனம் முழுவதும் வியாபித்து நிற்கும் ஆசையை நீங்கள் கண்டிப்பாக அடையமுடியும்.

  • வெற்றியைக் கொடுக்கும் திட்டம் உங்கள் கைக்குக் கிடைக்கும்வரை மாற்றுத் திட்டத்தைப் பின்பற்றுவதில் நீங்கள் தளர்ந்து போய்விடக் கூடாது.

  • உங்கள் வேலையைத் திட்டமிட்டுக் கொண்டு அந்தத் திட்டத்தின்படி வேலை செய்யுங்கள்.

  • உங்களுக்கு எப்படிப்பட்ட வேலை தேவை என்பதை சரிவரத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

  • உடனடியாக வேலையை ஆரம்பித்து விடுங்கள். போகப்போக உங்களுக்குத் தேவையானவையெல்லாம் வந்து சேரும்.

  • விடாமுயற்சியை தாரகமந்திரமாகக் கொண்டவர்களை தோல்வி நெருங்காது.

  • உங்களால் எந்தத் தொழிலில் முழு மனதோடு செயல்பட முடியுமோ அந்த மாதிரியான துறையைத் தேர்வுசெய்து கொள்ளுங்கள்.

  • திட்டவட்டமான ஒரு தலையாய குறிக்கோளில் உங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தப் பழகுங்கள்.

  • உங்கள் வாயால், உங்கள் நோக்கம் என்ன என்று சொல்வதைவிட உங்கள் செயலால் செய்துகாட்டி விடுங்கள்.

  • உங்களின் இலக்கு என்ன என்பதைத் தெளிவாக அறிந்து வைத்திருங்கள். அப்போதுதான் அதை அடையமுடியும்.

  • வாழ்வின் எல்லாத் துறைகளிலும் உள்ள தலைவர்கள் விரைவாகவும், உறுதியாகவும் முடிவெடுக்கிறார்கள். அவர்கள் தலைவர்களாக இருப்பதற்கு முக்கியக் காரணமே அதுதான்.

  • தகிக்கும் ஆசைகள்தான் சாதனைகளின் ஆரம்பம்.

  • எந்த விஷயத்திலும் விடாமுயற்சி என்ற பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

  • விடாமுயற்சியை உங்கள் வாழ்வின் தாரக மந்திரமாக்கிக் கொள்ளுங்கள்.

  • ஒரு வலுவான குறிக்கோள், எல்லாத் தடைகளையும் தகர்த்து வெற்றியை அடைய வழிகாட்டும்.

  • அழுத்தம் திருத்தமாக ஆசைப்படுங்கள்.

  • மனித மனம் சக்தியின் ஒரு வடிவம்.

  • மன வலிமையின்மூலம் மனதில் ஓடும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியும்.

  • உங்களின் எந்த லட்சியத்தையும் உங்கள் ஆழ்மனதில் விதைத்துக் கொள்ளலாம்.


subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Thu Feb 26, 2015 3:17 pm

தன்னம்பிக்கை சூப் 13 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • வெற்றி தொட்டுவிடும் தூரம்தான் என்பதை நம்புங்கள்.

  • சோம்பேறியாக இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது. பணம் சம்பாதிக்க உழைப்பைக் கொடுத்தாக வேண்டும்.

  • நேற்று என்ன செய்தீர்கள் என்பதைப் பற்றி ஒருபோதும் கவலைப்படாதீர்கள். இன்று புதிதாகத் துவங்குகிறது.

  • யார் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க முடியும். அதற்காக நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

  • செல்வம் சம்பாதிப்பவர்களெல்லாம் அதிகாலையில் எழுந்து, நாள்முழுவதும் கடுமையாக உழைப்பவர்களே.

  • பணம் பணத்தைப் பெருக்கும் இயல்புடையது.

  • சம்பாதிக்கும் பணத்தில் உங்கள் வளர்ச்சிக்காக கொஞ்சம் பணத்தை ஒதுக்கி வையுங்கள்.

  • உங்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது மிகமிக முக்கியம்.

  1. பல சக்திகள் நமக்குள்ளேயே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைத்தான் நாம் பயன்படுத்துகிறோம்.

  • மகிழ்ச்சி என்பது உங்களுக்குள்தான் இருக்கிறது.

  • பணக்காரராக வேண்டுமென்று நீங்கள் தீவிரமாக சிந்திப்பீர்களேயானால், பணக்காரர்களாக இருப்பவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

  • உங்கள் இலட்சியத்துடன் வாழுங்கள், இலட்சியத்துடனே மூச்சு விடுங்கள், இலட்சியத்துடனே தூங்கச் செல்லுங்கள். இலட்சியத்தைவிட்டு ஒரு கணமும் பிரியாதீர்கள்.

  • பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் இலட்சியக் கனவுகளை எந்நேரமும் சுமப்பவர்களாகவும், அதற்காக சில தியாகங்களைச் செய்யத் தயாராக உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

  • திட்டமிடுதலே உங்கள் இலக்கை அடைவதற்கு வழிகாட்டும்.

  • நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காக ஒரு திட்டமிட வேண்டியதும் அதன்படி செயல்பட வேண்டியதும் அவசியம்.

  • முயற்சி அதிகமாக இருந்தால் அதனால் ஏற்படும் பலனும் அதிகமாகவே இருக்கும்.

  • செல்வத்தைக் குவிக்க வேண்டுமென்றால் முதலில் உங்கள் மனதைக் குவிக்க வேண்டும்.

  • உங்கள் உள்மனக் குரலுக்கு மதிப்பளியுங்கள்.

  • யார் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம், அதற்கு வயதோ, காலமோ தடையல்ல.

  • செல்வந்தராக வேண்டுமானால் முதலில் அதைப்பற்றி ஆழமாகச் சிந்தியுங்கள். வழிகள் தானாகவே திறக்கும்.

  • உங்களுக்கு எதுவும் அதிகமாகக் கிடைக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அதிகமாகச் செயலாற்ற வேண்டும்.

  • எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். அதை இப்போதே தொடங்கிவிடுவது நல்லது.

  • நேரத்தை ஒருபோதும் வீணாகக் கழிக்காதீர்கள்.

  • செல்வந்தரான பிறகு கஷ்டப்பட வேண்டியதில்லை. ஆனால் அதற்கான வேலையை நீங்கள் முதலில் செய்தாக வேண்டும்.

  • நீண்ட நேரத்துக்கு உங்களால் உழைக்க முடியும் என்றால், அதை சரியானவற்றின் மீது செலுத்த முடியுமென்றால் நீங்கள் நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.

  • உங்கள் தேவை, இலக்கு, நோக்கம் என்னவென்பதில் தெளிவாக இருங்கள்.

  • சிக்கனமாக இருப்பது அவசியம்தான். அதற்காக உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்துவிடாதீர்கள்.


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 26, 2015 5:07 pm

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 3838410834 தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 3838410834

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 103459460 தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Thu Feb 26, 2015 6:35 pm

இனிய தோழமைக்கு மிக்க நன்றி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 26, 2015 6:53 pm

subramanian sivan wrote:
நேற்று என்ன செய்தீர்கள் என்பதைப் பற்றி ஒருபோதும் கவலைப்படாதீர்கள். இன்று புதிதாகத் துவங்குகிறது.

"நேற்று" என்பது நேற்று மட்டும் அல்ல : கடந்த காலம் .கடந்த காலத்தில் செய்தது சரியான செயலா /தவறான செயலா என்று ஆராய்தலே ,நம்மை /எதிர்காலத்தை செம்மை படுத்தும் என்பதே என் கருத்து .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 26, 2015 7:08 pm

//சிக்கனமாக இருப்பது அவசியம்தான். அதற்காக உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்துவிடாதீர்கள்.//

ஆமாம், சிக்கனமாக இருக்கலாம் அதற்காக 'கஞ்சத்தனமாக' இருக்க கூடாது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக