புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெற்ற மனம்! Poll_c10பெற்ற மனம்! Poll_m10பெற்ற மனம்! Poll_c10 
9 Posts - 90%
cordiac
பெற்ற மனம்! Poll_c10பெற்ற மனம்! Poll_m10பெற்ற மனம்! Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்ற மனம்! Poll_c10பெற்ற மனம்! Poll_m10பெற்ற மனம்! Poll_c10 
251 Posts - 51%
heezulia
பெற்ற மனம்! Poll_c10பெற்ற மனம்! Poll_m10பெற்ற மனம்! Poll_c10 
156 Posts - 32%
Dr.S.Soundarapandian
பெற்ற மனம்! Poll_c10பெற்ற மனம்! Poll_m10பெற்ற மனம்! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
பெற்ற மனம்! Poll_c10பெற்ற மனம்! Poll_m10பெற்ற மனம்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பெற்ற மனம்! Poll_c10பெற்ற மனம்! Poll_m10பெற்ற மனம்! Poll_c10 
18 Posts - 4%
prajai
பெற்ற மனம்! Poll_c10பெற்ற மனம்! Poll_m10பெற்ற மனம்! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பெற்ற மனம்! Poll_c10பெற்ற மனம்! Poll_m10பெற்ற மனம்! Poll_c10 
2 Posts - 0%
cordiac
பெற்ற மனம்! Poll_c10பெற்ற மனம்! Poll_m10பெற்ற மனம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பெற்ற மனம்! Poll_c10பெற்ற மனம்! Poll_m10பெற்ற மனம்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பெற்ற மனம்! Poll_c10பெற்ற மனம்! Poll_m10பெற்ற மனம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்ற மனம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 11:44 am

தன்னை வணங்கியவர்களுக்கு பதில் வணக்கம் கூறிய தயாநிதிக்கு, அவர்களை இதற்கு முன், எங்கோ பார்த்த நினைவு. அப்போது வேகமாக எதிர்பட்ட சின்னய்யா, ''தம்பி... உங்கள சந்திக்கணும்ன்னு சொன்னாங்க; அதான் உட்கார வெச்சேன். எனக்காக கொஞ்ச நேரம் அவங்க கூட பேசுங்க,''என்றார்.

மூத்த பணியாளரான சின்னையா, இல்ல பொறுப்புகளில், தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர். அதனால், அவர் வார்த்தையை மீற முடியாமல், அவர்களிருவரையும் அமரச் சொல்லி, தானும் அமர்ந்தான்.
''ஐயா... என் பேரு தியாகராஜன்; இவங்க என் மனைவி சாவித்திரி. உங்கள சந்திச்சு உதவி கேட்கலாம்ன்னு வந்திருக்கோம்,''என்றார்.

அவர் சொன்ன பெயர்கள், தனக்கு ஏற்கனவே பரிச்சயமானது போல் தோன்றியது. ஆனாலும் புலப்படவில்லை.''எங்கிருந்து வர்றீங்க... என்ன உதவி வேணும்?''என்று கேட்டான் தயாநிதி.

''ஐயா...எங்களப் பத்தி சொல்லணும்ன்னா அது ஒரு பெரிய கதை. கேட்குறதுக்கு ரசிக்காது; அதை சொல்லாம விட்டுடலாம். ஆனா, சொல்லிட்டு உதவி கேட்கறது தான் சரியா இருக்கும்,'' என்று பீடிகையுடன் அவர் பேச, தயாவுக்கு என்னவாக இருக்கும் என்ற சிந்தனை மேவியது.

''நாங்க கூடுவாஞ்சேரியிலிருந்து வர்றோம். நான் ஏ.ஜி., ஆபீஸ்லே அக்கவுன்டன்டா இருந்தேன். இவங்க மெட்ரோ வாட்டர்லே வேலை செஞ்சாங்க. எனக்கு பூர்விகம் சிதம்பரம் பக்கம்; இவங்க வடசென்னை, ரெண்டு பேரும் காதல் திருமணம் செய்துகிட்டோம்.''

ஏ.ஜி., ஆபீஸ், மெட்ரோ வாட்டர் என்ற பெயர்களும் மனதில் பதிந்த பெயர்களாகவே இருந்தன.
முதன் முறையாக அந்த பெண்மணி வாய் திறந்தாள்....

''நல்லபடியா போயிகிட்டு இருந்தது எங்க வாழ்க்கை. ரெண்டு பேர் சம்பாரிக்கிறதுனாலே கையிலே அதிக பணப்புழக்கம். விரும்பியதையெல்லாம் வாங்கி அனுபவிச்சு வாழ்ந்தோம். எங்கள் சந்தோஷத்துக்கு அடையாளமாக, அழகான ஒரு மகன் பிறந்தான். நல்லவிதமா இருந்த எங்க வாழ்க்கையில யார் கண்ணு பட்டதோ புயல் வீச துவங்கிடுச்சு.

அந்த புயல் தானே வீசலே, நாங்களா உருவாக்கிட்டோம். இன்னும் சொல்லப் போனா... என்னால உருவாச்சுன்னே சொல்லலாம். ஆரம்பத்தில் சாதாரணமா ஆரம்பிச்ச பிரச்னை, நாளுக்கு நாள் பெருசாகி ஒருத்தரையொருத்தர் விட்டு பிரியும் நிலை உருவாகிடுச்சு,'' என்றவள், குரல் உடைந்து விசும்ப, அவர் மனைவியைத் தேற்றினார். அந்த பெண்மணி மீண்டும் தொடர்ந்தார்...

''என்னதான் படிச்சிருந்தாலும், ஆயிரமாயிரமா சம்பாதிச்சாலும், பெண்ணுக்கு அடக்கம் வேணும். பொம்பளை அடங்கி வாழாத குடும்பம், சீக்கிரம் கலகலத்துப் போயிடும். அதிக பேச்சும், அகங்காரமான செயல்பாடும், அலட்டலான பார்வையும், கட்டுப்பாடற்ற நடைமுறையும், பெண்ணுக்கு இருக்கக்கூடாத குணங்கள், வேலை பார்க்கிற தைரியத்திலும், பணம் சம்பாதிக்கிற திமிர்லேயும் தேவையில்லாதவைகளை உருவாக்கிகிட்டேன். கெட்டதை வளர்த்துக் கிட்டதாலே நல்லது கண்ணுக்கு தெரியாம போயிடுச்சு.

''என்னோட இம்சையும், நச்சரிப்பும் தாங்காம இவரு, விவாகரத்துக்கு சம்மதிச்சார். அப்பவும், சில நிபந்தனை போட்டேன். அது, விவாகரத்துக்குப் பின், இவருதான் மகனை வளர்க்கணும், ஏன்னா, என்ன கட்டிக்கப் போறவர் அவனை கொடுமைப்படுத்துவார், ஆனா, இவரை கட்டிக்கப் போறவளை, இவர் சமாளிக்க முடியும்ன்னு நினைச்சு, அந்த நிபந்தனையை போட்டேன். ஒத்துக்கிட்டார். அந்த அடிப்படையிலே பரஸ்பரம் பிரிஞ்சிட்டோம்,''என்று சொல்லி அழத் துவங்கினாள். அவர், தன் மனைவியை தேற்றியதுடன், அவள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்...

''ஒரு ஆண்டு, நாங்க தனியா வாழ்ந்தோம்; மகன் என்னோட தான் இருந்தான். அந்த ஒரு ஆண்டும், காலையில் எழுந்து ஸ்கூல் கிளம்பி, சாயங்காலம் அவசர அவசரமாக வந்து, அவனை கூட்டிக்கிட்டு வந்து டியூசன்லே விட்டு, ரெண்டு வேளை வீட்டுச் சாப்பாடு, ஒருவேளை ஓட்டல் சாப்பாடுன்னு ஓட்டியும், என்னால அவனுக்கு ஈடு கொடுக்க முடியலே. அடுத்த ஆண்டு, அவனை ஒரு பிரைவேட் ஹாஸ்டல்லே தங்க வெச்சேன்.

இவங்க தன்னோட வேலை பார்த்த, மனைவியை இழந்த ஒருத்தரை திருமணம் செஞ்சிக்கிட்டாங்க; அதை திருமணங்கறதை விடவும், 'லிவிங் டுகெதர்'ன்னு சொல்லலாம். அவரோட ரெண்டு குழந்தைகளும் வெளியூர்ல பாட்டி வீட்டிலே தங்கி படிச்சதாலே, இவங்க வாழ்க்கை பிரச்னை இல்லாம போச்சு.''
''நீங்க மட்டும் உங்க மகனோட இருந்தீங்களா?'' என்று கேட்டான் தயாநிதி.
''இல்லே. அப்படியிருந்தா கூட நல்லாயிருந்திருக்குமே...''
''பின்னே...''

''என் மகனுக்கு பாடம் சொல்லித் தந்த டீச்சர் மேலே காதல் ஏற்பட்டது. மகனோட எதிர்காலத்தை உத்தேசித்து, அவளை, 'அவாய்ட்' செய்ய பார்த்தேன், முடியலே. இவ ஒரு நிபந்தனை விதிச்ச மாதிரி அவளும் ஒரு நிபந்தனை விதிச்சா. மகனை விட்டுட்டு வரணும்ன்னு...'' என, முடிக்காமல் சில நிமிடம் அவர் அமைதி காக்க, அவனுள் படபடப்பு கூடியது.

''வேறு வழியில்லாம ஒத்துக்கிட்டேன். எப்படி அவனை விட்டுட்டு போறதுங்கற கலக்கம் இருந்தாலும், அவ மேல் இருந்த ஆர்வத்தால், ஒரு நாள் ஹாஸ்டல்லே வந்து மகனைப் பார்த்துட்டு, இரண்டு ஆண்டுகள் மெடிக்கல் லீவு போட்டுட்டு, அவளை அழைச்சிக்கிட்டு ஊரை விட்டே போய்ட்டேன்.''

சொல்லி முடித்து, கலங்கிய கண்களை துடைத்துக் கொள்ள, அங்கேயொரு அமானுஷ்ய அமைதி குடி கொண்டது. தயாநிதிக்கு அனைத்தும் புரிபட, எழுந்து நின்றான். கதவோரம் நின்றிருந்த சின்னைய்யா, நிலைமையை சமாளிக்கும் விதமாக, ''உங்க ரெண்டு பேருடைய ரெண்டாவது திருமண வாழ்வு நல்லா இருந்ததா?''என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெண்மணி, ''தப்பு செய்துட்டோம். இதை விட பெட்டரா இருக்கும்ன்னு நினைச்சு, இதைவிட மோசமானதிலே மாட்டிக்கிட்டோம். இவரை கல்யாணம் செய்து, ரெண்டு புள்ளைங்களை பெத்துகிட்ட அந்த டீச்சர், இவரோட பணத்தையும் அமுக்கிகிட்டு, இவரையும் கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டா. புள்ளைங்களையும் இவர் கிட்ட ஒட்டவிடலே.

நான் நம்பி போனவரு, என்னை கொஞ்ச நாள் கொஞ்சினாரு. அப்புறம் வேலைக்காரியா நடத்தினாரு. போதும், இந்த நரக வாழ்க்கைன்னு நினைச்சு வேதனைப்பட்டு இருந்த போது, ஒருநாள், கபாலீஸ்வரர் கோவிலில் ரெண்டு பேரும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுச்சு. அது ஆண்டவனோட அனுக்கிரகம்ன்னுதான் சொல்லணும். ரெண்டு பேரும் பழசை மறந்துட்டு, ஒண்ணா சேர்ந்து வாழ முடிவு செஞ்சு, அங்கிருந்து புறப்பட்டு வந்துட்டோம்,'' என்றாள்.

''உங்களை யாரும் தடுக்கலயா... தேடி வரலயா?''
''இல்ல... நாங்க போனா போதும்ன்னு நினைச்சுட்டிருந்தவங்க, எங்கள எப்படி தடுப்பாங்க. ரெண்டு பேரும் கிழக்கு தாம்பரத்திலே, வாடகை வீடு பிடிச்சி வாழ்ந்துகிட்டிருக்கோம். எங்களுக்கு தேவையான பணம், பென்ஷன் மூலம் வருது. ஆனா...''

அவள் முடிக்கும் முன், குறுக்கிட்ட தயாநிதி, ''இப்ப உங்களுக்கு என்ன வேணும்,'' என்று கேட்டான்.
''கடைசி காலத்திலே தனியா இருக்க முடியல, தனிமை வாட்டுது. ஒரு ஹோம்ல தங்கினா... நாலு பேரோட நல்லது கெட்டதுல பகிர்ந்துக்க முடியும். மேலும், நாங்க தேடிக்கிட்ட பிரச்னைகள் மூலம், பாதிப்பு வராம பாதுகாப்பா இருக்க முடியும்ன்னு நினைக்கிறோம். எங்களுக்கு தங்க இங்கே இடம் கிடைக்குமா?''
அவர்கள் பேசி முடித்த பின், மீண்டும் அங்கே அமைதி குடிகொண்டது.

அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதை, அவர்களை விடவும் அதிகமாக எதிர்பார்த்தார் சின்னைய்யா.''உங்களோட கதை இப்படி இருக்கும்ன்னு நான் நினைக்கவேயில்லை. உங்கள விட வயசுல நான் சின்னவன். இது சரியா, தவறாங்கறதை விடவும், பொதுவா சில விஷயங்களை சொல்லாமல் இருக்க முடியல. கணவன் - மனைவிங்கற உறவு ஈடு இணையற்ற ஒன்று. அந்த வட்டத்திற்குள் வரும் ஆணும், பெண்ணும் அவங்க அவங்க பொறுப்பை உணர்ந்து செயல்படணும்.

நம்மை நம்பி, தன் சொந்த பந்தங்களை உதறிட்டு வந்திருக்கா... அவளை கஷ்டப்படுத்தாம, கண்ணீர் சிந்த விடாம காப்பாத்தணும்ன்னு கணவனும், 20 ஆண்டுகள் தன் குடும்பத்தாரோட, அந்த சூழலில் வாழ பழகிட்டு கணவன் வீட்டுக்கு வந்திருக்கோம், அங்கே இருந்த மாதிரி, இங்க எதிர்பார்க்காம, இந்த சூழலுக்கேற்ப நாம மாறிக்கணும். புகுந்த வீட்டு மனிதர்களை புரிஞ்சிகிட்டு, அவர்களை அரவணைச்சு வாழ பழகி மதிப்போடு, மரியாதையையும் பெறணும்ன்னு மனைவி நினைக்கணும்.

''இப்படி அவுங்கவுங்க பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்ந்து வாழ பழகிட்டா, அவங்க ரெண்டு பேருக்கும் இடையே பிரச்னை இருக்காது. அவங்களாலே மத்தவங்களுக்கும் பிரச்னை இருக்காது. இப்போது, அந்த மாதிரி யாரும் நினைக்கறதுமில்லே, நடக்கறதுமில்லே. அதனாலே தேவையற்ற பிரச்னைகள் உருவாகி, எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது.

''மறுமணம் தப்பில்லே; வாழ்க்கை துணையை பறி கொடுத்துட்ட பின், அதுபற்றி சிந்திக்கணும். அதைத் தாண்டி மனசுக்குப் பிடிக்கலன்னா விலகி போறதும் குற்றமில்லே. ஆனா, கணவன் - மனைவி ரெண்டு பேருமா இருக்கிற வரைக்கும் தான், எந்த முடிவையும் எடுக்கலாம். குழந்தைப் பெத்துக்கிட்டப் பின், மறுமணம் பற்றி நினைக்கறது மகா பாவம்.

பிரிஞ்சு போய் வேற கல்யாணம் செய்துக்கிறதைக் காட்டிலும், ஒருத்தருக்கொருத்தர் கொஞ்ச காலம் விலகி இருந்து, வாழ்க்கையின் தாத்பர்யத்தை புரிஞ்சுகிட்டு, மறுபடியும் சேர்ந்து வாழலாம். நம்மோட சுகத்தை விட, குழந்தையின் நலன் முக்கியம்ன்னு நினச்சா எதையும் விட்டுக் கொடுக்க முடியும். இப்படி மனசுக்கு கடிவாளம் போடும் வழிகளை விட்டுட்டு, மறுமணங்கற ஒரு பந்தத்தை ஏற்படுத்திக்கிடறதாலே, குழந்தைங்கதான் பாதிப்புக்குள்ளாகும்.

''உங்க மனசுல இருக்கிறதை பகிர்ந்துக்க யாருமில்லேன்னு சொன்னீங்களே... அன்னைக்கு உங்க குழந்தைய அம்போன்னு விட்டுட்டு வந்தீங்களே... அது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். உங்க ரெண்டு பேருக்கும் பிறந்த அந்த குழந்தைக்கு, உங்களை விட்டா யாரைத் தெரியும்... ஏற்கனவே, அம்மா பிரிஞ்சுப் போயிட்டாங்க; இப்போ அப்பாவும் வரலேயேன்னு எப்படியெல்லாம் அந்த குழந்தை அழுது களைச்சிருக்கும். ஏன் உங்க குழந்தைய இத்தனை கஷ்டப்படுத்தினீங்க... உங்களுக்கு பிள்ளையா பிறந்ததாலேயா?''
அவன் கேட்க, அவர்கள் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தனர்.

தொடரும்..................




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 11:46 am

''அது கிடக்கட்டும். அதுக்கு பின், அந்த பையனைப் போய் பார்த்தீங்களா?''
''நாலு ஆண்டுகளுக்குப் பின், அவன் நினைவு வாட்டியது; போய் பார்த்தேன். அந்த ஹாஸ்டல்லே அவன் இல்லே. அங்கே வேலை பார்த்த ஒருத்தர், அங்கிருந்து போகும்போது அழைச்சிட்டுப் போனதா சொன்னாங்க. அவுங்க இருக்கிற இடமும் தெரியாதுன்னுட்டாங்க.''

''அப்பறம்.''
''அவனை மறக்க முடியாம தவிச்சேன்; அதன் பின், அவன் செத்துட்டதா நினைக்க ஆரம்பிச்சேன்.''
அவர் சொல்ல, அவன் மட்டுமல்ல சின்னைய்யாவும் திடுக்கிட்டனர்.

''ஏன் அப்படி?''
''அப்படி நினைக்காம போயிருந்தா... அவன் நினைப்பிலே நானும் செத்திருப்பேன்.''
அவர் சொல்லும் போது, அந்த பெண்மணி குறுக்கிட்டாள்...
''பாவி மனுசா நீ இப்படி செய்வேன்னு தெரிஞ்சிருந்தா... உன்கிட்டே நான் புள்ளய ஒப்படைச்சிருக்க மாட்டேனே...''

அந்த பெண்மணியின் பேச்சு, தயாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. காட்சியின் உச்சக்கட்டத்தை சின்னைய்யா கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
''நிறுத்துங்க. போதும், எழுந்து போங்க.''
அவனிடமிருந்து அப்படிப்பட்ட பேச்சை எதிர்பார்த்திராத, அவர்கள் முகம் மாறியது.
''தம்பி எங்களுக்கு இடம் தர மாட்டீங்களா?''

''இங்கே நாற்பது பேரு தங்கியிருக்காங்க. இவங்க எல்லாரும் உங்கமாதிரி மறுமணத்துக்கு ஆசைப்பட்ட பொறுப்பில்லாத பெற்றோரால் கைவிடப்பட்டவங்க. இவங்க எல்லாரும் படிப்பதுடன், பகுதி நேரமா வேலை பார்க்கிறாங்க. எல்லாரும் உயர்ந்த லட்சியத்தோட இருக்கிறாங்க. ரெண்டு பேர் ஐ.ஏ.எஸ்., படிச்சுட்டு, வெளிமாநிலத்திலே வேலையில் இருக்காங்க. இவங்களோட லட்சியம் என்ன தெரியுமா? மறுமண ஆசையில் கைவிடப்படற சிறார்களை ஒன்று திரட்டி அரவணைக்கிறதும், அப்படிப்பட்டதொரு தவறுக்கு எதிரா போராடறதும் தான்.

''அப்படிப்பட்டவங்களுக்கு மட்டும் தான் இந்த இல்லத்தில் இடம்ன்னு சட்ட வரைவே உருவாக்கப்பட்டிருக்கு. இதை நான் உருவாக்கலே, இந்த இல்லத்தை நிறுவிய சோமசுந்தரம் அய்யா உருவாக்கினாங்க. யார் யாரோ பெத்த பிள்ளைங்களுக்கு, தன்னை அர்ப்பணிச்சவர் வாழ்ந்த இடம் இது. இங்கே பொறுப்பு இல்லாத உங்களைப் போன்றவங்க தங்க முடியாது.''

அவனது ஆவேச பேச்சு, அவர்களை பயம் கொள்ள செய்தது.
''அப்ப நாங்க போகலாமா?''
அப்பாவியாய், அந்த பெண்மணி கேட்க, சின்னைய்யா வேகமா வந்து, அவனை இழுத்துக் கொண்டு அலுவலகத்தின் உள் அறைக்கு அழைத்துச் சென்றார்.

''தம்பி... அவுங்க...''
''தெரியும் சின்னைய்யா. தெரிய வைக்கவும் தெளிவுபடுத்தணும்ன்னுதானே, இந்த ஏற்பாட்டை செஞ்சிருக்கீங்க.''

''நான் ஏற்பாடு செய்யல தம்பி, அவுங்க ரெண்டு பேரையும் பார்க்க பாவமா இருந்திச்சு. அந்த அடிப்படையிலே தான், உங்ககிட்டே கூட்டிக்கிட்டு வந்தேன். ஆண்டவன் அனுக்கிரகம் உங்களையெல்லாம் ஒண்ணு சேர்த்திருக்கு. ஆனா, மகனை அம்போன்னு விட்டுட்டு வந்ததை ஒத்துக்காம, அவன் செத்துட்டான்னு நினைச்சு வாழறதா சொன்னது தான் ஏத்துக்க முடியலே.''

''சமாதானம் செஞ்சுக்காம போனா மனசுகிட்டேயிருந்து தப்பிக்க முடியாதே சின்னைய்யா. அதனாலே, மகனை சாகடிச்சுட்டு, அவுங்க வாழ்ந்துகிட்டிருக்காங்க.''
''தம்பி, நடந்ததை விட்டுட்டு நடக்க வேண்டியதை நினைங்க. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடலே..., இருக்கிற காலமாவது மூணு பேரும் ஒண்ணா இருந்துட்டுப் போகலாமே...''
அவரது பேச்சுக்கு சற்று நேரம் வரை பதில் கூறாமல் இருந்தவன், பின் பேசினான்...

''பெத்த பிள்ளையையே பாரமா நினைச்சு அம்போன்னு விட்டுட்டு போனாங்க. ஆனா, யாரோ எவரோ நீங்க நெஞ்சிலே ஈரத்தோட என் கையை பிடிச்சி இங்கே அழைச்சிட்டு வந்தீங்க. நீங்க போதும் எனக்கு. ஆனாலும், அவங்களை மாதிரி, நானும் கடமையை மறந்தவனா இருக்க விரும்பலே. அவங்கள நம்ம சாம்பசிவம் அய்யா நடத்துற ஹாஸ்டல்லே சேர்த்துடுங்க, அடிக்கடி போய் பாருங்க. ஆனா, அவுங்க மகன் செத்ததாகவே இருக்கட்டும்.''

''தம்பி, ஒரு வேண்டுகோள்.''
''மறுபரிசீலனை செய்யக் கூடாதான்னு கேட்கப் போறீங்க அதுதானே...''
''ஆமாம் கடைசி காலத்திலே, தப்பு செய்திட்டோம்ன்னு, அவுங்களை மாதிரி நீங்களும் வருத்தப்படக் கூடாதில்லையா...''

''சான்சே இல்லே, எப்போ நான் இல்லத்துக்கு வந்தேனோ... அப்பவே நான் தாய், தந்தை இல்லாதவனாயிட்டேன். இப்போ என்னுடைய உறவு நீங்க, சோமசுந்தரம் அய்யா, இன்னும் என்னைப் போலவே இந்த இல்லத்திலே இருக்கிறவங்க, இதைத் தாண்டினா இந்த தேசம். என்னை காப்பாத்தி வளர்த்தது போல, என்னை மாதிரி பெற்றோரால் கைவிடப்படற பல ஆயிரம் பிள்ளைகளுக்கு ஆதரவாகவும், ஆதர்சமாகவும் இருக்குதே இந்த தேசம்... இதனோட மகனா இருக்கிறதும், என்னை மாதிரி இருக்கிறவங்களுக்கு என்னால் இயன்றதை செய்யறதும் தான் என்னோட ஆசை, லட்சியம். இதுக்கு என்னை அர்ப்பணிச்சிக்கிறதையே, என் வாழ்க்கைப் பணியா நான் தீர்மானம் செஞ்சுட்டேன்.''
உணர்ச்சிக் கொப்பளிக்க பேசி முடித்தவனின் குரல் உடைந்து அழுகையாய் வெளிப்பட, அவனை அணைத்து ஆற்றுப்படுத்தினார் சின்னைய்யா.

'பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு...' என்ற பழமொழிக்கு மாறாக பெத்தமனம் கல்லு, பிள்ளை மனம் பித்து என்பதாய் நடந்தேறும் காட்சிகளை எண்ணிப் பார்த்த சின்னைய்யாவுக்குள், மறுமண ஆசையால் பெற்ற பிள்ளைகளை அனாதைகளாக்கி விட்டுச் செல்லும் பெற்றோரின் அடாவடி செயலை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு சரியான பாடம் புகட்டும் விதமாக, தண்டனை தர இந்த அரசாங்கம் முன் வராதா என்ற ஆதங்கம் எழுந்தது.

சற்று நேரத்திற்குப் பின், அவன் இயல்பு நிலைக்கு வர, சின்னையாவும் தன் எண்ணங்களிலிருந்து மீண்டு, இல்லத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த தியாகராஜன் - சாவித்திரி தம்பதியினரை அழைக்க வேகமாகச் சென்றார்.

நெடுஞ்செழியன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 11:47 am

ரொம்ப அருமையான கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Feb 02, 2015 12:23 pm

நல்ல இருந்தது அம்மா புன்னகை



பெற்ற மனம்! Mபெற்ற மனம்! Aபெற்ற மனம்! Dபெற்ற மனம்! Hபெற்ற மனம்! U



பெற்ற மனம்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக