ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெயரில் என்ன இல்லை?

+6
சிவனாசான்
T.N.Balasubramanian
ராஜா
M.Saranya
ayyasamy ram
சிவா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பெயரில் என்ன இல்லை? - Page 2 Empty பெயரில் என்ன இல்லை?

Post by சிவா Wed Feb 11, 2015 3:10 am

First topic message reminder :


தமிழ்நாட்டில் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது சில மரபுகள் பின்பற்றப்படுகின்றன. குல தெய்வம், திருத்தல தெய்வம், அம்பிகை பெயர்கள் வைக்கப்படும். தாத்தா - பாட்டி பெயர்கள் வைக்கப்படும்போதும் தெய்வப் பெயர் வைக்கப்படுவது தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது.

குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதையே பொருளாகக் கொண்டு, பல்லாண்டு ஆராய்ச்சி செய்து பெயர் அகராதி வெளியிட்டவர் மேனகா காந்தி. மரங்கள் பற்றியும், விலங்குகள் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் மேனகா நிறைய நூல்களை எழுதியுள்ளார்.

ஆங்கிலத்தில் அவர் எழுதிய நூலின் பெயர் "இந்தியப் பெயர்கள்'. 20,000 பெயர்கள் உள்ளன. எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப் பெயர் அகராதியை உருவாக்கினார்? இதன் அவசியம் என்ன என்று கேட்போருக்கு இந்த நூலில் விடை உண்டு.

முதலாவதாகத் தனக்கு ஏன் அப்பெயர் என்ற தேடல் உருவானது. மேனகா என்ற சொல்லின் பொருள் "மனதில் பிறந்தவள்' என்பதுதான். மேனகா, ஆறு அப்சரஸ் (அ) கந்தர்வக் கன்னியரில் ஒருத்தி. ரிக் வேதக் குறிப்பின்படி, மன்னன் விருஷ்ணாஸ்வரின் புதல்வி.

விஷ்ணு புராணத்தின்படி ஸ்வதா பெற்றெடுத்த மூன்று மலை மகளிர்களில் மேனகாவும் ஒருத்தி. மற்ற இருவர் கங்கா, பார்வதி. ரிக் வேதக் குறிப்பின்படி விசுவவசு என்ற கந்தர்வன் மூலம் பிரமாத்வருக்குத் தாய். காளிதாசரின் சாகுந்தலத்தில் விசுவாமித்திரர் மூலம் சகுந்தலைக்குத் தாயானவள்.

பொதுவாக இந்தியப் பெயர்கள் எல்லாமே காவிய - புராணப் பெயர்களே. ஆனால், ஒவ்வொரு பெயரிலும் ஒளிந்துள்ள புராணக் குறிப்புகளைத் தேடிப் பிடிக்க மேனகா பயின்ற சம்ஸ்கிருதம் உதவியது.

நமது முன்னோர்கள் வேதமந்திரங்கள் முழங்க நாமகர்ணம் செய்வதற்கு மேனகா வழங்கும் விளக்கம் இதுவே: "அன்று வைக்கப்படும் பெயரின் பொருளறிந்து கொண்டு அக்குழந்தை வளர வளர நற்குணங்களைப் பெற்றுப் பண்புகள் நிறைந்த நல்ல குடிமகனாகவும், அச்சம் தவிர்த்து வீர தீரத்துடன் நம்பிக்கையுள்ள மானிடனாகவும் வாழ்வாங்கு வாழ்வான்'.

சமயப் பற்றில்லாத நேரு குடும்பத்தில் சமய உணர்வுடன், வாழ்ந்து வரும் மேனகா காந்தி தலைசிறந்த ஆங்கில நூலாசிரியர். சுற்றுச்சூழல் பற்றியும், மரங்கள் பற்றியும், விலங்குகள் பற்றியும் ஏராளமாக நூல்கள் எழுதியுள்ளார்.

இவர் நூல்களில் உள்ள சிறப்பு இந்திய புராணக் கதைகளை மரம், மலர், பூச்சி, விலங்கு, இயற்கை ஆகியவற்றோடு அழகு மிளிர இணைப்பதுதான். இந்திய இதிகாசங்களையும், மகாபாரதம், ராமாயணம், அனைத்துப் புராணங்கள், வேத - உபநிடதங்கள், கதாசரித சாகரம், சாகுந்தலம், குமாரசம்பவம், பஞ்சதந்திரம், மிருச்சிகடிகம் என்று இவர் கற்றுள்ள இலக்கியப் பட்டியல் நீண்டது.

அந்த பலத்தைக் கொண்டுதான் இந்தியப் பெயரகராதியை உருவாக்கியுள்ளார். இதற்குக் காரணம், இவர் தங்கையின் வயிற்றில் வளர்ந்த சிசுவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தங்கை கேட்டதுதான். இந்த நூலை எழுதக் காரணமான ஆரியமானுக்கு இந்நூல் பரிசு என்று குறிப்பிட்டுள்ளார்.

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற குறளின் அடிப்படையில் இந்திய புராணவியல் தத்துவத்தில் ஆதி என்பவள் அதிதி. பகவன் என்பவர் காஷ்யபர். அதிதியின் பிள்ளைகளை ஆதித்யர்கள் என்பர்.

மொத்தம் 33 ஆதித்யர்கள். இந்த 33 ஆதித்யர்களும் முப்பத்து முக்கோடி (33 கோடி) தேவர்களுக்குத் தந்தைகள். மூத்தவன் இந்திரன். கடைக்கோடி இளையவன் வாமனன்.

இந்த 33 ஆதித்தியர்களில் தாதா, ருத்ரா, மித்ரா, ஆர்யமான், வருணா, சூர்யா, பாகா, வைவஸ்வதா, பூசன், தக்ஷன், சகரன், அனுஷன், சவிது, த்வாஷ்டன், விஷ்ணு ஆகியோர் பிரபலமான தெய்வங்கள். ஆரியமானும் ஒரு ஆதித்யன்.

அனிதா, டீனா, லீனா போன்ற பெயர்கள் இந்தியப் பெயர்கள் இல்லை என்று கூறும் மேனகா, புல்வதி, புல்ராணி, சோனா, சோனலிகா, பியாரி ஆகிய பெயர்களுக்கு சம்ஸ்கிருதத்திலோ, பாலி அல்லது வேறு செம்மொழிகளிலோ வேர் இல்லை என்கிறார்.

1991-92 காலகட்டத்தில் மேனகா பெயர்ச்சொல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது சோனியா காந்தி அரசியலில் இல்லை. சோனியாவுக்கு இந்தியத் தொடர்பு ராஜீவ் உறவால் ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை. இந்தியில் சோனா என்ற பெயர்ச்சொல்லுக்கு தங்கம் என்று பொருள். அது வினையானால் "தூக்கம்' என்று பொருள்.

இஷா என்றால் அறிவு, உபநிடதம். இஷ்திகா, இஷ்தகா என்றால் ஹோமகுண்டம். இலிசா, இலிகா என்றால் புவி. ஹன்சிகா என்றால் அன்னம், பகீரதனின் பெண். கவுத்ச மகரிஷியின் தர்மபத்னி. மேற்படிப் பெயர்களில் சினிமா நட்சத்திரங்கள் உள்ளனர்.

சிம்ரன், சின்ஹா எல்லாம் சிங்கமுகங்கள். ஹர்ஷா என்றால் தர்மத்தின் வாரிசு. ஹர்ஷா ஆண்பால். சோமனுக்கும் காமனுக்கும் தம்பி. நந்தி என்றால் நந்தி வாகனம். சிவனின் சேவகன். நந்தினி என்றால் பசு. காமதேனுவின் புதல்வி. மாத்ருவின் புதல்வி. 20,000 நல்ல நல்ல பெயர்களில் சில உதாரணங்கள் இவை.

மேனகாவின் இந்தியப் பெயர் அகராதியைப் படித்தபோது எனக்கு உ.வே.சாமிநாத அய்யரின் "திருத்தல வரலாறு' நூல் நினைவுக்கு வந்தது. அதிலும் ஏராளமான புராணப் பெயர்கள் உண்டு.

நம்மில் சிலர் பெயர் வைக்கும்போது நல்ல பெயரைத் தேட டெலிஃபோன் டைரக்டரியைப் புரட்டுவதுண்டு. அவ்வாறு புரட்டிப் பார்த்தால் பக்கம் பக்கமாக ஒரே பெயர் தொடரும்.

சுப்பிரமணியம், கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், கிருஷ்ணசாமி, ராமசாமி, சங்கரன், ஸ்ரீனிவாசன், ராமநாதன், ஷண்முகம், முருகன், முருகேசன் என்று பல உதாரணங்களைச் சொல்லலாம். இவை யாவுமே தலபுராணப் பெயர்களே.

யாரை மறந்தாலும் திருப்பதி வெங்கடாசலபதியை மறக்க முடியாது. வெங்கட்ராமன், வெங்கடரமணன், திருவேங்கடம், வெங்கட சுப்பிரமணியம், வெங்கடாசலம் ஆகிய பெயர்களும் தமிழ்நாட்டில் நிறைய உண்டு.

தென்னிந்தியாவில் பொதுவாக ஆண்கள் பெயரில் அய்யா, அப்பா, அண்ணா போன்ற விகுதிகள் உண்டு. ராமய்யா, பாலய்யா, கோபாலய்யா, குமரய்யா, குமரப்பா, கன்னியப்பா, சாமியப்பா, ராமண்ணா, ராஜண்ணா, சுப்பண்ணா, சுப்பைய்யா, கருப்பையா.

பெண்ணென்றால் அம்மா, ஆத்தா என்ற விகுதி உண்டு. மாரியம்மா, காளியம்மா, சுப்பம்மா, குப்பம்மா, பொன்னம்மா, பொன்னாத்தா, சின்னாத்தா.

வட இந்தியப் பெயர்களுக்கும் தென்னிந்தியப் பெயர்களுக்கும் உள்ள ஒற்றுமை - வேற்றுமை சிறப்பானது. இரு மொழிகளிலும் உள்ள பெயர்களில் இருக்கும் சம்ஸ்கிருதம் ஒற்றுமையைக் குறிக்கிறது. வேற்றுமை எதுவெனில், வட இந்தியப் பெயர்கள் வேதகாலத்தவை.

வியாசர், வசிஷ்டர், வால்மீகி, காஷ்யபர், பாரத்வாஜர், பார்கவர், ஆங்கிரஸர், கவுதமர் போன்ற பல பெயர்கள் மௌரியர் காலத்திலிருந்து ஹர்ஷவர்த்தனர் (கி.பி.640) காலம் வரை எழுதப்பட்ட காவிய இதிகாசப் பெயர்கள்.

அதேசமயம் தென்னிந்தியப் பெயர்களில் அதிகபட்சமாக ஹம்பியில் சாளுக்கியர், விஜயநகரத்தில் ஹரிஹரர் - புக்கர் உருவாக்கிய நாயக்கர் சாம்ராஜ்ஜியம், தஞ்சையில் விஜயாலய சோழர்கள் காலத்திற்குப் பின் கட்டப்பட்ட கோயில் திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள சுவாமி - அம்பிகை பெயர்கள் அதிகம்.

இந்திய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஒளரங்க சீப் (கி.பி.1700) காலம்வரை வடக்கில் இந்துக் கோவில் எதுவும் கட்டப்படவில்லை. மேற்படி காலகட்டத்தில் தென்னிந்தியாவில் மட்டுமே ஏராளமான இந்துக் கோயில்கள் கட்டப்பட்டன.

வட இந்தியாவைவிட தென்னிந்தியாவில் (மகாராஷ்டிரம் உள்பட) பக்தி இயக்கம் வளர்க்கப்பட்டதன் சான்றாகத் தென்னிந்தியத் திருநாமங்கள் உள்ளன.

தென்னிந்தியாவில் எழுப்பப்பட்ட உயரமான கோயில்கள் ஆரிய - திராவிட கலாசார ஒற்றுமையின் எடுத்துக்காட்டாக வரலாற்று அறிஞர்கள் எடுத்துக்காட்டுவதுண்டு. எனினும், மேனகா காந்தி எழுதியுள்ள நாம கர்ண அகராதியில் திராவிடப் பெயர்கள் குறைவு. அந்தக் குறையை உ.வே.சா.வின் "திருத்தல வரலாறு' இட்டு நிரப்புகிறது.

தமிழ்நாட்டில் திராவிடப் பெயர்களில் 1940 - 50-களில் பிரச்னை வந்தது. திராவிடப் பெயர்களில் உள்ள சம்ஸ்கிருதம் பிடிக்காமல், சூரியநாராயண சாஸ்திரி தன்னை பரிதிமால் கலைஞர் என்று மாற்றிக் கொண்டார். வேதாசலம் மறைமலை அடிகளானார். நடராஜன் ஆடலரசரானார். பகவத் நாமாவைத் தமிழில் சொன்னால் என்ன? சம்ஸ்கிருதத்தில் சொன்னால் என்ன?

இன்றைய தமிழ்நாட்டில் நீளமான பெயர் வைக்கும் மரபு அழியத் தொடங்கி வட இந்தியப் பெயர்கள் அதிகமாகிவிட்டன. டாக்சி ஓட்டும் என் நண்பர் அன்பழகன் தன் மக்களுக்கு "தர்ஷன்' "தர்ஷினி' என்று பெயர் வைத்துள்ளார்.

இவ்வாறே ஆனந்த், அசோக், அரவிந்த், சிவா, மகேஷ், ரமேஷ், சதீஷ், விஜய், விமல், கிஷண், கண்பத், சித்தார்த், ராஜா, ராஜேஷ், விஷ்ணு, ரவி, சூர்யா, அர்ஜுன் ஆகியவை சாதி, மொழி, இனம் தாண்டிய இந்திய சமத்துவப் பெயர்களாகிவிட்டன.

பல தலைமுறைகளாகவே பெண்களின் பெயர்களிலும் இந்திய சமத்துவம் உண்டு. லக்ஷ்மி, துர்கா, சரஸ்வதி, பார்வதி, ருக்மணி, யசோதா, கோகிலா, சசிகலா, கலைவாணி, உஷாராணி, சாயா, ஸ்ரேயா, சிம்ரன், அபர்ணா, மது, மதுபாலா, மஹா, ஜோதி, அனு, அனுபமா, அமலா என்று நிறைய உண்டு.

தமிழ்நாட்டில் "லக்ஷ்மி' தனிப் பெயராகவும் கூட்டுப் பெயராகவும் ஆண், பெண் இருபாலாரிடமும் உண்டு.

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.


பெயரில் என்ன இல்லை? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பெயரில் என்ன இல்லை? - Page 2 Empty Re: பெயரில் என்ன இல்லை?

Post by T.N.Balasubramanian Thu Feb 12, 2015 7:47 am

நல்ல விஷயமுள்ள பதிவு .நன்றி , சிவா !

மகாராஷ்ட்ராவில் , சாரதா, மகேஸ்வரி போன்ற பெயர்கள்
ஆண்களுக்கும் வைத்துக் கொள்ளுவார்கள்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெயரில் என்ன இல்லை? - Page 2 Empty Re: பெயரில் என்ன இல்லை?

Post by அகிலன் Thu Feb 12, 2015 2:08 pm

கடவுளின் நாமத்தை எத்தனைமுறை சொல்லுகிறோமோ அந்த அளவுக்கு பலன் உண்டு
அதனால்தான் கடவுளின் பெயரை பிள்ளைகளுக்கு வைத்து அழைக்கும் வழக்கம் வந்தது.
எனவே வேறு பெயர்களை பிள்ளைகளுக்கு வைக்காது கடவுளின் பெயரை வைத்து அழைத்து அந்த பலனையும் பெறுவோம்.


நேர்மையே பலம்
பெயரில் என்ன இல்லை? - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

பெயரில் என்ன இல்லை? - Page 2 Empty Re: பெயரில் என்ன இல்லை?

Post by விமந்தனி Thu Feb 12, 2015 10:36 pm

T.N.Balasubramanian wrote:மனேகா காந்தியின் Hindu Names என்ற புத்தகத்தை 2004 இல் அப்போதைய விலை 400+
வாங்கி சென்றேன் . பிறக்க போகும் பேரக் குழந்தைக்கு  பெயர் தேர்ந்து எடுக்க .
US இல் பிறந்தவுடனேயே பெயரை ரிஜிஸ்தர் செய்து விடுவர் .
நல்லப் புத்தகம் .
பெயர் -பெயர் விளக்கத்துடன் , ஆண்களுக்கு உரியதா , பெண்களுக்கு உரியதா ,
அல்லது இரு பாலாரும் உபயோகபடுத்தும் பெயர்கள் என்று சகல குறிப்புகளும்
அடங்கியது .
சமீபத்தில் (2014 இல் )அங்கு சென்ற போது , அதில் முக்கியமாக நான் தேடிய  ஒரு பெயர் இல்லை  .

ரமணியன்    
நூலாசிரியையிடம் சொல்லி நீங்கள் தேடிய பெயரையும் சேர்க்க sollungal ஐயா. புன்னகை


பெயரில் என்ன இல்லை? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெயரில் என்ன இல்லை? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெயரில் என்ன இல்லை? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பெயரில் என்ன இல்லை? - Page 2 Empty Re: பெயரில் என்ன இல்லை?

Post by T.N.Balasubramanian Fri Feb 13, 2015 6:55 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:மனேகா காந்தியின் Hindu Names என்ற புத்தகத்தை 2004 இல் அப்போதைய விலை 400+
வாங்கி சென்றேன் . பிறக்க போகும் பேரக் குழந்தைக்கு  பெயர் தேர்ந்து எடுக்க .
US இல் பிறந்தவுடனேயே பெயரை ரிஜிஸ்தர் செய்து விடுவர் .
நல்லப் புத்தகம் .
பெயர் -பெயர் விளக்கத்துடன் , ஆண்களுக்கு உரியதா , பெண்களுக்கு உரியதா ,
அல்லது இரு பாலாரும் உபயோகபடுத்தும் பெயர்கள் என்று சகல குறிப்புகளும்
அடங்கியது .
சமீபத்தில் (2014 இல் )அங்கு சென்ற போது , அதில் முக்கியமாக நான் தேடிய  ஒரு பெயர் இல்லை  .

ரமணியன்    
நூலாசிரியையிடம் சொல்லி நீங்கள் தேடிய பெயரையும் சேர்க்க sollungal ஐயா. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1120336

அந்த முக்கிய நபர் விரும்பாவிட்டால் என்ன செய்வது .
சேர்த்து விட்டு , அதை பிறகு நீக்குவது மிகவும் கஷ்டம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெயரில் என்ன இல்லை? - Page 2 Empty Re: பெயரில் என்ன இல்லை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை
» ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
» உ.பி.யில் விஎச்பி பெயரில் போலி அலுவலகம் திறந்து ராமர் கோயில் நிதியின் பெயரில் மோசடி செய்தவர் கைது
» என்ன இல்லை சோற்றுக்கற்றாழையில்!
»  என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum