ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:29 pm

» டேஸ்டி புடலங்காய் கூட்டு
by ayyasamy ram Today at 9:25 pm

» பால் சுரைக்காய் கூட்டு
by ayyasamy ram Today at 9:25 pm

» 'நீட்'டையும் தாண்டி நீண்டுள்ளது உலகம்!
by T.N.Balasubramanian Today at 4:52 pm

» கங்கை நதி நீர் தரம் உயர்வு
by T.N.Balasubramanian Today at 4:41 pm

» தாதா சாகேப் பால்கே' விருது பெற்றார் ரஜினி; குருவுக்கு சமர்ப்பணம்
by T.N.Balasubramanian Today at 4:36 pm

» கழுத்து வலிக்கு சிகிச்சை பெற்ற நோயாளியின் Feedback
by curesure4u Today at 11:41 am

» சமாஜ்வாதிக்கு போட்டியாக பிரதிக்யா யாத்திரை: பிரியங்கா துவக்கி வைத்தார்
by Dr.S.Soundarapandian Today at 10:30 am

» 10 கட்டளைகள் முக்கியம்: காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர புதிய விதிகள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 10:27 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:21 am

» என் குழந்தையைக் களவாடியவன் - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 9:54 pm

» tamil law books
by T.N.Balasubramanian Yesterday at 8:54 pm

» போச்சு போங்க.. சீனாவில் நடந்த ஹேக்கர்ஸ் போட்டி.. ஜஸ்ட் 1 விநாடியில் ஹேக் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன்
by T.N.Balasubramanian Yesterday at 8:46 pm

» மழைக்குணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஒன்றுமில்லாத எலும்புக்காடு - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:39 pm

» போப்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» 4 மாநகராட்சிகள் கவர்னர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ரேஷன் கடைகளில் இனி பனை வெல்லம் கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by nagarajanrtc Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by nagarajanrtc Yesterday at 5:51 pm

» கடம்பவனத்துக் குயில் - உதயணன்
by nagarajanrtc Yesterday at 5:41 pm

» கண்டு பிடியுங்கள் 8 வித்தியாசங்கள்
by durfult Yesterday at 4:39 pm

» மறைந்த நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து சிவகுமார்…
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» நெஞ்சுக்கு நீதி - திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தீபாவளி ரேஸில் இணைந்த சூர்யா படம்
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» வடிவேலிடம் கால்ஷீட் கேட்கும் தமிழின் முன்னணி இயக்குனர்கள் ..
by Dr.S.Soundarapandian Yesterday at 9:57 am

» ’கூழாங்கல்’படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 am

» மரக்கிளைக் கிளிகள்- கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» தொற்று - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாளைய நெசவுக்கான இரவுத்தறி
by ayyasamy ram Yesterday at 8:49 am

» ஓட்டு - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:49 am

» எஞ்சியிருக்கும் கேள்வி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:48 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» டில்லி கேரட் அல்வா
by ayyasamy ram Yesterday at 8:45 am

» ஈஸி மதுரா பேடா
by ayyasamy ram Yesterday at 8:44 am

» குரல் வளத்தை மேம்படுத்த ஆயுர்வேதம் கூறும் அறிவுரைகள்
by curesure4u Yesterday at 8:42 am

» கேஸ், ஆயில் நகைச்சுவை
by mohamed nizamudeen Sat Oct 23, 2021 10:53 pm

» சண்டிக்கீரை மரம்
by ayyasamy ram Sat Oct 23, 2021 10:15 pm

» தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது..!
by ayyasamy ram Sat Oct 23, 2021 10:11 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Periya Sat Oct 23, 2021 7:56 pm

» காதலனை மணமுடிக்க பரிகாரம் வரை சென்ற நயன்தாரா...
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 7:05 pm

» நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் மரணம், இயக்குனர் கவலைக்கிடம்..
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 6:53 pm

» எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!! துணி வாங்கினால் ஆடு இலவசம்!!
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 6:45 pm

» கட்டம் சொல்லுது – திரைவிமர்சனம் (புதிய முயற்சி )
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 6:36 pm

» மாணவன் உருவாக்கிய சோலார் சைக்கிள்
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 4:59 pm

» ஒன்பது ஓட்டைகள் இருந்தும்…
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 4:47 pm

» உலக கோப்பை போட்டி அட்டவணை
by ayyasamy ram Sat Oct 23, 2021 4:21 pm

» பில்டர் கோல்ட் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Sat Oct 23, 2021 4:20 pm

» அம்மா வேடத்தில் சீதா
by ayyasamy ram Sat Oct 23, 2021 4:19 pm

» சவுதியில் பிரபலமாகும் சீனமொழி
by ayyasamy ram Sat Oct 23, 2021 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


பாடிய முதல் பாட்டு

+9
விமந்தனி
Dr.S.Soundarapandian
ராஜா
சிவா
veeyaar
T.N.Balasubramanian
krishnaamma
mkrsantharam
ayyasamy ram
13 posters

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Empty பாடிய முதல் பாட்டு

Post by ayyasamy ram Mon Jan 12, 2015 6:19 am

First topic message reminder :

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 WgQHR3c8Tc6KbG6e1Mcw+5
-
-

 பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் “பெற்ற தாய்’. அதில் அவர் பாடிய பாடல் “ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்’ என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா.

-
 டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : “மலைக்கள்ளன்’. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

-
 பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் “சிந்தனை என் செல்வமே’ என்பதாகும். இடம் பெற்ற படம்:
“ஜாதகம்’

-
 பி.லீலா பாடிய முதல்பாடல் “ஜெகம் புகழும் புண்ணிய கதை’. படம் :
“லவகுசா’.

-
 “பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தின் மூலம் முதன் முதலாகத் தமிழில் பாடினார் எஸ்.பி. சைலஜா. அவர் பாடிய பாடல்: “சோலைக் குயிலே’ படத்தின் இசையமைப்பாளர்: இளையராஜா.

-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13143

https://rammalar.wordpress.com/

Back to top Go down


3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by mkrsantharam Sun Jan 25, 2015 4:43 pm

  பி . லீலா பாடிய அரிய பாடல்கள் .......

தொடர்ச்சி .......... !
 
   " வணக்கம் சார் வணக்கம் !

வாய் பேசாமலிருப்பது ஏன் சுணக்கம் !  "
 "என்ன சார் !  யாருக்கு வணக்கம் போடுகிறீர்கள் ? "

என்று என்னைக் 'கலாய்க்கிறீர்களா !

பி .லீலா பாடிய அடுத்த பாடலின் முதல் அடிகளே அப்படித்தான்

வருகிறது !
    படம் :


" முன்று பெண்கள் " ( 1956)
" என்னய்யா நீர் !  இப்படி பெயர் போட்டு தமிழில்

ஒரு படம் வந்தது என்று ' டூப் '   சொல்லுகிறீகள் ! "

என்று யாராவது என்னை ' நையப் புடைக்காமல் ' இருப்பதற்காக ( ! )

எங்கேயோ ' நோண்டி '  .....துடைத்து .....'அச்சும் அச்சும் ' என்று தும்மிக்கொண்டு

பழைய 'போஸ்டர்' கீழே கொடுத்துள்ளேன் !


நல்லா பார்த்துக்குங்கோப்பா !


3 - பாடிய முதல் பாட்டு - Page 2 3envxv[img:432c]https://www.filepicker.io/api/file/A4FMl1s3RgOwcKUIHEIM+3[en.JPG[/img:432c]http://www.photouploads.com/images/3en.jpg
" சரி ! அது போகட்டும் !

யார் அந்த ' 3 பெண்கள் ' -

நயன்தாரா - திரிஷா - ஹன்சிகா மவுத்வாணி - யா ? "

என்றா  " சொள்ளு" கிறீர்கள் - மன்னிக்கவும் - சொல்கிறீர்கள் ?


அத்தான் இல்லை !

அவர்கள் :


1. எம் .என். ராஜம்

2 . சி.கே . சரஸ்வதி

3. கிரிஜா !சரி , இந்த பெயர்களை உடைய நடிகைகளை உங்களுக்கு

அடையாளம் புரிகிறதோ இல்லையோ ......தெரியலை .....

இன்னொரு கேள்வி கேட்கிறேன் !"இந்த " 3 பெண்கள் "  படத்திற்கு இசை அமைத்தது யார் ? "


என்றா கேட்கிறீர்கள் ?


கேட்டிங்களே .....நல்லா மாடிக்கிட்டீங்க்க .....ம் ....ம் ...மாட்டிக்கிட்டீங்க !


இந்த படத்திற்கு இசை : 3 பெண்கள் ......ஹி....ஹி ....

3 பேர்கள் !


அவர்கள் :


1. குன்னக்குடி வெங்கட்ராமய்யர் .


2. அஸ்வத்தம்மா ( வீணை காயத்திரி யின் அப்பா ! )

3. . கே . வி . மகாதேவன் .


    " சரி , அய்யா !  இந்த பாடலில் பி .லீலா வுடன்

பாடும் ஆண் பாடகர் யார் , அதையாவது நமக்கு விளங்கட்டும் ! "


என்றா கேட்கிறீர்கள் ?


அப்படியே " மெர்சல் " ஆகிவிடுவீர்கள் , அந்த பாடகர் பெயரை நான்

சொல்லிவிட்டால் !


" என் அய்யா , அவர் பாகவதரா ? "


இல்லை ....... அதுக்கும் மேலே !அவர் பெயர் :


டி. எ . மோதி !


" சரி, சரி , சும்மா கேட்டேன் , ஆளை விடு ! "

என்கிறீர்களா !

இந்த டி . எ . மோதி அவர்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு சொல்லட்டுமா ?


1. " காணா இன்பம் கனிந்ததேனோ " - " சபாஷ் மீனா " படப் பாடலில்

சுசீலா வுடன் பாடியவர் !


2. அந்த கால பின்னணிப் பாடகி நித்ய கலா வின் ' வூட்டுக்காரர் ' - அத்தான் -

வீட்டுக்காரர் !' சரி , பாடல் எப்படி ? '

என்றா கேட்கிறீர்கள் ?


பாடலுக்கென்ன குறைச்சல் !

பி. லீலா , " டாக்டர் லீலா "   ஆக மாறி அட்டகாசமாக

பாடுகிறார் !3 - பாடிய முதல் பாட்டு - Page 2 QTPFL1uTymNTsdKWTW7f+PS-PL


 (  லீலா அவர்களுடன் சுசீலா அம்மா ! )


" இதய வேதனையா சொல்லுங்க ! "

என்று பாடும்போது அவர் குரல் இன்னும் அழகாக

மாறி விடுகிறது !


டி எ மோதி ?

அவர் குரலும் மாறி விடுகிறது , அசல் நோயாளி பாடுவது பாடுகிறார் !


கேளுங்கோ நயனா , கேளுங்கோ !
    பாடல் :http://picosong.com/LYrn/

 

  எச்சரிக்கை !

பி .லீலா வின் அபூர்வ பாடல்கள் இன்னும்

தொடரும் !
எம்கேஆர்சாந்தாராம்


Last edited by mkrsantharam on Sun Jan 25, 2015 5:01 pm; edited 1 time in total
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by T.N.Balasubramanian Sun Jan 25, 2015 5:01 pm

அரிய தகவல், ரசிக்கும் வகையில் அறிய தந்தமைக்கு நன்றி நன்றி எம்கே ஆர் அவர்களே

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30191
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10864

Back to top Go down

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by ayyasamy ram Mon Jan 26, 2015 4:27 pm

அருமையான தகவல் பகிர்வுகள்...
-
3 - பாடிய முதல் பாட்டு - Page 2 1571444738
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13143

https://rammalar.wordpress.com/

Back to top Go down

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by mkrsantharam Sun Feb 01, 2015 5:38 pm

கடிதங்களை எழுதிய :

திரு. அய்யா சாமி மற்றும்

திரு . பாலசுப்பிரமணியன்

ஆகியோருக்கு நன்றி !பி . லீலா அவர்கள் தொடர்ந்து பாடுகிறார் !

" சில சில ஆண்டுகள் முன்னம் ,

பலரும் போற்றும் வண்ணம் ,

சேர்ந்து வாழ்ந்தது ரெண்டு அன்னம் ! "


" எங்கள் செல்வி " ( 1960 )
3 - பாடிய முதல் பாட்டு - Page 2 5SBWgYASSjig5sLbBpeS+Art-350
ஏ. நாகேஸ்வரராவும் , அஞ்சலி தேவியும்

படத்தில் கண்வன் - மனைவியாக வருகின்றனர் .


அவர்களுக்கு ஒரு பெண் குழ்ந்தை .


அமைதியுடன் வாழ்ந்த அந்த குடும்பத்தில் ஒரு புயல்

அடித்தது .

நடிகர் கே . பாலாஜியின் வடிவில் அந்த புயல் !

நடிகர் நாகார்ஜுனனின் அப்பா ( அத்தான் , ஏ . நாகேஸ்வர ராவை சொல்கிறேன் ! )

இசையமைப்பாளர் ஆதி நாராயன் ராவின் மனைவியை ( அத்தான் ,

அஞ்சலி தேவியைத் தான் சொல்கிறேன் ! )

வீணாக சந்தேகிக்கிறார் !

விளைவு ?

குடும்பம் சின்னா பின்னமாக ஆகின்றது !

குழ்ந்தை ஒரு பக்கம் !

அமலாவின் மாமனார் ( அத்தான், ஏ . நாகேஸ்வரராவை சொல்கிறேன் ! )

ஒரு பக்கம் !

" அடுத்த வீட்டுப் பெண் " பட நாயகி ( அத்தான் , நடிகை அஞ்சலி தேவி ! )

ஒரு பக்கம் !


ஆக மொத்தத்தில் அந்த குடும்பம் :

" யாதோன் கி பாராத் " ஆகிவிடுகிறது !


அஞ்சலிதேவி , குழந்தையும் , கணவனையும் பிரிந்து நடிகர்

டி. எஸ் . பாலய்யா வின் ஆதரவில் வாழ்ந்து ஒரு பள்ளிக்கூடத்தில்

ஆசிரியை வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் .


அஞ்சலி , எப்போதும் தன குழ்ந்தை -கம் - கணவர் நினைவுடன்

வாழ்கிறார் !

பள்ளிக்கூடத்தில் பள்ளிச் சிறார்கள் , அஞ்சலி தேவி டீச்சரிடம்

" ஒரு கதை சொல்லுங்க , டீச்சர் ! "

என்று நச்சரிக்க ........

பாவம் ....அந்த அந்த ஆசிரியை ஆக இருக்கும் தாய் ,

தன கதையை யே பாட்டாக பாடுகிறார் !இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமே ....

பாடலின் " சிடுவேஷன் ! "


இந்த " சிடுவேஷன் " ஐ பி. லீலா அவர்களும் புரிந்து கொண்டு

பாடுகிறார் , கேளுங்கள் , மிக அற்புதமாக இருக்கும் !1 . அந்த கதையில் அன்னங்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்தன

என்பதை நடிகை அஞ்சலிதேவியின் முக பாவங்களை விட பின்னணிப் பாடகி

பி.லீலா வின் குரலில் நாம் கண்டு கொள்ளலாம் !

2. டீச்சரின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் சிறார்களின்

குதூகலம் நம்மை மகிழ்விக்கும் !3. அப்படி மகிழ்ச்சியுடன் பாடும் அஞ்சலிதேவி அல்லது பி .லீலா

எப்படி , பாடலின் இறுதியில் மாறிவிடுவார் :

பாருங்கள் / கேளுங்கள் !


4. பாடலின் இறுதியில் பி . லீலா அழ ஆரம்பித்துவிடுவார் .....


" இப்படி மகிந்திடும் நாளையிலே நேர்ந்தது கொடிய

பெரும் புயலே "


மேலே குறிப்பிட்ட பாடல் வரிகளை பாட ஆரம்பித்தவுடன் பி . லீலா

ஆழ ஆரம்பித்துவிடுவார் !


அழ ஆரம்பித்ததோடும் அல்லாமல் பாடவும் செய்வார் !

இப்படி அழுது கொண்டே பாடுவது என்பது அவளவு

எளிது அல்லவே !


பாடல்வரிகளை தவறாமல் உச்சரிக்க வேண்டும் !

உடன் அழ வேண்டும் !

உணர்ச்சிகளை தவறாமல் குரலில் வெளிப்படுத்த வேண்டு்ம் !இவை எல்லாமெ நன்றாக வெளிப்படுத்தி பாடகிறார் , பி .லீலா !
( இப்படி "அழுது கொண்டே பாடுவதில்

" குரல் தேர்ந்தவர் " / கை தேர்ந்தவர் :


டி எம் எஸ் !


" தங்கப் பதக்கம் " படத்தில் " சோதனை மேல் சோதனை "

பாட்டில் :


" தானாட வில்லை அம்மா , சதை ஆடுது ! "

என்கிற இடத்திலும்" தாயக் காத்த தனயன் " படத்தில் :

" நடக்கும் என்பார் நடக்காது "

பாட்டில் :


" பிரித்த பந்தல் கோலம் கண்டு "


என்று பாடுகின்ற இடங்களில் , டி எம் எஸ்

அழுவார் / பாடுவார் ! )
4. லீலா அழுது கொண்டே பாடும் போது குழந்தைகளும்

சோகமாகி முகங்களை தூக்கி வைத்துக் கொண்டு

சோகமாக இருப்பது ........கிரேட் !5. இந்த காட்சியில் நடிகை அஞ்சலிதேவி சும்மா " டம்மி பீஸ் "

மட்டும்தான் ......

நடிப்பதும் பாடுவதும் பி .லீலா தானே !


பி . லீலா அவர்களின் பாடலின் சிறப்பை இதன் மூலம்

விளங்குகிறது அல்லவா !

" சில சில ஆண்டுகள் முன்னம் "


பாடல் : ஆடியோ :


http://picosong.com/LXTE/விடியோ :
தொடரும் .


எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by மாணிக்கம் நடேசன் Mon Feb 23, 2015 11:28 am

பாடிய முதல் பாட்டு என்னும் திரியை நான் இதுவரை பார்த்ததில்லை, இன்று நமது அன்பான டாக்டர் சார் அத்திரியைப் பற்றி எழுதி இருந்தார், கதவே திறந்து உள்ளே நுழைந்தேன், ஆஹா அங்கு எனக்கு தேவையான பல அற்புத புதையல்களைக் கண்டேன். எப்படி டாக்டர் சார் இதையெல்லாம் பத்திரப்படுத்தி எங்களுக்கு சுவைக்க தருகிறீர்கள்? அற்காக முதலில் எனது மனதார்ந்த நன்றி டாக்டர் சார். இங்கும் உங்கள் புனித பணியை தொடரட்டும். நன்றி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4563
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1428

Back to top Go down

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by M.Saranya Mon Feb 23, 2015 12:35 pm

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 3838410834 3 - பாடிய முதல் பாட்டு - Page 2 3838410834


3 - பாடிய முதல் பாட்டு - Page 2 103459460
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by மாணிக்கம் நடேசன் Mon Feb 23, 2015 12:53 pm

1951 ம் வெளிவந்த தேவகி என்னும் காவியத்தை   இந்த  இணைப்பின் வழி காணலாம்.

http://worldfloat.com/Videos/Default.aspx#/view/dQmG4qs7zVc
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4563
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1428

Back to top Go down

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by மாணிக்கம் நடேசன் Thu Mar 05, 2015 11:28 am

பேரின்பமே வாழ்விலே, நல்ல தரத்தில் தந்து எங்களை பேரின்பத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் டாக்டர் சார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4563
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1428

Back to top Go down

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by mkrsantharam Mon Mar 23, 2015 5:27 pm

பி . லீலா பாடிய அரிய பாடல்கள் .......

தொடர்ச்சி .......... !


" காசிருந்தால் கை மேலே குஷியாலே மனம் போலே

இந்த கலியுகத்தை வலை வீசிலாம் .....

அந்த கடவுளை விலை பேசலாம் ! "
படம் : " மனிதன் " ( 1953 )

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Hqdefaqmq


பாடலை எழுதியவர் : ' சுரபி '


இசை : எஸ் . வி . வெங்கட்ராமன் .
' மனிதன் ' ?

இப்படி ஒரு பெயரில் திரைப்படமா ? '


ஆமாம் , ஸ்வாமி !


டி. கே . ஷண்மகம் , டி . கே . பகவதி , மாதுரி தேவி ,

பண்டரி பாய் , டி . கே . நடராசன் ஆகியோர் நடித்து

" ஜுபிடர் " பட நிறுவனம் தயாரித்த படம் !


இந்த படத்தின் கதை வெற்றி பெற்ற நாடகமாக :


" டி .கே. எஸ் சகோதரர்கள் "

அரங்கேற்றிய வரலாறு உண்டு !


இந்த நாடகத்தைப் பார்த்துதான் 'ஜுபிடர் ' பட நிறுவனம்

இந்த கதையை படமாக்கியது !" படத்தின் கதை , என்னய்யா ? "


சொல்றேன் .....சொல்றேன் .....

கதையை சொன்னால் உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ ....

அதெல்லாம் ....' ஐ டோன்ட் கேர் ' ....சொல்லிவிடுகிறேனே !

கணவனை பிரிந்து வாழும் மனைவி ....

சந்தர்ப்ப வசத்தால் தனக்குத் தெரிந்த ஓவியன் ஒருவனிடம்

தன மனதை பறி கொடுத்து பின்னர் தன

கற்பையும்

இழந்து விடுகிறாள் !

தெரியாமல் நடந்து விட்ட இந்த பிரச்சனையின் தீவரம் எண்ணி

அந்த பெண் வீட்டை விட்டு வெளியேற ,

கால் எலும்பு ஒரு விபத்தில் முறிய ....

அவளை ஒரு டாக்டர் காப்பாற்ற ....

விஷயம் அறிந்த கணவன் தன மனைவியை

பெருந்தன்மையுடன் மன்னித்து அவளை ஏற்றுக்கொள்ள

முன் வரும்போது ...........அந்த அதிர்ச்சியில் மனைவி

இறந்து விடுகிறாள் !3 - பாடிய முதல் பாட்டு - Page 2 10cpmanith'இத்தாம்ப்பா கதை ! '


கதை பிடித்திருக்கா ?" உங்களுக்கு பிடித்திருக்கா ? "


என்று என்னைக் கேட்கிறீர்களா !


அப்புறம் வந்த " ஓர் ஊதாப்பு கண்சிமிட்டுகிறது " படமே எனக்கு

பிடிக்கவில்லை , இந்த படமா எனக்கு பிடிக்கும் !" சரி , படம் எப்படி ஓடியதா ? "


அத்தான் இல்லை !

வித்தியாசமான கசப்பான கதையை முழுங்க யாரும் தயாராக

இல்லை .....அதற்கு காரணம் :


மேடை நாடகத்தில் மனைவி வேடத்தில் :

எம் .எஸ் . திரெளபதி

என்கிற நடிகை சிறப்பாக நடித்து நாடகத்தை மெருகேற்றினார் !

படத்தில் ?


செளகார் ஜானகியின் சகோதரி கிருஷ்ணகுமாரி அந்த மனைவி


3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Downlowqw


வேடத்தில் நடித்தார் .....அவரால் சிறப்பாக நடிக்க முடியவில்லையாம் !

பின்ன என்னவாம் !


'நடிகையர் திலகம் ' சாவித்திரி நடிக்க வெண்டிய வேடத்தில்

நயன்தாரா நடித்தால் என்னவாகும் !
அதை விட சுவையான இன்னொரு செய்தி :


சென்னை சைதாபேட்டை பகுதியில் :


" நூர்ஜஹான் "

என்கிற பெயரில் ஒரு தியேட்டர் 1953 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு

அந்த தியேட்டரில் முதல் படமாக திரையிட ' மனிதன் ' படத்தை

திரை இட ஏற்பாடு செய்தனர் !


தியேட்டரை திறந்து வைக்க :

எம் . எ . முத்தையா செட்டியார் அவர்களை அழைத்து

வந்திருந்தனர் !

செட்டியார் வந்தார் ......

வந்தவர் தியேட்டரை திறக்க கத்திரிக்கோலை தேடவில்லை !

மாறாக ....


" என்னப்பா இந்த தியேட்டரில் முதல் படம் ? "


என்று கேட்டுவைத்தார் !

விழாக்குழுவினர் ' மனிதன் ' என்று சொல்ல ....செட்டியார்

" மனிதன் ' கதை என்ன ? "

என்று கேட்டுத்தொளைத்தார் !

" மனிதன் " கதை அவருக்கு சொல்லப்பட்டது !


கடுப்பானார் செட்டியார் அவர்கள் ! !

கோபத்தின் உச்சிக்கு போய்விட்டார் !3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Imagesqyq" நம் நாட்டுக் கலாச்சாரத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்ட

இந்த படத்தை தயாரித்தவர்களை நான் வன்மையாக

கண்டிக்கிறேன் !

இந்த மாதிரி கலாச்சார சீர்கேட்டுக்கு வழி வகுக்கும் இந்த படம்

ஒடக்கூடாது !

மக்கள் இந்த படத்தை பார்க்கக் கூடாது !

இந்த படத்தை தயாரித்தவர்களை நான் வெறுக்கிறேன் !

மக்கள் இந்த படத்தை புறக்கணிக்கவேண்டும் ! "கோபமாக சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார் செட்டியார் !" அந்த காலத்தில் கூட

" டிராப்பிக் ராமசாமிக்கள் "

இருந்திருக்கிறார்கள் , அய்யா ! "தியேட்டர் திறப்புவிழாவுக்கெ இந்த கதி என்றால்

படம் ?


" பப்படம் " தான் !
அப்புறம் ?


இரண்டு ' பிட் ' தகவல்கள் :


1. சென்னை சைதாப்பேட்டை நூர்ஜஹான் , இன்றும்

" தியேட்டர் ராஜ் "

என்கிற பெயரில் இயங்கிவருகிறது !
2. இந்த மனிதன் ?3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Folderhfh


நம்ம ரஜினி நடித்த " மனிதன் " ஐய்யா !

செட்டியார் என்ன , யாரும் இந்த " மனிதன் "

ஐ குறை சொல்ல முடியாது !

இது பாடல் "


" காசிருந்தால் கை மேலே "
http://picosong.com/VqAA/எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by மாணிக்கம் நடேசன் Mon Mar 23, 2015 6:50 pm

டாக்டர் ஐயா மிக்க நன்றி. படத்திற்கும் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல் தெரிகிறது, தவறு செய்த மனைவியை ஏற்றுக்கொள்ளும் தன்மையை அந்த கணவனுக்கு கொடுத்த கதாசிரியர் அந்த இணையை சேர்த்து வைத்திருக்கலாம். பாவம் கதாநாயகியை கொன்று விட்டார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4563
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1428

Back to top Go down

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by mkrsantharam Sat May 16, 2015 5:07 pm

மிக்க நன்றி திரு . மாணிக்கம் நடேசன் அவர்களே!
 
 
 
 
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
 
 
 
 பி. லீலா தொடர்ந்து
 
பாடுகின்றார் !
    
 
 
 
 
   இந்த பாடலை நான் முன்னரே குறிப்பிட
 
மறந்தது என் தவறுதான் !
 
 
இதுவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் !
 
 
 
 
" ஜெகதலப்பிரதாபன் ! "
 
 
 
இந்த பெயரில் " அசல் தமிழில் " ( ! )   இரண்டு படங்கள்
 
வெளிவந்துள்ளன .
 
 
1944  ஆம் ஆண்டு :
 
பி . யூ . சின்னப்பா நடித்த " ஜெகதலப்பிரதாபன் "


3 - பாடிய முதல் பாட்டு - Page 2 8OW0f81jS7d7SWvbmc75+pu
 
 
அப்புறம் ?
 
 
" மைக் " மோகன் மற்றும் ராதா நடித்த  1990
 
" ஜெகதலப்பிரதாபன் ! "
3 - பாடிய முதல் பாட்டு - Page 2 QE12rPzHRJWv3T2X7lCR+mogan
 
 
 
 
இவை தவிர , வேறு
 
" ஜெகதலப்பிரதாபன் "
 
உண்டா ?
 
 
டூ !
 
 
1961 ஆம் ஆண்டில் தெலுங்கில்
 
 
என் . டி. ராமராவ் , சரோஜாதேவி , எல் . விஜயலட்சுமி
 
ஆகியோர் நடித்த :
 
 
 
" ஜெகதேக வீருணி கதா "
 
என்கிற படம் , தமிழில்
 
" ஜகதலப்பிரதாபன் " ( 1961 )
 
என்கிற பெயரில் தமிழில் " டப் " செய்யப்பட்டது !
3 - பாடிய முதல் பாட்டு - Page 2 N9LQpl8SRucn5w2pZUDv+Jagadeka_Veeruni_Katha
 
 
 
மேற்கண்ட  படத்தில் இருந்து
 
இடம் பெற்ற  இந்த பாடல் :

 
 
 
" ஜலந்தனில் ஆடுகிறோம் !
 
கன்னியர் பாடுகிறோம் !
 
எங்கும் ஆனந்தம் தானே ! "
3 - பாடிய முதல் பாட்டு - Page 2 XWyiDSA3SA2rMa5vFEaA+0
 
 
 
பி. லீலா , குழுவினருடன் பாடும் இந்த பாடல்
 
எனக்கு மிகவும் பிடிக்கும் !
 
 
பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையமைத்த இந்த பாடல்
 
கேட்க மிகவும் இனிமை !
 
 
லீலா அவர்கள் இசைக்கும் ' ஹம்மிங்க்க் ' இல் மனதை
 
பறி கொடுத்தவன் நான் !
 
 

நீங்களும் கேளுங்கள் !
http://picosong.com/jkLm/
விடியோ 
எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by மாணிக்கம் நடேசன் Sun May 17, 2015 9:21 am

அன்பான டாக்டர் சார், முதலில் உங்களுக்கு எனது அன்பான வணக்கம். இன்று காலையிலேயே நீங்கள் கொடுத்துள்ள் பாடலை மனதார ரசித்து கேட்டேன். காரணம், இப்பொழுதுதான் இந்தப் பாடலை கேட்கிறேன். இனிய பாடலை தந்த உங்கள்க்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4563
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1428

Back to top Go down

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun May 17, 2015 9:23 pm

மிகவும் நன்று புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

Back to top Go down

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by mkrsantharam Thu Jun 18, 2015 4:01 pm

பி . லீலா அவர்கள்

இன்னும் பாடுகின்றார் !3 - பாடிய முதல் பாட்டு - Page 2 F5UwtPccSHGhtkltr0QM+pl

      இந்த பாடல் ஒரு பழைய பாடல் !

அறிய பாடலும் கூட !

     தங்கை கிருஷ்ணம்மா அவர்களின்

விருப்பப் பாட்டு !

" என்ன தவம் செய்தனை !

யசோதா !  எங்கும் நிறை பரப் பிரம்மம் ! "
http://www.mediafire.com/listen/qkuafdwyteejc4v/01_ENNA_THAVAM_SEITHANAI_-_P.L_00.mp3
##########################################3

 இதே பாட்டை , தற்போது,

சற்றே மெருகூட்டப் பட்டு :திருமதி . சுதா ரகுநாதன்3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Bts9s2hgSVabgDSmbCTA+images(2)பாடியுள்ளார் !


அந்த பாடலையும் இங்கே தருவதில் நான் தருவது

தவறு இல்லை என்று கருதுகிறேன் !


இதோ :
" என்ன தவம் செய்தனை "

சுதா ரகுநாதன் :
http://www.mediafire.com/listen/danw958k918kg4m/02_ENNA_THAVAM_SEITHANAI_-_SUDHA_RADHUNATHAN_00.mp3
" யார் பாடியது நன்றாக உள்ளது ? "


என்று நீங்கள் என்னைக்  கேட்டால்................"  பழைய  கள்ளை .......

புதிய பீங்கான் குவழையில் குடித்த மாதிரி ............


சுத்த ரகுநாதன் பாடியது .......

" பேஷ் , பேஷ் ரொம்ப நன்னா இருக்கு "

என்று உசிலை மணி

பாணியில் சொல்லலாம் !     ஜாலி


இரு பாடல்களைக் கேட்டால் நீங்களும்

ஏற்றுக் கொள்ளக்கூடும் !&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எச்சரிக்கை !பி .லீலா

இன்னும் பாடுவார் !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by T.N.Balasubramanian Thu Jun 18, 2015 6:16 pm

ஆம் ,சுதா அவர்களது ரொம்ப ரொம்ப நன்னா இருக்கு .

நன்றி mrk அவர்களே

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30191
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10864

Back to top Go down

3 - பாடிய முதல் பாட்டு - Page 2 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை