ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

+8
T.N.Balasubramanian
அசுரன்
Dr.S.Soundarapandian
பாலாஜி
M.Saranya
ராஜா
ayyasamy ram
சிவா
12 posters

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 Empty 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா Sun Jan 18, 2015 1:59 am

First topic message reminder :


சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.


பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.


லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.

வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.

முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.

காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.


 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா Wed Feb 11, 2015 3:27 am

உலகக்கோப்பையில் கவனிக்க வேண்டிய 10 வீரர்கள்: ஜெஃப் லாசன் பட்டியல்

வரவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தங்களது ஆட்டத்தினால் கவரக்கூடிய 10 வீரர்களை ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் லாசன் பட்டியலிட்டுள்ளார்.

இது குறித்து சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் அவர் வெளியிட்டுள்ள 10 வீரர்கள் விவரம் வருமாறு:

1. மிட்சில் ஸ்டார்க்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பந்துவீச்சு மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், ஒருநாள் கிரிக்கெட்டுகளில் அவர் ஒரு அச்சுறுத்தலான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது யார்க்கர்களும் பவுன்சர்களும் சிலபல விக்கெட்டுகளை அவருக்குப் பெற்றுத்தரும். முடிவு ஓவர்களில் அவரது இன்ஸ்விங்கிங் யார்க்கர்களை விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. அன்று இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் சிட்னியில் இதனை அவர் நிரூபித்தார். உலகக் கோப்பையிலும் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

2. டேவிட் வார்னர்:

ஸ்டார்க் எப்படி பந்துவீச்சில் எதிரணியினரை முறியடிப்பாரோ அப்படித்தான் பேட்டிங்கில் டேவிட் வார்னர். ஒருநாள் போட்டிகளில் இவரது ஆட்டம் அதிகம் சோபிக்கவில்லை என்றாலும் தன் சொந்த நாட்டில் உலகக் கோப்பை போட்டிகளில் இவர் அபாயகரமான வீரராகத் திகழ்வார். இவரை முடக்க தொடக்க ஓவரிலேயே ஸ்பின்னைக் கொண்டுவர அணிகள் முயற்சி செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

3. மொயீன் அலி (இங்கிலாந்து):

தொடக்கத்தில் களமிறங்குவதோடு ஆஃப் ஸ்பின் பவுலிங்கில் 10 ஓவர்களை வீச முடியக்கூடியவர். புதிய பந்தில் பயப்படாமல் அடித்து ஆடுகிறார். பந்தை தூக்கி அடிக்கவும் அஞ்சுவதில்லை. அவர் ஸ்பின் பந்துவீச்சை நன்றாக எதிர்கொள்கிறார். ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறார். அவரை சிலபல ஷாட் பிட்ச் பந்துகளை வீசி அவுட் செய்ய அணிகள் தங்கள் ஹோம்வொர்க்கை தொடங்கி விட்டன. ஆஸ்திரேலிய பிட்ச்களின் பவுன்ஸிற்கு மொயீன் அலி புதிது. ஆனாலும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு ஆல்ரவுண்டர் மொயீன் அலி.

4. ஏ.பி.டீவிலியர்ஸ்:

எந்த ஒரு ஆட்டக்களமாக இருந்தாலும் அதில் எந்தவிதமான பந்து வீச்சாக இருந்தாலும் ஏ.பி.டீவிலியர்ஸ் ரன்களைக் குவிப்பார். ஏ.பி.டீவிலியர்ஸ் கிரீஸில் இருக்கும் வரையில் தென் ஆப்பிரிக்கா தோற்க வாய்ப்பில்லை.

5. பிரெண்டன் மெக்கல்லம்

சிறந்த வேகப்பந்து வீச்சைக்கொண்டுள்ள நியூசிலாந்து அணியில் பிரெண்டன் மெக்கல்லமின் பேட்டிங் மிக முக்கியப் பங்களிப்பை செய்து வருகிறது. 2014-ஆம் ஆண்டில் அவரது டெஸ்ட் அதிரடி ஆட்டங்கள் 2015 ஒருநாள் போட்டிகளுக்கு மாறியுள்ளது. உலகில் எந்த ஒரு பந்து வீச்சும் அவரது தாக்குதல் ஆட்டத்தை முடக்க திராணியற்றதாக இருக்கிறது. மேலும் உள்நாட்டிலேயே விளையாடுவதால் மெக்கல்லம் தனது ஆட்டத்தின் மூலம் தன் அணியை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

6. ஷாகித் அப்ரீடி (பாகிஸ்தான்)

என்றும் புத்துணர்வுடன் இருக்கும் பூம்... பூம் அஃப்ரீடி ஆடிக்கொண்டேயிருக்கிறார். நான் அவரது வயதைக் குறிப்பிட விரும்பவில்லை. காரணம் அவர் பிறந்த தேதி பற்றி 4 வேறுவேறு குறிப்புகள் உள்ளன. ஆனால் ஊடுருவும் அவரது பந்து வீச்சிற்கும், அதிரடி ஆட்டத்திற்கும் வயது தடையல்ல. அவர் தனது லெக் பிரேக் மற்றும் ஸ்லைடர்கள் மூலம் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார். இது அவரது கடைசி உலகக் கோப்பை, ஒருநாள் தொடர் எல்லாம்.. அவருக்கு இது ஒரு பெரிய உலகக்கோப்பை.

7. குமார் சங்கக்காரா

சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கு எதிராக எழுச்சியுற்ற ஒரு மூத்த வீரர் சங்கக்காரா. அவரது சக வீரர் மகேலா ஜெயவர்தனே போல் இவருக்கும் ஆட்டங்களை எப்படி வெல்வது என்பது தெரியும். விக்கெட் கீப்பராகவும் அவருக்கு நிறைய அனுகூலங்கள் இருக்கின்றன. போட்டிகளை வெல்லவும் ரன்களைக் குவிக்கவும் அவருக்கு தீராத தாகம் உள்ளது. இவர் தோல்வியடைவது அரிது. துணைக் கண்டத்தின் பேட்டிங் சொர்க்கத்தை விடுத்து மற்ற நாடுகளிலும் அவர் சிறப்பாக ஆடியிருப்பதை அவரது புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு இது நல்ல உலகக் கோப்பையாக அமைந்தால் அவரது அணிக்கும் சிறப்பாகவே அமையும்.

8.கிறிஸ் கெய்ல்

சொல்லவேத் தேவையில்லை மேற்கிந்திய தீவுகள் அணி என்ற சக்கரத்தில் உராய்தலைத் தடுத்து சக்கரம் தங்குதடையின்றி ஓடவைப்பவர் கிறிஸ் கெய்ல். டி20 கிரிக்கெட் அதிரடி ஆட்டத்தை ஒருநாள் கிரிக்கெட்டிற்கு அவர் மாற்றிவிட்டால் மே.இ.தீவுகள் ரன்களைக் குவிக்கும், பிறகு வெற்றி சுலபமாகும். மே.இ.தீவுகள் அரையிறுதிக்கு வர முடியாவிட்டாலும் கெய்லின் ஆட்டம் இந்த உலகக் கோப்பையில் ஒரு பெரிய பொழுதுபோக்கு அமசம்தான்.

9. ரவீந்திர ஜடேஜா

முழுதும் ரன்களாக இருக்கும் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவின் பின்கள ஆட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ரவி அஸ்வினுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்தியாவின் தற்போதைய உண்மையான ஆல்ரவுண்டர் இவர்தான். பீல்டிங்கில் சிறந்தவர். பவர் பிளேயில் வீசக்கூடியவர். அவரது பீல்டிங்கே இந்திய அணிக்கு சில விக்கெட்டுகளைப் பெற்றுத் தந்து அதன் மூலம் ஆட்டம் திரும்பியுள்ளது.

10. ஜாவேத் அஹ்மதி (ஆப்கானிஸ்தான்):

துபாயில் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஜாவேத் நிறைய ரன்களைக் குவித்தார். நான் முதன் முதலில் 2011 அண்டர்-19 உலகக் கோப்பையின் போது இவரைப் பார்த்தேன். துணைக்கண்ட வீரர்கள் பலரிடம் இல்லாத ஒன்று இவரிடம் உள்ளது. அதாவது வேகமான, ஷாட் பிட்ச் பந்துகளை இவர் அனாயசமாக ஆட முடிவதை நான் பார்த்திருக்கிறேன். ஆப்கான் அணியை சாதாரணமாக எடைபோடவேண்டாம். அந்த அணி சிலபல அதிர்ச்சிகளை கொடுத்தால் அதில் ஜாவ்”ஏத் அஹ்மதி ஒரு முக்கியப் பங்கு வகிப்பார் என்றே நான் கருதுகிறேன்.


 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ayyasamy ram Wed Feb 11, 2015 5:44 am

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ராஜா Wed Feb 11, 2015 11:22 am

4. ஏ.பி.டீவிலியர்ஸ்:

எந்த ஒரு ஆட்டக்களமாக இருந்தாலும் அதில் எந்தவிதமான பந்து வீச்சாக இருந்தாலும் ஏ.பி.டீவிலியர்ஸ் ரன்களைக் குவிப்பார். ஏ.பி.டீவிலியர்ஸ் கிரீஸில் இருக்கும் வரையில் தென் ஆப்பிரிக்கா தோற்க வாய்ப்பில்லை.
உண்மை உண்மை , இவர் களத்தில் இருக்கும் வரைக்கும் , எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் தென்னாப்பரிக்கா வெல்லும் என நம்பலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா Fri Feb 13, 2015 12:29 am

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்து

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தும் 11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பிப்ரவரி 14-ம்தேதி முதல் மார்ச் 29-ம் தேதிவரை நடைபெற உள்ளது. . உலக கோப்பை கிரிக்கெட் போட்டி யின் தொடக்க விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு விழா தொடங்கியது.

மெல்போர்னின் ‘சிட்னி மையர் மியூசிக் பவுல்' என்ற திறந்தவெளி மைதானத்தில் நடக்கும் விழாவில், தொடரில் பங்கேற்கும் வீரர்கள், முன்னாள் முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்

வரும் 14-ஆம் தேதி உலக கோப்பை போட்டிகள் தொடங்குகின்றன. இந்திய அணி முதல் போட்டியாக தனது பரம எதிரியான பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. இதையடுத்து இந்திய அணி வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:-'' கேப்டன் தோனிக்கு எனது வாழ்த்துக்கள். உறுதியோடு விளையாடி இந்தியாவுக்கு பெருமையை தேடித்தருவீர்கள் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில்,” விராட் கோலி மீது ஒட்டு மொத்த நாடும் நம்பிக்கை வைத்துள்ளது. போட்டியில் சாதிக்க அவருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 Empty உலககோப்பை:கிரிக்கெட்:-

Post by ayyasamy ram Sat Feb 14, 2015 5:15 am

கிறைஸ்ட்சர்ஸ்:
நியூசிலாந்தில் நாட்டில் துவங்கிய உலககோப்பை கிரிக்கெட்
போட்டியின் முதல் ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை அணி,
பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி,
19ஒவரில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன் எடுத்து விளையாடி
வருகிறது.
-
--------------------------------
27 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு151 ரன் எடுத்து
விளையாடி வருகிறது
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ayyasamy ram Sat Feb 14, 2015 6:02 am

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 D8qhXJcbSbqf9kD7vi5c+205629.3
-
New Zealand 193/3 (33.3 ov)
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by M.Saranya Sat Feb 14, 2015 5:13 pm

அற்புதமான பதிவு...
தொடருங்கள்....

பார்க்க முடியாவிட்டாலும் கேட்டு திருப்தி அடைவேன்.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ராஜா Mon Feb 16, 2015 11:19 am

உலககோப்பையின் முதல் upset புன்னகை

West indies அணியை மிரள வைத்த அயர்லாந்து

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 X2sSX8PnSYCqN5BWdijs+WI-IRE
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா Mon Feb 16, 2015 3:59 pm

உலகக் கோப்பை போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் கோஹ்லி...!

அடிலெய்ட்: உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோஹ்லி.

உலகக் கோப்பை போட்டிகள் சனிக்கிழமை துவங்கி நடந்து வருகின்றது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்று காலை துவங்கியது. டாஸ் வென்ற கேப்டன் டோணி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

இன்றைய ஆட்டத்தில் மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய கோஹ்லி புதிய சாதனை படைத்துள்ளார்.

கோஹ்லி 126 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். அதில் 8 பவுண்டரிகளும் அடக்கம். உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்துள்ள முதல் இந்திய வீரர் கோஹ்லி தான். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக சச்சின் தான் 98 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இதுவரை ஒரேயொரு சதம் தான் அடிக்கப்பட்டிருந்தது. 2003ம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தானின் சயீத் அன்வர் 101 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் கோஹ்லி இன்றைய போட்டியில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் அடிக்கப்பட்டுள்ள சதங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சவ்ரவ் கங்குலி அதிகபட்சமாக 22 சதங்கள் அடித்திருந்தார். இந்நிலையில் இன்று தனது 22வது ஓ.டி.ஐ. சதத்தை அடித்து கங்குலியின் சாதனையை சமன் செய்துள்ளார் கோஹ்லி.


 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா Tue Feb 17, 2015 6:50 pm

ஸ்காட்லாந்தை வென்றது நியூசிலாந்து

இன்றைய உலக கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.

உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்தின. இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். தொடக்கத்திலேயே நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஸ்காட்லாந்து அணி 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் ஏதோ விளையாடிய மேச்சன் - பெரிங்டன் ஜோடி சற்று அணியின் ஸ்கோரை உயர்தியது. இதில் மேச்சன் 56 ரன்களிளும், பெரிங்டன் 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின் வந்த வீரர்கள் வரிசையாக ஆட்டமிழக்க இறுதியில் ஸ்காட்லாந்து அணி 36.2 ஓவரில் ஆல் அவுட் ஆனது. ஸ்காட்லாந்து அணியால் வெறும் 142 ரன்கள் மட்டுமே சேகரித்தனர்.

பின் சொர்ப்ப வெற்றி இலக்கை நோக்கி விளையாடியது நியூசிலாந்து அணி. தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். எனினும் குப்டில் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வில்லியம்சன் களத்தில் இணைந்தார்.இதைத்தொடர்ந்து மெக்கல்லமும் 15 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

பின்னர் எல்லியாட்-வில்லியம்சன் ஜோடி 40 ரன்கள் சேர்த்தது. மறுமுனையில் வில்லியம்சனும் 38 ரன்னில், எல்லியாட்டும் 29 ரன்னில் வெளியேறினர். பின் வந்த வீரர்கள் 24.5 ஓவரிலேயே 146 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெற்றி பெற செய்தனர்.ஆட்ட நாயகன் விருதை பவுல்ட் தட்டிச் சென்றார்.


 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 2 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum