புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
2 Posts - 2%
prajai
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
401 Posts - 48%
heezulia
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
28 Posts - 3%
prajai
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையறுநிலை


   
   
CHENATHAMIZHAN
CHENATHAMIZHAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2015

PostCHENATHAMIZHAN Tue Feb 17, 2015 6:31 pm

கையறுநிலை
=============
                                கு.காமராஜ்.,
                                 முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதியார் பல்கலைக்கழகம்

     பன்னெடுங்காலப் பண்பாட்டுச் சிறப்புமிக்க தமிழினத்தின் வரலாற்றினைக் காலம்தோறும் உலகுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருப்பவைத் தமிழிலக்கியங்கள். பழக்கவழக்கங்கள், போர்முறைகள், பொருளீட்டல் போன்ற தமிழரின் வாழ்வியல் கூறுகளை எடுத்தியம்பும் விதமாக அவ்விலக்கியச் செய்யுள்கள் படைக்கப்பட்டுள்ளன. உள்ளுறைக் கருத்துக்களின் அடிப்படையில் தனித்தனித் துறைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ள அவற்றுள்,  உள்ளக்குமுறலை உருக்கமாகக் காட்டுபவைதாம் கையறுநிலைத் துறையினைச் சார்ந்த செய்யுட்கள்.

கையறுநிலையால் காணலாகும் மெய்யன்பு
=========================================
         “அவர் இல்லை என்றவுடன் எனக்குக் கையே ஒடிந்ததைப்போல் இருக்கிறது”. “அவர் எனது வலது கையைப்போன்றவர்”. “அது கைநழுவிப் போய்விட்டது”, போன்ற பேச்சுவழக்குச் சொற்கள் தற்போதும் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கின்றன. இதன்மூலம் கையை முன்னிலைப்படுத்தி வாழ்வியல் நிகழ்வுகளைக் குறிப்பிடும் வழக்கம் தமிழரிடையே பண்டுதொட்டு நிலவிவருவதனை அறியலாம்.
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு”
என்னும் குறளின் மூலம், நழுவும் ஆடையினை விரைந்து பிடிக்கும் கையினை நட்புக்கு உவமையாக்கியுள்ளார் வள்ளுவர். ஆக உடலுறுப்புகளில் கையானது இன்றியமையா அவயமாகவும், கையின் இழப்பு அளப்பரிய துயரத்தினை அளிப்பதாகவும் கொள்ளப்பட்டது எனலாம்.

     அன்பிற்குரிய ஒருவர் இறந்துவிட்டால் அதனால் ஏற்படும் இழப்புகளையும், அவரிருந்தபோது நிலவிய மகிழ்ச்சியினையும் ஒப்பிட்டுப் புலம்பும்வண்ணம் கையறுநிலைப் பாடல்கள் படைக்கப்பட்டுள்ளன. கைபோன்று உடனிருந்து உதவிய ஒருவர் இறந்துபட்டதும் கையே அறுந்துபோன நிலைக்குத் தள்ளப்படும் ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே கையறுநிலை துறைப்பாடல்கள் அமைந்துள்ளன.

பண்டைத்தமிழரும் கையறுநிலைத்துறையும்
==========================================

        சங்க இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கும் கையறுநிலைப்பாக்கள் மூலம் அக்காலத் தமிழரின் ஆழ்ந்த அன்புடை வாழ்க்கை முறையினை அறியமுடிகிறது. பரிசில் தந்து பாதுகாத்தப் புரவலனைப் பிரிந்து உருகும் புலவர்கள்., உயிருக்குயிரானக் கணவனைப் பிரிந்து கதறும் மனைவியர்., தலைவியர் பிரிவால் தமது வாழ்க்கையை வெறுத்துப் புலம்பும் தலைவர்கள்., தந்தையின் இறப்பால் தனித்து நின்று அழும் மக்கள்...எனப் பல்வேறு மாந்தரின் மாசற்ற அன்பினைக் கண்முன்னர் நிறுத்துகின்றன அப்பாடல்கள்.

உடன் உறைவு ஆக்குக
=======================

“என்னருமை நண்பனே..,பறம்புமலை மன்னனே..எல்லா வளங்களும் எமக்களித்து என்னைச் செழிக்கவைத்த பாரிவள்ளலே.,என்னைத் தனியே விட்டுவிட்டு நீ மட்டும் சென்றுவிட்டாயே.,என்னையும் உன்னுடன் அழைத்துவிடு.. இம்மைபோல் மறுமையிலும் நாம் நண்பர்களாய் வாழ வழியமைத்துக்கொடு.” என்று புலவர் பெருமகனார் கபிலர் தனது நண்பனான பாரிமன்னனின் இறப்பால் நொந்து புலம்புவதை,

….இம்மை போலக் காட்டி, உம்மை
இடையில் காட்சி நின்னோடு
உடன்உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே! (புறம்-236)
என்னும் புறநானூற்றுச் செய்யுளால் அறியமுடிகிறது.

பொய்கையும் தீயும் ஒன்றே
=========================
துயரத்தின் பெரும் தாக்குதலுக்கு ஆளாகிவிட்டால் வாழ்க்கையின் மீதிருக்கும் பற்றுதலும் அற்றுப்போய்விடுவதனைக் காணமுடிகிறது. பூதப்பாண்டியனின் இறப்பால் துயரிற்றிருக்கும் அவனது மனைவி பெருங்கோப்பெண்டு,” பல்லறிவு மேதைகளே..உங்களுக்கு வேண்டுமானால் எனது கணவனை எரிக்கும் ஈமத்தீயானது வெம்மையினை உமிழும் கொடும் நெருப்பாகத் தெரியலாம், ஆனால் என் தலைவனைப் பிரிந்திருக்கும் எனக்கு, அது நல்ல குளிர்ச்சியைத்தரும் பொய்கையே..” எனத்தனது கையறுநிலையினைக் கதறிப்பாடிவிட்டு உடன்கட்டை ஏறியதை,

“பல் சான்றீரே  பல் சான்றீரே பல் சான்றீரே
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே………
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிது ஆகுக தில்ல; எமக்கு எம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!”
என்னும் செய்யுளால் அறியமுடிகிறது.

மனநோயாளியான மாக்கோதை
==============================
மனம் முழுதும் நிறைந்திருந்த மனைவி.,இல்லறத்தை நல்லறமாய்ச் சிறக்கவைத்த துணைவி, நோய்வாய்ப்பட்டு மாண்டுவிட்டாள். அவளது உடல் விறகுக் கட்டையினூடே எரிந்துகொண்டு இருக்கிறது.  ஈமநெருப்பினை நோக்கியபடி சேர இளவல் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை,”என் உயிருக்குயிரான மனைவி எரிந்துகொண்டிருக்கிறாள் நானின்னும் உயிரோடு இருந்து கொண்டிருக்கிறேன்” என்று மனம் குமுற கதறியழுது மனநோயாளியாகிவிடுகிறான்., அந்நிகழ்வினை..

“……..கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து,
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை ;
இன்னும் வாழ்வல் ; என்இதன் பண்பே!
              ( புறம்-245)
என்னும் செய்யுளடிகள் எடுத்துக்காட்டுகின்றன.

அன்றிருந்தார் இன்றில்லை
==========================
“அன்பு மிக்க எம் தந்தையான பாரிமன்னர் அன்று வந்த முழுநிலவு நாளில் எம்மோடிருந்தார்., ஆனால் இன்று வந்திருக்கும் இந்த முழுநிலவு நாளில் எம்தந்தையும் இல்லை எமது பறம்பு மலைநாடும்  இல்லை” என்று தமது கையற்றநிலையில் வெதும்பும் பாரிமகளிரான அங்கவை-சங்கவையை நம் கண்முன் நிறுத்தும் வண்ணம்,
“ அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

எந்தையும் உடையோம் எம்குன்றும் பிறர் கொள்ளார்

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்

வென்று எறிமுரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே”

என்னும் செய்யுளடிகள் அமைந்துள்ளன.
  இவ்வாறே.. “பொன்னுறு நறுமேனி பொடியாடிக்கிடப்பதோ..” என்று கொலைகளத்தினில் கொலையுண்டுகிடக்கும் கோவலனைக்கண்டு கதறியழும் கண்ணகியின் கையறுநிலையினை சிலம்பிலும், தன்னைப் பேணிக்காத்த பல்லவமன்னன் மூன்றாம் நந்திவர்மன் இறந்துபட்டதால்

"வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயா பரனே!"
 
என்று புலம்பிய புலவரின் கையறுநிலையினை நந்திக்கலம்பகத்திலும்  காணமுடிகிறது.
சங்க இலக்கியத்தில் அறிமுகமாகி, காப்பிய இலக்கியத்தில் வளர்ந்து, கலம்பகம் உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் மூலம் சிறப்புற்ற கையறுநிலைத்துறை., “ சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ.. தீயே உனக்கொரு நாள் தீமூட்டி பாரோமோ” என்று நேருவின் இறப்புக்காய்ப் பாடிய கண்ணதாசனோடு தொடர்ந்து தற்கால இலக்கியத்தியத்திலும் தனி இடத்தைப் பெற்றுள்ளது.
                    ===========================================================

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 17, 2015 6:40 pm

நன்றி நன்றி நன்றி

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக