ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

4 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Empty தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by subramaniansivam Fri Feb 20, 2015 11:42 am

First topic message reminder :

இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.

தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்


  • தகுதிவாய்ந்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு இன்றே அடியெடுத்து வைக்கத் தொடங்குங்கள்.


  • சுய முயற்சியினால், முழுமையான நிறைந்த முன்னேற்றத்தை சாதிக்கக்கூடிய ஒரு மனிதன் இவ்வுலகிலே கண்டிப்பாக இருக்கிறான். அது நீதான்.


  • உலக வரலாற்றைப் பாருங்கள். மேன்மையாக ஏதாவது சாதித்த அனைவரும் மிகுந்த முயற்சியுடன் உழைத்தனர் என்பதைக் காண்பீர்கள்.


  • வெற்றி என்பது தற்செயலாக நிகழ்வதல்ல. அது, இடைவிடாது செய்யும் முயற்சிக்குக் கிடைத்த வரமாகும்.


  • உண்மையான பயனும், இடைவிடாத முயற்சியும் எப்போதும் இணைபிரியாதவை.


  • இடைவிடாத முயற்சியினால் மட்டுமே உயர்ந்த, விலைமதிப்பற்ற பொருளைப் பெறமுடியும்.


  • எந்தத் துறையாயினும், உயர்ந்த சாதனையை சொல்லிலும், செயலிலும் வேறுபாடற்ற, ஓய்வற்ற முயற்சியினாலேயே பெற இயலும்.


  • நாம் செய்யும் செயலிலே பயனைப் பெறவேண்டுமெனில் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் அதனைச் செய்யவேண்டுமென்ற உறுதியுடன் முன்னேற வேண்டும்.


  • செய்யும் வேலைகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்யுங்கள்.


  • எதிர்கால இன்பம், கனவுகளை கற்பனை செய்துகொண்டு சோம்பேறியாக உட்கார்ந்து கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.


  • இந்த நாள் நல்ல நாள். நிகழ்காலம் மட்டுமே நம் கையில் உள்ளது. அதனை எல்லாவிதங்களிலும் முயன்று, நல்ல முறையிலே பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.


  • எதிர்காலத் திட்டங்களிலே வெற்றிபெற வேண்டுமானால் நிகழ்காலத்தை நன்கு, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


  • நிகழ்காலத்தில் செயலாற்றினால் மட்டுமே சராசரியானவன் திறமைசாலியாக முடியும்.


  • முழுமையாக செயலாற்றுவதற்கு நீங்கள் கற்றுக் கொண்டால், நீங்கள் யாரைப்பற்றியும் பயப்படத் தேவையில்லை.
    உங்களின் திறமையில் நம்பிக்கை வையுங்கள்.


  • நம் வாழ்வின் வெற்றியென்பது, ஒவ்வொரு நாளின் ஒவ்வொருமணியிலும், ஒவ்வொரு நொடியிலும் நாம் வாழும் முறையினைச் சார்ந்தே உள்ளது.


  • நீங்கள் வாழும் முறையைச் சிறிது திறனாய்வு செய்துகொள்ளுங்கள். சிறிது விழிப்புணர்வுடன் உங்கள் நோக்கத்தைக் கண்டுகொள்ளுங்கள்.


  • உங்களிடம் அடங்கியுள்ள ஆற்றலை, தட்டியெழுப்ப வேண்டுமெனில் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும்.


  • உங்கள் நோக்கத்தைக் குறித்த தெளிவான அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்.


  • உங்களின் இலக்கைக் குறித்த தெளிவு உங்களுக்கு இருந்தால், உங்களின் மன ஆற்றல் அந்த திசை நோக்கி பாயத் தொடங்கும்.


  • சிரத்தையுடன் முயற்சி செய்தால் எதையும் அடையமுடியும்.


  • தீவிரமான ஆசை மற்றும் தீவிரமான விருப்பங்களே இலக்கை சாதிப்பதற்கான சூழ்நிலைக்கு உங்களை இழுத்துச் செல்கின்றன.


  • மனிதன் எதை ஆசைப்படுகிறானோ அதையே அடைகிறான்.


  • உங்களுக்கு என்ன வேண்டுமோ, அது கண்டிப்பாகக் கிடைக்கும். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உறுதி செய்துகொண்டு, அதை அடைவதற்கு உடனே செயலில் இறங்குங்கள்.
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Back to top Go down


தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Empty Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by subramaniansivam Sun Feb 22, 2015 9:26 pm

தன்னம்பிக்கை சூப் 6 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்


  • ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வாய்ப்புக்கள் நிறைந்து கிடக்கின்றன.

  • தனக்குப் பொருத்தமான நேரமோ, வாய்ப்போ கிடைக்கவில்லை என்று சோம்பேறிதான் சொல்லுவான். உழைப்பாளி ஒருநாளும் அப்படிச் சொல்லமாட்டான்.

  • யாருமே தன்னுடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓர் அரிய வாய்ப்பை சந்திக்காமல் இருந்ததில்லை.

  • பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் வாய்ப்புக்களைத் தவறவிட மாட்டார்கள்.

  • நல்ல வாய்ப்பை எதிர்கொள்ளுங்கள்.

  • எப்போதும் விழித்திருக்கும் கண்கள் வாய்ப்புக்கள் எங்கிருந்தாலும் கண்டுகொள்ளும்.

  • தன்னுடைய வாய்ப்பைப் பயன்படுத்துபவர் பின்னாளில் பலன் பெறுவார்.

  • கடுமையான உழைப்புக்கு முன்னால் மிகச்சிறிய வாய்ப்புக்கள்கூட விலைமதிப்புள்ளவை.

  • மிகப்பெரிய வாய்ப்புக்காக உங்களைத் த யார்நிலையில் வைத்திருங்கள்.

  • ஒவ்வொரு வாய்ப்பும் மிகப்பெரிய வாய்ப்பே என்று நினைத்து தொடர்ந்து செயல்படுங்கள்.

  • உங்களால் தற்போது என்ன செய்ய முடிகிறதோ அதைவிட அதிகமாகச் செய்யுங்கள்.

  • உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள்.

  • உங்கள் தனித்தன்மையை எப்போதும் இழக்காதீர்கள்.

  • ஆசைப்பட்டால்தான் எதையும் அடைய முடியும்.

  • தன்னுடைய உண்மையான பலம் தெரியாதவர்கள்தான் தகுதி குறைந்த இடத்தில் அடங்கிக் கிடப்பார்கள்.

  • மனிதர்கள் ஆசைப்படுவதால்தான் இலக்கை அடைகிறார்கள்.

  • பிறர் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று கவலைப்படாதீர்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

  • உங்கள் வாழ்வில் நிகழும் வெற்றி தோல்விகள் அனைத்திற்கும் நீங்களே காரணம்.

  • உங்கள் வெற்றியைத் தடுப்பவை எவையென்று அலசி ஆராய்ந்து அவற்றை நீக்குங்கள். வெற்றி உங்களை வந்தடையும்.

  • உங்களால் எதுவும் முடியும் என்று நம்புங்கள்.

  • புதிதாக எதையாவது சாதிக்க ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக சாதிப்பார்கள்.

  • விரும்பி உழைத்தால் விரும்புவது கிடைக்கும்.

  • உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

  • எந்தத் தோல்வியும் நிலையானதல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

  • உறுதியான உள்ளத்துடன் விடாமுயற்சி செய்துகொண்டே இருங்கள்.

  • வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற வெறி உள்ளவர்களுக்குத்தான் வெற்றி கிட்டும்.

  • தங்கள் கனவை நனவாக்க வேண்டும் என்ற வெறி உள்ளவர்கள்தான் அளப்பரிய சாதனைகள் புரிகின்றார்கள்.

  • சோதனைகள் வரும்போது நம்பிக்கையை இழக்காமல் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுங்கள். உங்களுக்கு வெற்றி என்னும் விடிவெள்ளி தெரியும்.

  • சாதிக்க நினைப்பவர்கள் சோதனைகளைக் கடந்துதான் ஆகவேண்டும்.

  • சூழ்நிலையை எப்படிக் கையாளுகிறோம் என்பதைப் பொறுத்துதான் வெற்றி கிடைக்கிறது.

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Back to top Go down

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Empty Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by subramaniansivam Mon Feb 23, 2015 11:35 am

தன்னம்பிக்கை சூப் 7 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • உங்கள் இலக்கை அடையும்வரை தளராமல் போராடுங்கள். இலக்கை அடைந்தவுடன் புதிய இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

  • நீங்கள் உங்கள் இலக்கை அடைந்தவுடன் எப்படியிருப்பீர்கள் என்பதை அடிக்கடி கற்பனை செய்து மனக்காட்சியாகப் பாருங்கள்.

  • உங்கள் மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்து கொண்டீர்களென்றால் நீங்கள் அடைகின்ற வெற்றிக்கு வானம்கூட எல்லையாகாது.

  • தியானம் உங்கள் மனதைக் கட்டுப்படுத்த உதவும். எனவே அடிக்கடி தியானம் செய்யுங்கள்.

  • வாழ்க்கையில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். ஏனென்றால் அதை நீங்கள் அடைந்து விடுவீர்கள்.

  • மனதை சரியான பாதையில் செலுத்தத் தெரிந்துகொண்டீர்கள் என்றால் உங்கள் வாழ்வில் வெற்றிப் பூக்கள் மலரும்.

  • உங்களை உயர்வான நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த மனம் உங்களிடமேதான் உள்ளது.

  • உங்கள்மீது நீங்களே நம்பிக்கை வைக்காவிட்டால் வேறு யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். எனவே முதலில் உங்களை நம்புங்கள்.

  • நீங்கள் கனவு காண்பதைவிட பெரிய உயரங்களை உங்களால் அடையமுடியும்.

  • பெரிதினும் பெரிது கேளுங்கள்.

  • உறுதியான தெய்வ நம்பிக்கையும், அயராத உழைப்பும் எந்தக் காரியத்தையும் செய்து முடிக்கும்.

  • உடல் வலிமையைவிட மன வலிமையே நமக்கு ஊக்கமளிக்கிறது.

  • நம்பிக்கையுடன்கூடிய முயற்சியை செய்யாதவரையில் மனிதனின் வளர்ச்சியும், முன்னேற்றமும் முழுமை பெறாது.

  • நல்ல ஆற்றலின்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வையுங்கள்.

  • எதற்காகவும் கவலைப்படாதீர்கள். எந்தப் பிரச்சனையையும் துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்.

  • கஷ்டங்கள் எத்தகைய அசாதாரணமான முறையில் இருந்தாலும், நம்மனமாற்றத்தால் அவைகளை எதிர்கொள்ள வேண்டும்.

  • நல்ல இயல்புகளை பொறுமையுடன் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • வாழ்வில் நம் எல்லா சாதனைகளும், வெற்றிகளும் மனதில் உதித்த எண்ணங்கள், சங்கல்பங்கள், கருத்துக்களை அனுசரித்ததன்மூலமே நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதை நினைவுகொள்ளுங்கள்.

  • இன்றிலிருந்தே உங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் மாற்றிக் கொள்வதற்கு உண்மையாக முயற்சி செய்யுங்கள்.

  • உங்கள் வாழ்வில் முக்கியமான நோக்கத்தை அடைவதற்கு ஏற்றாற்போல் எண்ணங்கள், கருத்துக்கள், கற்பனைகளை வடிவமைத்துக் கொள்ளும் பழக்கம் மிகவும் அவசியமானதாகும்.

  • பொறுமை நன்மை செய்யும்.

  • குறைவாகப் பேசுங்கள், அதிகமாகச் செயலாற்றுங்கள்.

  • ஆற்றல் எத்தகைய முறையற்ற நிலையையும் சரிசெய்யும்.

  • நாள்தோறும் செய்யும் முறையான பிரார்த்தனையால் உடலிற்கு எல்லாவகையிலும் நன்மைகள் விளைகின்றன.

  • எல்லா ஆற்றல்களும் நிறைந்த கடவுளிடம் நம்பிக்கையுடனும், பக்தியுடனும் அடைக்கலம் ஆகிவிடுங்கள்.

  • எந்தச் செயலிலும் உறுதியான நம்பிக்கை ஏற்பட்டால் முழுமையான மனதுடன் அதில் ஈடுபட முடியும்.
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Back to top Go down

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Empty Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by M.Saranya Mon Feb 23, 2015 12:00 pm

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 3838410834 தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 3838410834


தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 1571444738


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Empty Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by subramaniansivam Mon Feb 23, 2015 4:01 pm

தன்னம்பிக்கை சூப் 8 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • நிகழ்காலத்தில் உங்கள் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தீர்களானால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

  • நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கையின்மூலமே வாழ்க்கை பயனுள்ளதாக அமைகிறது.

  • நம்பிக்கையினால் எல்லாம் கிடைக்கும்.

  • நம்பிக்கை இருக்கும் இடத்தில் இறைவன் இருக்கின்றான்.

  • சிறிதளவு நம்பிக்கையிருந்தால் சிறிய செயல்களையே செய்ய இயலும். உறுதியான நம்பிக்கை இருந்தால் பெரிய செயல்களைச் செய்யலாம்.

  • இலக்கினை அடையும்வரை ஓய்வின்றி முயற்சியில் ஈடுபடுங்கள்.

  • தன்னம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை என்னும் இவைகளே புகழ் மற்றும் வெற்றிகளின், சாதனைகளின் திறவுகோல்களாக விளங்குகின்றன.

  • மனிதனின் மனமே அவனுடைய முன்னேற்றத்திற்கும், துன்பங்களுக்கும் காரணம்.

  • தீவிரமான எண்ண ஓட்டங்களுடன் கற்பித்துக் கொள்ளப்படும் உருவங்கள், அத்தகைய அனுபவங்களை நம் அருகில் இழுக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன.

  • கடவுளிடம் முழுமையான நம்பிக்கையுடன் தஞ்சமடையுங்கள்.

  • உறுதியான நிஷ்டையுடன் எதிர்த்தால் கஷ்டங்களும், துயரங்களும் நம்மை விட்டு அகலும்.

  • உங்களால் இயலாதது என்பது எதுவும் இல்லை.

  • எத்தகைய செயலையும், அதன் முறையினை அறிந்து, ஒழுங்குமுறையுடன் செய்துகொண்டு வந்தால் அது பழக்கமாகி விடுகிறது.

  • நம் மனதில் எத்தகைய எண்ணங்களும், கருத்துக்களும் திரும்பத் திரும்ப வருகின்றனவோ, அத்தகைய இயல்புகளை நாம் பெற்றவர்களாவோம்.

  • கடவுளிடமும், உங்களிடமும் உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள்.

  • கடவுள் யாரையும், என்றும், எத்தகைய சூழ்நிலையிலும கைவிடுவதில்லை என்பதை நம்புங்கள்.

  • நல்ல செயல்களை தொடர்ச்சியாக செய்துவாருங்கள். அதற்குரிய பலன் கண்டிப்பாகக் கிடைக்கும்.

  • இடைவிடாமல் முறையாகச் செய்யும் முயற்சியால், கண்டிப்பாக மனதை கட்டுப்படுத்த இயலும்.

  • முயற்சி, முயற்சி, விடாமுயற்சி, பிரார்த்தனை என்று தொடர்ந்து செய்தால் கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்படும்.

  • வெற்றி என்னும் ஏணியில் ஏறுவதற்கு, நம் செயல் குறித்து முழுமையான ஞானம் இருக்கவேண்டும்.

  • நான் வெற்றி பெறுவேன் என்று வார்த்தைகளில் கூறுவது தவிர மனக்கண்ணில் தொடர்ந்து காணுங்கள்.
    உங்கள் மனதை ஆக்கப்பூர்வமான சிந்தனைகளால் நிரப்புங்கள்.

  • மனதில் ஒரு லட்சியத்துடனும், துடிப்புடனும் செயல்படுங்கள்.

  • வாழ்க்கையில் சாதனை புரியவும், வெற்றி அடையவும் மனம் அமைதியான நிலையில் இருக்கவேண்டும்.

  • ஒரு கருத்தை உங்கள் மனதில் ஆழமாகப் பதித்துவிட்டால்அது தேவைப்படும் சமயத்தில் செயலில் ஈடுபட்டு வெற்றிகரமாக செயலை முடித்துவிடும்.

  • நாம் எண்ணிய எண்ணத்தை கருத்தில் கொண்டு கடினமாக உழைக்க வேண்டும்.

  • உங்கள் சிந்தனைகள் முழுவதும் உங்கள் இலட்சியத்தைச் சுற்றியே இருக்கட்டும்.

  • உங்கள் உள்மனதின் ஆற்றலைப் பயன்படுத்தி முன்னேற்றமடைய முடியும், சாதனை படைக்க முடியும்.
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Back to top Go down

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Empty Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by krishnaamma Mon Feb 23, 2015 4:52 pm

நல்ல பகிர்வு, நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Empty Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by subramaniansivam Tue Feb 24, 2015 8:11 am

தன்னம்பிக்கை சூப் 9 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • உங்கள் உள்மனமானது உங்களுக்கு சேவைபுரிவதற்காக எப்போதும் தயார்நிலையில் உள்ளது.

  • உள்மனம் எப்போதும் சோர்வடைவதில்லை.

  • உங்களின் ஒவ்வொரு எண்ணமும் அலைகள்போல் வெளியேறி ஆற்றலாக மாறுகிறது.

  • மன உறுதி படைத்தவன் நம்பிக்கையுடன் முன்னேறுகிறான்.

  • ஒரு வேலையில் முழுமனதோடு ஈடுபட்டால் அந்த வேலை எளிதாக முடியும்.

  • மனதை ஒருநிலைப்படுத்தி செயல்படுத்தினால் அந்தச் செயல் சிறப்பாக அமையும்.

  • செய்யும் செயலில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டால் மனம் தானாகவே ஒருநிலைப்படுகின்றது.

  • வேலை என்று எதைச் செய்தாலும், அதை முழு ஆர்வத்துடன் செய்யவேண்டும்.

  • ஒரு வேலையைச் செய்ய முற்பட்டால் அதில் ஆர்வம் தரும் அம்சத்தை தேடிச் செயல்படுங்கள்.

  • ஒரு வேலையைத் தொடங்கும்போதே ஆர்வத்தை உருவாக்கிக் கொண்டால் வேலை மிகவும் சுலபமாக முடியும்.

  • மனதை தன்வயப்படுத்திய ஒருவன் அதன் சக்தியை தான் விரும்பும் எந்தச் செயலிலும் திருப்பிவிட முடியும்.

  • மனதின் ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்துபவர் மற்றவர்களைவிட அதிக வருமானம் பெறுவார்.

  • உள்ளுணர்வோடு கூடிய சக்தியைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் சாதனை படைக்க முடியும்.

  • நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதைப் பெறுவதற்காக உழைக்க வேண்டும்.

  • ஒரு மனிதன் தன்னைத்தானே உயர்த்திக் கொள்வதற்கு முன் தன்னுடைய சிந்தனைகளை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

  • துடிப்புமிகுந்த முனைப்பும், செயல் திறனும் உடையவர்கள் கண்டிப்பாக வெல்வார்கள்.

  • விருப்பம் நிறைந்த தனித்தன்மைக்கு எதுவும் தடையில்லை.

  • எந்த ஒரு மனிதனும் உலகில் பிறக்கும்போதே தனக்கான ஒரு வேலையில்லாமல் பிறப்பதில்லை.

  • அரிய செயல்களைச் செய்வதற்கான வாய்ப்பு வழங்காத நாளே இதுவரை தோன்றியதில்லை.

  • உங்களுக்கு எதைப்பற்றி கனவு காண முடியுமோ அதை இப்போதே தொடங்குங்கள்.

  • பெருமைக்குரிய வெற்றி வாய்ப்பையே எப்போதும் எதிர்பாருங்கள்.

  • உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தவற விட்டு விடாதீர்கள்.

  • உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்.

  • சரியான முடிவெடுத்தலும், முழுமையான செயல் திறனும் உடையவர்கள் மட்டுமே தங்களுக்கு முன் இருக்கும் இடர்களைக் களைந்து சாதனை புரிகின்றனர்.

  • உங்களுக்குக் கிடைக்கும் சாதாரண வாய்ப்புகளைப் பற்றிக் கொண்டு அதையே மிகப்பெரிய வாய்ப்பாக மாற்றுங்கள்.

  • வாய்ப்புகள் அடிக்கடி வருகின்றன. நீங்கள் விருப்பப்பட்டு செயலில் இறங்கும்போது மட்டுமே அவற்றை சரியானபடி பயன்படுத்தி உயர்வடைய முடியும்.

  • ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வாய்ப்புகள் நிறைந்து கிடக்கின்றன.

  • தனக்குப் பொருத்தமான நேரமோ, வாய்ப்போ கிடைக்கவில்லையென்று சோம்பேறிதான் சொல்லுவான். உழைப்பாளி ஒரு நாளும் அப்படிச் சொல்ல மாட்டான்.

  • யாருமே தன்னுடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓர் அரிய வாய்ப்பை சந்திக்காமல் இருந்ததில்லை.

  • பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் வாய்ப்புகளைத் தவறவிட மாட்டார்கள்.

  • நல்ல வாய்ப்பை நல்லவிதமாக எதிர்கொள்ளுங்கள்.

  • எப்போதும் விழித்திருக்கும் கண்கள் வாய்ப்புகள் எங்கிருந்தாலும் கண்டுகொள்ளும்.
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Back to top Go down

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Empty Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by subramaniansivam Tue Feb 24, 2015 9:35 pm

தன்னம்பிக்கை சூப் 10 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • தன்னுடைய வாய்ப்பை செழுமைப்படுத்துபவர் பின்னாளில் பயன் பெறுவது நிச்சயம்.

  • கடுமையான உழைப்புக்கு முன்னால் மிகச்சிறிய வாய்ப்புகள் கூட விலை மதிப்புள்ளவை.

  • மனதை உறுதிப்படுத்திக் கொண்டால் எதுவுமே கடினமானதல்ல.

  • உங்கள் விருப்பங்களையெல்லாம் வலிமை நிறைந்த உறுதியான மனநிலைக்கு இட்டுச் செல்லப் பழகுங்கள்.

  • ஒரு தீர்மானமான முடிவோடு உங்கள் பயணத்தைத் தொடங்கினால் உங்கள் ஒவ்வொரு கருத்தும் மிகச் சரியானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  • தன் திறமையின்மீது கொண்ட நம்பிக்கையைவிட அதிக ஆற்றல் பெற்றது எதுவுமில்லை.

  • உங்களை நம்புங்கள், உங்கள் ஆற்றலை நம்புங்கள்.

  • ஒரு நாளில், நேரத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி வேலைகளை முடிப்பதால் சோர்வு ஏற்படுவதில்லை.

  • யார் நேரத்தை மிச்சப்படுத்துகிறாரோ அவர் எல்லா நன்மைகளையும் அடைவார்.

  • தடைகள் எதுவாக இருந்தாலும் அவை நீக்கப்படக்கூடியவையே என்பதை மறந்துவிடாதீர்கள்.

  • செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைத்துச் செயல்படுங்கள்.

  • எந்தப் பொறுப்பையும் தைரியமாகவும், உறுதியுடனும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

  • ஒரு மனிதனுடைய அனைத்துச் சிறப்பியல்புகளுக்கும் ஆதாரமாக இருப்பது அவனுடைய ஆழ்மன ஆற்றலாகும்.

  • எதற்கும் ஒரு வழி உண்டு. நாம் அதைத் தேடிக் கண்டுபிடித்துச் செயல்பட வேண்டும்.

  • உங்கள் வாழ்வின் குறிக்கோளை அடைந்துவிட்டதாக அடிக்கடி கற்பனை செய்து பாருங்கள்.

  • மனதை ஒருநிலைப்படுத்திவிட்டால் மனிதனின் ஆற்றலானது பல மடங்கு அதிகமாகி விடுகின்றது.

  • மனதை ஒருநிலைப்படுத்திவிட்டால் ஆற்றலை நம் தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.

  • முன்னேறுவது உறுதி என்பதில் முழு நம்பிக்கை வைத்துச் செயல்புரியுங்கள்.

  • அற்புத சக்தியானது ஒவ்வொரு மனிதனிடமும் நிறைந்துள்ளது.

  • எண்ணங்கள் மனித உடலில் ஆழமாகச் செயல்படுகின்றன.

  • ஒரு வேலையை செய்து முடிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டாலே பாதி வேலை முடிந்துவிட்டதாக அர்த்தம்.

  • நீ நீயாக இரு. உன் வழிமுறைகளால், உன் எண்ணங்களால் முடிந்ததைச் செய்.

  • இந்த உலகத்திற்கு உன் இயலாமை தேவைப்படாது. ஆனால் உன்னிடமுள்ள அரிய திறமைகள் தேவைப்படும்.

  • வேலை செய்வது என்பது ஒவ்வொரு மனிதனின் கடமை.

  • உள்மனமே திறமைகளுக்கு ஆதாரமாக உள்ளது.

  • சிறு காரியங்களையும் செம்மையாகச் செய்து வந்தீர்களேயானால் பெரிய சாதனைகள் தாமாகவே நடைபெறும்.

  • வாழ்க்கையின் பொன்னான விதி “ஆர்வம் கொள்” என்பதுதான். எந்தக் காரியமாக இருந்தாலும் ஆர்வமுடன் செயல்படுங்கள்.

  • முயற்சி திருவினையாக்கும்.

  • செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும்.

  • வாழ்க்கையில் வெற்றிபெறுவது, ஆர்வம் காட்டுதல் என்ற இரண்டு வார்த்தைகளில் அடங்கியுள்ளது.

  • நிகழ்காலத்தைவிட வேறு நல்ல நேரம் கிடையாது.

  • எந்தவொரு வேலையையும் கவனத்துடன், முழு ஈடுபாட்டுடன் செய்தால் விரைவாகச் செய்து முடித்து விடலாம்.
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Back to top Go down

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Empty Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by subramaniansivam Wed Feb 25, 2015 8:19 am

தன்னம்பிக்கை சூப் 11 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • நீங்கள் வெற்றிபெற ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது உங்களை நம்புவது.

  • நம்பிக்கை வைத்து புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டலாம்.

  • மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

  • உங்களுடைய உண்மையான குறிக்கோள்களுக்கான கட்டளைகளுக்கு உள்மனமானது அடிபணியும்.

  • இதற்குமேல் செல்லமுடியாது என்ற எல்லையை நீங்கள் அடைந்துவிட்டாலும் தொடர்ந்து பயணம் செய்ய முயற்சி செய்யுங்கள்.

  • மனம் எதை வேண்டுமானாலும் உங்களை சாதிக்க வைக்கும்.

  • நீங்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கிறது.

  • திட்டவட்டமான குறிக்கோளுடன் உங்கள் எண்ண அலைகள் இயங்கிக் கொண்டிருந்தால் உங்கள் எண்ணம் நிறைவேறுவது நிச்சயம்.

  • வெற்றி பெறும்வரை ஓயமாட்டேன் என்று உறுதிகொள்ளுங்கள்.

  • நீங்கள் ஒரு செயலுக்காக நிஜமாகவே தயாராகும் சமயத்தில் அந்தச் செயல் நிகழ்கிறது.

  • வெற்றியின் பாதை எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருங்கள்.

  • வெற்றி, வெற்றி என்று எப்போதும் அதே சிந்தனையில் இருப்பவர்களை வெற்றி வந்தடைகிறது.

  • அசைக்கமுடியாத மன உறுதியோடு உங்கள் இலட்சியத்தை அடைய கடுமையாக முயற்சி செய்யுங்கள்.

  • உங்கள் கனவை யாரும் சிதைத்துவிட ஒருபோதும் இடம் கொடுக்காதீர்கள்.

  • உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு அதன்மூலம் பலனடைவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கித் தருவது செயல்வேகம் மட்டுமே.

  • நீங்கள் செய்யவிரும்புவது சரியானதாக இருந்தால் அதைத் தொடர்ந்து செய்யுங்கள்.

  • ஒவ்வொரு தோல்வி வரும்போதும், அதனுடன் வெற்றிக்கான விதையைக் கொண்டு வருகிறது.

  • இந்த உலகில் ஏராளமான வாய்ப்புக்கள் குவிந்துள்ளன.

  • வாழ்வில் வெற்றியடைந்த 90 சதவிகிதம் பேர் தோல்வியில் ஆரம்பித்து மனதை ரணப்படுத்தும் போராட்டங்களுக்குப் பிறகே சாதித்திருக்கிறார்கள்.

  • உங்கள் மனதில் நம்பிக்கையை நிரப்புங்கள்
.
  • தகிக்கும் ஆசைக்குள்ளேயே, அதை நடைமுறை சாத்தியமாக்குவதற்கான பல்வேறு வழிவகைகள் அடங்கியுள்ளன.

  • நம்பிக்கையும், கனவாகத் தகிக்கும் ஆசையும் சேர்ந்து நிஜமாக்க முடியாதது என்று எதுவுமே இல்லை.

  • நம்பிக்கையும், எண்ணமும் ஒன்றாகக் கலக்கும்போது உருவாகும் அதிர்வலையை ஆழ்மனம் உடனே கிரகித்துக் கொள்கிறது.

  • திரும்பத் திரும்ப ஆழ்மனதிற்கு அனுப்பப்படும் எந்த எண்ணத்தையும் அது ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்படும்.

  • உங்களின் உறுதியான நம்பிக்கைதான் ஆழ்மனதை செயல்பட வைக்கும் அச்சாணி.

  • ஆழ்மனதை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் அதனிடம் நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அது கிடைக்கும்.

  • நம்பிக்கை என்பது ஒருவித மனநிலை. உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளும் சுய கட்டளையின்மூலம் அதை வளர்த்துக்கொள்ள முடியும்.

  • எதிலும் வெற்றிபெறுவதற்கான முதல் கட்டம் நம்பிக்கை.

  • உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்காக தினமும் ஒருமணி நேரம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் நீங்கள் பெற்ற வெற்றிகளை திரும்பத் திரும்ப நினைத்து மகிழுங்கள்.
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Back to top Go down

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Empty Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by M.Saranya Wed Feb 25, 2015 11:25 am

மிகவும் பயனுள்ள பகிர்வு........

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 1571444738 தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 1571444738


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Empty Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by subramaniansivam Thu Feb 26, 2015 8:09 am

தன்னம்பிக்கை சூப் 12 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • உங்கள் மூளையில் முடங்கிக் கிடக்கும் அபாரமான சக்தியைத் தட்டியெழுப்பி நீங்கள் நினைப்பதை சாதிக்க முடியும்.

  • முழு நம்பிக்கை உணர்வுடன் இடப்படும் எந்தக் கட்டளையையும் ஆழ்மனம் ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்படும்.

  • நம்பிக்கை என்பது அதிக நன்மை தரக்கூடிய வலுவான உணர்ச்சி.

  • தன்னுடை ய ஆழ்மனதை வசப்படுத்தும் சக்தி ஒவ்வொருவருக்கும் உண்டு.

  • வெற்றி பெறுபவரைத்தான் உலகம் போற்றுகிறது.

  • வெற்றியும், தோல்வியும் நமது பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.

  • உங்களால் கற்பனை செய்ய முடிந்த எதையும் உங்களால் நிஜமாக்க முடியும்.

  • கற்பனை வளத்தை எந்த அளவிற்கு வளர்த்துக் கொண்டு பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு அது பயன்கொடுக்கும்.

  • உங்கள் ஆசையை நனவாக்கும் முயற்சியில் முதல்படி திட்டமிடுதல்.

  • திட்டவட்டமான எந்தக் குறிக்கோளும் வெற்றியடையும்.

  • திட்டவட்டமான குறிக்கோள், தெளிவான திட்டம் ஆகியவை வெற்றியை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும்.

  • உங்கள் மனம் முழுவதும் வியாபித்து நிற்கும் ஆசையை நீங்கள் கண்டிப்பாக அடையமுடியும்.

  • வெற்றியைக் கொடுக்கும் திட்டம் உங்கள் கைக்குக் கிடைக்கும்வரை மாற்றுத் திட்டத்தைப் பின்பற்றுவதில் நீங்கள் தளர்ந்து போய்விடக் கூடாது.

  • உங்கள் வேலையைத் திட்டமிட்டுக் கொண்டு அந்தத் திட்டத்தின்படி வேலை செய்யுங்கள்.

  • உங்களுக்கு எப்படிப்பட்ட வேலை தேவை என்பதை சரிவரத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

  • உடனடியாக வேலையை ஆரம்பித்து விடுங்கள். போகப்போக உங்களுக்குத் தேவையானவையெல்லாம் வந்து சேரும்.

  • விடாமுயற்சியை தாரகமந்திரமாகக் கொண்டவர்களை தோல்வி நெருங்காது.

  • உங்களால் எந்தத் தொழிலில் முழு மனதோடு செயல்பட முடியுமோ அந்த மாதிரியான துறையைத் தேர்வுசெய்து கொள்ளுங்கள்.

  • திட்டவட்டமான ஒரு தலையாய குறிக்கோளில் உங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தப் பழகுங்கள்.

  • உங்கள் வாயால், உங்கள் நோக்கம் என்ன என்று சொல்வதைவிட உங்கள் செயலால் செய்துகாட்டி விடுங்கள்.

  • உங்களின் இலக்கு என்ன என்பதைத் தெளிவாக அறிந்து வைத்திருங்கள். அப்போதுதான் அதை அடையமுடியும்.

  • வாழ்வின் எல்லாத் துறைகளிலும் உள்ள தலைவர்கள் விரைவாகவும், உறுதியாகவும் முடிவெடுக்கிறார்கள். அவர்கள் தலைவர்களாக இருப்பதற்கு முக்கியக் காரணமே அதுதான்.

  • தகிக்கும் ஆசைகள்தான் சாதனைகளின் ஆரம்பம்.

  • எந்த விஷயத்திலும் விடாமுயற்சி என்ற பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

  • விடாமுயற்சியை உங்கள் வாழ்வின் தாரக மந்திரமாக்கிக் கொள்ளுங்கள்.

  • ஒரு வலுவான குறிக்கோள், எல்லாத் தடைகளையும் தகர்த்து வெற்றியை அடைய வழிகாட்டும்.

  • அழுத்தம் திருத்தமாக ஆசைப்படுங்கள்.

  • மனித மனம் சக்தியின் ஒரு வடிவம்.

  • மன வலிமையின்மூலம் மனதில் ஓடும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியும்.

  • உங்களின் எந்த லட்சியத்தையும் உங்கள் ஆழ்மனதில் விதைத்துக் கொள்ளலாம்.
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Back to top Go down

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 2 Empty Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள்
» சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum