ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள் மீரா ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Empty இந்திய இலக்கியச் சிற்பிகள் மீரா ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Mon Feb 16, 2015 12:59 pm

இந்திய இலக்கியச் சிற்பிகள்
மீரா !
நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
சாகித்திய அகாதெமி, குணா கட்டிடம், 443, அண்ணா சாலை, சென்னை 600 018. விலை : ரூ. 50. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில், சிவகங்கையில் உதித்த புதுக்கவிதை கங்கை மீரா எனும் மீ. இராசேந்திரன் அவர்கள் பற்றி நூல் வெளியிட்டமைக்கு முதற்கண் சாகித்திய அகாதெமிக்கு பாராட்டுக்கள். மீரா எனும் மிகப்பெரிய கவிதை ஆளுமை பற்றி, மிக நுட்பமாக ஆராய்ந்து அவரது படைப்புகளை மேற்கோள் காட்டி, மீரா அவர்களை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்திட்ட இந்நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு அடுத்த பாராட்டுக்கள்.
கவிஞர் மீரா அவர்கள் படைத்த நூல்கள் கொஞ்சம். ஆனால் அதன் வீச்சு மிக மிக அதிகம். அந்தக்காலத்து இளைஞர்கள் கைகளில் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூல் இருக்கும். மனதில் காதல் இருக்கும். ஒரே ஒரு காதல் கவிதை நூலின் மூலம் உச்சம் அடைந்தவர் மீரா. இந்த நூலில் உள்ள கவிதைகள் திரைப்படத்திலும் இடம் பெற்றன.
இப்படி மட்டும் அறிந்திருந்த மீராவைப் பற்றி அவர் மரபுக் கவிதையில் மணம் வீசியவர், புதுக்கவிதையில் பூபாளம் இசைத்தவர், வசன கவிதையில் எள்ளல் உதிர்த்தவர், கவியரங்கக் கவிதையில் கைதட்டல் பெற்றவர், குக்கூ கவிதையில் ஜப்பானை வென்றவர், கட்டுரை வடிப்பதில் புதுப்பாணி வகுத்தவர், நல்ல நகைச்சுவையாளர். இப்படி அவரது பல்வேறு ஆளுமைகளை உதாரணங்கள், மேற்கோள்கள் காட்டி கவிஞர் மீரா பற்றிய ஆவணநூலாக வந்துள்ளது. பாராட்டுக்கள். நூலாசிரியர் தமிழ்த்தேனீ அவர்களின் கடின உழைப்பை உணர முடிந்தது. நூல் எழுதுவதில் சதம் தாண்டியவரின் சாதனை நூல் இது.
இந்த நூல் கவிஞர் மீரா அவர்கள் வாழும் காலத்தில் தந்து இருந்தால் அவரது வாழ்நாள் இன்று வரை நீட்டித்து இருக்கும். ஆம். அவ்வளவு அகமகிழ்வை அவருக்கு வழங்கி இருக்கும். படைப்பாளியின் படைப்பை மேற்கோள் காட்டி பாராட்டப்படுவதை விட உயர்ந்த இன்பம் வேறில்லை. இன்று, அரசு வேலை சில ஆயிரங்கள் என்றால், அதற்கு தேர்வு எழுதுபவர்கள் பல இலட்சம் பேர். அந்த அளவிற்கு போட்டி மிகுந்து விட்டது. ஆனால் கவிஞர் மீரா அவர்கள், தேர்வு எழுதி வெற்றி பெற்று கிடைத்த பதவியில், வருவாய்த்துறையின் உதவியாளராக சிலகாலம் பணியாற்றி, தமிழ்ப்பற்றின் காரணமாக வேலையை துறந்தவர் என்ற செய்தி இந்த நூலில் படித்து வியந்து போனேன். பின்னர் அவர் சிவகங்கை கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்து, முதல்வராக பொறுப்பு ஏற்றவர் என்று தகவலும் நூலில் உள்ளது. அரசுப்பணியை விட ஆசிரியப் பணியே சிறந்த அறப்பணி என்று விரும்பி ஏற்றவர் மீரா என்பதை அறிந்து வியந்து போனேன்.
நூலில் மீரா-வின் வாழ்க்கை வரலாறு மிகச் சுருக்கமாக, ஆனால் மிகத் துல்லியமாக உள்ளது.
நூலிலிருந்து சில துளிகள் :
மீராவின் திருமணம் 1964-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது, சுசீலா என்னும் நல்லாள் அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தார். இல்லற வாழ்வின் பயனாக மீரா-சுசீலா இணையருக்கு ஆண் மக்கள் இருவரும் (சுடர், கதிர்), பெண்மகள் ஒருத்தியும் (கண்மணி செல்மா) பிறந்தனர்.
மீரா அவர்களின் மகள் கவிதை எழுதி வருகிறார். மீராவின் குழந்தைகள் மட்டுமன்றி அவரது இலக்கியப் படைப்பும் குழந்தைகள் பற்றியும் விரிவாக நூலில் உள்ளன.
மரபில் பூத்த புதுமலரின் வாசத்தில் சில துளிகள்.
இறைநிலை எய்தல் இருக்கட்டும் ; முதலில்
மனிதனாய் மாறு ; மாற்று உன் சாதியை
......... இதோ வாள் :
(பக். 142-143)
கடவுளாகிறேன் என்று கதை கட்டுவதை விட்டு விட்டு முதலில் மனிதனாக மாறு என்று எள்ளல் சுவையுடன் உள்ள கவிதையை மேற்கொள்காட்டி கவிஞர் மீராவின் படைப்பாற்றலை படம்பிடித்துக் காட்டியது. நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.
கவிஞர் மீரா அவர்களின் கவியரங்கக் கவிதை ஆற்றலை உணர்த்தும் கவிதை ஒன்று.மூடநம்பிக்கைகளை சாடும் விதமாக வடித்த கவிதை நன்று.
மூன்றுபே ராய்ச் சென்றால்
முடியாது வினை என்று
மூன்றை வெறுப்பவர்கள்
முட்டாள்கள் ; மாறாக
மூன்றாம் உலகப் போர்
மூளக்கூடாது என்போர்
சான்றோர் துயரச்
சரித்திரத்தைக் கற்றுணர்ந்தோர்! (பக். 81-82)
தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள், நூல் எழுதும் போது எதையும் மேலோட்டமாக எழுத மாட்டார்கள். நுட்பம், செம்மை எல்லாம் இருக்கும். பக்க எண் வரை மிக நுட்பமாக குறிப்பிட்டு எழுதுவார்கள். வாசகர்கள் அந்த நூலை எடுத்துப் பார்த்து படிக்க வசதியாகவும், வியப்பாகவும் இருக்கும்.
கவிஞர் மீரா அவர்கள் வசன கவிதை படைப்பதிலும் வித்தகர். அதிலும் காதல் கவிதை அனைத்தும் கற்கண்டு. அன்றைய பல காதலர்கள், அவர்கள் எழுதியது போல எழுதி, காதலியிடம் தந்த வரலாறுகளும் உண்டு. காதல் கவிதை அறியாமல், காதலன் எழுதிய கவிதை என்று, ஏமாந்த காதலிகளும் உண்டு.
நீ முதல்முறை
என்னைத் தலைசாய்த்து
கடைக்கண்ணால்
பார்த்தபோது
என் உள்ளத்தில்
முள் பாய்ந்தது
அதை இன்னும் எடுக்கவில்லை
முள்ளை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்?
எங்கே இன்னொரு முறை பார்.
(கவிதை 13, பக்.25)
இன்றைக்கு உள்ள அரசியலைச் சாடி, நான் உள்பட பலரும் கவிதைகள் எழுதி வருகின்றோம். ஆனால் எங்களுக்கெல்லாம் முன்னோடி யார்? என்றால் கவிஞர் மீரா தான். அங்கதச் சுவையுடன் அரசியல்வாதிகளை சாடுவதற்கு புதுப்பாதை போட்ட மீராவின் அற்புதமான படைப்பாற்றலைக் கண்டு வியந்து போனேன். கவிஞர் மீரா அவர்கள் அரசியல்வாதிகள் குறித்து அன்று எழுதிய கவிதை இன்றும்,என்றும் பொருந்துவதாக உள்ளது. பாருங்கள்.
பதச்சோறாக ஒன்று மட்டும்.
அப்புசாமியின்
அப்பா
ஆணை மாதிரி
இருந்த போது
எம்.பி. பதவி
இறந்த போது
> சிவலோக பதவி அப்புசாமியின்
அப்பா
ஆணை மாதிரி
(ஊசிகள் பக். 24)
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை மிஞ்சும் வண்ணம் குக்கூ கவிதையும் வடித்தவர் கவிஞர் மீரா. இலக்கியத்தின் எல்லா வடிவத்திலும் முயற்சிகள் செய்து வெற்றி பெற்றவர். குக்கூ கவிதையில் சித்தர்கள் போல வாழ்வின் நிலையாமையை உணர்த்தி உள்ளார். பாருங்கள்.
வீடு கட்டினேன்
சுடுகாட்டுக் கெதிரில்
எந்த நேரமும்
விடை பெறலாம் எளிதில்
(பக். 39)
கவிஞர் மீரா அவர்கள் நகைச்சுவை உணர்வுடன் வடித்த கவிதை ஒன்று.
வாத்தியார் மனைவி
செத்ததற்காக
விடுமுறை
மகிழ்ச்சியில் குதித்த
மணிப்பயல் கேட்டான்
வருத்தமாயிருக்கு
ஒரே ஒரு மனைவி தானா
அவருக்கு?
படித்தால் வியப்பில் ஆழ்த்தும் கவிஞர் மீரா அவர்களின் படைப்பாற்றலை படம் பிடித்துக் காட்டும் அற்புத நூல். பாராட்டுக்கள்.
நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் எழுத்து ,பேச்சு என்ற இரண்டு துறையிலும் தனக்கென தனி முத்திரை பதித்து தொடர்ந்து நூல்கள் பல எழுதி இலக்கிய நேசர்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து உள்ளார். பாராட்டுக்கள் .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய இலக்கியச் சிற்பிகள் மு .வ .( மு .வரதராசன் ) நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» அமுதும் தேனும் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» "கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் 2 : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum