ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !

2 posters

Go down

ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் ! Empty ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !

Post by krishnaamma Wed Feb 11, 2015 11:07 pm

1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி கெண்டக்கி (Kentucky) - ல் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் ஆப்ரஹாம் லிங்கன் (Abraham Lincoln).

ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் ! QIMVgBQFR5iT98HqyfFC+images

(1809-1865)

இவரைப்போல வாழ்க்கையில் சோதனைகளையும் தோல்விகளையும் சந்தித்தவர் எவரும் இருக்கமுடியாது. ஆனால் அவர் கலங்கி நிற்காமல் சோதனைகளைக் கடந்து வந்து வெற்றி கண்டார். சாதாரண வெற்றி அல்ல, உலகமே திரும்பிப் பார்த்த வெற்றி. அமெரிக்க ஜனாதிபதி ஆனார் இந்த சாதாரண மனிதர்.

ஆப்ரஹாம் லிங்கன். அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதி. 1809-ம்வருடம் பிப்ரவரி 12-ல் மிக மிகச் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் லிங்கன். விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும் லிங்கனுக்கு வி வ சா யத் தி ல் ஆர்வமில்லை. புத்தகங்கள் படிப்பதில்தான் ஆர்வம் அதிகமிருந்தது. இந்தக் காலத்தைப் போல் அப்போதெல்லாம் புத்தகங்கள் குவிந்து இருந்ததில்லை. தேடித்தேடித்தான் படிக்கவேண்டும். விவசாய வேலையை விட்டுவிட்டு புத்தகங்களைத் தேடி அலைந்ததனால் லிங்கன் மீது தந்தைக்கு வெறுப்பு. லிங்கனுக்கு பத்து வயதிருக்கும்போது, தாய் மரணமடைய, தந்தை மறுமணம் செய்தார். வந்த சித்தி லிங்கன் மீது பாசம் வைத்தார். அதுதான் அந்த வயதில் லிங்கனுக்கு கிடைத்த ஒரே ஆறுதல்.

தாமஸ், சாரா இருவருமே படிப்பு வாசனையற்றவர்கள் என்றாலும் தன் மகனைப் படிக்கச் சொல்லி உற்சாகமூட்டினார் சாரா. அந்தக் காட்டுப் பகுதியில் புத்தகங்கள் கிடைப்பதே அரிதாக இருந்தது. பல மைல்கள் நடந்து சென்று புத்தங்களை இரவல் வாங்கிப் படித்தார் ஆப்ரஹாம். ராபின்சன் க்ரூசோ, பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ், ஈசாப் கதைகளை விரும்பிப் படித்தார்.

..............


Last edited by krishnaamma on Wed Feb 11, 2015 11:18 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் ! Empty Re: ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !

Post by krishnaamma Wed Feb 11, 2015 11:08 pm

ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் ! FnBTiwxcRQepuZf0pUtQ+images(1)

சமூக அக்கறை

1830இல் இல்லினாய்ஸுக்குக் குடியேறியபோது சிறுவன் ஆப்ரஹாம், இளைஞனாக வளர்ந்திருந்தார். ஆறடி உயரமும் ஆஜானுபாகுவான உடலமைப்பும் கொண்ட லிங்கனுக்கு வேலை எளிதில் கிடைத்தது. தபால்காரர், நிலமதிப்பீட்டாளர், கடை உரிமையாளர் எனப் பலவித வேலைகளை அங்கே செய்தார். அவருடைய சமூக ஈடுபாடும் அக்கறையும் அந்தப் பகுதி மக்களிடையே லிங்கனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

அரசியல் அறிமுகம்

அமெரிக்காவில் உள்நாட்டு கலவரம் மூண்டபோது, இல்லினாய்ஸ் பகுதி மக்கள் தங்கள் தலைவராக லிங்கனை முன்னிறுத்தினார்கள். அதுதான் அவரது அரசியல் நுழைவுக்கான முதல் துருப்புச்சீட்டாக அமைந்தது. அதன் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். அடிமைத்தனத்துக்கு எதிரான தனது குரலைப் பதிவு செய்தார். அவருடைய இந்த அரசியல் பார்வை, மற்றவர்களிடம் இருந்து லிங்கனை வித்தியாசப்படுத்தியது.

இதற்கிடையே தானாகவே புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துச் சட்டக் கல்வி பயின்றார். பார் கவுன்சில் தேர்வில் வெற்றிபெற்று, சில காலம் ஸ்பிரிங்ஃபீல்டு பகுதியில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். வேலையுடன் காதலும் வந்தது லிங்கனுக்கு. டைபாய்டு காய்ச்சலால் அவருடைய காதலி அன்னா ரட்லெஜ், திருமணத்துக்கு முன்பே இறந்துவிட்டார். அந்தத் தனிமையும், துயரமும் லிங்கனை வெகுவாகப் பாதித்தன. ஆனால், அதுதான் அவருக்கு ஆன்மப் பலத்தையும் தந்தது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

திறமையான வழக்கறிஞர்

லிங்கனின் வலுவான வாதங்கள் அவரைச் சிறந்த வழக்கறிஞராக முன்னிறுத்தியதுபோல, அவருடைய சிறப்பான திட்டங்கள் அவரைச் சிறந்த அரசியல் தலைவராகவும் உயர்த்தின. தேசிய அரசியலிலும் தடம் பதித்தார். 1861ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16ஆவது அதிபராகப் பதவியேற்றார். திறமை மிகுந்தவர்களைத் தன் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார். அவர்களுக்கு, ‘நண்பர்களை உங்கள் பக்கத்திலேயே வைத்துக்கொள்ளுங்கள், எதிரிகளை அதைவிட அதிக நெருக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்றார். இந்த அணுகுமுறைதான் அவரை வெற்றியை நோக்கி வழிநடத்தியது.

விநோதப் பழக்கங்கள்

கம்பீரமும் கண்ணியமும் நிறைந்த லிங்கனின் இன்னொரு முகம் குறும்புத்தனங்கள் நிறைந்தது. ‘ஹானஸ்ட் ஆப்’ என்று பிரியமாக அழைக்கப்படும் லிங்கன்தான் அமெரிக்காவின் உயர்ந்த அதிபர். உயரம் ஆறு அடி 4 அங்குலம். அவர் மிகச்சிறந்த கதைசொல்லி. அவருடைய கதை சொல்லும் பாங்குதான் ஆரம்ப காலத்தில் மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது. லிங்கன், சிறந்த நகைச்சுவை மன்னனும்கூட. தாடி வைத்த முதல் அமெரிக்க அதிபரும் லிங்கன்தான். முக்கியமான கடிதங்கள், ஆவணங்களைத் தன்னுடைய நீண்ட தொப்பிக்குள் வைத்துக்கொள்ளும் பழக்கமும் இவருக்கு இருந்ததாம்.

நன்றி ஹிந்து மற்றும் சில தளங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் ! Empty Re: ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !

Post by krishnaamma Wed Feb 11, 2015 11:12 pm

மேலும் சில விவரங்கள் ஆப்ரஹாம் லிங்கன் பற்றி :

தனது 23 ஆவது வயதில் முதன்முதல் ஆப்ரஹாம் லிங்கன் “பிளாக் காக் போரில்” (Black Hawk War) கலந்து காப்டனாகப் பணியாற்றியது அவருக்குப் புதியதோர் பாதையைக் காட்டியது.

ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் ! U7beF2xSTXrLdtrvsoFq+abraham-lincoln-on-religion-300x279

1834 இல் ஆப்ரஹாம் லிங்கன் இல்லினாய்ஸ் மாநில மக்கள் மன்றத்தில் கீழ் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் அரசாங்கப் பணியில் வேலை செய்தார். லிங்கன் தனது 33 ஆவது வயதில் (1842) மேரி டாட் (Mary Todd) என்னும் மாதை மணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. 1847 -1849 ஆண்டுகளில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு தவணைப் பணிபுரிந்தார்.

1860 இல் ரிப்பபிலிகன் நியமிப்பாளியாகி ஜனாதிபதித் தேர்வில் வெற்றி பெற்று 1861 மார்ச்சில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். லிங்கன் பதவி ஏற்புக்குச் சில மாதங்கள் முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து (Union) தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் ஏழு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றன !

அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி முதல் தேதி ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கக் கூட்டு மாநிலங்களில் (Confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான “விடுதலைப் பிரகடனம்” (Emancipation Proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென்பகுதி மாநிலங்களுக்கும், வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது !

அடிமைகள் ஒழிப்புப் பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆப்ரஹாம் லிங்கனின் பெரும் பிரச்சனையாகி, நீண்ட போராட்டமாகி விட்டது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது.

எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.”

1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 400,000 ஓட்டுகள் மிகையாகப் பெற்று இரண்டாம் தடவைப் போர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப் பட்டு வெள்ளை மாளிகை வேந்தராக நீடித்தார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டுப் போரில் மகத்தான் வெற்றி பெற்று தென்பகுதி மாநிலங்களின் போர்த் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடப்பகுதி இராணுவத் தளபதி கிரான்ட் (General Grant) முன்பு சரணடைந்த ஐந்தாம் நாள்,

ஆப்ரஹாம் லிங்கனை வாஷிங்டன் நாடகத் தியேட்டரில் ஜான் வில்கிஸ் பூத் (John Wilkes Booth) சுட்டுக் கொன்றான். பிரிந்து போன வடதென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன ! தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது ! ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியைக் கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதை ஆப்ரஹாம் லிங்கன் அப்போது உயிரோடில்லை !

..................................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் ! Empty Re: ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !

Post by krishnaamma Wed Feb 11, 2015 11:14 pm

ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் ! F7dB89m7QwydevE2sz9e+images(2)

ஆப்ரஹாம் லிங்கன் பிறந்தது ஞாயிற்றுக் கிழமை

வேலைக்குச் சேர்ந்தது திங்கட் கிழமை

இரண்டு முறைகள் அமெரிக்காவின் ஜனாதிபதியானது செவ்வாய்க் கிழமை

மத்திய சட்டசபைக்குச் சென்றது புதன் கிழமை

புகழ்பெற்ற “கெட்டிஸ்பர்த்” சொற்பொழிவை நிகழ்த்தியது வியாழக்கிழமை

லீ   - ஹாட்லி ஆஸ்வால்ட்டால் சுட்டப்பட்டது வெள்ளிக்கிழமை

மரணித்தது சனிக்கிழமை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் ! Empty Re: ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !

Post by krishnaamma Wed Feb 11, 2015 11:16 pm

அவமானங்களை இவ்வளவு அழகாய் எதிர்கொள்ள முடியுமா?

ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் ! QaCqGbiwRiQvm0eEclDg+download

அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரைநிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து,

ஆப்ரஹாம் ... ...உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது என்றாராம் ....அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம்,

" நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது

இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது எர்ப்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன்

எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும் ..... நாட்டை ஆளவும் தெரியும் என்று பதிலுரைத்தாராம் ... ... !!!

தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக வேறெதுவும் போட்டியிட முடியாது பதவியில் இருக்கும் போதும் அவமான படுத்திய நபர் மீது கோபம் கொள்ளாமல், தன் அதிகாரத்தையும் காட்டாமல் புத்திசாலி தனமாக பணிவோடு பதில் அளித்தே அவமான படுத்தியவரின் மூக்கை உடைத்திருக்கிறார் லிங்கன். இந்த பக்குவமான மனதாலும் விடாமுயற்சியாலும் தான் பல தோல்விகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் ஜனாதிபதியாகி அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.

இதைத் தான் கண்ணதாசனும் " நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்" என்றார். இன்றும் பல உயிர்கள் வணங்குகின்றன லிங்கனை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் ! Empty Re: ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !

Post by krishnaamma Wed Feb 11, 2015 11:29 pm

ஒரு சிறுமி லிங்கன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஒல்லியான முக அமைப்பு கொண்ட அவர், தாடி வளர்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும். என்று எழுதியதால் அவ்வாறே செய்து அந்த தேர்தலில் வெற்றி பெற்றார் என்று சொல்வார்கள். பிறகு, பதவி ஏற்கபோகும் வழி இல் அவர் அந்த குழந்தைக்கு நன்றி சொல்லி சென்றார் என்றும் சொல்வார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் ! Empty Re: ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !

Post by krishnaamma Thu Feb 12, 2015 6:47 pm

பின்னூட்டம் எழுதுங்க பாவம் இவர் கட்டுரையை யாரும் படிக்கலையா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் ! Empty Re: ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !

Post by T.N.Balasubramanian Thu Feb 12, 2015 8:42 pm

krishnaamma wrote:பின்னூட்டம் எழுதுங்க பாவம் இவர் கட்டுரையை யாரும் படிக்கலையா? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1120304

ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் ! N0LIWUAuTLGccNkLCL3P+DSCN4910

2007 இல் வாஷிங்க்டன் DC ல் எடுத்தது .

பிறந்த நாளாம் இன்று அவர் நாமம் வாழ்க !  

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் ! Empty Re: ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum