Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல மனம் வேண்டும்!
5 posters
Page 1 of 1
நல்ல மனம் வேண்டும்!
ஓருவன் செய்யும் காரியங்களுக்கு அவனது மனமே காரணமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு மனமே அடிப்படை. தண்ணீரைப் போல எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும் தன்மைப் படைத்தது மனம். நமது எண்ணங்கள் தான் செயல்பாடுகளின் அஸ்திவாரம். நம் மூளையில் தோன்றும் எண்ணங்களின் தொகுப்பைதான் நாம் மனம் என்கிறோம். மனத்தின் கட்டளைப்படியே கண் முதலான ஐம்புலன்களும், கை, கால்களும் தத்தம் கடமைகளைச் செய்கின்றன.
அதாவது மூளை கருவி என்றால் மனம் அதன் இயக்கம் ஆகும். பொறிகளுக்கு தனியே அறிவுமில்லை, ஆற்றலும் இல்லை, பொருளுமில்லை. பொறிகளைப் பொருள்வழி இயக்க வல்லது மனமே. நல்ல நடத்தை என்பது மனதுக்கு அலங்காரம் மட்டுமல்ல, நல்ல மனிதனுக்கு அடையாளம். அன்பையும், பொறுமையையும் போற்றி வந்த மனம் இன்று வெறுப்பையும் கொடுமையையும் கொட்டும் இடமாகி விட்டது.
மனிதனை மனிதானாக்க, மனிதரிடமிருக்கும் மிருகத்தனத்தைப் போக்க, மனிதனை தேவனாக்க, எண்ணத்திலுள்ள இருளைப் போக்க ஒருவனுக்கு மனமே அடியிட்டுக் கொடுக்கிறது. மனிதன் செய்யும் எல்லா காரியங்களுக்கும் அவனது மனமே வித்து அவன் படும் இன்பமும், துன்பமும் அதன் விளைவுகள். நல்ல எண்ணம், நன்மைப் பயக்கும், உள்ளத்தை உயர்த்தும், அமைதி நல்கும். உடம்பை வளர்க்க உணவு, உயிரை வளர்க்க ஆன்றோர்களின் அறிவுரை, உள்ளத்தை உயர்த்த நல்ல எண்ணங்கள் தேவை. எளிமை வேண்டும் சொல்லில் சத்தியம் வேண்டும். செய்கையில் தூய்மை வேண்டும். நீரோட்டம் போல மனித மனம், தேரோட்டம் போல வாழ்க்கை என்பது. மேடு பள்ளம் என்பது வாழ்க்கையின் நியதி.
நச்சுப் பொய்கையிலே யட்சனுடைய வினாக்களுக்கு விடையளித்து கொண்டு வந்த தருமபுத்திரன் சுகம் என்பது என்ன என்ற கேள்விக்கு நல்ல நடத்தையே சுகம் என்றார். நல்ல நடத்தையை நல்குவது நல்ல மனம். கல்மனம் கரைந்து நன்மனம் பெற்றோர் மனதை இறைவன் கோயிலாகக் கொண்டு வீற்றிருப்பான். சுயநலமிகுந்து தீய குணங்களின் உறைவிடமாக மனது இருக்கக் கூடாது. மனதில் தீய எண்ணங்கள் குடி கொண்டால், அது காடாகி விடும், அங்கு விலங்குகள் நடமாடும்.
சிந்தை நலமாக இருந்தால் சொல் நலமாக இருக்கும் சொல் நலமாக இருந்தால் செயல் நலமாக இருக்கும். செயல் நலமாக இருந்தால் மனம் அமைதியாக இருக்கும். நாம் நம்மை அறிந்து வாழ்க்கையில் போராட மனம் உதவுகிறது. மனித இனம் சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தது பகுத்தறிவைக் கொண்டு மிக நுணுக்கமாக ஆராயும் திறனும் கொண்ட.து. பொறுமையும், நிதானமும் கைவரப் பெற்றால் மனிதன் புனிதனாக உயருகிறான். அருளே உருவம் கொண்டவர்களால் சங்கிலி போன்ற வாழ்க்கை முறையின் கண்ணியாக அவர்களின் நன்னடத்தை அமைகிறது.
மனித மனம் விசித்திரமானது அதுவே நரகத்தையும் ஏற்படுத்தும், சொர்க்கத்தையும் படைக்கும் ஆற்றல் வாய்ந்தது. மனதுக்கு அணிகலனாக இருப்பது தூயசிந்தனை. அந்த உள்ளத்தில் நல்ல எண்ணம் எனும் பயிர் விளைந்தால் அது மலர் மணம் பரப்பு பொழிலாகி விடுகிறது. அன்பு நலன், அடுத்தவர் நலம் பெற வேண்டும் என்ற கருணை மனம் வேண்டும்.
மனம் தெளிவாக இருந்தால் தான் புதிய புதிய சிந்தனைகள் தோன்றி வேரூன்ற வழி வகுக்கும். தம் சிந்தனையை பயன்படுத்தி அடுத்தவருக்கு தீமை தராமல் பிறருக்கு பயன்பட வாழ்வதே மனிதனின் கடமை.
அரசர், ஆண்டி, உயர் பதவியில் இருப்பவர், உதிரம் சிந்தி உழைப்பவர் வரை மனதை அது போன போக்கில் போக விடாமல், தீய காரியகளுக்கு போவதைத் தடுத்து நல்ல காரியங்களுக்கு ஈடுபட செய்வது அறிவு. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது முதுமொழி. நாம் செய்யும் தவறுகளை அறியும் ஒரே சாட்சி நம் மனசாட்சி. அதனிடமிருந்து நாம் தப்ப முடியாது. இன்று மனித மனங்கள் காற்றில் பறக்கும் கற்பனை குதிரைகளாகி விட்டன.
ஆடம்பரமாக வாழ்வது தான் வாழ்க்கை என்ற வகையில் மக்கள் மனங்கள் மாறி வருவதால் கொலை, கொள்ளை, வன்முறை அதிகரித்து வருகின்றன. இந்த உலகில், சத்தியம், நீதி, நேர்மை, நியாயம், உண்மை இவைகளுக்கு எல்லாம் தனி இடம் உண்டு. நாம் நம் சுய தேவைகளுக்காக விதிமுறைகளை மீறி மனம் மாறும் போது தான் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மனிதன் உருவத்தில் மனிதனாக இருந்தால் போதாது அவன் உள்ளத்தில் நேர்மை மணம் கமழுமானால் அவன் முழுமைப் பெற்ற மனிதன் ஆகிறான். மனம் உள்ளவன் மனிதன். மனம் ஒரு பூக்கூடை, அதில் நச்சரவம் மறைந்திருக்கலாகாது. மலர் வண்ணத்தால் மணத்தால் பலருக்கு பயனளிக்கிறது அதுபோல மனிதன் மனதாலும், செயலாலும் மற்றவர்களுக்கு நன்மை அளிக்க வேண்டும்.
நன்றி: இராதாகிருஷ்ணன், சென்னை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: நல்ல மனம் வேண்டும்!
நல்ல பதிவு அன்பரே. எதற்கும் மனம் ( இருக்க ) வேண்டும்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நல்ல மனம் வேண்டும்!
அருமையான பகிர்வு செந்தில், நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்ல மனம் வேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1118092P.S.T.Rajan wrote:நல்ல பதிவு அன்பரே. எதற்கும் மனம் ( இருக்க ) வேண்டும்.
மனம் இல்லையேல் மானுடன் இல்லை, இருக்கும் அந்த மனம், நல்ல மனமாய் இருக்க வேண்டும்.. கருத்துக்கு நன்றி ஐயா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: நல்ல மனம் வேண்டும்!
''உடம்பை வளர்க்க உணவு,
உயிரை வளர்க்க ஆன்றோர்களின் அறிவுரை,
உள்ளத்தை உயர்த்த நல்ல எண்ணங்கள்''
அருமையான பதிவு.
உயிரை வளர்க்க ஆன்றோர்களின் அறிவுரை,
உள்ளத்தை உயர்த்த நல்ல எண்ணங்கள்''
அருமையான பதிவு.
Re: நல்ல மனம் வேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1118309அகிலன் wrote:''உடம்பை வளர்க்க உணவு,
உயிரை வளர்க்க ஆன்றோர்களின் அறிவுரை,
உள்ளத்தை உயர்த்த நல்ல எண்ணங்கள்''
அருமையான பதிவு.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» நல்ல மனம் தீய மனம்
» இணைய கலாட்டா
» இவரைப்போன்ற நல்ல மனம் அனைவருக்கும் வரவேண்டும் இந்த வீடியோவை பாருங்கள்
» இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்!
» நல்ல மனம் தீய மனம்
» இணைய கலாட்டா
» இவரைப்போன்ற நல்ல மனம் அனைவருக்கும் வரவேண்டும் இந்த வீடியோவை பாருங்கள்
» இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|