புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10 
90 Posts - 71%
heezulia
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10 
255 Posts - 75%
heezulia
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஈசுவரன்
ஈசுவரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 18/01/2015
http:// jaivabaieswaran.blogspot.com

Postஈசுவரன் Mon Jan 19, 2015 7:26 pm


கடந்த ஒருவருடமாக எனது உறவினர் மகனுக்காக..இரவு... பகல் என்று தீவிரமாக தமிழ் மேட்ரிமோனியல் பதிந்து வைத்து கொங்கு வேளாளர் சமூகத்தில் பதிந்துள்ள பெண்களின் விபரங்களை நான் இணையம் மற்றும் கொங்கு செய்தி மடலில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..இதுவரை எனது சகலன் மகனின் விபரத்தை 2337 முறை பெண்களின் பெற்றோரால் பார்க்கப்பட்டுள்ளது. நான் இதுவரை 753 பெண்களின் விபரங்களை மேட்ரி மோனியலில் பார்த்துள்ளேன். அதில் 57% சதமான பெண்கள் பொறியியல்(பி.ஈ & எம்.ஈ) பட்டதாரிகள், மென்பொருள் வல்லுனர்களாக வேலை பார்க்கின்றனர். 13% சதமான பெண்கள் எம்.பி.ஏ. படித்து வேலையில் இருப்பவர்கள்..முது நிலை பட்டதாரிகள் (எம்.ஏ, எம்.எஸ்.சி)11%, பி.ஏ, பி.காம் போன்றவர்கள் 9%, மருத்துவர்கள் 2% ஆக உள்ளனர். மீதியுள்ள படிப்புகளில் 8 % ஆக உள்ளனர்.

இந்த 753 பெண்களின் பெற்றோர்களுக்கும் மெயில் மூலம் செய்தியனுப்பியுள்ளேன். 80 பெண்களின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியும், 95 பெற்றோர்களிடம் போனிலும் பேசியுள்ளேன். திருப்பூரில் உள்ள சிலரிடம் ஜாதகத்தையும் கொடுத்துள்ளேன். ஒரு வருடம் ஆகியும் இன்னும் பெண் தேடிக்கொண்டுதான் உள்ளோம். இது ஏதோ எனக்குமட்டும் ஏற்படவில்லை. இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாகவே இருக்கிறது.. திருமணத்திற்கு ஆண்-பெண் இருந்தும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானபேர்கள் திருமணம் ஆகாமல் வயதாகிக்கொண்டே இருக்கின்றனர். பெற்றோர்களும் புரோக்கர் மூலமும், உறவினர்கள் மூலமும், இணைய தளம் மூலமும் தேடிக்கொண்டே உள்ளனர். ஏன் இந்த நிலை.. ஏன் அமையவில்லை….. இவர்கள் கேட்டுள்ள விபரப்படி மாப்பிள்ளை இல்லையா..
தங்களுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று பெண்கள் /பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் /மருமகன் வேண்டும் என்று மேட்ரிமோனியலில் எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை மாதிரிக்காக தந்துள்ளேன்..பாருங்கள்.
(1)WE ARE LOOKING FOR A GROOM WITH GOOD FAMILY BACKGROUND
(2)Good character, easy going ,active participant in all works involved.
(3)I expect my life partner to be Broad Minded, Understandable & Caring person with good habits.I want him to
be with me in all the situations of my life and as a motivational factor for me. I will also be the same for him.
(4)gud looking and talented in his job.caring.family loving.
(5)Good guy with clean habbits
(6)We are looking for groom from a decent family who values the relationship. He should be well settled, with clean habits, respect the elders. He should be very caring and take care of her very well. We are just not looking for a son-in-law but another son for our family. She will also resiprocate the same.
(7) gud looking and talented in his job.caring.family loving.We are looking for Australian PR or Citizen.
மேற்கூறியது போன்று பையன்கள் அமைந்தாலும் பெண் வீட்டில் மறுப்பதற்கு என்ன காரணம்..? . முதலில் பெண்ணின் நட்சரத்திற்கு ஏற்றபடி பையனின் நட்சத்திரம் பொருந்தவில்லை என்கிறார்கள்....
இரண்டாவதாக நட்சத்திரம் பொருந்தியிருந்தாலும் உங்கள் பையனுக்கு ராகு/கேது இரண்டிலும் எட்டிலும் இருக்கிறது. எங்க பெண்ணின் ஜாதகம் சுத்த ஜாதகம். அதனால் எங்கள் குடும்ப ஜோதிடர் ராகு-கேது உள்ள ஜாதகத்தை கையில் கூட தொடமாட்டார் என்கிறார்கள். உங்கள் பையனுக்கு இதே போல 1 & 7 மற்றும் 2 & 8 –ல் ராகு-கேது இருக்கிற பெண்னாகப்பாருங்கள் எனக்கூறுகிறார்கள்..
மூன்றாவதாக எங்கள் பெண்ணிற்கு செவ்வாய் தோசம் உள்ளது.. உங்கள் பையனுக்கு ஒத்துவராது நீங்கள் செவ்வாய் தோசம் இல்லாத பெண்னாக பாருங்கள் என்கிறார்கள்.. எப்படியோ இணையத்தில் தேடி.. நட்சத்திரப்பொருத்தம், ராகு-கேது உள்ள பெண் ஜாதகமாகத்தேடி சம்மதமா .. எனக்கேட்டால்... ஹீ..ஹீ.. ராகு/கேது சரியாகத்தான் இருக்கிறார்கள்.. ஆனால் பாருங்கள்.!.உங்கள் பையனுடைய நட்சத்திரம் ராட்சஷ கணத்தை சேர்ந்தது.. எங்கள் பெண்ணின் நட்சத்திரம் தேவகணத்தைச்சேர்ந்தது... ராட்சஷ கணத்தைச்சேர்ந்த பையனுக்கு தேவதை கணம் நட்சத்திரம் பொருந்திவருமா.. நீங்களே சொல்லுங்கள்...என்கிறார்கள்.. ஏனுங்க ராகு/கேது என்ற இரண்டு கிரகங்களே இல்லை... இல்லாத கிரகங்களை வைத்துக்கொண்டு.. இருக்கின்ற
பையன்களுக்கு பெண் இல்லையென்கிறீகளே.. இது நியாயமா.. எனக்கேடால்... எங்கள் ஜோசியர்.. கூறிவிட்டார்..அவர் பேச்சை நாங்கள் தட்ட முடியாது... என்கிறார்கள்.. பையனின் ஜாதகம் ஒரு சில பெண்களின் ஜாதகத்துடன் அனைத்தும் ஒத்துப்போகிறது..ஆனாலும் தரமாட்டோம் என கூறுகிறார்கள்..ஏனுங்க பையன் அழகாக வசீகரமாக இருக்கிறார். மாத வருமானம் ஒரு லகரத்திற்கு பக்கமாக வருகிறது.. நல்ல குடும்பம், அருமையான மாமனார், மாமியார், கொளுந்தனார், வசதியான வீடு..பின் ஏன் இந்தப்பையன் வேண்டாம் எனக்கேட்டால்.... இதப்பாருங்க உங்க பையன் தமிழ் நாட்டில் படித்துவிட்டு, டெல்லிக்கருகில் லார்சன் & டூப்ரோவில் பொறியாளராக இருக்கிறார்.. எங்களுக்கு கோவைப்பகுதியில் இருக்கும் மாப்பிள்ளை தேவை.. இல்லாவிட்டால்... தயக்கத்துடன் .. என் மகளுக்கு ஆஸ்திரேலியா/அமெரிக்கா/கனடா/இங்கிலாந்து போன்ற நாடுகளை சுற்றிப்பார்க்க ஆசைப்படுகிறாள்...மாப்பிள்ளை இந்த நாடுகளில் வேலை செய்பவராகத்தேடுகிறோம்.. என்கிறார்கள்.
சென்னையில் இருந்து ஒரு பெற்றோர், தங்கள் மகளின் ஜாதகம் சுத்த ஜாதகமாக இருந்தும், தங்கள் மகளை திருமணம் செய்திட விருப்பப்பட்டனர். ஆனால் பையனின் அப்பா, அம்மா இருவரும் வேண்டாம் என்கின்றனர்.. அட.. என்னங்க.. எத்தனையோ பெற்றோர்கள் வட நாட்டிற்கு தங்கள் மகளைத்தர மறுக்கும் போது, இவர்கள் பையன் மற்றும் வேலை பிடித்துப்போய்.. தர முன்வரும் போது ஏன் வேண்டாம் என்கிறீர்கள் எனக்கேட்டேன்..அதற்கு.. சம்பந்தி வீடு பக்கமாக இருக்கவேண்டும்..அதாவது திருப்பூர், பல்லடம்,அவினாசி, கோவை என இருக்க வேண்டுமாம்.. அப்போதுதான் ஒரு நல்லது பொல்லாததற்கு போகமுடியும் என்றார்கள்.. எப்படியோ கோவையில் ஒரேயொரு பெண்ணை வைத்திருப்பவர் தன் மகள் ஜாதகத்தில் ராகு-கேது இல்லாதபோதும், சம்மதம் என்றார்.. பையனின் அப்பா.. தனது குடும்ப ஜோதிடரிடம் சென்று

பார்த்து விட்டு வேண்டாம் என்றார், ஏன் என்றேன்.. அது.. பெண்ணின் ராசிக்கட்டத்தில் சந்திரனும், சூரியனும் ஒரே கட்டத்தில் இருக்கிறதால் பின்னால் ஏதாவது தொந்தரவு வரும் என்கிறார்..இந்த கணணி, மொபைல் போன் யுகத்திலும் இன்னும் நமது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள உள்ளூர் சம்பந்தி, ஜாதகத்தில் பின்னால் நடக்கலாம், அது சொத்தை, இது சொத்தையென்று மறுதளிப்பது என்பது பெண் வீட்டிலும், சரி.. மாப்பிள்ளை வீட்டிலும் தொடர்வது திருமணங்கள் தாமதமாவதற்கு மேலும் ஒரு காரணமாக அமைகிறது..
. ஒரு சில பெற்றோர்கள் பொன் முட்டையிடும் வாத்தை உடனடியாக அனுப்ப மனமில்லாமல், வங்கியில் வாங்கிய கல்விக்கடனைக்கட்டவும், சொந்த வீடு, காரு என வாங்கிட ஆசைப்படுவதால்.. வேண்டுமென்றே பெண்ணின் திருமணத்தை தள்ளிப்போடவும் செய்கிறார்கள்.. இப்படி எத்தனை ஆண்டுகள்..தள்ளிப்போடுவார்களோ தெரியவில்லை.. கொங்கு நண்பர்கள் செய்தி
மடலிலும், கொங்கு மேட்ரிமேனியலிலும் சென்று பார்த்தால் நூற்றுக்கு 70 % சதமான பெண்களின் வயது 24-ல் இருந்து 30 வரை நீடிக்கிறது...முப்பது வயதுக்கு மேல் திருமணம் செய்து.. எப்பொழுது பேரன்/பேத்தியெடுத்து அப்பா அம்மாக்கல் கொஞ்சிமகிழ்வது...பெண்ணைப்பெற்றவர்கள் சிந்திக்கவேண்டாமா..? ஒரு பெண்ணிற்கு 24 வயதை தாண்டிவிட்டாலே.. 24 ஆ..ஆ..ஆ … என இழுக்கிறார்கள்..25 ஐ தாண்டிவிட்டால் முதிர்கன்னியாகிவிடுகிறார்கள்.
பையன்கள்..25 . வயதான பெண்ணா.. என யோசிக்கிறார்கள்..அதே போல பையன்களுக்கு 29-ஐ தாண்டிவிட்டாலே.. வயதான மாப்பிள்ளை என்ற பெயர் வந்துவிடுகிறது... பெண்ணின் திருமண வயது 18 என்று அரசு சொன்னாலும் உண்மையென்னவோ...27, 28-ஐ தாண்டுகிறது....திருமண வயதில் பெண்ணை வைத்திருப்பவர்களே... சிந்தியுங்கள்... ஜோசியகாரர்கள் தங்கள் வாழ்விற்காக ஒவ்வொரு முறையும் நீங்கள் கொண்டுசெல்லும் ஒரு
ஜாதகத்தை கணிக்க.. ரூ.100 முதல் ரூ1000-ம் வரை கட்டணம் ஆளுக்கு தகுந்தாற்போல வாங்குகிறார்கள்.. நீங்கள் கொண்டு செல்லும் ஜாதகம் நடசத்திரப்பொருத்தம் இருந்தாலும்...... வானத்தில் உள்ள நட்சத்திரங்கள், ராசிகள்.. பெயரால் இந்த ஜாதகம் சரியில்லை..ராகு /கேது, செவ்வாய் .. பரிகார செவ்வாய் எனக்கூறி அனுப்பினால்தானே.. நீங்கள் மறுபடி, மறுபடி வருவீர்கள்... ஒவ்வொரு முறையும் பணம் கறக்க முடியும்.. உங்களை மறுபடி மறுபடி வரவழைக்க புதிது புதிதாக ஏதாவது ஒன்றை கூறுவது ஜோசியகாரர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்க.. 27 நட்சத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு.. தங்கள் பிழைப்பை ஓட்டுகிறார்கள்.. ஆயில்ய நட்சத்திரம் உள்ள பெண்.. மாமியாருக்கு ஆகாது..குறையுள்ள வீட்டில் பெண்ணைத்தரவேண்டும்..மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது..ஆயில்ய நட்சத்திரம் பெண்ணைக்கட்டினால்.. மாமியாருக்கு ஏதாவது ஆகிவிடும், மூலம் நட்சத்திர பெண்ணைக்கட்டினால்..
குடும்பம் நிர்மூலமாகிவிடும்..கேட்டை நட்சத்திரம்பெண் இருந்தால் மாப்பிள்ளையின் அண்ணனுக்கு ஆகாது. விசாக நட்சத்திர பெண்ணைக்கட்டினால் தம்பிக்கு ஆகாது..இப்படி ... புதிது புதிதாக கதையளக்குகிறார்கள்.... மொத்த பொருத்தங்கள் முதலில் 13என்றார்கள்.. தற்போது பத்து( தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீ தீர்த்தம்ம் யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜு, வேதை) என்கிறார்கள்..இதில் முக்கியமாக ஐந்து பொருத்தம்( தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு) இருந்தாலே.. திருமணம் செய்யலாம்.அதிலும் 9 பொருத்தம் இருந்தும், இந்த ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்று மிரட்டி பயமுறுத்தி வைத்துள்ளார்கள்... இருந்தாலும் மக்கள் குறைந்தது ஏழு அல்லது எட்டாவது வேண்டும்(தனியார் பள்ளிகளில் 400 மதிப்பெண்ணிற்கு மேல் இருப்பவர்களுக்குதான் மதிப்பு) என்ற மன நிலையில் இருக்கிறார்கள். மகேந்திரப்பொருத்தம் இல்லையென்றால குழந்தை பாக்கியம் இல்லை என்கிறார்கள். எனது மகளுக்கும்,
மாப்பிள்ளைக்கும் 8 பொருத்தம் இருந்தும் மகேந்திரப்பொருத்தம் இல்லை. இந்தப்பொருத்தத்தைப்பொய்யாக்கும் வகையில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.. அதை.. விடுங்கள்.. எனது மனைவி ஜாதகத்தில் செவ்வாய் தோசம் இருக்கிறது.. எனக்கு .. இல்லை... எங்களுக்கு திருமணமாகி 35 வருடமாகிறது....ஒரு பிரச்சனையும் இல்லை... . எல்லாம் நமது எண்ணத்தில் இருக்கிறது.. மனசில் இருக்கிறது..அப்படியெல்லாம் எங்களால் இருக்க மனசு இடம் தரவில்லை என நினைக்கிறீர்களா..! நேராக கணணி ஜாதக கடைக்குப்போங்கள்.. பிள்ளைக்கு பெயர் வைக்க, ஜாதகம் கணிக்க, பிறந்த நாள் பயனை அறிய, வாழ் நாள் பயனை அறிய என அனைத்துக்கும் கணணி ஜெராக்சுக்குப்போய் பிரிண்ட எடுக்கிறோம். திருமண ஜாதகப்பொருத்தத்திற்கு மட்டும் ஜோதிடர்களை ஏன் நம்ப வேண்டும்..கணணி ராசி-பலன் கடைக்கு செல்லுங்கள்.. திருமண ஜாதகப்பொருத்தம்( நட்சத்திரம், ராசி) மட்டும் பாருங்கள்.. 10 க்கு ,6, 7& 8 என்று வருகிறதா... தாராளமாக திருமணத்தை முடியுங்கள்..

ஆ.ஈசுவரன்,
8/88, புது நகர், ஜெய்வாபாய் பள்ளி ரோடு,
திருப்பூர்-641601. போன்: 9443024086
E mail: sivakamieswaran@gmail.com


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 19, 2015 11:05 pm

இன்னும் நமது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள உள்ளூர் சம்பந்தி, ஜாதகத்தில் பின்னால் நடக்கலாம், அது சொத்தை, இது சொத்தையென்று மறுதளிப்பது என்பது பெண் வீட்டிலும், சரி.. மாப்பிள்ளை வீட்டிலும் தொடர்வது திருமணங்கள் தாமதமாவதற்கு மேலும் ஒரு காரணமாக அமைகிறது..
. ஒரு சில பெற்றோர்கள் பொன் முட்டையிடும் வாத்தை உடனடியாக அனுப்ப மனமில்லாமல், வங்கியில் வாங்கிய கல்விக்கடனைக்கட்டவும், சொந்த வீடு, காரு என வாங்கிட ஆசைப்படுவதால்.. வேண்டுமென்றே பெண்ணின் திருமணத்தை தள்ளிப்போடவும் செய்கிறார்கள்..
ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல் உண்மை, உண்மை... இது தான் உண்மை! இது மட்டுமே உண்மை!!



இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஈசுவரன்
ஈசுவரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 18/01/2015
http:// jaivabaieswaran.blogspot.com

Postஈசுவரன் Tue Jan 20, 2015 8:11 am

நன்றி... விமந்தனி... இது எனது அனுபவம்...

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Jan 20, 2015 9:59 am

ஆம் நண்பரே .....
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
என் தோழியின் திருமணமும் அப்படித்தான். அவள் வருமானத்தை இழக்க நேரிடுமே என்று அவளது பெற்றோர் தள்ளி போடுகின்றனர்....
மற்றும் இன்னொரு விடயமும் யோசிக்க வேண்டும். பெண்கள் திருமணம் செய்தால் தங்கள் சுதந்திரம் பறிபோய் விடும் என்றும் நினைக்கின்றனர்.
ஆண்கள் அனைத்தையும் சம்பாதித்து சேர்த்து வைத்து விட்டு கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கின்றனர்.
இதுவும் திருமணம் தாமதமாக நடைபெற காரணம்.



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 20, 2015 12:43 pm

M.Saranya wrote:ஆம் நண்பரே .....
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
என் தோழியின் திருமணமும் அப்படித்தான். அவள் வருமானத்தை இழக்க நேரிடுமே என்று அவளது பெற்றோர் தள்ளி போடுகின்றனர்....
மற்றும் இன்னொரு விடயமும் யோசிக்க வேண்டும். பெண்கள் திருமணம் செய்தால் தங்கள் சுதந்திரம் பறிபோய் விடும் என்றும் நினைக்கின்றனர்.
ஆண்கள் அனைத்தையும் சம்பாதித்து சேர்த்து வைத்து விட்டு கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கின்றனர்.
இதுவும் திருமணம் தாமதமாக நடைபெற காரணம்.
மேற்கோள் செய்த பதிவு: 1116351

ஆமாம் சரண்யா, நீங்க சொல்லுவது போலும் நடக்கிறது.............எல்லோருக்கும் 'செட்டில்' ஆனதும் கல்யாணம் என்கிற எண்ணமிருக்கு.....ஆனால் எது 'செட்டில்' என்பது தான் 'மில்லியன் டாலர்' கேள்வி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jan 20, 2015 3:48 pm

ஜோதிரிடம் உங்களுக்குள்ள கோபம் புரிகிறது,, ஆயினும் பெரும்பாலான இடங்களில் பெண் அல்லது ஆண் வீட்டார் விரும்பாத வரனை தட்டிக் கழிக்க ஜோதிடம்  சாக்காக பயன்படுகிறது என்பதே உண்மை, மற்றபடி ஜோதிடம் தவறு செய்வதில்லை.

பொதுவாக மனிதரின் மனம் தனக்கு சாதகமான விஷயத்தை உள்வாங்கி, பாதகமான விஷயத்தை ஏற்க மறுக்கும். உதாரணமான ஒருவரை குறைசொல்லுவதை விட பாராட்டு அவரிடம் சுலபமாக போய்ச் சேரும்,,

திருமண விசயத்தில் ஆண் பெண் வீட்டார் தங்களைப் பற்றிச் சொல்லும் பொழுது தங்களின் சாதகமான விஷயத்தை பெரிதுபடுத்தி அதில் உள்ள குறைகளை ஒரு பொருட்டாகவே பார்ப்பதில்லை, ஆனால் வரனின் பலன் பார்க்கும் இதற்கு நேர் மாறாக நிறைகளை விட குறைகளே பெரிதாக தெரிகிறது, நல்லதோ கெட்டதோ அதை சொல்லுவது ஜோதிடரின் கடமை, எல்லா வகையிலும் பொருந்தி வருவது வெகு அபூர்வம்,, அப்படி இல்லாத நிலையில் இது இது நடக்கலாம் என்று யூகித்து சோதிடம் சொல்லப்படுகிறது....அதை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் அவரவரின் விருப்பமே.  

முற்காலத்தில் திருமண முடிவு ஒருவரால் எடுக்கப்பட்டது, வரனின் தந்தையோ அல்லது அவரின் வீட்டில் உள்ள பெரியவர் முடிவு எடுத்தால் முகூர்த்தம் தான், ஆனால் இன்று அப்படி இல்லை. அனைவரின் விருப்பமும் பூர்த்தி செய்ய வேண்டிய நிலை இருக்கிறது, தாங்களாக தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு அதிகரித்ததால் அத்தனை குழப்பம்.

இதில் ஏட்டிக்கு போட்டியான வரைமுறைகள் வேறு. ஜாலியாக இருப்பவர் பொறுப்பாகவும் இருக்க வேண்டும், மாப்பிள்ளை அழகாக இருக்க வேண்டும் அதிக வயசு வித்தியாசம் இருக்க கூடாது, ஆனால் பெண்ணுக்கு வயது 30 +, அதிகம் சம்பளம் வாங்குபவர் மனைவியிடம் அதிகம் நேரம் செலவழிக்கும் ஒருவராக இருக்க வேண்டும், வெளிநாட்டில் இருக்க வேண்டும் ஆனால் இந்தியாவில் செட்டில் ஆக வேண்டும்.  பெண் வேலைக்கு போக வேண்டும் ஆனால் சமையல் நன்றாக தெரிந்து இருக்க வேண்டும்,,மாமியார் மாமனார் இருக்க வேண்டும், ஆனால் மாப்பிள்ளை  தனியாக வர வேண்டும். மாப்பிள்ளை சொந்தமாக நல்ல வருமானம் உள்ளவராக வேண்டும், ஆயினும் அப்பா அம்மா சொத்து உடையவராக இருக்க வேண்டும்..

வரனின் வீட்டில் உள்ளோர் இப்படி இருந்து திருமணம் காலம் தாமதம் ஆவதற்கு அப்பாவி சோதிடர் என்ன பண்ணுவார்,,,, பிழைக்க தெரிந்தவர் பணம் பண்ணுவார் ...அது தான் நாட்டில் நடக்கிறது

இதில் ஜோதிடரின் பங்கு வெகு குறைவு.



சதாசிவம்
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Jan 20, 2015 5:13 pm

இதெல்லாம் விட இப்ப இருக்குற சில பொண்ணுங்களுக்கு செலவுக்கு காசு தேவை படும் போது Atm மெசினகாவும் , கோவம் வரும் போது கூலர் மேஷினாகவும் கணவர் தேவை படுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 20, 2015 7:25 pm

mbalasaravanan wrote:இதெல்லாம் விட இப்ப இருக்குற சில பொண்ணுங்களுக்கு செலவுக்கு காசு தேவை படும் போது Atm மெசினகாவும் , கோவம் வரும் போது கூலர் மேஷினாகவும் கணவர் தேவை படுகிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1116416

எதிர்பார்ப்புகள் ரொம்ப அதிகமாகி விட்டது சரவணன், தன் முகத்தை கண்ணாடி இல் பார்க்க மறந்து ஏதோ தான் 'கிளியோபாட்ரா ' என்று நினைக்கிறா ஒவ்வொரு பெண்ணும்....சும்மாவே லிஸ்ட் போடறா ...பையன் இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் என்று புன்னகை
..
நாங்க எங்க கிருஷ்ணாக்கு பார்க்கும்போது , கேள்விப்பட்டது, பையன் 6 digit வருஷம் இல்லை........மாசம் வாங்கணும்..........சொந்த வீடு இருக்கணும்.................அப்பா அம்மா இருக்கணும் ஆனா இருக்க கூடாது...அதாவது உயிருடன் இருக்கணும்...ஆனால் கூட இருக்க கூடாது...................... on site போகணும் உடனே............முக்கியமாய் சிகரெட் பிடிக்கணும்................அவ வந்து சொன்னதும் விடணும்...................எப்பவும் ஜீன்ஸ் தான் போடணும்.............இதைப்போல நிறைய காமெடி கண்டிஷன் ................வாழ்க்கைக்கு கொஞ்சம் கூட உபயோகத்துக்கு இல்லாதது போடறா புன்னகை
.
.
.
.
...ஆண்களும் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை, மாமனாரிடமிருந்து எவ்வளவு வாங்க முடியும் என்று நினைக்கிறார்கள்.................(நிறைய பேர் ஒன்றும் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள் )............திருமணம் என்பது ஏதோ "ஜாக்பாட்" என்று நினைக்கிறார்கள் சோகம்
.
.
.என்னத்த சொல்றது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jan 20, 2015 8:19 pm

உண்மை அனுபவத்தை கொண்ட பகிர்வு... நன்றி...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஈசுவரன்
ஈசுவரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 18/01/2015
http:// jaivabaieswaran.blogspot.com

Postஈசுவரன் Tue Jan 20, 2015 9:55 pm

எனது பதிவுக்கு பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கு நன்றிகள்..
பொள்ளாச்சியருகே உள்ள வேட்டைக்காரன் புதூரில் ஒரு மணமகள் மாப்பிள்ளையின் சம்பளம் வருடத்திற்கு ஒரு கோடியும், அதற்கு மேலும் வேண்டும். அதே சமயம் மாப்பிள்ளைக்கு சகோதரிகள் இருக்கக்கூடாது.. இவர்கள் ஒரு வேளை ஜமீன் பரம்பரையில் வந்தவர்களாக இருக்கலாம்.. இன்னொரு பெண் ஈரோட்டை சேர்ந்தவர்.. உயர் நடுத்தரவர்க்கம் தான்.. இவருக்கும் மாப்பிள்ளையின் சம்பளம் வருடம் ஒரு கோடியும், அதற்கு மேலும் கேட்டுள்ளார். அதாவது தினம் ரூ.30,000-00 சம்பளமாக வரவேண்டும், அல்லது தொழிலில் தினம் முப்பதாயிரம் லாபம் வரவேண்டும்..அவர்களுடைய மெயிலில் போய் நான் கூட தினம் முப்பதாயிரமா..என யோசியுங்கள் என்று எழுதினேன். இன்னும் அவர்கள் அதே நிலையில் தான் இருக்கிறார்கள்..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக