ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி! by கிருஷ்ணாம்மா !

+7
mbalasaravanan
பாலாஜி
மாணிக்கம் நடேசன்
அகிலன்
ayyasamy ram
T.N.Balasubramanian
krishnaamma
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Empty நன்றி! by கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Mon Jan 26, 2015 8:07 pm

First topic message reminder :

நீங்கள் அனைவரும் கொடுத்த உற்சாகத்தில் இதோ மற்றும் ஒன்று எழுதிவிட்டேன் ....படித்து கருத்து சொல்லுங்கள் Guest புன்னகை

தூங்கிக்கொண்டிருந்த ஊர்மிளாவிற்கு இடுப்பை வலிப்பது போல இருந்தது, மணி பார்த்தால் இரவு 2. சரி விடியும் வரை பொறுக்கலாம் என்று எண்ணியவாறே படுக்கை இல் கிடந்தாள். வீட்டிலிருந்து 5 கிலோமிட்டர் தான் ஹாஸ்பிடல்..............போவது ஒன்றும் சிரமம் இல்லை. பிள்ளைப்பேறுக்காக   இந்தியா போகாமல் கணவனும் மனைவியும் சௌதிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டார்கள்.  

இங்கு உதவிக்கு யாரும் இல்லை என்றாலும் இந்தியாவிலும் இவர்களுக்கு இதே கதி தான். காதலித்து மணம் புரிந்தாலே இப்படித்தானே? என்று எண்ணி பெருமுச்சு ஒன்றை விட்டாள். வலி அதிகரிப்பது போல இருந்தது. தாள முடியாமல் 'அம்மா' என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டாள் போல இருக்கிறது. பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆனந்த், விழித்துக்கொண்டான்.

"என்ன ஆச்சு ஊர்மி?" என்றான்.

"வலிக்குதுங்க, என்றாலும் இந்த நேரத்தில் வேண்டாம், விடியட்டும் பார்க்கலாம்"....என்று சொல்வதற்குள்ளே மீண்டும் 'பளீர்' என்று ஒரு வலி.

" இல்லை இல்லை ..உன் முகம் சரியாக இல்லை, இந்த ஊரில் என்ன பயம்? வா கிளம்பலாம்" என்று சொல்லி, முகம் கழுவி, ஏற்கனவே தயாராய் வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு, இவளையும் கைத்தாங்கலாய் பிடித்துக்கொண்டு காரை நோக்கி சென்றான்.  

அவளை பத்திரமாய் உட்காரவைத்து விட்டு, தானும் ஏறி காரை ஸ்டார்ட் செய்தான். அந்த இருளில் வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டு கார் மெயின் ரோடு இல் சீறிப்பாய்ந்தது. ஏசி இலும், வலியால் வியர்த்து இருந்த மனைவி இன் பக்கம் திரும்பி, " கொஞ்சம் பொறுத்துக்கோ, 5 கிலோ மீட்டர் தான்" என்றான்.

அவளும் கஷ்டத்துடன் புன்னகைக்க முயன்றாள். அந்த விடியற்காலை இல் நிறைய வண்டிகள் கடப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டர்கள். இவ்வளவு காலை இல் என்ன இப்படி என்று. 'உம்ரா' வுக்கு போகிறவர்களுடைய வண்டிகள் இந்த ரோடு இல் செல்வது வழக்கம் தான் என்றாலும், 'இத்தனை காலை இல்' என்று கொஞ்சம் நெருடலாகவே எண்ணினான் ஆனந்த்.

ஒரு 2 கிலோமீட்டர் கூட தாண்டி இருக்க மாட்டார்கள், ஒரு பெரிய குலுக்கலுடன் வண்டி  நின்றுவிட்டது. " அடாடா.... என்ன அச்சு? " என்று சொல்லிக்கொண்டே, ஸ்டார்ட் செய்தான், ஸ்டார்ட் ஆகலை...............கொஞ்சம் பதட்டத்துடன், மீண்டும் ஸ்டார்ட் செய்து பார்த்தான், ஸ்டார்ட் ஆகவில்லை.

அதற்குள் ஊர்மிளா கேட்டாள், " என்னங்க ஆச்சு? " என்று...." தெரியலை, கொஞ்சம் இரு பார்க்கிறேன்".என்று சொல்லி , ஹசாட் போட்டுவிட்டு, வண்டியை விட்டு கீழே இறங்கி பானட்டை திறந்து பார்த்தான்....இவனுக்கு ஒன்றும் பிடிபடலை.

இப்போது என்ன செய்வது? ஊர்மிக்கோ வலி அதிகமாகி விட்டது, தாங்க முடியவில்லை அவளால். அப்போது, சாலைகளில் சென்றுகொண்டிருந்த வண்டிகளில் ஒன்று இவர்கள் வண்டியைத்தாண்டி ஒரு 10 அடி சென்று நின்றது. அதிலிருந்து வெள்ளை நிற 'தோப்' அணிந்த சில இளைஞர்கள் இறங்கினார்கள்; இவர்கள் வண்டியை நோக்கி வந்தார்கள்.

அதைப்பார்த்ததும் ஆனந்த் அவர்களை நெருங்கினான், விவரத்தை அவர்களிடம் விளக்கினான், அவர்கள் சொன்ன விஷயத்தை கேட்டதும், ஊர்மிளாவுக்கு தலை சுற்றியது; அவ்வளவுதான் தான், தன்கணவன் மற்றும் தன் குழந்தை எல்லாம் இன்றோடு முடிந்தோம் என்று நினைத்து மனம் நடுங்கினாள்.

அவர்கள் சொன்னது இது தான், "மன்னர் அப்துல்லா மறைந்துவிட்டார்" ...நாங்கள் என்று
அவர்கள் மேலே சொன்னது எதுவுமே கேட்கலை...இந்த செய்தியே காதுகளில் ரீங்காரம் இட்டது, நம் நாட்டில் தலைவர்கள் மறைவின் போது, மற்றும் கலவர நேரங்களில் நடக்கும் அட்டுழியங்களை அவள் பத்திரிகைகளில் படித்தும் டிவி இல் பார்த்தும் இருக்கிறாள் ........அப்படி ஏதாவது நடந்தால் ..........????? காருடன் தன்னையும் கணவரையும் கொளுத்திவிடுவார்களோ ?............குஜராத் சம்பவம் போல கத்தியால் வயிற்றை கிழித்து நடு ரோட்டில் போட்டுவிடுவார்களோ?.............என்றெல்லாம் எண்ணி மிகவும் பயந்து போனாள்.

செய்வது அறியாது திகைத்தாள்.............இறங்கியவர்கள் தங்கள் காரை நோக்கி வருவதையும் பார்த்தாள். கணவரும் அவர்களுடன் வந்தாலும் இவளுக்கு பயத்தில் எதுவுமே மனதில் மூளை இல் உறைக்கவே இல்லை...........வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அருகில் வந்த ஆனந்த், " ஊர்மி, இறங்கு"........என்றான்.

இவள் உடனே " மாட்டேன்....பயமாய் இருக்கு..என்று திக்கியவாறே சொன்னாள்."

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை ............" என்ன ஆச்சு உனக்கு?  நம் வண்டி நின்று விட்டது, இவர்கள் நம்மை ஹாஸ்பிடலில் கொண்டு விடுவதாக சொல்கிறார்கள்...இறங்குமா" என்றான்.

அவளுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ஒருவாறாக சுதாதரித்துக்கொண்டு ஏதோ கேட்க வாயை திறந்தாள், ஆனால் அதற்குள் ஒரு இளைஞன் அவர்கள் காரை அருகில் கொண்டு வந்து விடவே, பேசாமல் மெல்ல இறங்கி அதில் ஏறினாள். அவர்களே இவர்களின் பொருட்களை  கொண்டுவந்து அந்த வண்டி இல் வைத்து தந்தார்கள்.  

ஒருவன் மட்டும் காரை  எடுத்தான், மற்றவர்கள் அங்கேயே நின்றுகொண்டார்கள். வண்டி இல் போகும் போதும் ஆனந்த்தும் அந்த இளைஞனும் ஏதோ பேசிய படியே வந்தார்கள்...ஆனால் இவளால் தன் பிரமிப்பிலிருந்து விடுபட முடியலை. 2 நிமிடத்தில் ஹாஸ்பிடல் வந்து விட்டது. இவர்கள் பத்திரமாய் இறங்கியதும், தான் காரை 'பார்க்' செய்து விட்டு வருவதாக சொல்லி சென்றான் அந்த இளைஞன்.

இறங்கியதும் ஊர்மிளா அவனுக்கு கைகளை கூப்பியபடி நன்றி சொன்னாள், கண்களில் நீர் வழிய சரியாக பேசக் கூட முடியலை அவளால். அதற்கு அந்த இளைஞன், புன்னகைத்த வாறே  
"நோ ப்ரோப்ளேம், இன்ஷா அல்லா, எல்லாம் நல்லபடி நடக்கும், கவலை வேண்டாம்" என்றான் ஆங்கிலத்தில்.

இவள்,"உங்கள் பெயர்? "....என்றதும், Sarfaraz  ஸர்பராஸ் என்றான்.

ஊர்மிளா அட்மிட் ஆகும் வரை காத்திருந்து விடை பெற்றான்.

சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றேடுத்தாள் ஊர்மிளா. நர்ஸ் வந்து குழந்தை இன் பேர் கேட்டதும் ஏதோ சொல்ல வாய் எடுத்த கணவனை தடுத்து Sarfaraz என்றாள். நர்ஸ் சென்றதும், "என்ன ஊர்மி இது? எவ்வளவு நாள் நெட் எல்லாம் தேடி எடுத்த பேரை வெக்காமல்? " என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் ஆனந்த்.

"ஆமாங்க, தன்னுடைய அரசர், மாமன்னர் மரணத்துக்காக வழிபாடு நடத்த மக்கா போகும் அவர்கள், இடை இல் நமக்காக அதைக்கூட விட்டுக்கொடுத்து, உதவினார்கள் என்றல் அந்த மனித நேயத்துக்கு என்ன கைம்மாறு செய்வது என்று தெரியலை எனக்கு, அது தான் இப்படி செய்தேன். நான் ரொம்ப பயந்து போனேன், நாம் அனைவரும் அவ்வளவுதான் ...முடிந்தோம் .. என்று நினைத்தேன். எவ்வளவு பொறுப்பாக நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்தான் அந்த பையன்"...மேலும்  சொன்னாள் " Sarfaraz " என்றால் 'அரசன் ' என்று அர்த்தம், அதனால் தான் அவனுக்குள்ளாகவே அந்த 'காக்கும்' எண்ணம் இருந்திருக்கு .... என்று மனம்  நெகிழ்ந்து சொன்னாள்.

மேலும் தொடர்ந்தாள் " ஒரு காலத்தில் நம் இந்தியாவில், இந்திய மண்ணில் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வெளி நாட்டிலிருந்து வருவார்களாம். அந்த அளவு புனிதம் நிறைந்ததாக இருந்த நம் நாடு, இப்போது எப்படி ஆகிவிட்டது??? இன்று அந்த புனிதம் எங்கே போனது ?........அந்த புனிதம் கேள்விக்குறி ஆனது போல உணர்கிறேன்.....இந்த மண்ணில் பிள்ளை பெற்றதை நினைத்து ரொம்ப பெருமைப்படுகிறேன்" என்றாள்.

இது எதுவுமே தெரியாத Sarfaraz நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். தன்னுடைய நன்றியை தெரிவித்து விட்ட திருப்தி இல் ஊர்மிளாவும் கண் அயர்ந்தாள்.

கிருஷ்ணாம்மா புன்னகை


Last edited by krishnaamma on Tue Jan 27, 2015 8:34 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Empty Re: நன்றி! by கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Fri Jan 30, 2015 7:31 pm

ஜாஹீதாபானு wrote:கதை படிக்கும் போது கதாபாத்திரத்தோடு சேர்ந்து பயணிப்பது போல இருக்கு அருமைமா....

ஈகரையில் சிறுகதை போட்டியில் ஏன் கலந்து கொள்ளவில்லை...
மேற்கோள் செய்த பதிவு: 1117902

மிக்க நன்றி பானு புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
கவிதை போட்டி தானே வைத்தார்கள் பானு?.........மேலும் நான் சும்மா போனவாரத்திலிருந்து தானே எழுதறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Empty Re: நன்றி! by கிருஷ்ணாம்மா !

Post by M.M.SENTHIL Fri Jan 30, 2015 7:39 pm

நன்றி என்ற வார்த்தைக்கு வேறு நல்ல வார்த்தை இருக்குமா? இருக்கும் எனில் அது ஸர்பராஸ் என்ற பெயரையே வைத்துக் கொள்ளலாம்.

கதை நகர்ந்த விதம் மிக அருமை... கை தேர்ந்த எழுத்தாளர் தெரிகிறார்.. வாழ்த்துக்கள்....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Empty Re: நன்றி! by கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Fri Jan 30, 2015 8:04 pm

M.M.SENTHIL wrote:நன்றி என்ற வார்த்தைக்கு வேறு நல்ல வார்த்தை இருக்குமா? இருக்கும் எனில் அது ஸர்பராஸ் என்ற பெயரையே வைத்துக் கொள்ளலாம்.

கதை நகர்ந்த விதம் மிக அருமை... கை தேர்ந்த எழுத்தாளர் தெரிகிறார்.. வாழ்த்துக்கள்....
மேற்கோள் செய்த பதிவு: 1117923

உங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி செந்தில் புன்னகை.......................... நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 1571444738 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 1571444738 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Empty Re: நன்றி! by கிருஷ்ணாம்மா !

Post by மதுமிதா Sun Feb 01, 2015 1:00 am

அருமை அம்மா... ஏன் அம்மா நீங்கள் முன்னாடி எல்லாம் கதை எழுதவில்லை ????
இன்னும் மற்ற கதைகள் படிக்க போகிறேன் அம்மா....


நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Mநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Aநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Dநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Hநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 U



நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Empty Re: நன்றி! by கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Sun Feb 01, 2015 1:04 am

மதுமிதா wrote:அருமை அம்மா... ஏன் அம்மா நீங்கள் முன்னாடி எல்லாம் கதை எழுதவில்லை ????
இன்னும் மற்ற கதைகள் படிக்க போகிறேன் அம்மா....
மேற்கோள் செய்த பதிவு: 1118167

நன்றி மது....தெரியலை மது புன்னகை.................... ஒரு 'flow ' வில் தொடர்ந்து 5 எழுதினேன்.................இப்போ நேற்றும் இன்றும் ஒண்ணும் தோணலை புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Empty Re: நன்றி! by கிருஷ்ணாம்மா !

Post by மதுமிதா Sun Feb 01, 2015 1:12 am

krishnaamma wrote:
மதுமிதா wrote:அருமை அம்மா... ஏன் அம்மா நீங்கள் முன்னாடி எல்லாம் கதை எழுதவில்லை ????
இன்னும் மற்ற கதைகள் படிக்க போகிறேன் அம்மா....
மேற்கோள் செய்த பதிவு: 1118167

நன்றி மது....தெரியலை மது புன்னகை.................... ஒரு 'flow ' வில் தொடர்ந்து 5 எழுதினேன்.................இப்போ நேற்றும் இன்றும் ஒண்ணும் தோணலை புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1118168 அப்போ நாளைக்கு தொடர்ந்து எங்களுக்கு 10 கதை விருந்துகள் உண்டு சரியா? புன்னகை


நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Mநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Aநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Dநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Hநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 U



நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Empty Re: நன்றி! by கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Sun Feb 01, 2015 8:36 pm

மதுமிதா wrote:
krishnaamma wrote:
மதுமிதா wrote:அருமை அம்மா... ஏன் அம்மா நீங்கள் முன்னாடி எல்லாம் கதை எழுதவில்லை ????
இன்னும் மற்ற கதைகள் படிக்க போகிறேன் அம்மா....
மேற்கோள் செய்த பதிவு: 1118167

நன்றி மது....தெரியலை மது புன்னகை.................... ஒரு 'flow ' வில் தொடர்ந்து 5 எழுதினேன்.................இப்போ நேற்றும் இன்றும் ஒண்ணும் தோணலை புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1118168 அப்போ நாளைக்கு தொடர்ந்து எங்களுக்கு 10 கதை விருந்துகள் உண்டு சரியா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118173

ஹா...ஹா...ஹா....நான் எழுதியதை படித்துவிட்டு ஓடாமல் இருந்தால் சரி மது புன்னகை...............இன்றும் ஒன்று எழுதி இருக்கேன் பிடிக்கிறதா பாருங்கோ புன்னகை
.
.
.
நன்றி மது புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Empty Re: நன்றி! by கிருஷ்ணாம்மா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum