ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்மை!

Go down

நேர்மை! Empty நேர்மை!

Post by krishnaamma Sun Feb 08, 2015 11:21 pm

'இந்தாடீ பாக்கியம்... நல்ல வேலக்காரிய சேத்துவுட்ட, சரியான நிமுத்தல் பிடிச்சவளா இருப்பாளோ... மதியம் வரைக்கும் இருந்துட்டு, அரவம் தெரியாம போயிட்டாளே... நமக்கு அடக்கமா ஒருத்திய கூட்டியானா, தரமில்லாதவள நொழைக்கப் பாத்தியே... வேறவள பாரு,''என்றாள் அந்த பெரிய வீட்டம்மாள். அவள் இதை சொல்லி முடிக்கும் வரை, தலைச்சுமையுடன் நின்றிருந்தாள் பாக்கியம்.

முதல் வியாபாரமே விரலை நண்டு கடித்த, மன வலியில் இருந்தவளுக்கு, இந்த குத்தல் தேவையான்னு பட, பதில் சொல்லாமல் நடையை வேகப்படுத்தினாள்.இத்தனை ஆண்டு அனுபவத்தில், இன்று தான் அசல் விலைக்கே எடைப் போட்டுள்ளாள் பாக்கியம்.

'கவர்மென்ட் உத்தியோகம் பாத்தவரு, சொந்த இடத்துல ஏரியா முகப்புல பங்களா கட்டிட்டாரு, ஏக வசதியுடன் தான் வாழ்க்கை. என்ன பிரயோசனம்... வயித்துப் பொழப்புக்கு தினமும் நாயா பேயா அலைஞ்சி, மீன் விக்கிறவகிட்ட அடித்தட்டா பேரம் பேசி சாதிச்சு புட்டாளே, அவரோட பொண்டாட்டி...
'விலை கட்டாதுன்னு சொல்லியிருக்கலாம்... பொசுக்குன்னு முறச்சி, வீட்டுக்குள்ள போய் கதவ சாத்திக்கிருவா.

அப்பறம், இந்த பெரிய அலுமினிய மீன் சட்டிய தூக்கிவிட ஆள் தேடுறதுலயே பாதி நேரம் கடந்திடும்; அதான் சம்மதிச்சு, நிறுத்து தந்துட்டு வந்தா... இந்தம்மா தன்னோட பங்குக்கு, கூப்பிட்டு வெச்சு காதுல ஊத்துறாங்க. இந்தக் காலத்துல உதவ நெனக்கிறதே தப்பா போயிரும் போல...' உள்ளுக்குள் புலம்பியபடி, அடுத்த தெருவுக்குள் நுழைந்து, 'மீனு மீனு... கடல் மீனு...' என சத்தமிட்டுக் கொண்டே நடந்தாள் பாக்கியம்.
அவளின் எண்ணமெல்லாம், பெரிய வீட்டில் தான் வேலைக்கு சேர்த்துவிட்ட மல்லிகா, ஏன் வேலைக்கு சேர்ந்த நாளே கிளம்பி போயிருக்கா என்ற கேள்வியை சுற்றியே இருந்தது.

'மல்லிகா, பெயருக்கு ஏத்தாப்புல நல்ல மனுஷி தான். ஒரு வகையில் தூரத்து சொந்தமும் கூட! ஜெயந்திபுரத்திற்கு மீன் வியாபாரத்துக்கு போகும் போதெல்லாம், வீட்டுல இருந்தாள்ன்னா, கடுங்காபி தராமல் விட மாட்டாள். இவ்வளவு பிரியமா இருக்காளேன்னு, கழிவு மீனக் கொடுத்தாலும் வாங்க மாட்டாள். மீறி மல்லுக்கட்டி தந்தா சிரித்தவாறே, பாதி பணத்தையாவது சட்டியில வைச்சுடுவாள்.

'வாரத்துல நாலு, அஞ்சி நாள் பெயின்டிங் வேலைக்குப் போற கணவன் கொண்டு வரும் சம்பளம், மூணு புள்ளைகளை வளர்க்கவே பற்றாத நிலையில் தான், 'யக்கா... உங்களுக்குத் தான் நிறைய வீடு பழக்கமாச்சே... எங்கையாவது வேலைக்கு சேத்து விடுக்கா. குடும்ப தேவைக்கு பயன்படும்ல'ன்னு கேட்டா மல்லிகா.

'பார்க்கும் நேரமெல்லாம் அவளது இந்த நச்சரிப்பு தாங்காமலும், வாழ்க்கையில சோடை இல்லாம இருக்கணும்ன்னு யோசிக்கிற அவளோட அக்கறைக்கும் தான், உதவும் மனப்பான்மையில் அந்த பெரிய வீட்டில் சேர்த்து விட்டேன். போன வாரம் முழுவதும் வில்லாபுரம், மீனாட்சிபுரம் ஏரியா போயிட்டதால, விபரம் எதுவும் தெரியாமப் போச்சு.

'ச்சே... இனி எதிர்ப்படும் போதெல்லாம் அந்தம்மா துளைச்சு எடுக்குமே...'என்று யோசித்தவாறு நடந்து கொண்டிருந்தாள் பாக்கியம்.

''ஏ பாக்கியம்... என்ன மீனு வெச்சுருக்க?'' அடுக்குமாடி, இரண்டாவது குடியிருப்பு பெண்மணியின் குரல்.
''நீங்க வாங்கற மீன் இருக்கு; லிப்டு வேல செய்தாம்மா?'' பாக்கியத்தின் இந்த கேள்விக்கு, ''அதெல்லாம் செய்யுது வாத்தா...'' என செக்யூரிட்டி அழைக்கவும், 'அப்பாடா... காலுக்கு கொஞ்ச நேரம் ஓய்வு...' என எண்ணியபடி, 'லிப்டி'ல் ஏறிச் சென்றாள், பாக்கியம்.

மீன் தெளிவாக இருந்ததால், பக்கத்து வீட்டுக்காரர்களும் வாங்கி விட, ஒரு கிலோவுக்கும் குறைவாகவே மிச்ச மீன் கிடந்தது. செக்யூரிட்டியிடம் நேரம் கேட்டாள், மணி, 12:30 என்றான்.
அடித்துக் கொள்ளும் மனசோடு, குழம்பிக் கிடக்கும் யோசனைகளுடன், வீட்டுக்கு திரும்பப் போக, பாக்கியத்திற்கு தோன்றவில்லை. கூடவே மல்லிகாவின் ஞாபகம் வர, சரி அவள பாத்து, இந்த மீன கொடுத்துட்டு, விபரத்தையும் தெரிஞ்சிட்டு வரலாம்ன்னு நினைத்துக் கொண்டிருக்கையில், அருகில், மருந்துக்கடையில் தன் பையனுடன் நின்றிருந்தாள், மல்லிகா.

''மல்லிகா...'' என்று உரக்க கூப்பிட்டாள். திரும்பிப் பார்த்த மல்லிகாவும், ''அக்கா...'' என்று வந்தாள்.
பொதுவான விசாரிப்புகளுக்குப் பின், ''என்ன மல்லிகா, அந்த பெரிய வீட்டு வேலை பிடிக்கலயா?''
''பையனுக்கு காய்ச்சல்; நாலு நாளா ஆஸ்பத்திரிக்கு அலஞ்சதால, உங்கள பாக்க வரலக்கா... இன்னிக்கு சாய்ந்திரம் உங்க வீட்டுக்கு வரணும்ன்னு நெனச்சிருந்தேன். இங்கேயே சந்திச்சிட்டேன்,'' என்றாள்.
''இப்ப தேவலையா? ரொம்ப சோர்ந்து போயி இருக்கானே...'' என்றவள், பையனை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, 'சரி சொல்லு' என்பது போல் ஏறிட்டாள், பாக்கியம்.

''நீங்க விபரம் கூறி விட்டுட்டுப் போனீங்க. அந்த பெரியம்மா சொன்ன வேலையெல்லாம் சுத்தமா செஞ்சி முடிச்சேன். 'பரவாயில்லையே நல்லாத்தான் செய்ற... சரி... அந்த ஸ்டோர் ரூம்புல உட்கார்ந்துரு. 1:00 மணிக்கு, எங்க வீட்டுக்காரர் சாப்பிட வருவார். சம்பளம் எவ்வளவுன்னு கேட்டு சொல்லிட்டு சேத்துக்கிறேன்'ன்னு சொல்லிட்டு போனவங்க, ரொம்ப நேரமா வரவே இல்லை. திடீர்ன்னு கூப்பிட்டாங்க, போனேன்.
''நடு ஹால்ல அவங்க வீட்டுக்காரர் உட்கார்ந்திருந்தார்.

'பேர் மல்லிகாங்க; தெளிவா வேல செய்றா... நம்பிக்கைக்கு ஏத்தவளான்னு பொருள வச்சி சோதிச்சும் பார்த்தாச்சு. தங்கமானவ, பணத்தையும், அந்த தங்க ஜிமிக்கியை பாத்தும், எதார்த்தமா திரும்பிக்கிட்டா. இவளே வேலைக்கு இருக்கட்டும்'ன்னு அந்தம்மா, தன் வீட்டுகாருட்ட பெருமையா சொன்னாங்க.

''எனக்கு ஒரு நிமிஷம் கை, கால் ஆடிப் போயிருச்சு. இப்படியும் மனுஷங்க நடந்துக்குவாங்களா? என்னோட நேர்மைய தெரிஞ்சுக்க, இவ்வளவு கீழ்தரத்துக்கு போயிட்டாங்களேன்னு நெனச்சு, ஒடஞ்சு போயிட்டேங்க்கா.
''என்னோட நேர்மைய சோதிச்சதை என்னால ஏத்துக்க முடியல. அவங்களோட சந்தேக புத்தி மாறும்ன்னு எனக்கு தோணல.

பின்னால ஒருநாள் ஏதாவது ஒரு பொருள் காணாம போனா, என்னை சந்தேகப்பட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம். அத யோசிச்ச அடுத்த நிமிஷமே, நிக்கிற இடம் நெருப்பா சுட ஆரம்பிச்சுருச்சு. நாலு வார்த்தை நறுக்கா பேசிட்டு வரலாம்ன்னு தான் நினைச்சேன். சேத்துவிட்ட உங்களுக்கு, ஒரு கெட்ட பேர் வரக் கூடாதுன்னு தான் அமைதியா வந்துட்டேன். வேல வேணுங்கறதுக்காக நம்ம தன்மானத்த விட்டுத்தர முடியுமா?'' என்றாள் மல்லிகா.

''இம்புட்டு கத ஓடியிருக்கா... ஏதோ வந்தா, போனாங்கற மாதிரியே அந்தம்மா கடுப்புக் காட்னாங்க. இரு அடுத்தவாட்டி வச்சுக்கறேன்,'' பாக்கியம் கொஞ்சம் கோபம் காட்டினாள்.

''அதெல்லாம் வேண்டாங்க, அவுங்க அவுங்க செயல் அவங்களையே சேந்துட்டுப் போகட்டும். வேற வீடுகள்ல விசாரிச்சி சொல்லுங்க, நம்ம பொழப்புக்கு வழிய தேடுவோம்,'' என்றாள் சாதாரணமாக.

இவர்கள் பேச்சை, அந்த குடியிருப்பின் மேல் தளத்தில் குடியிருக்கும் வயதான தம்பதி கேட்டுக் கொண்டிருந்தனர். மல்லிகாவின் வார்த்தைகளும், செயலும், அவர்களிடம் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்த, 'அந்த பொண்ணுக்கு ஏதாவது உதவி செய்யணுமே...' என்ற எண்ணம் எழுந்தது.

''சரிக்கா நேரமாகுது கிளம்பறேன்,'' என்ற மல்லிகாவிடம், மிஞ்சிய மீனை துணி பையில் போட்டு பாக்கியம் நீட்ட, அங்கே வந்து நின்றனர் அந்த தம்பதிகள்.

''ஏழ்மையா இருந்தாலும், தன்மானத்தோட இவ இருக்கா. இந்த பொண்ணு வாழ்க்கையில் வளமாகணும்ன்னு வாழ்த்துறேம்மா,'' என்ற அந்த முதியவரின் மனப்பூர்வமான வார்த்தைகளை தொடர்ந்து, 'அய்யா நீங்க...' என்றனர் சேர்ந்தாற்போல் மல்லிகாவும், பாக்கியமும்.

''மேல் தளத்துல ரெண்டாவது வீடு தான் எங்களோடது. பொண்ணு ஈரோடிலேயும், பையன் கோவையிலேயும் இருக்காங்க. நாங்க இங்க தனியா இருக்கோம். லிப்ட்ல ஏறிப் போக நிற்கையில், நீங்க ரெண்டு பேரும் பேசியதை கேட்டேன். உன்ன மாதிரி, நியாயஸ்த்திய வீட்ல வச்சிக்க, ஒரு கொடுப்பன வேணும். எங்களுக்கும் உன்னை மாதிரி ஒரு துணை தேவை தான். இதோ பார் மீன்காரம்மா... முழு நேரத்துக்கு, எங்க வீட்ல வேல கிடையாது; இந்த பொண்ண வரச் சொல்லு, வேலயப் பாக்கட்டும், நியாயமான சம்பளம் தந்துடறோம்.

இவளின் வேலையைப் பார்த்து, அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவன்னு சின்ன சின்ன வேலைக்கு கூப்பிடுவாங்க. அதுலேயும், நல்ல வருமானம் வரும். சம்மதம்ன்னா ஒன்னாந்தேதி மல்லிகாவ எங்க வீட்டுக்கு வரச் சொல்லுமா,'' என்றார் பெரியவர்.

''மல்லிகா, உனக்காக நான் என்னத்த வேல தேடுறது. உனக்கு வேல, வழியல வந்து இழுக்குதுல... சந்தோஷமா போ. அய்யா ரொம்ப நன்றி. இந்த உதவிய மறக்கவே மாட்டோம். நீங்க போங்கையா... சொன்ன தேதிக்கு, கண்டிப்பா வந்துருவா. என்ன... மல்லிகா போயிருவயில?''
முகத்தில் மகிழ்ச்சி மிளிர, ''சரிக்கா...'' என்றாள் சந்தோஷமாக!

பாரதியான்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நேர்மை! Empty Re: நேர்மை!

Post by krishnaamma Sun Feb 08, 2015 11:28 pm

சூப்பருங்க ஒரு கதவு மூடினால் என்ன? மற்றொன்று திறக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum