ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60

5 posters

Go down

ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Empty ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60

Post by ayyasamy ram Fri Feb 13, 2015 1:01 pm

ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Rqu9K3TTnWQKcF50RJuB+train011_2309405g
-
ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 6FJxHZWIRmMk23ui3HIf+train02_2309404g
-

ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இடையே செல்லும் இன்டர்சிட்டி பயணிகள் ரயில் (ரயில் எண்: 12677) இன்று காலை 7.40 மணியளவில் தடம் புரண்டதில் 8 பேர் பலியாகினர்.

8 பேர் பலியாகியுள்ளதை பெங்களூரு பிரிவு ரயில்வே மேலாளர் அனில் குமார் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், 60 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் வழியாக எர்ணாகுளம் வரையில் செல்கின்ற இன்டர்சிட்டி விரைவு ரயில் ஓசூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனைக்கல் என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

பெங்களூரிலிருந்து வந்து கொண்டிருந்த அந்த ரயில் ஆனைக்கல் பகுதியினை கடக்கும் போது திடீரென்று டி-8, டி-9 மற்றும் எஞ்சின் உட்பட நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. இதில் இரண்டு பொதுப் பெட்டிகளும், 2 ஏசி பெட்டிகளும் அடக்கம்,

சம்பவ இடத்துக்கு தமிழகம் மற்றும் கர்நாடகா ரயில்வே அதிகாரிகள் விரைந்துள்ளனர். மேலும் இரு மாநிலங்களில் இருந்தும் 10 ஆம்புலன்ஸ் வாகனங்களும் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளன.

D-9 பெட்டிதான் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது எனவும், பயணிகள் தடம் புரண்ட பெட்டிகளுக்குள் மாட்டிக் கொண்டுள்ளதால் அதிகளவில் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

பிரதமர் இரங்கல்:

பெங்களூரு ரயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில், பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என விரும்புகிறேன். ரயில்வே அமைச்சரும், அதிகாரிகளும் விபத்து குறித்து கூர்ந்து கவனித்து வருகின்றனர். மீட்புப் பணிகள் சரியான முறையில் நடைபெறுவதை அவர்கள் உறுதி செய்வார்கள்" என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஆய்வு:

சம்பவ இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விரைந்துள்ளார். அவருடன் ரயில்வே வாரியத் தலைவரும் சென்றுள்ளார்.

முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறை மீது ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், ரயில் விபத்து தொடர்பாக ரயில் பாதுகாப்பு ஆணையர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

2 லட்சம் இழப்பீடு:

அதேபோல், "விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும், சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.20,000 உதவித் தொகையும் வழங்கப்படும்" எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஓசூர் அருகே ரயில் விபத்து குறித்து தகவல் அறிய:

பெங்களூரு எண்கள்: 9731666751, 0802237116.

திருவணந்தபுரம்: 0471-2321205, 0471-2321237, 09746769960

எர்ணாகுளம்: 0484-2100317, 0813699773, 09539336040

எர்ணாகுளம் டவுன்: 0484 2398200

திருச்சூர்: 0487- 2424148, 2430060
=
--தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Empty Re: ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60

Post by M.Saranya Fri Feb 13, 2015 1:38 pm

கடவுளே...காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும்...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Empty Re: ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60

Post by சிவா Fri Feb 13, 2015 5:28 pm

விபத்துக்குள்ளான இன்டர்சிட்டி ரயிலில் தமிழக பயணிகள் 424 பேர் இருந்ததாக தகவல்

சேலம்: ஓசூர் அருகே விபத்துக்குள்ளான பெங்களூர்- எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 424 பேர் பயணித்ததாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓசூர் அருகே கர்நாடகாவின் ஆனைக்கல் பகுதியில் பெங்களூர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை விபத்துக்குள்ளானது. இதில் 9 பெட்டிகள் தடம் புரண்டன.

விபத்துக்குள்ளான இன்டர்சிட்டி ரயிலில் தமிழக பயணிகள் 424 பேர் இருந்ததாக தகவல்

இந்த ரயில் தமிழகத்தின் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக எர்ணாகுளம் செல்வதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் இதில் பயணிப்பது வழக்கும். இன்று விபத்துக்குள்ளான இந்த ரயிலில் மொத்தம் 424 பேர் பயணித்ததாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இறங்குவதற்காக 270 பேர் பயணித்திருக்கின்றனர். விபத்துக்குள்ளான பெட்டிகளில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 176 பேர் இருந்துள்ளனர்.

இதனால் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரயில் நிலையங்களில் விபத்து குறித்து தகவலை தெரிவிக்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Empty Re: ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60

Post by சிவா Fri Feb 13, 2015 5:35 pm

ரயில் விபத்து: சம்பவ இடத்துக்கு செல்லாத தமிழக அமைச்சர்கள்!

சென்னை: ஓசூர் அருகே ரயில் விபத்து நடந்த இடத்துக்கு தமிழக அமைச்சர்கள் எவரும் இதுவரை செல்லாதது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே கர்நாடகா எல்லையான ஆனைக்கல் என்ற இடத்தில் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் சென்ற இன்டர்சிட்டி ரயில் இன்று காலை 7.33 மணிக்கு விபத்துக்குள்ளானது.

இதில் 8 பேர் பலியாகினர். 87 பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்து நிகழ்ந்த உடன் கர்நாடாகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தார்.

ரயில் விபத்து: சம்பவ இடத்துக்கு செல்லாத தமிழக அமைச்சர்கள்!

சதானந்த கவுடாவும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளாமானோர் பயணித்தனர். அதுவும் விபத்துக்குள்ளான பெட்டிகளில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 176 பேர் பயணித்துள்ளனர்.

இவர்களில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் விபத்து நடந்த இடத்துக்கு பிற்பகல் வரை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அமைச்சர் கூட சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறவும் இல்லை.. மீட்புப் பணிகளை பார்வையிடவும் இல்லை. இதனால் பயணிகள் கொந்தளிப்பான நிலையில் உள்ளனர்.


ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Empty Re: ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60

Post by Aathira Fri Feb 13, 2015 7:05 pm

சிறு காயங்களுடன் அனைவரும் உயிர் தப்ப இறைவனை வேண்டுவோம்


ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Aஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Aஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Tஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Hஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Iஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Rஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Aஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Empty Re: ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60

Post by ஹர்ஷித் Fri Feb 13, 2015 7:21 pm

இறந்தவர்களின் ஆன்ம சாந்தி அடையவும்,காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் 
எதிகாலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் நிகழாமல் இருக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60 Empty Re: ஓசூர் அருகே பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 8 பேர் பலி; காயம் 60

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum