ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :)

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :)  - Page 2 Empty தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :)

Post by krishnaamma Thu Feb 05, 2015 6:28 pm

First topic message reminder :

புது டெல்லி கல்லூரி வளாகம், கொத்து கொத்தாக மாணவிகள் அவர்களின் பேச்சு சத்தமே எங்கும் நிறைந்து இருந்தது. அவர்களில் இந்த ஐந்து  பேரும்  - சுதா, கல்பனா, ஷில்பி, மானசி மற்றும் தான்யா - பள்ளிக் கூடத் திலிருந்தே ஒன்றாக படித்து வருபவர்கள். ஒரே காலேஜில் சேர விருப்பம் கொண்டு இங்கும் சேர்ந்து இருக்கிறார்கள். ஆச்சு இது கடைசி வருடம்.....இனி கல்யாணம் என்று ஆனால் எப்படி இருப்போமோ  என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களில் இருவருக்கு திருமண நிச்சய தார்த்தம் ஆகி இருந்தது. அதனால் அவர்களுக்கு பார்ட்டி ஒன்று தர மற்ற மூவரும் விரும்பினார்கள்.

" ஏய், நான் சொல்வது தான் சரி பா, கல்யாணம் ஆகப்போகும், தான்யாக்கும்  கல்பனாகும் நாம்ப  மூணு  பேரும் 'பாச்சிலர் பார்டி' தரலாம்" என்றாள் ஷில்பி.

" அய்யயோ...........'பாச்சிலர் பார்டி' .......நான் வரலைப்பா " என்று அலறினாள் சுதா.

" இந்த அத்தைபாட்டி எப்பவுமே இப்படித்தான்.....எப்பத்தான் நீ வளருவியோ" என்று அலுத்துக்கொண்டாள் மானசி...தொடர்ந்து, " நீ பிளான் ஐ  சொல்லு ஷில்பி." என்றாள்.

அந்த க்ருப்பில் சுதாவை எல்லோரும் 'அத்தைபாட்டி' என்று கிண்டல் அடிப்பது வழக்கம், ஏன் என்றால் அவள் கொஞ்சம் பழமை வாதி, இது செய்யலாம் இது கூடாது என்று சொல்பவள்.  

ஷில்பி தொடர்ந்தாள்" இன்று நாம்  வழக்கம் போல குருப் study என்று வீட்டில் சொல்லிவிடலாம் . அவர்களும் ஒன்றும் கேட்கமாட்டார்கள்.ஆனால் நாம் அப்படி சொல்லிவிட்டு பப்க்கு போகம்லாமா?" என்றாள்.

"சுத்தம்"............"நான் கண்டிப்பாக வரலை , சொல்வதை கேளுங்கள்............நீங்களும் போகவேண்டாம்....இந்த விபரித விளையாட்டு வேண்டாம்.....கல்யாணம் வேற பிக்ஸ் ஆகிவிட்டது ..நேரத்துக்கு "................என்று மேலும் சொல்லும் முன்.....

" கல்யாணம் ஆகிட்டா அங்கெல்லாம் போக சான்சே  கிடைக்காதேடி, அது தான் ஒரே ஒரு முறை போய் என்ன தான் இருக்கு என்று பார்த்து விட்டு வந்துடலாமே சுதா." என்று இழுத்தாள்.....தான்யா. ஆசை இல் அவள் கண்கள் மின்னின.

கல்பனாவும் தலையை  ஆட்டி அவளை ஆமோதித்தாள்.

" ரொம்ப நேரம் இல்லடி, 5 மணிக்கு போவோம், ஒரு 7 -7 1/2 க்கு கிளம்பிடலாம்.....குடிக்கவெல்லாம் வேண்டாம், சும்மா பார்த்துவிட்டு வந்துடலாம்"

" இல்லடி எனக்கு மனசு ஒப்பலை, ஏன் வாயை கிளறாதீங்க , அப்புறம் நான் ஏதாவது சொல்ல , நீங்க என்ன .   'அத்தைபாட்டி' என்று கிண்டலடிக்க, தேவையா எனக்கு?...............என்றாள் சுதா.

"ஒண்ணும் ஆகாதுப்பா, வா, நாங்க எல்லோரும் இருக்கோம் தானே ? " என்றார்கள் கோரஸாக.

" நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க, நான் வரலை." என்று முரண்டு  பிடித்தாள் சுதா.

" வேண்டுமானால்  எப்போவும் போல ஹோட்டல் போகலாம், இல்ல யார் வீட்டிலாவது  பார்ட்டி வெச்சுக்கலாம்" என்றால் சுதா.

" எப்பப்பாரு அதேவா, போர் டி"......" ஒரு changukku  வா என்றால் ரொம்பத்தான் அலட்டரையே" ...என்றாள் ஷில்பி.  

" இல்லங்கடி, .....அங்கு போவது கூடாது, காலம் கெட்டு  கிடக்கு, தினமும் பேப்பர் பார்க்கரீங்க தானே? நேரத்துக்கு வீட்டுக்கு போய்விட்டால் நல்லது என்று நினைக்கிறேன்..............இதெல்லாம் அசட்டு தைரியத்தில் செய்வது.....வேண்டாம்..........." முள்ளுள சேலை விழுந்தாலும் , சேலை  இல் முள் பட்டாலும் நஷ்டம் சேலைக்குத்தான்" என்று எங்க பாட்டிசொல்வா.............." என்று முடிக்கும் முன் ,

கைதட்டி சிரித்தவாறே தான்யா " இவ சரியான ஆளுடி, இருப்பது தான் டெல்லி, ஆனால் எப்பவும் தமிழ்நாட்டில் பட்டிக்காட்டில் இருப்பதை போல வே பேசுவா"...என்றதும் சுதாவுக்கு ரொம்ப கோவம் வந்து விட்டது.

"பரவாஇல்லை பா, நான் பட்டிக்கடுதான்.ஆனால் , நீங்க எல்லோரும் நியு டெல்லி தானே, அப்புறம் ஏண்டி அந்த கற்பழிப்பு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிச்சு  நடந்த கூடத்துக்கு போனீங்க?...கொடி பிடிச்சீங்க?................கோஷம் போட்டிங்க?........அந்த ஆளுங்க போல எனக்கும் எதுவும் ஆகலை.....அன்று சொல்லி 'தட்டிக்கொண்டு '  போக வேண்டியது தானே?...... .எந்த ஆணாவது கற்பழிப்புக்கு பிறகு தான் 'எதையோ' பறி கொடுத்தது போல சொல்லி இருக்கானா?..இல்ல சொல்லுவானா?...அல்லது குறைந்த பக்ஷம் அழுது  இருக்கானா?............அவன் சாதாரண மாகத்தனே  இருக்கான்?....ஆணும் பெண்ணும் சரிசமம் என்று சொல்லும் நீங்க மட்டும் ஏண்டி  'குய்யோ முறையோ' நு கத்தி கூச்சல்   போடறீங்க  ? ...ஸோ, 'இழக்கக்கூடாதது' ஏதோ ஒண்ணு உங்களிடம் இருக்கு,  என்று புரிகிறது இல்லையா?...........அப்போ அதை பாதுகாப்பா வெச்சுக்கணும் என்று நான் சொன்னால், அது பட்டிக்காடா?.....அப்படி சொன்னால் நான் பட்டிக்காடு என்றால், நான் பட்டிக்கடாகவே இருந்து விட்டு போகிறேன்..நீங்க ஹை சொசைடி  பெண்கள் ........ஸோ , எல்லோரும் ப்புக்கு போங்கோ "  என்று கோபத்தில் பொரிந்து தள்ளி விட்டாள்.

உடனே, அவர்கள் நால்வரும் " என்னடி இவ, இவ்வளவு எமோஷனல் ஆகிட்டாள்"............என்று சொல்லி, "ஏய் சுதா.............சாரி டி..............சும்மா கலாட்டா பண்ணோம், எங்களுக்கு தெரியாதா உன்னை பற்றி, சாரி பா, ஒரு முறை போய் வரலாமே என்று தான் சொன்னோம்....சரி உனக்கு பிடிக்காவிட்டால் நீ வராதே, ஆனால் இது தான் முதலும் கடைசியுமான பார்டி  நீ வராமல் இருப்பது............இனி ஒருபோதும் உனக்கு பிடிக்காத இடத்தில் பார்ட்டி கிடையாது...........தான்யா ரொம்ப ஆசைப்பட்டாள் என்று தான்  இதுவே" என்றாள் ஷில்பி.

" ஏய் ஏண்டி அபசகுனமாய் 'கடைசி பார்டி' என்கிறாய் என்றாள் சுதா. ...சரிசரி ஜாக்கிரதையாய் போய் வாருங்கள் காலை இல் பார்க்கிறேன்"  என்று சொல்லி கிளம்பினாள். போய்க்கொண்டே " ஏய் , அலாரம் செட் பண்ணி வெச்சுக்குங்கப்பா........சரியான நேரத்தில் கிளம்ப easy  யாக இருக்கும்" என்று சொல்லிக்கொண்டே போனாள்.  

" சரியான பயந்தான்கொள்ளி டி  அவள்"  என்று சிரித்தனர் நால்வரும். என்றாலும் அவள் வரலை என்றது கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது மனதுக்கு. பிறகு இவர்கள் தங்கள் எப்படி வருவது என்று பிளான் போட்டனர்.

" ஐயோ, க்ருப் study என்று சொல்லணுமே  அம்மாக்களிடம், யாராவது இவளிடம் போனில் பேசிவிட்டால்....." என்றாள் ஷில்பி..........

" அவளா, நம்மையே  அலாரம் வெக்க சொன்னவ அவ, இது பார்த்துக்க மாட்டாளா, நோ வொர்ரீஸ்" என்றாள்  கல்பனா.

" நால்வரும் இரண்டு ஸ்கூட்டி களில் செல்வது என்றும், ஒரு 7 - 71/2 க்கெல்லாம் கிளம்பி விடுவது என்றும் முடிவெடுத்தார்கள். தன்யாவும் கல்பனாவும் ஒரு குறிப்பிட்ட பப்  என்று அதன் பேரை சொன்னார்கள். அங்கு  போவது என்று முடிவெடுத்து, அவரவர்கள் வீடுகளுக்கு போன் செய்தார்கள். இது வழக்கமான ஒன்றானதால் யாரும் சந்தேகப்படவே இல்லை....சரி என்று சொல்லி விட்டார்கள்.

இவர்களும் 'குஷியாக' கிளம்பினார்கள் அன்று நடக்கப்போகும் விபரீதம் அறியாமலேயே................

தொடரும்....................


Last edited by krishnaamma on Mon Feb 09, 2015 10:37 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :)  - Page 2 Empty Re: தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :)

Post by krishnaamma Sat Feb 07, 2015 12:01 pm

விமந்தனி wrote:கதை வெகு அருமை கிருஷ்ணாம்மா. முடிவு சினிமாத்தனமாக இருந்தாலும், எதிர்பாராத முடிவு. அருமை.
மேற்கோள் செய்த பதிவு: 1119396

நன்றி விமந்தனி........எனக்கு ஒரு whatsup வீடியோ வந்தது அதன் தாக்கம் இது, முடிந்தால் அந்த வீடியோ இங்கு போடுகிறேன் நீங்களே பாருங்களேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :)  - Page 2 Empty Re: தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :)

Post by ஜாஹீதாபானு Sat Feb 07, 2015 5:08 pm

நல்ல கதைமா


இவர்கள் வீட்டுப் பெண்கள் மட்டும் உசத்தி. மற்ற பெண்கள் என்றால் எப்படி வேணும்னாலும் நடந்துக்கலாமா?

நம் குடும்பத்தில் நடந்தால் நாம் எப்படி துடிப்போம் அப்படித் தானே மற்றவர்களும் என தப்பு செய்யும்போது யோசிக்கனும்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :)  - Page 2 Empty Re: தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :)

Post by krishnaamma Sun Feb 08, 2015 11:32 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல கதைமா

இவர்கள் வீட்டுப் பெண்கள் மட்டும் உசத்தி. மற்ற பெண்கள் என்றால் எப்படி வேணும்னாலும் நடந்துக்கலாமா?

நம் குடும்பத்தில் நடந்தால் நாம் எப்படி துடிப்போம் அப்படித் தானே மற்றவர்களும் என தப்பு செய்யும்போது யோசிக்கனும்.
மேற்கோள் செய்த பதிவு: 1119532

ஆமாம் பானு, தப்பு செய்யும் முன், 'தனக்கு இப்படி நடந்தால்'........ என்று ஒரு நிமிடம் யோசித்தால் போறும்....தப்பு செய்ய மாட்டார்கள் புன்னகை
.
.
.
நன்றி பானு புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :)  - Page 2 Empty Re: தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :)

Post by shobana sahas Sun Aug 09, 2015 3:12 am

நல்ல தலைப்பு 'தன் வினை தன்னை சுடும் போது '. ரொம்ப பொருத்தம் .
அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . வாழ்த்துக்கள் .
இப்போ இந்த காலத்தில் நடப்பது போல் உள்ளது . என்னை பொருத்தவரை ஆண்கள் எக்கேடு கேட்டு போனாலும் , நீங்கள் சொல்வது போல் 'அதை ' ஒரு adventure ஆகவே எடுத்துக்கொள்வார்கள் . பெண்களுக்கு மானம், மரியாதை, குடும்ப கௌரவம் ,கூட பிறந்தவர்கள் , எதிர்காலம் , மன நலம் பாதிப்பு என்ற பலவற்றை பாதித்து விடும் ... நாம் தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .. நாம் தான் எதற்கும் இடம் தர கூடாது ..... தான் ரொம்ப forward திங்கிங் உள்ள பெண்கள் என்ற அசட்டு துணிச்சலினால் .. வாழ்கையை தானே கெடுத்துக்கொண்டு விட்டனர் .... சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :)  - Page 2 Empty Re: தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum