ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

+2
மாணிக்கம் நடேசன்
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Empty ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by சிவா Sun Jan 18, 2015 1:39 am

ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வக்கீல் எஸ்.வளர்மதி போட்டியிடுவார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். தேர்தல் பணிகளை மேற்கொள்ள 50 பேர் கொண்ட குழுவையும் அவர் அறிவித்துள்ளார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.வளர்மதி, ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

வக்கீல் வளர்மதி

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, பிப்ரவரி 13-ந் தேதி நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இணைச்செயலாளர் வக்கீல் எஸ்.வளர்மதி தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

50 பேர் கொண்ட குழு

அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் உள்பட 50 பேர் கொண்ட குழுவையும் அவர் நியமித்துள்ளார்.

அ.தி.மு.க. நிர்வாகிகளும், அ.தி.மு.க.வினரும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளார்.

வாழ்த்து பெற்றார்

இதற்கிடையே ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.வளர்மதி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

வாழ்க்கை குறிப்பு

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள எஸ்.வளர்மதிக்கு 48 வயது ஆகிறது. வழக்கறிஞரான இவர் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இணைச் செயலாளர் ஆகவும், மாநகராட்சி 58-வது வார்டு கவுன்சிலர் ஆகவும் இருக்கிறார்.

இவரது கணவர் பெயர் சீதாராமன். இவர் பாய்லர் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வளர்மதி- சீதாராமன் தம்பதியினருக்கு ஹரி, ஸ்ரீராம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கல்லூரி படிப்பை முடித்துவிட்ட ஹரி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஸ்ரீராம், கல்லூரியில் படித்து வருகிறார். வளர்மதி திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவில் வசித்து வருகிறார். இவர் முத்தரையர் இனத்தை சேர்ந்தவர்.


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by சிவா Sun Jan 18, 2015 1:40 am

ஸ்ரீரங்கம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் 2 நாட்களில் அறிவிப்பு: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் 2 நாட்களில் அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, பா.ஜ.க. உயர் மட்டக்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், அமைப்பு பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு, முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 2 மணி வரை நடந்தது. கூட்டத்தில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம்?. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவர்களின் ஆதரவை எப்படி பெறலாம்? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- உயர் மட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் யார்?.

பதில்:- மாநில உயர் மட்டக்குழு கூட்டத்தில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டணி கட்சி தலைவர்களுடனும், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவுடனும் ஆலோசனை நடத்திய பிறகு, வேட்பாளர் யார் என்பதும், போட்டியிடும் முறை குறித்தும் அறிவிக்கப்படும்.

கேள்வி:- பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்துவது உறுதியா?.

பதில்:- பா.ஜ.க. சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதுதான் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பமாகும். கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி ஸ்ரீரங்கம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் 2 நாட்களில் முறையாக அறிவிக்கப்படுவார்.

கேள்வி:- பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெறாத பிற கட்சிகளிடம் ஆதரவு கேட்பீர்களா?.

பதில்:- தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று சக்தியாக மக்கள் பா.ஜ.க.வை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதை நிரூபிக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். செயல் திட்டங்களோடு மக்களை சந்திப்போம்.

கேள்வி:- அ.தி.மு.க.வில் தேர்தல் பணிக்குழு பொறுப்புக்கு 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்களே?.

பதில்:- 27 அமைச்சர்கள் உள்பட 50 பேர் தேர்தல் பணிக்குழுவில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள் என்றுதான் அர்த்தம். ஏனென்றால், தமிழகத்தில் அரசாங்கம் செயலற்று போய் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் கூட காப்பீட்டு உள்ளவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சென்னையில் இன்று (நேற்று) கூட அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன.

தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை எல்லாம், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தாக வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்த விடாமல், ஜனநாயக பார்முலாவை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by சிவா Sun Jan 18, 2015 1:40 am

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 27-ந் தேதி முடிவடைகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு முதல்- அமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த செப்டம்பர் மாதம் சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி தண்டனை விதிக்கப்பட்டதில் எம்.எல்.ஏ. பதவியையும், முதல்-அமைச்சர் பதவியையும் அவர் இழந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 16-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 27-ந் தேதி முடிவடைகிறது. வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினமாகும், மேலும் 26-ந் தேதி குடியரசு தின விழாவையொட்டி அன்றைய தினங்களில் வேட்பு மனுதாக்கல் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பு மனுக்கள் பரிசீலனை வருகிற 28-ந் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற வருகிற 30-ந் தேதி கடைசி நாளாகும். தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் வசதிக்காக ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்திலும் வேட்பு மனுக்கள் கொடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு விண்ணப்ப படிவங்களை சென்னையில் இருந்து தேர்தல் அதிகாரிகள் பெற்று திருச்சி கொண்டு வந்தனர்.

ஸ்ரீரங்கம் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்திலும் விண்ணப்ப படிவங்கள் உள்ளன. தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் விண்ணப்ப படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

வேட்பு மனு தாக்கலையொட்டி ஸ்ரீரங்கம் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வேட்பாளருடன் சேர்த்து மொத்தம் 5 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்யும் போது அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டும்.

அ.தி.மு.க. சார்பில் வளர்மதி போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுசெயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதேபோல தி.மு.க. சார்பில் என்.ஆனந்த் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பு தொடங்கி உள்ளது. இரு கட்சி வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும்.

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தே.மு.தி.க., த.மா.கா. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் நிலைப்பாடு இதுவரை தெரியவில்லை.

இதற்கிடையில் தி.மு.க. வேட்பாளர் என்.ஆனந்தை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் ஒரு அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by சிவா Sun Jan 18, 2015 1:48 am

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் WR_286625_416_327


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by சிவா Sun Jan 18, 2015 1:49 am

ஜெ.,வை விட கூடுதல் ஓட்டு வாங்குவாரா வளர்மதி? குழப்பத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள்

சென்னை: ஸ்ரீரங்கம் சட்டசபை தேர்தல் பணிக்கு, அ.தி.மு.க.,வினர் தயாராகி உள்ள நிலையில், தங்கள் கட்சி வேட்பாளரை எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில், அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுஉள்ளது.

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில், 2011 சட்ட சபை தேர்தலில், அக்கட்சி பொதுச்செயலர் ஜெயலலிதா போட்டியிட்டார். அவர் 1,05,328 ஓட்டுகள் பெற்றார். தி.மு.க., வேட்பாளர் ஆனந்தை, 41,488 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். தற்போது, ஜெயலலிதா பதவி இழந்ததால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாயம்: கடந்த முறை போட்டியிட்ட ஆனந்த், மீண்டும் தி.மு.க., சார்பில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., சார்பில், மாநகராட்சி கவுன்சிலர் வளர்மதி நிறுத்தப்பட்டுள்ளார். ஸ்ரீரங்கம் சட்டசபை

தொகுதியை பொறுத்தவரை, தேர்தலில் வெற்றி பெறுவோர், குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்று வந்தனர்.ஆனால், ஜெயலலிதா 41,488 ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில், அனைத்து அமைச்சர்களும், களம் இறக்கப்பட்டுள்ளதால், அதிக ஓட்டுகளை பெற்றுத் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு, அதிக ஓட்டுகள் பெற்றால், ஜெயலலிதாவை விட, கூடுதல் ஓட்டுகள் பெற்றவர் என்ற பெருமை கிடைத்து விடும். இதை ஜெயலலிதா எவ்வாறு எடுத்துக் கொள்வார் என்பது தெரியாததால், அதிகஓட்டுகள் பெற வேண்டுமா அல்லது குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றால் போதுமா? என, கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, கட்சி தலைமை நிர்வாகிகளிடம் கேட்டுள்ளனர். இதனிடையே அதற்கு அவர்கள், 'அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், ஜெயலலிதாவிற்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை தவறு என்பதை மக்கள், தேர்தல் மூலம் நிரூபித்துள்ளனர் என சொல்லலாம். ஓட்டுகள் வித்தியாசம் குறைந்தால், ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்ட அளவிற்கு, மக்கள் மற்றவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லிவிடலாம். எனவே, நீங்கள் எதையும் குழப்பிக் கொள்ளாமல், ஜெயலலிதா உத்தரவை ஏற்று, அதிக ஓட்டுகளைப் பெற பாடுபடுங்கள்' என, அறிவுரை வழங்கி உள்ளனர்.

எண்ணம்: 'முதல்வர் பன்னீர்செல்வம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, ஸ்ரீரங்கத்தில் கட்சி பெரும் வெற்றி அடைந்தால், அந்த பெருமை முழுக்க முழுக்க அவரையே சாரும்.

அதை ஜெயலலிதா விரும்பவில்லை. அதனால் தான், தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் மட்டும் விடப்பட்டிருக்கிறது. தேர்தல் பிரசாரத்துக்கும் கூட, பன்னீர்செல்வம் அனுப்பப்படுவாரா என்பது கேள்விக்குறி தான். ஒட்டுமொத்த வெற்றிக்கும் தான் மட்டுமே பின்புலமாக இருக்க வேண்டும் என்பது தான் ஜெயலலிதாவின் எண்ணம்' என, கட்சி வட்டாரத்தினர் கூறுகின்றனர்.


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by சிவா Sun Jan 18, 2015 1:50 am

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., - தி.மு.க., கணக்கு என்ன?

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என, கணக்கு போட்டு செயல்பட ஆரம்பித்திருக்கிறது. அதே நேரம், 60 ஆயிரம் ஓட்டுகளை பெற்று, டெபாசிட்டை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் தி.மு.க., களம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெறஉள்ளது. கடந்த 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா போட்டியிட்டு, 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இந்த இடைத்தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என, அ.தி.மு.க.,வினர் வியூகம் வைத்துள்ளனர். இதற்காக, நடுநிலை ஓட்டுகள், பா.ஜ., காங்கிரஸ் போன்ற கட்சி களின் ஓட்டுகளை பெற்றாக வேண்டும் என, களமிறங்கி உள்ளனர். இதற்காக, ஒரு ஒன்றியத்திற்கு ஒரு அமைச்சர் என, தேர்தல் பணிக்கு அனுப்பப்படுகின்றனர். ஒரு கிளைக்கு, ஒரு எம்.எல்.ஏ., என, தேர்தல் பணி பிரித்துக் கொடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட கிளைக்கு வந்து தங்கும் எம்.எல்.ஏ.,க்கள், காலை, மாலை என இருவேளைகளும், வாக்காளர்களை சந்தித்து, ஆதரவு திரட்டுவர். வாக்காளர்களின் தேவை அறிந்து, அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை அனுதாப அலையாக மாற்றவும் வியூகம் வகுக்கப்படுவதாக கூறப்படுகிறது.தி.மு.க., வேட்பாளர் ஆனந்த் ஏற்கனவே ஜெயலலிதாவை எதிர்த்து போட்டி யிட்டவர்; முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

அவரை வெற்றி பெற வைக்க, கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழி, சில வியூகங்களை, கருணாநிதியிடம் சொல்லியிருக்கிறார்.அதாவது, ஸ்ரீரங்கம் தொகுதி யில் 40 சதவீதம் பேர் முத்தரையர்கள், 30 சதவீதம் பேர் ஆதி திராவிடர்கள், 15 சதவீதம் பேர் பிராமணர்கள், 15 சதவீதம் பேர் இதர சமுதாயத்தினர் என்ற அளவில் உள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் முத்தரையர்கள் முழுமையாக புறக்கணிக்கப்படுகின்றனர். இதை, தி.மு.க., தரப்பில் அந்த மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியை உடனடியாக துவங்குவதோடு, முத்தரையர்களுக்கு தி.மு.க., ஆட்சி காலத்தில் செய்தவற்றை எல்லாம் பட்டியல் போட்டு, தி.மு.க., தரப்பில் ஸ்ரீரங்கத்தில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என, தெரிவித்து உள்ளார். இதற்காக, முத்தரையர் சங்க பிரதிநிதிகளிடமும், தி.மு.க., சார்பில், கனிமொழி பேசியதாக தெரிகிறது.

இதனால், வன்னியர்கள் அதிகம் நிரம்பிய ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில், கனிமொழியை தீவிர பிரசாரத்துக்கு பயன்படுத்தியது போல, ஸ்ரீரங்கம் தொகுதியிலும், முத்த ரையர்கள் ஓட்டுகளை பெற, கனிமொழியை தீவிர பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ள, தி.மு.க., தலைமை திட்டமிட்டிருக்கிறது.தி.மு.க., சார்பில் வெற்றியை நோக்கி போராடலாம்; குறைந்தபட்சம் 60 ஆயிரம் ஓட்டுகளையாவது நிச்சயம் பெற வேண்டும் என்ற அடிப்படையில், தேர்தல் பணிகளில் இறங்கி இருக்கின்றனர். இதற்கு, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினும் முழுமையாக ஆதரவளித்திருப்பதாக சொல்கின்றனர்.


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by சிவா Sun Jan 18, 2015 2:18 am

தி.மு.க.,வை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: கருணாநிதி கோரிக்கை

சென்னை: 'தி.மு.க., வேட்பாளர் ஆனந்திற்கு, அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பான, அவரது அறிக்கை:அ.தி.மு.க. அரசு, தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்து விட்டு, ஜனநாயக விரோத, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில், எவ்வித கொள்கை முடிவுகளோ, தொலை நோக்கு திட்டங்களோ வகுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரட்டை நிர்வாகம் நடைபெறுகின்ற அளவுக்கு, குளறுபடிகள் ஏற்பட்டு, தமிழகத்தின் உரிமைகள், மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, ஆரோக்கியமான விவாதங்களோ, முடிவுகளோ எடுக்கப்படாமல், அரசு இயந்திரம் முற்றிலுமாக செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

காவிரி, முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, அமராவதி பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பிரச்னை, மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது போன்ற மாநில உரிமைகள் குறித்த பிரச்னைகளிலும், மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, பால் விலை, பஸ் கட்டண உயர்வு போன்றவற்றில் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர். மாநிலத்தில் பரவி வரும், 'டெங்கு' பறவை காய்ச்சல் உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகள் என, மக்கள் பிரச்னைகளுக்குரிய நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. எனவே, ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தி.மு.க., வேட்பாளருக்கு, அனைத்து கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும்.m இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by சிவா Sun Jan 18, 2015 12:57 pm

த.மா.கா., போட்டியில்லை - வாசன்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலி்ல் த.மா.,கா., போட்டியிடாது என அக்கடசியின் தலைவர் வாசன் தெரிவித்துள்ளார். மேலும், எந்த விதத்திலும் இந்த தேர்தலில் பங்கேற்க மாட்டோம் என அவர் அறிவித்துள்ளர். வரும் 2016ம் தேர்தலை கருத்தில் கொண்டு மட்டுமே செயலாற்றுவோம் என அவர் கூறினார்.


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by சிவா Sun Jan 18, 2015 11:53 pm


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் செலவில் விலக்கு பெற அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடு

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலின் போது தேர்தல் செலவில் விலக்கு பெற பிரசாரம் செய்வோரின் பட்டியலை தாக்கல் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெயர் கொடுக்கவேண்டும்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ந் தேதி நடைபெறுகிறது. அந்தத் தேர்தலுக்கான அறிவிப்பாணை வருகிற 19-ந் தேதி வெளியாகிறது.

இந்த தேர்தலுக்கான பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கும் கட்சிகளின் தலைவர்கள், பிரசார பயண செலவில் தேர்தல் விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த சலுகைகளைப் பெறுவதற்காக, 19-ந் தேதியில் இருந்து 27-ந் தேதிக்குள் அந்தத் தலைவர்களின் பெயர், இந்திய தேர்தல் கமிஷனிடமும், தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரியிடமும் கொடுக்கப்பட வேண்டும்.

விமான பயணம் உட்பட

அங்கீகாரம் பெறாத கட்சிகளின் தலைவர்கள் 20 பேருக்கும், அங்கீகாரம் பெற்ற கட்சிகளில் 40 பேருக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி, பெயர் கொடுக்கப்பட்ட தலைவர்கள், தேர்தல் பிரசாரத்துக்காக விமானம் மற்றும் வேறு வாகனங்களில் மேற்கொள்ளும் பயணத்துக்கான செலவு எதுவும் அந்த கட்சி வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படாது.

அந்த கட்சித்தலைவரின் பயணச்செலவு தவிர, வேட்பாளரின் பிரசாரத்துக்காக அந்த கட்சி மேற்கொள்ளும் மற்ற செலவுகள் அனைத்தும் வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by சிவா Mon Jan 19, 2015 12:30 am

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக 64 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது திமுக.

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான இக்குழுவில் பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். புதுச்சேரியிலிருந்தும் கூட 2 பேரை இக்குழுவில் போட்டுள்ளனர்.

அதிமுக தரப்பில் அமைச்சர்கள் அடங்கிய பிரமாண்டக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையி்ல அதேபோல திமுகவும் தன் பங்குக்கு ஒரு ராட்சத குழுவை அறிவித்துள்ளதால் போட்டி களை கட்டத் தொடங்கியுள்ளது.

அதிமுகவுக்கு சமமாக பிரமாண்டம் காட்டும் திமுக... ஸ்ரீரங்கம் தேர்தலுக்கு 64 பேர் கொண்ட பணிக்குழு!

திமுக குழு விவரம்:

பணிக்குழு தலைவர் - கே.என். நேரு

பணிக்குழு உறுப்பினர்கள்
ஐ. பெரியசாமி
வி.பி. துரைசாமி
திருச்சி சிவா, எம்.பி.,
ஆ. இராசா
திருச்சி என். செல்வராஜ்
திருச்சி செல்வேந்திரன்
மு. அன்பழகன்
சுப. தங்கவேலன்
தூத்துக்குடி என். பெரியசாமி
இரா. ஆவுடையப்பன்
கே.சி. பழனிசாமி
பொங்கலூர் நா. பழனிசாமி
க. பொன்முடி
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
எ.வ. வேலு
கும்முடிப்பூண்டி கே. வேணு
எல். மூக்கையா
கேஆர். பெரியகருப்பன்
இராணிப்பேட்டை ஆர். காந்தி
ஜெ. அன்பழகன்
என். சுரேஷ்ராஜன்
தா.மோ. அன்பரசன்
நீலகிரி கா. இராமச்சந்திரன்
பா.மு. முபாரக்
மு.பெ. சாமிநாதன்
என்.கே.கே.பி. ராஜா
டி.எம். செல்வகணபதி
எஸ்.ஆர். சிவலிங்கம்
சேலம் ஆர். இராஜேந்திரன்
ஏ.கே.எஸ். விஜயன்
பூண்டி கே. கலைவாணன்
செ. காந்திசெல்வன்
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்
தங்கம் தென்னரசு
பி. மூர்த்தி
வ. வேலுசாமி
எஸ்.எஸ். சிவசங்கர்
கோ. தளபதி
பி.கே. சேகர்பாபு
பெரியண்ணன். அரசு
நன்னியூர் இராஜேந்திரன்
மாதவரம் எஸ். சுதர்சனம்
பி.கே. சேகர்பாபு
மா. சுப்பிரமணியன்
ஆவடி சா.மு. நாசர்
க.சுந்தர்
ஏ.பி. நந்தகுமார்
ஆர். சிவானந்தம்
சு. கல்யாணசுந்தரம்
துரை. சந்திரசேகரன்
குத்தாலம் கல்யாணம்
ந. தியாகராஜன்
குன்னம் சி.ராஜேந்திரன்
டி. செங்குட்டுவன்
இ.ஜி. சுகவனம்
ஒய். பிரகாஷ்
திருப்பூர் க. செல்வராஜ்
மு. மணிமாறன்
இ.பெ. செந்தில்குமார்
அர. சக்கரபாணி
மு. அப்துல் வஹாப்
டி.பி.எம். மைதீன்கான்
புதுச்சேரி எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன்
புதுச்சேரி ஆர். சிவா


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum