ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)

3 posters

Go down

'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  Empty 'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)

Post by krishnaamma Mon Feb 02, 2015 10:39 am

ஒரு சிறிய டவுனிலிருந்து  மகன் வீட்டுக்கு வந்திருந்த  சிவகாமி  அம்மாளும் பக்கத்து வீடு பார்வதி அம்மாளும் பேசிக்கொண்டிருந்தனர். யாரோ ஒருவர் பேசக்கிடைத்தது சிவகாமிக்கு ரொம்ப சந்தோஷம்.

"இந்த வீடு பரவாஇல்லை, ஏதோ அக்கம் பக்கம் பேசுவதற்கு, ஏதோ அவசரம் ஆத்திரம் என்றால் ஒரு குரல் கூப்பிட வாகாக மனிதர்கள் இருக்கிறீர்கள், என் சின்ன பிள்ளை flat  இல் இருக்கிறான். அங்கு பக்கத்து flat  இல் இருப்பது யார் என்று கூட நமக்கு தெரியாது....தப்பித்தவறி யாரையாவது பார்த்தால் ஒரு சிரிப்பு ஒரு விசாரிப்பு கூட கிடையாது. சின்ன பசங்க கூட போன் ஐ கை இல் வைத்துக்கொண்டு, காதில் எதையோ மாட்டிக்கொண்டு தலையை ஆட்டிக்கொண்டு, தப்பித்தவறி கூட அடுத்தவர்கள் பேச்சு நம் காதில் விழவேண்டாம் என்பது போல தனியாகவே இருக்கிறார்களே ?....ஏன் இப்படி இருக்கிறார்கள் ? ..ஓடி ஆடி விளையாடும் சிறுவர்களை பார்ப்பதே அபூர்வமாய் இருக்கே ? "

"மகனும் மருமகளும் ஆபீஸ் போவதால், flat  வாசலில் கிரில் கேட் வேறு. ...ஜெயில் மாதிரி...எப்பவும் பூட்டியே   வைக்க சொல்வார்கள். 'யாராவது வந்தால் கிரில் கதவை திறக்காமலேயே பேசு, போஸ்ட் வந்தாலும் அந்த கதவின் இடுக்கு வழியே வாங்கு....பத்திரம் , பத்திரம்.....இது நீ இருக்கும் கிராமம் போல இல்லை  ' என்று தினமும் ஒரு நூறு முறையாவது சொல்லிவிட்டுத்தான் கிளம்புவார்கள்......."

அவர்கள் சொல்வதும் வாஸ்தவம் தான், தினமும் பேப்பரில் தான் பார்க்கிறோமே, இங்கு கொள்ளை அங்கு கொலை என்று......மாலை ஆனால் பறவைகள் போல கூட்டில் அடைகிறார்கள்..............மறுபடியும் கம்ப்யூட்டர் , போன் , இல்லாவிட்டால் டிவி என்று .....இயந்திரம் போல, இயந்திரகளாகவே........ "

"ஹும்...நாம எதைத்தேடி ஓடறோம் என்றே இவர்களுக்கு புரிவதில்லை.........மனிதர்களுடன் பேசவே  பேசாமல், எந்த  மனித உறவுகளுமே இல்லாமல்  இவர்கள் வெறும் மெஷின்களுடன் என்ன வாழ்க்கை வாழுகிறார்களோ ?.ஒண்ணும் பிடிபடலை எனக்கு "

"அங்கு இரண்டு நாளிலேயே எங்களுக்கு  மூச்சு முட்டிவது போல ஆகிவிட்டது............"உங்களுக்கு எப்போ எங்களைப்  பார்க்கணும் என்று தோன்றுகிறதோ அப்போ நம்ப வீட்டுக்கு வந்துடுங்கப்பா" என்று சொல்லி கிளம்பிவிட்டோம் நாங்கள் என்றாள்.

"அப்புறம் இவனும் மருமகளும் கூப்பிட்டதால் இங்கு வந்திருக்கோம், நீங்க எப்படி இங்கேயே இருகீங்க?" என்று சிரித்தபடி  பார்வதி அம்மாவை பார்த்து கேட்டாள்.

அதற்கு பார்வதியும், "எனக்கும் முதலில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது, எனவே தான் அதுபோல இருக்கும் flat  களிலிருந்து இது போல வீட்டுக்கு மாறி வந்து விட்டோம். இங்கு கொஞ்சம் பரவாஇல்லை, அக்கம் பக்கம் நீங்க சொல்வது போல பார்க்க பேசி பழக மனிதர்கள் உண்டு " என்றாள்.

" ம்... எங்க ஊரில் முன்பு போல வாசல் திண்ணைகள் இல்லையே தவிர, அக்கம் பக்கம் பேச, கொள்ள, ஒரு பண்டிகை பருவம் என்றால் நாம் சமைத்ததை அடுத்த வீடுகளுக்கு கொடுத்து அனுப்ப , என்று ஒரு நாலு பேராவது இருக்கிறார்கள். அத்தை, மாமா, அக்கா , அண்ணா என்று கூட இருப்பவர்களை முறை சொல்லி கூப்பிட்டு பழகுவோம்.........ஒரு தபால்காரர்  வந்தால் கூட உட்காரவைத்து ரெண்டு வார்த்தை பேசி, ஒரு டம்ளர் மோர் கொடுத்து அனுப்புவோம்...... இங்க தவிச்ச வாய்க்கு தண்ணி தரவே யாருக்கும் நேரம் இல்லை...........

"அங்கே, யாருக்காவது ஒன்று என்றால் எல்லோரும் ஓடுவோம்... ஆனால் இங்கு, , அடுத்தவன் ரோட்டில் அடிபட்டு இருந்தால் கூட பார்த்துக்கொண்டே செல்பவர்கள் தானே அதிகமாய்ப் போனார்கள்...........அவங்களுக்கு உதவக்கூட ஆள் இல்லையே.....இதுக்கும் இப்போ எல்லோரும் கையில்  போன் ஐ  வைத்துக்கொண்டு திரிகிறார்கள்........கொஞ்சம் கூட  மனிதாபிமானமே இல்லாமல் போச்சு இன்றைய மனிதர்களிடம்...............இப்படி இருந்தால் எப்படி நாடு விளங்கும்? எங்கிருந்து மழை வரும்..." என்று வருத்தத்துடன் அங்கலாய்த்தாள்   சிவகாமி அம்மாள்.

பார்வதி அம்மாளுக்கு என்ன சொல்வது என்று தெரியலை. பிறகு " நீங்க சொல்வது வாஸ்த்தவம் தான், நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே, கொஞ்சம் கொஞ்சமாய் உறவுகள் அவற்றின் நற்பண்புகள் எல்லாம் குறைந்து  கொண்டே வருகிறது.... நம் உணவுகள், பண்புகள், கலாச்சாரம் எல்லாவற்றையும் இந்த மேற்கத்திய மோகம் என்கிற வெள்ளம் அடித்து சென்றுவிடும் போல இருக்கு.........எல்லோரும் பல்லக்கில் ஏற ஆசைப்படுவதன் விளைவு இது....தனக்கு தகுதி இருக்கோ இல்லியோ, ஒரேநாளில் பணக்கரனாகிடணும்  , என்கிற எண்ணம் எல்லோருக்குமே வந்து விட்டது தான் காரணம் என்று நினைக்கிறேன்....." என்றாள்.

இவர்கள் இப்படி பேச ஆரம்பித்ததிலிருந்து சிவகாமி அம்மாளின் மருமகள் லக்ஷ்மி, வாசலில்
கீரைக்காரியுடன்  பேரம் பேசிக்கொண்டிருந்தாள். ஒருவழியாக கீரை வாங்கிக்கொண்டு உள்ளே வந்தவளை
" அம்மா லக்ஷ்மி, அந்த கீரையை இப்படிக்கொடு, நான் ஆய்ந்து வைக்கிறேன்" என்றாள் சிவகாமி.

" வேண்டாம் ம்மா, நான் பார்த்துக்கறேன்" என்றாள் லக்ஷ்மி.

" பரவாஇல்லை சும்மாத்தானே இருக்கேன், கொடு இப்படி " என்றாள் மருமகளிடம்.

அவளும் கீரைக் கட்டுகளை இவர்களின் அருகில் கொண்டுவைத்துவிட்டு, பார்வதி அம்மாளை பார்த்து ,
" லதாவும், கேசவனும் ஆபீஸ் போயாச்சா  ஆண்டி'? என்றாள்.

பார்வதியும் சிரித்தவாறே," ம்.. போயச்சுமா, உங்க மாமியாரை பார்த்தேன் அது தான், கதவை பூட்டிக்கொண்டு இங்கு வந்துட்டேன் " என்றாள்.

உடனே  சிவகாமியும், " இங்க உறவு முறைகள் கூட ரெண்டு தான் 'ஆண்டி அங்கிள்'....என்னவோ போங்கோ, எதுவும் மனசுக்கு பிடிக்கலை".என்றபடி கீரையை ஆயத் துவங்கினாள். வாசலில் இன்னும் கீரைக்காரி காத்திருக்கவே,

" என்னமா, இன்னும் கீரைக்காரிக்கு  பணம் கொடுக்கலையா, அவள் காத்திருக்காளே, எப்பவும் பர்சுடன் தானே காய் வாங்க போவாய் ? " என்றாள் சிவகாமி.  

அதற்கு, " இல்லம்மா, அவளுக்கு ஜுரம் அடிப்பது போல இருக்காம், தலையை சுற்றுகிறதாம் , அது தான் ஒரு நாலு இட்லி சாப்பிட்டுவிட்டு, இந்த மாத்திரையை போட்டுக்கோ, இதுக்கும் கேட்காவிட்டால், காய் விற்று விட்டு வரும்போது, தெருக்கோடி  டாக்டர் அங்கிள் , கிளினிக் முடிந்து வந்திருப்பார், அவரிடம் போ என்று சொன்னேன் . அது தான் காத்திருக்கா" என்று  உள்ளிருந்து பதில் சொல்லியபடிய  வந்த லக்ஷ்மி இன் கைகளில் நாலு இட்லி  வைத்த தட்டும் குடிக்க ஒரு டம்ளர் தண்ணீரும் இருந்தது.

" இதோ கொடுத்து விட்டு வரேன் ம்மா" என்றபடி சென்றாள்.

இதைப்பார்த்த சிவகாமிக்கு மனம் நிறைந்தது, தான் பயந்த படி இன்னும் மனிதாபிமானம் பூரணமாய் சாகவில்லை என்கிற நினைப்பே  மனதை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. பார்வதியை பார்த்து சந்தோஷமாய் சிரித்தாள். என்றாலும், கீரைகாரியை அனுப்பிவிட்டு உள்ளே வந்த லக்ஷ்மி இடம்,

" என்னமா 4 கத்தை கீரைக்கு அத்தனை நேரம் போராடுன, பேரம் பேசின, 'பொசுக்குனு' நாலு இட்டிலி, சாம்பார், மாத்திரை என்று கொடுத்துட்டே" என்றாள்.

அதற்கு லக்ஷ்மி, " அது வியாபாரம் மா, இது மனிதாபிமானம், ரெண்டையும் குழப்பிக்க கூடாது  " என்று
சொல்லிவிட்டு, ஆய்ந்த கீரைகளை உள்ளே கொண்டு சென்றாள் இயல்பாக.

சிவகாமியும் பார்வதியும் மன மகிழ்ச்சியாக  சிரித்தனர். "இது போல சிலரால் தான் இன்னும் மழை பெய்கிறது"  என்று பார்வதி சொன்னாள்.... சிவகாமியும் தன் மருமகளின் இயல்பான ஈகை குணத்தால்  மனம் நிறைந்தாள்.

கிரிஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  Empty Re: 'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)

Post by மதுமிதா Mon Feb 02, 2015 11:57 am

அருமை அம்மா....

பிளாட் ல் நடப்பது உண்மை அம்மா...

இன்னும் நார்மல்வீடுகளில் கூட இந்த மாதிரி இப்போ கதவை பூட்டிக் கொண்டு தான் உள்ளனர்....

நானும் அம்மா இங்க இருந்த அப்போ அப்படி தன சொல்வேன் அம்மா கதவை open பண்ண கூடாது நான் வந்ததும் call பன்றேன் அப்போ தன ஓபன் பண்ணனும் என்று ...

flat life மற்றும் மனிதாபிமானம் இரண்டையும் இணைத்து அருமை அம்மா....

விரைவில் புக் வெளி இடுங்கள் அம்மா... தோழிகளிடம் இந்த கதை ஆசிரியர் எனக்கு தெரிந்தவர் மற்றும் புகைப்படம் எடுத்து உள்ளேன் என்று சொல்லி கொள்ளலாம் புன்னகை



'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  M'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  A'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  D'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  H'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  U



'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  Empty Re: 'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)

Post by ayyasamy ram Mon Feb 02, 2015 1:17 pm

'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  Empty Re: 'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)

Post by krishnaamma Mon Feb 02, 2015 4:18 pm

மதுமிதா wrote:அருமை அம்மா....

பிளாட் ல் நடப்பது உண்மை அம்மா...

இன்னும் நார்மல்வீடுகளில் கூட இந்த மாதிரி இப்போ கதவை பூட்டிக் கொண்டு தான் உள்ளனர்....

நானும் அம்மா இங்க இருந்த அப்போ அப்படி தன சொல்வேன் அம்மா கதவை open  பண்ண கூடாது நான் வந்ததும் call பன்றேன் அப்போ தன ஓபன் பண்ணனும் என்று ...

flat life மற்றும் மனிதாபிமானம் இரண்டையும் இணைத்து அருமை அம்மா....

விரைவில் புக் வெளி இடுங்கள் அம்மா... தோழிகளிடம் இந்த கதை  ஆசிரியர் எனக்கு தெரிந்தவர் மற்றும் புகைப்படம் எடுத்து உள்ளேன் என்று சொல்லி கொள்ளலாம் புன்னகை


நன்றி மது  நன்றி  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர் ................ஆமாம் மது, உங்க அம்மாவுக்கும் பெங்களுரு  புதிது .......பாஷை தெரியாது  ........ஜாக்கிரதையாக  இருப்பது தவறில்லை.
.
.
.
'புக்' தானே ?...........வெளி இட்டால் போச்சு, நான் பெங்களூர் வந்ததும் சொல்றேன், எதிரே தானே இருக்கீங்க வந்துடுங்கோ புன்னகை ...ஹா....ஹா..ஹா..............அன்னைக்கு சாதாரண டிரஸ் இல் போட்டோ எடுத்தோம், இப்போ 'பர்பசாக' ட்ரெஸ் செய்து கொண்டு எடுத்துப்போம் மது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


Last edited by krishnaamma on Mon Feb 02, 2015 4:26 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  Empty Re: 'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)

Post by krishnaamma Mon Feb 02, 2015 4:23 pm

ayyasamy ram wrote:'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1118364

நன்றி ராம் அண்ணா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
பொதுவாக நம் திரிகளையே பாருங்களேன்.எத்தனை பேர் படிகிறார்கள்? ......படிக்க அவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டவர்களுக்கு , பிடித்தது அல்லது இப்படி இருந்திருக்கலாம் என்று மனதில் பட்டதை, .........ஒரு வரி அல்லது ஒரு 'smiley ' போடக் கூட மனம் இல்லாமல் தானே வெளியே போகிறார்கள்?????????????...எனக்கு எப்பவுமே இந்த வருத்தம் உண்டு.........

நாம் என்ன சொல்ல முடியும் அவர்களை?.....................ஆனால், ஏதோ என்னால் முடிந்தது, நான் படித்ததும் பின்னுட்டம் போட்டுவிடுவேன், நல்லா இருந்தால் 'விருப்பம்' போடுவேன், நான் துவங்கும் திரிகளில் தவறாமல் ' தேங்க்ஸ்' பட்டன் அழுத்திடுவேன்.அவ்வளவுதான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  Empty Re: 'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum