ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

+8
T.N.Balasubramanian
அசுரன்
Dr.S.Soundarapandian
பாலாஜி
M.Saranya
ராஜா
ayyasamy ram
சிவா
12 posters

Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 Empty 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா Sun Jan 18, 2015 1:59 am

First topic message reminder :


சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.


பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.


லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.

வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.

முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.

காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.


 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா Sat Feb 21, 2015 11:07 pm

பாகிஸ்தானை சாய்த்தது வெஸ்ட் இண்டீஸ்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இதன் 10–வது ‘லீக்’ ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று நடந்தது. இதில் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ்–1992–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணிகள் மோதின.

பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா டாஸ் வென்று வெஸ்ட் இண்டீசை முதலில் விளையாட அழைத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்கம் ஏமாற்றம் அளித்தது. 8–வது ஓவரில் அந்த அணி 28 ரன்னில் 2 விக்கெட்டை இழந்தது.

அதிரடி தொடக்க வீரர் கெய்ல் 4 ரன்னிலும் மற்றொரு தொடக்க வீரர் சுமித் 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 3–வது விக்கெட்டான டாரன் பிராவோ–சாமுவேல்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. சாமுவேல்ஸ் 38 ரன்னில் வெளியேறினார். நன்றாக ஆடி வந்த பிராவோ 49 ரன்னில் காயத்துடன் வெளியேறினர்.

பின்னர் வந்த ராம்தின், லெண்டில் சிம்மன்ஸ் அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ராம்தின் 51 ரன் எடுத்து வெளியேறினார். டாரன் சேமி 30 ரன் எடுத்தார். 8–வது வீரராக களம் இறங்கிய ஆந்தரே ரஸ்சல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 13 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 42 ரன் எடுத்து அணியின் ஸ்கோரை 300–க்கு கொண்டு வந்தார். அவர் ஆட்டம் இழக்கவில்லை.

ஆட்டத்தின் கடைசி பந்தில் சிம்மன்ஸ் 50 ரன்னில் ஆட்டம் இழந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 310 ரன் குவித்தது. ஹாரிஸ் சோகைல் 2 விக்கெட்டும், முகமது இர்பான், சோகைல்கான், வகாப் ரியாஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

311 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் வேக பந்து வீரர் ஜெரோம் டெய்லரின் அனல் பறக்கும் பந்து வீச்சால் அந்த அணி நிலை குலைந்து போனது. பாகிஸ்தான் அணி 1 ரன்னில் 4 விக்கெட்டை இழந்து மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. டெய்லர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் ஜாம்ஷெட் (0), யூஸ்ஸ்கான் (0) ஆட்டம் இழந்தனர்.

டெய்லரின் 2–வது ஓவரில் (ஆட்டத்தின் 3–வது ஓவர்) ஹாரிஸ் சோனசல் (0) அவுட் ஆனார். அதற்கு அடுத்த ஓவரில் அகமது ஷேசாத் 1 ரன்னில் வெளியேறினார். அவரது விக்கெட்டை கேப்டன் ஹோல்டர் கைப்பற்றினார். சிறிது நேரத்தில் பாகிஸ்தான் அணியின் 5–வது விக்கெட்டும் விழுந்தது. கேப்டன் மிஸ்பா உல்–ஹக் 7 ரன்னில் ரஸ்சல் பந்தில் ஆட்டம் இழந்தார். 10.3–வது ஓவரில் அந்த அணி 25 ரன்னில் 5 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

6–வது விக்கெட்டான சோயிப் மசூத்–உமர் அக்மல் ஜோடியை அணியை சரிவில் இருந்து மீட்கும் பொருட்டு பொறுப்புடன் ஆடியது. 25–வது ஓவரில் அந்த அணி 100 ரன்னை தொட்டது. வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டாரன் சேமி இந்த ஜோடியை பிரித்தார். சோயிப் மசூத் 50 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் 66 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 105 ஆக இருந்தது.

இதேபோல் உமர் அக்மல் 59 ரன்களும், அப்ரிடி 28 ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து வெளியேற, பாகிஸ்தான் அணி 39 ஓவர்களிலேயே 160 ரன்களுக்குள் சுருண்டது.

இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஸ்சல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ராஜா Sun Feb 22, 2015 4:12 pm

வெற்றியின் விளிம்பில் இந்திய அணி புன்னகை


தென்னாப்பிரிக்கா சற்றுமுன் வரை 161/9 37.4 ஓவர்களில் ,


நான் பார்த்தவரையில் இந்திய வேகபந்து வீச்சாளர்களின் மிகச்சிறந்த ஆட்டம் இது தான் புன்னகை

உலகின் தலை சிறந்த வேகபந்து வீச்சாளரான Dale Steyn க்கு (147.3 KM / h) அடுத்த படியாக நம்ம umesh yadhav  (147.0 KM / h) , சூப்பர் சூப்பர்

யார் சொன்னது இந்தியாவில் வேகபந்து வீச்சாளர்கள் இல்லையென்று ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா Mon Feb 23, 2015 12:54 am

உலகக் கோப்பை: ஆப்கனிடம் திணறி வென்றது இலங்கை

இலங்கை - ஆப்கனிஸ்தான் இடையே நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி கட்டத்தில் வென்றது.

233 ரன்கள் இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு, முதல் பந்திலேயே ஆப்கன் அதிர்ச்சி அளித்தது. திரிமன்னே ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்தார். அடுத்த ஓவரில் தில்ஷான் விழ, 6-வது ஓவரில் சங்கக்காராவும் வெளியேறினார். 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களை மட்டுமே இலங்கை எடுத்திருந்தது.

கருணரத்னே 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க மறுமுனையில் ஜெயவர்த்தனே பொறுப்பாக ஆடி ரன் சேர்த்தார். இடைப்பட்ட ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலங்கை இலக்கை நோக்கி பயணித்தது. 41-வது ஓவரில் மேத்யூஸ் 44 ரன்களுக்கு வீழ்ந்தார். ஜெயவர்த்தனே 118 பந்துகளில் தனது 19-வது ஒரு நாள் சதத்தை எட்டினார்.

52 பந்துகளில் 55 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜெயவர்த்தனே ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. களத்தில் இருந்த பெரேரா, மெண்டிஸ் ஜோடி முதலில் சற்று நிதானித்தாலும் அடுத்த சில ஓவர்களில் தேவைக்கேற்ப அதிரடியாக ரன் சேர்க்க ஆரம்பித்தனர். முடிவில் 48.2 ஓவர்களில் இலங்கை வெற்றி இலக்கைக் கடந்தது. பெரேரா 43 ரன்களுடனும், மெண்டிஸ் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகனாக ஜெய்வர்த்தனே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக, இலங்கை டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. ஆப்கன் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் 3-வது வீரராக களமிறங்கிய ஸ்டானிக்சாய் அரை சதம் எடுத்தார். இலங்கையின் சிறப்பான பந்துவீச்சால் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்திய ஆப்கன் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்களை எடுத்தது.


 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by M.Saranya Mon Feb 23, 2015 2:05 pm

தகவலுக்கு நன்றி.....

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 1571444738


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா Sat Feb 28, 2015 11:26 pm

4 உலக கோப்பை தொடர்களுக்கு பிறகு முதல் முறையாக, ஆல்-அவுட் ஆன ஆஸ்திரேலியா!

ஆக்லாந்து: கடந்த 4 உலக கோப்பைகளிலும் எந்த ஒரு போட்டியிலும் ஆல்-அவுட் ஆகாத ஆஸ்திரேலியா முதல் முறையாக இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு ஒரு அபசகுணம் என்பது சரியாக இருக்கும்.

உலக கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நாடு ஆஸ்திரேலியா. 1987ம் ஆண்டு முதன்முறையாக ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்றது. 1992ல் பாகிஸ்தானும், 1996ல் இலங்கையும் உலக கோப்பை தொடரில் சாம்பியன் ஆகின.

4 உலக கோப்பை தொடர்களுக்கு பிறகு முதல் முறையாக, ஆல்-அவுட் ஆன ஆஸ்திரேலியா!

தொடர் வெற்றிகள்

1999ல் ஆஸ்திரேலியா மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றியது. இதன்பிறகு, 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவே சாம்பியன் ஆனது.

தடை போட்ட இந்தியா

கடந்த 2011 உலக கோப்பையின்போது அரையிறுதிவரை வந்து இந்தியாவிடம் தோற்று வெளியேறியது ஆஸ்திரேலியா.

ஆல்-அவுட் இல்லை

1999 முதல் 2011 உலக கோப்பை அரையிறுதி வரை ஆஸ்திரேலியா 27 போட்டிகளில் ஆடியுள்ளது. ஆனால் எந்த போட்டியிலுமே ஆல்-அவுட் ஆகவில்லை. 200 ரன்களுக்கும் கீழே ரன்கள் எடுத்த போட்டிகளில் கூட அனைத்து விக்கெட்டுகளையும் எதிரணி கைப்பற்றவிட்டதில்லை ஆஸ்திரேலியா. குறைந்த ரன்கள் எடுத்தாலும், எதிரணியை அதற்கும் குறைவான ரன்களில் மடக்கிப்போட்டு வந்தது ஆஸ்திரேலியா.

முதல் முறை

ஆனால், இன்று நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 151 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல்-அவுட் ஆகியுள்ளது. அதுவும் 32.2 ஓவர்களிலேயே மூட்டை கட்டிவிட்டது ஆஸ்திரேலியா. அந்த அணிக்கு இது மிகப்பெரும் மனரீதியான பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

மிக குறைந்த ஸ்கோர்

மேலும் உலக கோப்பையில் 1983க்கு பிறகு ஆஸ்திரேலியா எடுத்த மிக குறைந்த ஸ்கோர் இதுதான்.


 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ayyasamy ram Sat Feb 28, 2015 11:40 pm

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 KRRiS6HHQMavsg2SYOoY+NewZealandvAustralia
-
152 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய
நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ராஜா Sun Mar 01, 2015 11:23 am

அனல் பறந்த ஆட்டம் , இது போல ஆட்டங்கள் தான் உலககோப்பைக்கு தேவை.

ஆஸ்திரேலியா வேகபந்து வீச்சாளர்களை எப்படி அடித்து துவைத்து காயபோடவேண்டும் என்று நியூசிலாந்து அணித்தலைவர் மக்குல்லம் நன்றாக விளக்கை காமித்து இருக்கிறார்.

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் இதே முறையை கடைப்பிடித்து , ஆஸ்திரேலியா வேகபந்து வீச்சாளர்களை துவக்கத்திலேயே மனரீதியாக துவண்டு போக வைத்துவிட வேண்டும். இல்லையென்றால் அவர்களின் பந்துவீச்சு ரொம்ப பயங்கரமா இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ayyasamy ram Sun Mar 01, 2015 11:29 am


ஆஸ்திரேலியாவுக்கு உலகக் கோப்பைத் தொடரில்
இது முதலாவது தோல்வி என்பதும்,
நியூசிலாந்துக்கு தொடர்ச்சியாக 3-வது வெற்றியும் கிடைத்துள்ளது.
-
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 7adetgyOTvGR23lxLvDe+kivi
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ayyasamy ram Sun Mar 01, 2015 11:32 am



இதுவரை விளையாடிய 3 லீக் போட்டிகளிலும்
வெற்றிபெற்ற இந்திய அணி 6 புள்ளிகளுடன்
முன்னிலை வகிக்கிறது.

தொடர் வெற்றிகளின் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு
இந்திய அணிக்கு அதிகரித்துள்ளது.


வரும் 6-ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியை, இந்திய அணி
எதிர்கொள்கிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா Tue Mar 03, 2015 5:58 pm

அயர்லாந்தை 201 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

உலக கோப்பை போட்டிகளில் இன்று நடைபெற்ற 24-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- அயர்லாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்தின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா அணி அம்லா மற்றும் டு பிளிஸ்சிஸ் சதத்தால் 411 ரன்கள் குவித்தது. அம்லா 159 ரன்களும், டு பிளஸ்சிஸ் 109 ரன்களும் எடுத்தனர்.

412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அயர்லாந்து பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் போர்ட்டர்பீல்டு- பால் ஸ்டிர்லிங் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஸ்டிர்லிங் 9 ரன்னில் ஸ்டென்ய் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஜாய்ஸ் களம் இறங்கினார். போர்ட்டர்பீல்டு 12 ரன்கள் எடுத்த நிலையில் அபாட் பந்தில் ஆட்டம் இழந்தார். ஜாய்ஸ் 4 பந்துகள் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டெய்ன் பந்தில் ஆட்டம் இழந்தார். இதனால், அயர்லாந்து 4.3 ஓவரில் 21 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

4-வது விக்கெட்டுக்குக்கு நியல் ஓபிரையன், பால்பிர்னியுடன் ஜோடி சேர்ந்தார். ஓபிரையன் 14 ரன்கள் எடுத்த நிலையில் அபாட் பந்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த வில்சன் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். அப்போது அயர்லாந்து 10.2 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 48 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

6-வது விக்கெட்டுக்கு பால்பிர்னியுடன் கே ஒபிரையன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். இதனால் அயர்லாந்தின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. அந்த அணியின் ஸ்கோர் 129 ரன்களாக இருக்கும்போது பால்பிர்னி 58 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கல் பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய கே ஓபிரைன் 48 ரன்னில் அபாட் பந்தில் அவுட் ஆனார்.

அதன்பின் வந்த டாக்ரெல் (25) சோரன்சென் (22) ரன்கள் அடிக்க அயர்லாந்து 45 ஓவரில் 210 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்க வீரர் அபாட் 4 விக்கெட்டும், மோர்கல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் பி பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அயர்லாந்து 3 போட்டியில் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

159 ரன்கள் குவித்த அம்லா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 4 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum