ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிக்குள்ளுமா சாதி?

2 posters

Go down

 நீதிக்குள்ளுமா சாதி? Empty நீதிக்குள்ளுமா சாதி?

Post by சிவா Mon Feb 16, 2015 4:10 pm


சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை வழக்குரைஞர் விசாரணை நடத்தும் அறைக்குள் நுழைந்து கூச்சல் போட்டதோடு, "நீ உன் மாநிலமாகிய காஷ்மீருக்குப் போ' என்று தமிழக வழக்குரைஞர்கள் கோஷமிட்டிருக்கும் செயல் இந்திய அளவில் தமிழக நீதிமன்றங்களின் நிலையை அம்பலப்படுத்துவதாக உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதியரசர் பால் வசந்தகுமார் பணியேற்றுள்ள இன்றைய சூழலில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கெளல் முன்பாக இவ்வாறு கோஷமிடுவதால் நேரிடக்கூடிய எதிர்வினை எப்படி இருக்கும் என்று சட்டம் படித்தவர்கள் ஏன் சிந்தித்துப் பார்க்கவில்லை? ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் பால் வசந்தகுமாரைப் பார்த்து, "நீ தமிழ்நாட்டுக்குப் போ' என்பார்கள். இது இங்குள்ள வழக்குரைஞர்களுக்குத் தெரியாதா அல்லது தெரிந்திருந்தும், வேண்டுமென்றே காஷ்மீர் வழக்குரைஞர்களை வம்புக்கிழுப்பதற்காக இதுபோன்ற விஷமங்களில் ஈடுபடுகின்றனரா?

இந்த கோஷங்களை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் எழுப்பிடக் காரணம், "காலியாக உள்ள 18 நீதிபதி இடங்களை உடனே நிரப்ப வேண்டும். இரு தவணைகளில் நியமிக்கக் கூடாது. ஏற்கெனவே பிரதிநிதித்துவம் பெற்ற சமூகத்தினருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது. இடஒதுக்கீடு வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்துவதும், இதில் தலைமை நீதிபதி மாறுபட்ட கருத்து கொண்டிருப்பதும்தான்.

ஏற்கெனவே 9 பேர் கொண்ட பட்டியல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது தொடர்பாக வழக்குரைஞர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியது. சில சாதியினரை நீக்கிவிட்டு, சில சாதியினரைச் சேர்க்க வேண்டும் என்பதுதான் அந்தப் போராட்டத்தின் கோரிக்கை.

இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மூண்ட சாதிச் சண்டை, ஒருவரை வாசலில் போட்டு அடித்ததை உலகம் முழுதும் பார்க்க வைத்தது. அதற்கு முன்பு, வழக்குரைஞர்களுக்கும் போலீசாருக்கும் நடைபெற்ற போரை, ஊடகங்கள் மூலம் உலகம் பார்த்தது. சில தினங்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் சங்கத் தேர்தல் முடிவைக் கொண்டாடியபோது ஒரு வழக்குரைஞர் கொலை செய்யப்பட்டார்.

இவை யாவும் வழக்குரைஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் தன்வசம் இழந்து அரசியல் சாய்வுகளுக்கு ஆட்பட்டு விட்டார்கள் என்பதையும், அரசியல் என்பது கொள்கைகளை இழந்து சாதி அடையாளங்களில் சிக்கிவிட்டது என்பதையுமே காட்டுகின்றன.

உயர்நீதிமன்றத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் பலவும் 150 ஆண்டு கால சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றை களங்கப்படுத்திவிட்டன. இதுபோதாதென, தற்போது நீதிபதியை "உன் ஊருக்குப் போ' என்று சொல்லும் அளவுக்குத் தாழ்ந்திருக்கிறது.

வழக்குரைஞர்களின் நடத்தை மிகவும் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ள தலைமை நீதிபதி கெளல், "நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிலரைத் தண்டிக்கிறோம். உயர்நீதிமன்றத்தை மதிக்க வேண்டிய வழக்குரைஞர்களே மதிக்காமல் செயல்பட்டால், அவர்கள் என்ன நினைப்பார்கள்? பெருமை வாய்ந்த சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கேடு விளைவிக்காதீர்கள்' என்று கூறியுள்ள வார்த்தைகள், வெறும் வழக்குரைஞர்களுக்கானது மட்டுமல்ல, தமிழர் அனைவருக்கும் சொன்ன வார்த்தைகள்.

சென்னை உயர்நீதிமன்றம் இந்த அளவுக்கு ஆகிப்போனதன் காரணம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் அரசியல் புகுந்ததுதான். அரசியல் கட்சிகள் தங்களுக்கு வேண்டிய, சாதகமான நபர்களை நீதிபதிகளாகப் பரிந்துரைக்கவும், அழுத்தம் கொடுக்கவுமான போக்கு 1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிகமானது. தகுதி இல்லாவிட்டாலும், குற்றம் குறை இருந்தாலும் காவல் துறை சான்றொப்பத்தை ஏற்றவாறு பெற்று நீதிபதிகளை பணியமர்த்தினார்கள். அவ்வாறு பணியமர்த்தப்பட்ட நீதிபதிகள் அரசியல்வாதிகளுக்குப் பூங்கொத்து கொடுப்பதும், அவர்களது இல்லத் திருமணத்துக்கு செல்வதும், இவர்களது இல்லத் திருமணத்துக்கு அரசியல் படை வருவதும் சர்வ சாதாரணமானது.

நாளடைவில், சாதிக் கட்சிகள் அரசியலுக்கு வந்த பின்னர், நம் கட்சியின் அனுதாபி என்ற நிலை மாறி, நம் சாதிக்காரர் என்பதாக பரிந்துரைகள் மாறத் தொடங்கின. நீதிபதி நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. எல்லா மாநிலங்களிலும் இந்த நிலைமை உண்டு என்றாலும், தமிழ்நாட்டில் மட்டுமே மிக மோசமாக இருக்கிறது.

ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தின் பெயர் கெட்டுக் கிடக்கிறது. இதில் சாதி அடையாளங்களும் சேர்ந்து கொண்டால், ஒரு நீதிபதி வழங்கும் ஒவ்வொரு தீர்ப்பும், அவரது சாதி, வழக்கில் வெற்றி பெற்ற வழக்குரைஞரின் சாதியை வைத்து பேசப்படும் இழிநிலை தமிழகத்தில் உருவாகிவிடும். அவர் திமுக அனுதாபி, காங்கிரஸ் அனுதாபி, அதிமுக அனுதாபி, அவர் கம்யூனிஸ்ட் என்கிற தற்போதைய அடையாளம் போய், அவர் இன்ன சாதி, இன்ன சமயம் என்ற அடையாளப்படுத்தப்பட்டால் அது நீதிக்கு அழகாகுமா?

சட்டத்தில் ஆழ்ந்த அறிவும், நடுநிலை கோடாத, உணர்ச்சிவசப்படாதவர்தான் நீதிபதியாக இருக்கத் தகுந்தவர். "...வழக்கு இழந்தவர்தாம் மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர் முறை உறத் தேவர் மூவர் காக்கினும் வழிவழி ஈர்வதோர் வாள் ஆகும்மே' என்கிறாள் ஒளவை. நீதிபதி பதவி வெறும் அதிகாரம் தரும் பதவி மட்டுமல்ல. மூன்று தலைமுறைக்கு கண்ணீரையும் கொடுத்துவிடும் அபாயமுள்ள பதவி.

நீதிக்குள் சாதியையும் சாதிக்குள் நீதியையும் திணிப்பது முறையல்ல.


தினமணி


 நீதிக்குள்ளுமா சாதி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 நீதிக்குள்ளுமா சாதி? Empty Re: நீதிக்குள்ளுமா சாதி?

Post by M.Saranya Mon Feb 16, 2015 4:24 pm

சட்டம் படித்தவர்கள் முதலின் அதை பின்பற்ற வேண்டும், அதை விடுத்து
இந்த மாதிரி கீழ் தரமான செயல்களில் ஈடுபடுவது சரியல்ல..


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 நீதிக்குள்ளுமா சாதி? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum