ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்!

+2
M.Saranya
ayyasamy ram
6 posters

Go down

உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்! Empty உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்!

Post by ayyasamy ram Tue Feb 03, 2015 8:51 am

உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்! Qe8n7t9OTR6gwfwzFuPH+Oillorry01
-

பெரம்பலூர்:
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய எண்ணெய் லாரி டிரைவர், கிளீனரை காப்பாற்றாமல், லாரியில் இருந்து கொட்டிய எண்ணெய்யை பொதுமக்கள் பிடித்து சென்ற சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சென்னையிலிருந்து தனியார் டேங்கர் லாரி ஒன்று பாமாயில் எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி பெரம்பலூர் மாவட்டம், துறைமங்களம் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து. நெடுஞ்சாலைத்துறை டிவைடரில் ஏறி, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், டிரைவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கைகளிலும் காயம் ஏற்பட்டது. அதேபோல், கிளீனருக்கும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

அதேநேரத்தில், விபத்தில் சிக்கிய லாரியின் டேங்கரில் இருந்து பாமாயில் எண்ணெய் ரோட்டில் கொட்டியது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், உயிருக்கு போராடிய டிரைவர் மற்றும் கிளீனரைப் பற்றி கவலைப்படாமல், தங்கள் வீடுகளில் இருந்து குடம் மற்றும் கேன்களை கொண்டு வந்து, பாமாயிலை பிடித்துச் சென்றனர். இதனால், இன்னும் மூன்று, நான்கு மாதங்களுக்கு அவர்கள் சமையல் எண்ணெய் வாங்க தேவையில்லை என்கின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய டிரைவர் மற்றும் கிளீனரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடியவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், தங்களுக்கு தேவையான எண்ணெய்யை மட்டும் பொதுமக்கள் பிடித்துச் சென்ற சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை காப்பாற்றவேண்டும் என்ற ஈவு, இரக்கம் கொஞ்சம் கூடஇல்லாமல், நம் மக்களின் மனம் இப்படி கல்நெஞ்சாக மாறிவிட்டதே என ஆதங்கப்படுகின்றனர் அவர்கள்.

-எம்.திலீபன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்! Empty Re: உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்!

Post by M.Saranya Tue Feb 03, 2015 9:59 am

அட பாவமே ....அங்கிருந்த ஒருவருக்கு கூட இந்த எண்ணம் வரவில்லையே..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
காலம் மிகவும் மோசமாக போய்கொண்டிருக்கிறது...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்! Empty Re: உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்!

Post by ராஜா Tue Feb 03, 2015 10:38 am

காலம் மாறிகிட்டு இருக்கு , "செத்தா தானா சுடுகாட்டுக்கு போயி படுத்துக்கணும்னு" ஒரு திரைப்பட நகைச்சுவை வருமே அது போல ஆகிடும் போல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்! Empty Re: உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்!

Post by M.M.SENTHIL Tue Feb 03, 2015 1:35 pm

மனிதாபிமானம் என்ற ஒன்று இங்கே செத்து விட்டது...

நமக்கு வந்தால் வலி, மற்றவருக்கு வந்தால் அதை பற்றி கவலை இல்லை சோகம் சோகம் சோகம்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்! Empty Re: உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்!

Post by அகிலன் Tue Feb 03, 2015 4:02 pm

இதுகூட ஒரு களவுதான்,

எண்ணையை பிடித்துக் கொண்டு சென்றவர்களை கைதுசெய்ய வேண்டும்.
மக்கள் சரியானவர்களாக இருந்தால் உயிருக்குப் போராடியவர்களை காப்பாற்ற முயற்சி செய்திருக்க வேண்டும்,
எண்ணையை வெளியேற விடாமல் அடைத்து உதவியிருக்க வேண்டும்.


நேர்மையே பலம்
உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்! 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்! Empty Re: உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்!

Post by krishnaamma Tue Feb 03, 2015 4:16 pm

அடப்பாவிகளா....................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்! Empty Re: உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய்
» 13 நாட்களாக உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி உயிரிழந்தார்- டில்லியில்பாதுகாப்பு அதிகரிப்பு
» உயிருக்கு போராடிய முன்னாள் ராணுவ வீரர் : ரோட்டிலேயே சிகிச்சை அளித்தார் கலெக்டர்
» விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!
» மாரடைப்பு வந்து காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபர் - மனிதநேயத்தோடு காப்பாற்றிய சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum