ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - பிப்ரவரி

+9
T.N.Balasubramanian
சிவனாசான்
ayyasamy ram
Dr.S.Soundarapandian
krishnaamma
subramaniansivam
ஜாஹீதாபானு
M.Saranya
விமந்தனி
13 posters

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 Empty வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by விமந்தனி Tue Feb 03, 2015 2:49 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - பிப்ரவரி 1


வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 WIYreeF6ST2iUyHPfRLp+February-1

1662 - ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் சீனாவின் இராணுவத் தளபதி கொக்சிங்கா தாய்வான் தீவைக் கைப்பற்றினார்.

1788 - ஐசாக் பிறிக்ஸ் மற்றும் வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர்.

1793 - ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.

1814 - பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.

1832 - ஆசியாவின் முதலாவது அஞ்சல் (தபால்) வண்டி சேவை(mail-coach) கண்டியில் ஆரம்பமாகியது.

1864 - டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது.

1880 - யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் முதலாவது தபால் வண்டி (mail coach) சேவையை ஆரம்பித்தது.

1884 - ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் முதற் பதிப்பு வெளியானது.

1893 - தொமஸ் எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூ ஜேர்சியில் கட்டி முடித்தார்.

1908 - போர்த்துக்கல் மன்னன் முதலாம் கார்லொஸ் மற்றும் அவனது மகன், இளவரசர் லூயிஸ் பிலிப் லிஸ்பன் நகரில் கொல்லப்பட்டனர்.

1913 - உலகின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் Grand Central Terminal நியூயோர்க் நகரில் திறக்கப்பட்டது.

1918 - ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.

1924 - சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.

1946 - நோர்வேயின் ட்றிகிவா லீ ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்டார்.

1958 - எகிப்து மற்றும் சிரியா ஆகியன இணைந்து 1961 வரையில் ஐக்கிய அரபுக் குடியரசு என ஒரு நாடாக இயங்கின.

1974 - பிரேசிலில் 25-மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

1979 - 15 ஆண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் மதத்தலைவர் அயத்தொல்லா கொமெய்னி டெஹ்ரான் திரும்பினார்.

1998 - கிளிநொச்சிநகர் மீதான தாக்குதல் - 1998: கிளிநொச்சி நகரம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமாகியது.

2003 - கொலம்பியா விண்ணோடம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

2004 - சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் கொல்லப்பட்டனர்.

2005 - நேபாள மன்னர் ஞானேந்திரா நாடாளுமன்றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

2005 - கனடா சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடானது.

2007 - மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் பேருந்து ஒன்று சிக்கியதில் 2 அதிரடிப்படையினர் 6 காவற்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.


வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by விமந்தனி Thu Feb 05, 2015 2:26 pm

வரலாற்றில் இன்று - பிப்ரவரி 5


வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 RntJEMygT5GY6vOvQ7qy+February-5

62 – இத்தாலியின் பொம்பெய் நகரில் நிலநடுக்கம் இடம்பெற்றது.

1597 - ஜப்பானின் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலர் ஜப்பானின் புதிய அரசால் ஜப்பானிய சமுகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்ச்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1649 - ஸ்கொட்லாந்து இரண்டாம் சார்ல்சை அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது.

1778 – தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட முதலாவது மாநிலமானது.

1782 - ஸ்பானியர் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்து மினோர்க்கா தீவைக் கைப்பற்றினர்.

1782 - ஒகைய்யோவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்கப் பழங்குடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1852 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.

1885 - பெல்ஜிய மன்னன் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோவைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக ஆக்கினான்.

1900 - பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1917 – மெக்சிக்கோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது.

1922 - றீடர்ஸ் டைஜஸ்ட் மாதிகை முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1958 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் சவான்னா கரைகளில் அமெரிக்க வான் படையினரால் ஐதரசன் குண்டு ஒன்று காணாமல் போனது. இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை.

1958 – ஐக்கிய அரபுக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக கமல் அப்துல் நாசர் நியமிக்கப்பட்டார்.

1960 - ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1971 - அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.


வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by subramaniansivam Thu Feb 05, 2015 3:03 pm

தினந்தோறும் எழுதி வாருங்கள். முடிந்தவுடன் அனைத்துப் பதிவுகளையும் தொகுத்து மின்னூலாக்கி விடலாம். நல்ல பயனுள்ள பதிவு. மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பொது அறிவு சார்ந்த ஏராளமான விஷயங்கள் உள்ளன.
போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by விமந்தனி Thu Feb 05, 2015 3:08 pm

subramaniansivam wrote:தினந்தோறும் எழுதி வாருங்கள். முடிந்தவுடன் அனைத்துப் பதிவுகளையும் தொகுத்து மின்னூலாக்கி விடலாம். நல்ல பயனுள்ள பதிவு. மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பொது அறிவு சார்ந்த ஏராளமான விஷயங்கள் உள்ளன.
போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மிக்க நன்றி.


வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by M.Saranya Thu Feb 05, 2015 4:15 pm

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 3838410834 வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 3838410834


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by விமந்தனி Thu Feb 05, 2015 4:57 pm

M.Saranya wrote:வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 3838410834 வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 3838410834
வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 1571444738 வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 1571444738


வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by krishnaamma Thu Feb 05, 2015 5:26 pm

நல்ல பகிர்வு விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by விமந்தனி Fri Feb 06, 2015 12:58 pm

வரலாற்றில் இன்று - பிப்ரவரி 6


வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 IZyuV8GJThOGCykbXI9H+February-6

1658 - சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தனர்.

1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.

1840 - நியூசிலாந்தில் வைதாங்கி ஒப்பந்தம் பிரித்தானிய அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் எட்டப்பட்டது.

1863 - சிலோன் பேட்ரியட் (The Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.

1938 - அவுஸ்திரேலியா, சிட்னியில் பொண்டாய் கடற்கரையில் எழுந்த கடல் அலைகள் 300 பேர்களைக் கொன்றது.

1951 - நியூ ஜேர்சியில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 85 பேர் கொல்லப்பட்டனர். 500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

1952 - இரண்டாம் ஜோர்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட 7 நாடுகளுக்கு அரசியானார்.

1958 - ஜெர்மனி, மியூனிக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் உதைபந்தாட்ட அணியின் 8 பேர் கொல்லப்பட்டனர்.

1959 - டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக் கில்பி integrated circuit க்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்.

1959 - கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

1996 - அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

2000 - டார்ஜா ஹலோனென் பின்லாந்தின் முதல் பெண் அதிபரானார்.

2004 - மாஸ்கோவில் சுரங்க தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.


வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by விமந்தனி Sat Feb 07, 2015 10:04 pm

வரலாற்றில் இன்று - பிப்ரவரி 7


வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 CryIJzmFTpSF00lBJPHm+February-7

1238 - மங்கோலியர்கள் ரஷ்யாவின் விளாடிமிர் நகரைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

1807 - நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கினர்.

1812 - மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.

1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரை வில்லியம் ஃபார்க்கூஹார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டார்.

1845 - இலங்கை அரச ஆசியர் சமூகத்தின் இலங்கைக் கிளை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.

1863 - நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியஸ் என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

1904 - மேரிலாந்தில் பால்ட்டிமோர் என்ற இடத்தில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.

1914 - சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் Kid Auto Races at Venice வெளியானது.

1962 - கியூபாவுடனான ஏற்றுமதி, மற்றும் இறக்குமதி தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தது.
   
1967 - அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் கொல்லப்பட்டனர்.

1967 - தாஸ்மேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் கொல்லப்பட்டனர்.

1971 - சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.

1974 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரனாடா விடுதலை பெற்றது.

1977 - சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.

1979 - புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.

1986 - எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அதிபர் ஜீன்-குளோட் டுவாலியர் கரிபியன் நாட்டிலிருந்து வெளியேறினார்.

1990 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.

1991 - எயிட்டியின் முதலாவது மாக்களாட்சித் தலைவராக ஜீன்-பேட்ரண்ட் ஆர்ட்டிஸ்டே பதவியேற்றார்.

1991 - ஐரிஷ் குடியரசு இராணுவம் லண்டனில் 10 டவுனிங் வீதியில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது.

1992 - ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

1999 - உலகத்தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.

2005 - விடுதலைப் புலிகளின் மட்டு - அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.



வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by Dr.S.Soundarapandian Sun Feb 08, 2015 4:36 pm

சூப்பருங்க வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 1571444738 வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by விமந்தனி Sun Feb 08, 2015 11:07 pm

வரலாற்றில் இன்று - பிப்ரவரி 8


வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 MhLV28utQpMhRHEhJE3W+February-8

1587 - இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தை கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டாள்.

1622 - இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னன் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தான்.

1761 - லண்டனில் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1849 - புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது.

1900 - போவர் போர்: தென்னாபிரிக்காவில் லேடிஸ்மித் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் போவர்களினால் தோற்கடிக்கப்பட்டனர்.

1904 - சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்கியது.

1924 - ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1942 - ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி ஜெர்மனியை விட்டுத் தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.

1956 - இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

1963 - கியூபாவுடனான போக்குவரத்து, பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் ஐக்கிய அமெரிக்க மக்களுக்கு தடை செய்யப்பட்டதாக அதிபர் ஜோன் எஃப். கென்னடி அறிவித்தார்.

1971 - நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.

1974 - 84 நாட்கள் விண்ணில் சஞ்சரித்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.

1974 - அப்பர் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1989 - போர்த்துக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதியதில் 144 பேர் கொல்லப்பட்டனர்.

2005 - இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன.


வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - பிப்ரவரி - Page 2 Empty Re: வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum