புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்கிரஸ் கட்சிக்கு ஜெயந்தி நடராஜன் முழுக்கு , ராகுல் காந்தி மீது பரபரப்பு குற்றசாட்டு , வெளிவரபோகும் அடுத்த மெகா ஊழல்
Page 1 of 1 •
காங்கிரஸ் கட்சிக்கு ஜெயந்தி நடராஜன் முழுக்கு , ராகுல் காந்தி மீது பரபரப்பு குற்றசாட்டு , வெளிவரபோகும் அடுத்த மெகா ஊழல்
#1118038மன்மோகன் சிங் அரசில், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி, அக்கட்சியிலிருந்து நேற்று ராஜினாமா செய்தார். அவர் தெரிவித்துள்ள தகவலின் படி, தொழிற்சாலைகளுக்கு அனுமதி விவகாரத்தில், முந்தைய காங்கிரஸ் அரசு மிகப் பெரிய முறைகேட்டை செய்திருக்கலாம் என கருதும், இப்போதைய, பா.ஜ., அரசு, அவற்றை விசாரிக்க முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு ஜெயந்தி நடராஜன் அனுப்பிய கடிதத்தை, சென்னையிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று நேற்று வெளியிட்டது. அதில், ஆட்சி, அதிகாரத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் தலையீடு அம்பலமானது.
அதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், சென்னையில் நேற்று காலை, பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயந்தி நடராஜன், காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். காங்கிரஸ் கட்சி தான் எங்களுக்கு எல்லாமே. என் தாத்தா பக்தவத்சலம், சுதந்திர போராட்ட தியாகி; தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார். என் பெரிய தாயார் சரோஜினி வரதப்பன், சமூக சேவகி. நான்கு முறை ராஜ்யசபா எம்.பி., பதவியும், மத்திய அமைச்சர் பதவியும் காங்கிரஸ் தான் எனக்கு தந்தது. அதற்காக, கட்சிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்; அதேநேரம், கட்சிக்காகவும் நான் நிறைய உழைத்திருக்கிறேன். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றுக் கொண்ட போது, சட்டத்தின் படியும், அரசு விதிகளின் படியும் தான் செயல்பட வேண்டும் என, சோனியா வலியுறுத்தி சொன்னார். அவர் வலியுறுத்திய படி தான் நான், கடைசி வரையில் செயல்பட்டேன். அமைச்சராக நான் செயல்பட்ட காலங்களில், பெரிய நிறுவனங்கள், தங்களின் புதுத் திட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி கேட்டபோது, சட்டத்தின் அடிப்படையில், சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க மறுத்தேன். அந்த நிறுவனங்களுக்கு எதிராக, என் துறையில், தொண்டு நிறுவனங்கள் புகார்கள் தெரிவித்திருந்ததாலும், அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல், என்னை அழைத்துப் பேசினார். இயற்கைக்கு ஊறு விளைவிக்கும் எந்த திட்டத்தையும், துறை அனுமதிக்காது என்று சொல்லி, மறுத்தேன்.
இதனால், அமைச்சரவையில் எனக்கு எதிராக பலர் கருத்து சொல்ல ஆரம்பித்தனர். அதைப்
பற்றியெல்லாம் கவலைப்படாமல், நான் என் நிலையில் நின்று செயல்பட்டேன். கடந்த 2013, நவம்பர் 17ல், காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த, அஜய் மக்கான், என்னை தெலைபேசியில் தொடர்பு கொண்டு, மோடிக்கு எதிராக பேசும் படி கூறினார்; தனிப்பட்ட விமர்சனத்தில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார். அதற்கு நான் மறுத்தேன். 'கொள்கை ரீதியாக மட்டுமே விமர்சிக்க முடியும்; தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிப்பதில் உடன்பாடில்லை' என, தெரிவித்தேன். இதன் பின், 'மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி விட வேண்டும்' என, சோனியா வலியுறுத்துவதாக, மன்மோகன் சிங் தெரிவித்தார். அதன் படி, ராஜினாமா செய்தேன்.காங்கிரஸ் கட்சித் தலைமை என்னை முழுமையாக புறக்கணித்தது. எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்பி, சோனியா, ராகுலை சந்திக்க முயற்சித்தேன். ஆனால், அவர்கள் என்னை சந்திக்க மறுத்து விட்டனர்.என்னை புறக்கணிப்பதை, கட்சித் தலைமை திட்டமிட்டு, தொடர்ந்து செய்தது. எவ்வளவு காலத்துக்கு மன வலியுடன், காங்கிரசில் இருக்கமுடியும்... வருத்தத்துடன், காங்கிரசில் இருந்து விலகி விட்டேன்; காங்கிரஸ் அறக்கட்டளையிலிருந்தும் வெளியேறி விட்டேன். இனி யார் அழைத்தாலும், அக்கட்சிக்கு திரும்ப வாய்ப்பில்லை. வேறு கட்சியில் இணையும் எண்ணமும் தற்போது இல்லை. சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியது தொடர்பான கோப்புகளை, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மறுபரிசீலனை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்; அதை நான் வரவேற்கிறேன். என் பதவிக் காலத்தில், நான் தவறு செய்ததாக நிரூபித்தால், தூக்கிலிடலாம். என் ஆதரவாளர்கள் காங்கிரசை விட்டு விலகுவது பற்றி, இனிமேல் தான் தெரியும். சிதம்பரத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.என் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன; இது, முற்றிலும் அரசியல் சம்பந்தப்பட்டது. பா.ஜ., செயல்பாடுகள் பற்றி போகப் போகத்தான் தெரியும். இவ்வாறு, ஜெயந்தி நடராஜன் கூறினார்.
தொடரும் ஊழல்: மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், '2ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு' போன்றவற்றில், மெகா ஊழல்கள் நடைபெற்று, அது குறித்து, சி.பி.ஐ., விசாரித்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, மற்றொரு மெகா ஊழல் அம்பலமாகியுள்ளது.காங்கிரஸ் துணைத் தலைவர் து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ராகுல், தன் இஷ்டப்படி, நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளதும், அனுமதி மறுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதை விசாரிக்க, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு முன்வந்துள்ளதால், மீண்டும் ஒரு
Advertisement
மெகா ஊழல் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணை நடத்தப்படும்-அருண் ஜெட்லி அறிவிப்பு: ''காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சி காலத்தில் அனுமதி வழங்கப்பட்ட, அனுமதி மறுக்கப்பட்ட தொழில் திட்டங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்,'' என, மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த அருண் ஜெட்லி கூறினார்.இது குறித்நேற்று கூறியதாவது:முந்தைய அரசின், சுற்றுச்சூழல் துறை செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும். திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என ஆராயப்படும். அவ்வாறு நடந்திருப்பதாக அறிந்தால், அந்தத் திட்டங்கள் வாபஸ் பெறப்படும்.பெரிய திட்டங்களுக்கு அனுமதி வழங்க தாமதப்படுத்தியதால், பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு முடங்கியது. தனிப்பட்ட சிலரின் விருப்பங்கள் மற்றும் தெரிவுகளால் பொருளாதாரம் பாதிப்படைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் துறை சார்பில், தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தலையீடு இருந்ததும், அந்த விவகாரத்தில் பாரபட்சமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளதால், ஜெயந்தி அமைச்சராக இருந்த காலத்தில், அவர் கையாண்ட பைல்களை நான் பார்த்து, அவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன்.
- பிரகாஷ் ஜாவடேகர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பா.ஜ.,
ஜெயந்தி முறைகேடுகள் தொடர்பாக சில ஆதாரங்கள் கிடைத்திருக்கலாம். அதனால், தன், 'இமேஜை' காப்பாற்றிக் கொள்வதற்காக, அவர் இவ்வாறு கூறுகிறார். இதன் மூலம், அவரின் புதிய அரசியல் தலைவர்களை திருப்திபடுத்தப் பார்க்கிறார்.
- அபிஷேக் சிங்வி, காங்., செய்தித் தொடர்பாளர்
-dinamalar
Re: காங்கிரஸ் கட்சிக்கு ஜெயந்தி நடராஜன் முழுக்கு , ராகுல் காந்தி மீது பரபரப்பு குற்றசாட்டு , வெளிவரபோகும் அடுத்த மெகா ஊழல்
#1118042- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முடிவா சொல்லுங்க இப்ப காங்கிரசில் மிச்சம் எத்தனை பேர் இருக்காங்க?
Re: காங்கிரஸ் கட்சிக்கு ஜெயந்தி நடராஜன் முழுக்கு , ராகுல் காந்தி மீது பரபரப்பு குற்றசாட்டு , வெளிவரபோகும் அடுத்த மெகா ஊழல்
#1118074- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
சொல்லிகொள்ளும் படி இல்லை நண்பரே .......
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
Re: காங்கிரஸ் கட்சிக்கு ஜெயந்தி நடராஜன் முழுக்கு , ராகுல் காந்தி மீது பரபரப்பு குற்றசாட்டு , வெளிவரபோகும் அடுத்த மெகா ஊழல்
#1118077- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1118042யினியவன் wrote:முடிவா சொல்லுங்க இப்ப காங்கிரசில் மிச்சம் எத்தனை பேர் இருக்காங்க?
இட்லி பேமஸ் குஸ்பு இருக்காங்க
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: காங்கிரஸ் கட்சிக்கு ஜெயந்தி நடராஜன் முழுக்கு , ராகுல் காந்தி மீது பரபரப்பு குற்றசாட்டு , வெளிவரபோகும் அடுத்த மெகா ஊழல்
#1118089- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
உண்மை ஒருபோதும் ஒளியாது. வெளிப்பட்டே ஆகும்.. பொருத்திருந்து பார்ப்போம்.
Re: காங்கிரஸ் கட்சிக்கு ஜெயந்தி நடராஜன் முழுக்கு , ராகுல் காந்தி மீது பரபரப்பு குற்றசாட்டு , வெளிவரபோகும் அடுத்த மெகா ஊழல்
#1118207- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஜெயந்தி சொல்வதை நம்ப முடியாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
முக்கியமானது டைமிங். மத்திய புலனாய்வு கழகம் (சி.பி.ஐ) அவரை டெல்லிக்கு அழைத்து விசாரிக்க நாள் குறித்த உடனே அவரது கடிதம் பத்திரிகையில் லீக் ஆகிறது. சிபிஐ விசாரணை எதை பற்றி இருக்கும் என்பது குழந்தைக்கு கூட தெரியும். ஊழல்தான். ஜெயந்தி சுற்றுச் சூழல் துறையின் அமைச்சராக இருந்தபோது, பல முறைகேடுகள் நடந்ததாக சி.பி.ஐ.க்கு தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில் எல்லாம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவிட முடியாது. தகவல் சரிதானா, ஊழல் நடந்தது என்பதற்கு கொஞ்சமாவது அடையாளங்கள் இருக்கிறதா, போதுமான ஆதாரங்களை திரட்ட வழி உண்டா, வழக்கு தொடர்ந்தால் கோர்ட்டில் நிற்குமா என்பதையெல்லாம் ஆராய வேண்டும். அதை ப்ரிலிமினரி என்கொயரி என்பார்கள்.
பூர்வாங்க விசாரணை.
அப்படி ஜெயந்தி துறை சம்பந்தமாக ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து பூர்வாங்க விசாரணைகளை சி.பி.ஐ நடத்தி முடித்து, அறிக்கைகளையும் தயார் செய்திருக்கிறது. ஜெயந்தியிடம் கேட்க வேண்டிய கேள்விகள் பட்டியலையும் ரெடியாக வைத்திருக்கிறது. இது பிஜேபி ஆட்சி எடுத்த நடவடிக்கை அல்ல. காங்கிரஸ் அரசு தெரியாமல் போட்ட சேம்சைட் கோலும் அல்ல. நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாக, சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி ஐ.மு.கூட்டணி அரசு நியமித்த நீதிபதி எம்.பி.ஷா கமிஷன் கண்டுபிடித்த ஊழல்கள். ஒடிசாவில் மட்டுமே 59,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மொத்த தொகை 2ஜி ஊழலில் சொல்லப்பட்ட தொகையை தாண்டியிருக்கலாம். தொழிற்சாலைகள் அமைக்கும்போது சுற்றுச்சூழல் பல வகையிலும் பாதிக்கப்படுகிறது. நதி நீர், நிலத்தடி நீர், காடுகள், மலைகள், அவற்றை நம்பி உயிர் வாழும் பழங்குடி மலைவாழ் மக்கள், விலங்குகள், பறவைகள் எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில் மோசமான விளைவுகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகளை தடுக்க இந்திரா காந்தி துறையாக உருவாக்கி, ராஜீவ் காந்தி அமைச்சகமாக மேம்படுத்தியதுதான் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம். பல ஆயிரம் கோடி முதலீடு செய்து ஆலைகள் அமைக்க முன்வரும் தொழிலதிபர்கள் முதலில் இந்த அமைச்சகத்தில் ஓகே பெற வேண்டும். சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள முதல் 3 பூர்வாங்க விசாரணை அறிக்கைகளில் ஜெயந்தி அளித்த ஒப்புதல்கள் சுட்டப்பட்டுள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தின் சரண்டா காடுகள், அனுக்கா வனங்கள் ஆகியவற்றில் சுரங்கம் தோண்ட ஜிண்டால் ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் ஆகிய கம்பெனிகளுக்கு அவர் அனுமதி வழங்கியிருந்தார். விதிகளை மீறி அனுமதி வழங்க பெரும் தொகை கைமாறியதாக 2013லேயே செய்திகள் வெளிவந்தன.
இந்த அனுமதிகள் பற்றி சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்த தேதி 2014 அக்டோபர் 24 மற்றும் 28. மறுநாள் எகனாமிக் டைம்ஸ் இந்த செய்தியை பிரசுரிக்கிறது. ஜெயந்தியை விசாரிக்கப் போவதாக சி.பி.ஐ அதிகாரி சொன்ன தகவலும் அதில் இருக்கிறது. இந்த செய்தி வெளியானதில் இருந்தே ஜெயந்தி தரப்பில் பதட்டம் கவ்வியதை டெல்லி ஊடக வட்டாரத்தில் ஊர்ஜிதம் செய்கிறார்கள். ஆளும் கட்சியின் செய்தி தொடர்பாளர் என்ற அடிப்படையில் ஜெயந்தி அனைத்து செய்தியாளர்களுடனும் நல்ல தொடர்பு வைத்திருந்தார்.
இந்த நெருக்கடியில் இருந்து மீள பிஜேபியில் சேர்வதுதான் ஒரே வழி என்று காங்கிரஸ் கட்சியில் ஜெயந்தி மீது அதிருப்தியில் இருந்த இரண்டு அமைச்சர்கள் பகிரங்கமாகவே செய்தியாளர்களிடம் சொன்னார்கள். பிஜேபி தலைவர் அமித் ஷாவை ரகசியமாக ஜெயந்தி சந்தித்து பேசினார் என்ற உறுதி செய்ய முடியாத தகவலும் பரவியது.
அப்போதுதான் சோனியாவுக்கு கடிதம் எழுதுகிறார் ஜெயந்தி. 2013 டிசம்பர் 20ம் தேதி ராஜினாமா செய்தவர் (அதாவது சோனியா - ராகுல் உத்தரவுப்படி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்), அடுத்த ஆண்டு நவம்பர் வரை (அதாவது சி.பி.ஐ நெருங்கும் தகவல் வெளியாகும் வரை) என்ன செய்து கொண்டிருந்தார்? காங்கிரஸ் பெரும் புள்ளி ஒருவரை விசாரித்தபோது, ஊர்ஜிதம் ஆகாத செய்திகள் பற்றி கருத்து சொல்வதில்லை என்று கூறி விலகப் பார்த்தார். பழைய அரசில் அவரது நண்பர்களாக இருந்த சிலர் இப்போது ஆளும் கட்சியில் சேர்ந்து பொறுப்புகள் பெற்றிருப்பதை சுட்டிக் காட்டியதும் அவரது பிடிவாதம் தளர்ந்தது. 'வெளியேறிய யாரும் மோசமான குற்றச்சாட்டுகளில் சிக்கவில்லை. அவர்கள் சோனியா - ராகுல் மீது தனிப்பட்ட புகார்களை கூறவும் இல்லை. ஜெயந்தி மட்டும் பிஜேபிக்கு போக ஏன் இந்த வழியை தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கும் விளங்கவில்லை' என்றார்.
கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன் என்றதும் அவரே தொடர்ந்தார்:
"சி.பி.ஐ பிடியில் இருந்து தப்ப பிஜேபி அரசின் உதவி தேவை என்றால், 'நான் செய்த குற்றங்கள் எல்லாவற்றுக்கும் சோனியா - ராஜீவ்தான் காரணம். அவர்கள் உத்தரவுப்படியே விதிகளை மீறி தொழிலதிபர்களுக்கு அனுமதி வழங்கினேன். அதன் மூலம் கிடைத்த ஆதாயங்கள் அனைத்தும் அம்மா - மகனிடமே சேர்க்கப்பட்டது' என்று வாக்குமூலம் மாதிரி அறிக்கை விடுங்கள்" என்று யாரோ கூறியிருக்க வேண்டும் என்றார். யாரோ என்பதை அமித் ஷா என்று எடுத்துக் கொள்ளலாமா என்றதும் 'இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள். அப்போது தானாக தெரியும்' என்று சொல்லியபடி அந்த காங்கிரஸ் புள்ளி நகர்ந்து விட்டார்.
இந்து நாளிதழுக்கு கொடுக்கப்பட்ட ஜெயந்தியின் கடித நகலை மீடியாதான் லெட்டர் பாம் என வர்ணிக்கின்றன. பொட்டு வெடி அளவுக்குக்கூட அதில் வெடி மருந்து இல்லை. அமைச்சர் பதவியை பறிகொடுத்த புலம்பல்தான் அதிகம் கேட்கிறது. மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஒரே நபர் இவர்தானாக்கும் என்ற கேள்வி எழுகிறது. எத்தனையோ பேர் நீக்கப்பட்டுள்ளனர், துறை மாற்றப்பட்டுள்ளனர். அமைச்சரவை மாற்றம் நடக்கும்போது பலர் வருவார்கள், சிலர் போவார்கள். அது சகஜம்.
நமது தமிழ்நாட்டில் பார்க்காததா? நேற்று இருந்தார் இன்று இல்லை என்பது அதிமுக அமைச்சரவையின் இலக்கணமாகிப் போனது. யாருக்காவது காரணம் சொன்னார்களா, யாரும் கேட்கத்தான் செய்தார்களா? கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி... என்று பட்டினத்தார் பாடலை ரிங்டோனாக வைத்துக் கொள்கிறார்கள். தப்பா? அன்செரமோனியஸ் எக்சிட் என்பார்களே, அதுபோல வெளியேற்றி தன்னை அவமதித்து விட்டதாக குமுறுகிறார். வெளியேற்றப்படுவதே அவமதிப்புதான். அவமதித்து வெளியே தள்ளினாலும் வெளியே தள்ளி அவமதித்தாலும் வித்தியாசம் ஏதுமில்லை. ஆனால் ஜெயந்திக்கு அப்படி நேரவில்லையே. பிரதமர் அழைத்து சொல்லி, இவர் கடிதம் கொடுத்து, அதை அவர் ஏற்று. இவரது பணிகளை பாராட்டி பதில் கடிதமும் அனுப்பியதாக இவரே சொல்கிறாரே, சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில். சோனியாவிடம் கேட்டபோதும்கூட கட்சிப்பணிக்கு தேவைப்படுகிறீர்கள் என்ற பதில் வந்ததாக கூறுகிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியை காப்பாற்றும் பொறுப்பை ஜெயந்திக்கு ஒப்படைத்து இருக்கிறார்கள் சோனியாவும் மன்மோகன் சிங்கும். அதற்காக பெருமைப்பட வேண்டும்.
ஆனால் பாருங்கள், 'நான் அறைக்குள் போனதும் மன்மோகன் சிங் எழுந்து நின்றார். அவர் பதட்டமாக இருந்தார். கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கிறது, நீங்கள் ராஜினாமா செய்யச் சொல்லி...' என்று பிரதமர் அறைக்குள் நடந்ததை விவரிக்கிறார் ஜெயந்தி. கேவலமாக இருக்கிறது. ஒரு பிரதமரை அசிங்கப்படுத்த நினைத்து ஜெயந்தி இவ்வாறெல்லாம் ரகசியக் காப்பு பிரமாணத்தை மீறிப் பேசுகிறார் என்றால் நிச்சயமாக அவரது நோக்கம் பலிக்காது. பதவி இழந்த ஓராண்டு காலத்துக்கு பிறகும் அதன் மீதிருந்த பற்றை விட முடியாமல் தவிக்கும் ஏக்கம்தான் இந்த வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ரேஞ்சுக்கு தனது ராஜினாமாவுக்கு காரணம் கேட்கிறார் ஜெயந்தி. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி சொன்னதுபோல, ஜெயந்தி பதவி இழந்த காரணம் அவரைத் தவிர எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. அவரது அமைச்சகம் சம்பந்தப்பட்ட ஃபைல்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், இங்கே அதிகாரி அல்லாத ஒரு பெண்மணி மூலமாகத்தான் அமைச்சருடன் பேசி முடிக்க முடியும் என்றும் அப்போதே நாடு முழுவதும் பேச்சு நிலவியது. 350க்கு மேற்பட்ட பெருந்தொழில் நிறுவன ஃபைல்கள் அவரால் பெண்டிங்கில் வைக்கப்பட்டு இருந்த உண்மை அதிகாரிகள் மத்தியில் பகிரங்கமாக விவாதிக்கப்பட்ட ஒன்று.
அவ்வளவு ஏன்? பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் மேடைகளில் கர்ஜித்த நரேந்திர மோடியே சொன்னாரே: ‘இப்போதெல்லாம் டெல்லியில் புதிய வரி ஒன்று விதிக்கிறார்களாம். அதை செலுத்தாமல் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ஒரு ஃபைலும் மூவ் ஆகாதாம். அந்த வரிக்கு ஜெயந்தி டேக்ஸ் என்று பெயராம்..'. சோனியா டேக்ஸ், ராகுல் டேக்ஸ் என்று மோடி பேசவில்லை. மற்ற அமைச்சர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்றும் பெயர் சொல்லவில்லை. ஜெயந்தி டேக்ஸ் என்று இவருக்கு மட்டும்தான் கவுரவம் அளித்தார். அந்த அளவுக்கு பிரபலமான ஒரு விஷயத்தை கேள்வியே படாதவர் போல ஜெயந்தி இன்று பேட்டி கொடுப்பதும் சோனியாவுக்கு கடிதம் எழுதுவதும் வடிகட்டிய அபத்தம். அன்றைக்கே மோடிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வழக்கு தொடர்ந்திருக்க வேண்டாமா?
சம்பந்தப்பட்ட தொழிலதிபர்கள் தன்னிடம் கதை கதையாக சொன்னார்கள் என்றார் மோடி. அவருக்கு தொழிலதிபர்களோடு இருக்கும் நெருக்கம் உலகம் அறிந்தது. அவர்கள் பொய் பேச அவசியம் இல்லை. ஏனென்றால், ராகுல் காந்தியிடமும் தொழிலதிபர்கள் இதே புகாரை வைத்தார்கள். தொழிலதிபர்கள் எந்தக் கட்சியிலும் உறுப்பினர்கள் அல்ல. எந்தக் கட்சி வந்தாலும் தனது தொழிலுக்கு பலன் கிட்ட வேண்டும் என விரும்புபவர்கள். ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல ஆளும் வாய்ப்பு கொண்ட எதிர்க்கட்சிக்கும் உண்மையான உளவுத் தகவல்களை கொடுப்பதே அவர்கள்தான். அப்படி கிடைத்த தகவலின் அடிப்படையில் ராகுல் காந்தியும் ஒரு கூட்டத்தில் தொழிலதிபர்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்தார். ‘சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ஃபைல்கள் நகர மறுப்பது குறித்து என் கவனத்துக்கு கொண்டு வந்தீர்கள். இனிமேல் அவ்வாறு நடக்காது. ஒப்புதல் குறித்த அரசின் முடிவுகள் நியாயமாகவும், வெளிப்படையாகவும், தாமதமின்றியும் எடுக்கப்படும்' என்று வர்த்தக சம்மேளன கூட்டத்தில் ராகுல் அறிவித்தார். எப்போது தெரியுமா? 2013 டிசம்பர் 21ம் தேதி. ஜெயந்தி ராஜினாமா செய்த மறுநாள். ஆதிவாசிகள், விலங்குகள், சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்றுதான் சோனியாவும் ராஜீவும் ஜெயந்திக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். இது இயல்பானது மட்டுமல்ல, பாராட்ட வேண்டிய விஷயமும்கூட. எந்த நிறுவனத்துக்கும் ஒப்புதல் கொடுக்கச் சொல்லி அவர்கள் சிபாரிசுக் கடிதம் எழுதவில்லை. சிபிஐ வழக்குகள் ஜெயந்தி ஒப்புதல் கொடுத்த தொழில்கள், சுரங்கங்கள் சம்பந்தப்பட்டவை. தானும் தனது குடும்பமும் 4 தலைமுறைகளாக காங்கிரசுக்கு சேவை புரிந்த கதையையும் கண்ணீர் மல்க ஜெயந்தி நினைவு கூர்கிறார். அதற்கு இளங்கோவன் பதில் கூறியுள்ளார். ஒரு ஆதரவாளர்கூட இல்லாத ஜெயந்திக்கு 27 ஆண்டுகள் எம்.பி பதவி கொடுத்து தமிழக காங்கிரசில் பல தலைவர்களின் அதிருப்தியை ராஜீவும் பிறகு சோனியாவும் சம்பாதித்துக் கொண்டதுதான் மிச்சம். அதே போல ஜெயந்தியின் தாத்தா பக்தவத்சலம் தமிழக முதல்வராக இருந்தபோதுதான் இந்தி எதிர்ப்பு போராட்டமும் உணவுப் பஞ்சமும் உலுக்கியது. தமிழ்நாட்டில் அதன் பிறகு காங்கிரஸ் தலைதூக்கவே இல்லை. ஜெயந்தி விவகாரம் எந்தக் கோணத்தில் பார்த்தாலும்
அனுதாபத்தையோ ஆதரவையோ ஈர்க்கும் பிரச்னை அல்ல. ஊழல் வழக்கு வளையத்தில் சிக்காதிருக்க ஒரு முன்னாள் அமைச்சர் மேற்கொண்டுள்ள மொக்கையான முயற்சியாகவே தெரிகிறது. பெண்ணை வேவு பார்த்த விவகாரத்தில் மோடியை தாக்கிப் பேச காங்கிரஸ் மேலிடம் இட்ட கட்டளை தனக்கு பிடிக்கவில்லை என்று ஜெயந்தி இப்போது சொல்வதில், எப்படியாவது மோடியின் அனுதாபத்தை பெற வேண்டும் என்ற துடிப்புதான் அப்பட்டமாக வெளிப்படுகிறது. சோனியாவும் ராகுலும் மன்மோகனும் புகார்களுக்கு அப்பாற்பட்ட நல்லவர்கள் என்று நாடு நம்பிவிடவில்லை.
ஆனால் பதவி இழந்த துக்கம் தாளாதவர்களின் புலம்பலை ஒலிபெருக்கி அந்த தலைவர்களின் நிம்மதியைக் கெடுக்கலாம் என பிஜேபி நினைத்தால் அது நடக்காது. சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் ஊழல் வழக்குகள் தடையின்றி விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டனை பெற மோடி அரசு வழி விட வேண்டும்.
ஊழல் குற்றவாளிகளோடு எக்காரணம் கொண்டும் எந்த வகையிலும் நட்பு பாராட்டுவது பிஜேபியின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிவிடும்.
நன்றி . one india /கதிர்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: காங்கிரஸ் கட்சிக்கு ஜெயந்தி நடராஜன் முழுக்கு , ராகுல் காந்தி மீது பரபரப்பு குற்றசாட்டு , வெளிவரபோகும் அடுத்த மெகா ஊழல்
#0- Sponsored content
Similar topics
» ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம்
» தமிழகத்தில்தான் மெகா ஊழல் நடக்கிறது: அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு!
» காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி ஜன-17.ல் அறிவிப்பு?
» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
» காங்கிரஸ் தலைவர் என்ற பதிவை டுவிட்டரில் இருந்து நீக்கிய ராகுல் காந்தி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1