ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு!

5 posters

Go down

அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! Empty அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு!

Post by krishnaamma Sat 3 Jan 2015 - 16:58

எல்லா மனிதர்களுக்கும் தான் இந்த உலகில் வாழ்ந்ததற்கான ஆதாரம் ஒன்று தேவைப்படுகிறது. தான் மறைந்த பின்பும் அந்த ஆதாரம் பல தலைமுறைகளுக்கு நீடித்திருக்கவேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. அதனால்தான் நாம் சந்திக்கும் பெரும்பாலான மனிதர்கள் கையில் ஒரு கேமரா இருந்துகொண்டிருக்கிறது.

'நான் இந்த காலகட்டத்தில் வாழ்ந்தேன். இந்த இடத்தை பார்த்தேன். இவரை சந்தித்தேன். இவர் எனக்கு நெருக்கமானவர். இவர்களெல்லாம் என் குடும்பத்தினர்' என்பதற்கான ஆதாரங்களையும், நினைத்துப் பார்த்து ஆனந்தப்படுவதற்கான காட்சிகளையும் எல்லா மனிதர் களும் சேகரிக்கிறார்கள். அந்த காட்சிகள்தான் பிற்காலத்தில் ஒரு வரலாறு ஆகிறது. அத்தகைய காட்சிக்கும், சாட்சிக்கும் ஆதாரமாக இருப்பது கேமராக்கள்!

அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! V1b63sVrT2ZYkRMHsLGv+201501031357528149_Marvel-cameras-Rare-History_SECVPF

நான்கு தலைமுறையை கடந்தவர்கள் 'இது உன் தாத்தாவின் தாத்தா' என்று ஒரு போட்டோவை காட்டி சொல்லும்போதும் 'இது உன் அம்மா. உன்னை பெற்றெடுக்கும்போதே பிரசவத்தில் இறந்துபோய்விட்டார்' என்று சொல்லும்போதும் அங்கே உடனடியாக உணர்ச்சிப்பிரவாகத்தை ஏற்படுத்த ஒரு போட்டோ காட்சி தேவைப்படுகிறது.

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடிவைத்ததை ஒரு கேமரா படம்பிடித்திருக்காவிட்டால் அந்த உண்மை அவரோடு நின்றிருக்கும். அந்த நிஜத்தை கடைக்கோடி மனிதன் வரை கண்டு வியந்திருக்க முடியாது. அந்த விஞ்ஞான ரகசியத்தை மக்கள் எளிதாக நம்பியிருக்கவும் மாட்டார்கள்.


.............................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! Empty Re: அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு!

Post by krishnaamma Sat 3 Jan 2015 - 16:59

அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! KszSwN94QWakwCVNS78U+DF696B8F-6B40-43A8-8D74-3EA120F42DC1_L_styvpf

மன்னர் காலத்து போர்களின் சோகத்தை பக்கம் பக்கமாக வரலாற்று பாடத்தில் படிக்கிறோம். அது என்னவோ நமது இதயத்தில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடவில்லை. காரணம் அதை அப்படியே நம் கண்முன்னால் காட்ட ஆதாரமான காட்சிகள் இல்லை. ஆனால் ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட குண்டுகளின் வீச்சை அப்படியே போட்டோக்கள் பிரதிபலித்து, 'அடப்பாவிகளா இப்படி பண்ணிட்டீங்களே!' என்று உலகத்தையே ஸ்தம்பிக்கவைத்தது. 'இனி ஒருமுறைகூட அணுகுண்டு வீசப்பட்டுவிடக்கூடாது' என்ற முடிவை உலக நாடுகள் எடுக்கவும் அந்த காட்சிகள் காரணமாகிவிட்டன. அதனால் சோகத்தை சொல்லவோ, சந்தோஷத்தை கொண்டாடவோ நமக்கு போட்டோக்கள் தேவைப்படுகின்றன. அந்த போட்டோக்களின் கதாநாயகன் கேமராதானே!

உங்கள் பெற்றோரின் திருமண ஆல்பத்தை நீங்கள் பார்க்கும்போது 'அம்மா எவ்வளவு இளமையாக இருக்கிறாங்க! அப்பாவை பாரு சிரிச்சிக்கிட்டே இருக்கிறார்' என்றெல்லாம் வியப்பும், மகிழ்ச்சியும் கொள்வீர்கள். 'அந்த நாள் அம்மாவையும் அப்பாவையும் அப்படி எல்லாம் காட்சிப்படுத்தியது ஒரு கேமராதானே!' என்று நினைத்து அந்த கேமராவுக்கு நீங்கள் எப்போதாவது 'தேங்ஸ்டா' என்று கூறியிருப்பீர்களா! நீங்கள் மட்டுமல்ல, நம்மில் யாரும் சொல்லியிருக்கமாட்டோம்.

(பரவாயில்லை. இனிமேலாவது நல்ல காட்சிகளை பார்க்கும்போது அந்த காட்சியை பதிவாக்கிய கேமராவுக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக்கொள்வோம்!)
'கேமரா என்ற சாதனத்தை நமது முன்னோடிகள் கண்டுபிடித்திருக்காவிட்டால் நாம் எவ்வளவு விஷயங்களை இழந்திருப்போம்!' என்று இப்போது உங்கள் மனது சோகமாக சொல்வது எனக்கு கேட்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு பாசம் உங்களுக்கு கேமரா மீது வந்துவிட்டதே மகிழ்ச்சிதான்!

ஆனால் மந்திரத்தாலோ, தந்திரத்தாலோ மாங்காய் விழுந்தது போன்று திடீரென்று கேமரா கண்டுபிடிக்கப்பட்டுவிடவில்லை. அதற்கு 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சரித்திரம் இருக்கிறது. ஒரு காலத்தில் யானையை விட பெரிதாக கேமரா இருந்தது. (படத்தில் பாருங்கள் அம்மாடீயோவ் என்பீர்கள்)

.............................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! Empty Re: அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு!

Post by mbalasaravanan Sat 3 Jan 2015 - 17:01

படம் அருமை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! Empty Re: அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு!

Post by krishnaamma Sat 3 Jan 2015 - 17:02

அதை நீங்கள் இங்கே பார்க்கலாம். முதல் போட்டோவின் வயது 189.

அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! CCPUVfOXRhOmGqPGl325+BD42E22F-A797-4453-ACEE-668BC39BC5FD_L_styvpf

ஜார்ஜ் ஆர்.லாரன்ஸ் என்ற விஞ்ஞானி சிகாகோ நகரில் 1900ம் ஆண்டில் இந்த உலகில் மிகப்பெரிய கேமராவை உருவாக்கினார். (தோளில் 100 கிராம் வெயிட்டில் தொங்கப்போட்டுக்கொண்டு, செல்போனிலே 'செல்பி' எடுத்தபடி நடக்கும் நமக்கு எம்மாடியோவ் என்று தோன்றினாலும், அன்று யானை கேமராவை உருவாக்கியதற்காக ஜார்ஜ் ஆர். லாரன்சை உலகமே கொண்டாடியது.

சிகாகோ ஆல்டன் ரெயில்வே அந்த காலகட்டத்தில் (அதாவது 115 ஆண்டுகளுக்கு முன்னால்) அழகான அதிவேக ரெயிலை அறிமுகம் செய்திருந்தது. அதை அழகாக படமாக்கவேண்டும் என்ற எண்ணமே, அவரை அந்த பிரமாண்ட கேமராவை கண்டுபிடிக்க தூண்டியது. கேமராவின் எடை: 900 பவுண்டு. (ஒரு பவுண்டு 450 கிராம்) அதாவது உத்தேசமாக 405 கிலோ. அதில் இருந்த பிளேட் 500 பவுண்டு எடை கொண்டது. முன்னும், பின்னும் நகர்த்தக்கூடிய அளவுக்கு 20 அடி நீளத்தில் அது பிரமாண்டமாக காட்சியளித்தது. இதை இயக்குவதற்கு  15 பலசாலி ஆண்கள் தேவைப்பட்டார்கள்.

இந்த கேமராவுக்கு தேவையான பிளேட்டை செயின்ட்லூயிசில் உள்ள கிரம்மர் நிறுவனம் தயாரித்துகொடுத்தது. படத்தை பதிவு செய்வதற்கான விசேஷ தாளையும் அவர்களே வடிவமைத்துகொடுத்தார்கள். பாஷ் லாம்ப் என்ற நிறுவனம் இதற்கான பிரத்தியேக லென்சை உருவாக்கி கொடுத்தது. அதை 10 அடி தூரம் வரை 'போக்கஸ்' செய்வதற்கு வசதியாக வடிவமைத்து கொடுத்தார்கள்.

இந்த கேமராவை உருவாக்க மொத்தமாக எவ்வளவு செலவாகியிருக்கும்?

நல்லகேள்விதான். இதற்காக செலவிட்ட தொகையில் அப்போதே அமெரிக்காவில் பத்து பதினைந்து மாடமாளிகைகளை விலைக்கு வாங்கியிருக்கலாம். ஆனாலும் செலவு பற்றி கவலைப்படாமல் ஆல்டன் ரெயில்வே பணத்தை வாரி இறைத்தது. காரணம் அப்போது அங்கிருந்த தனியார் ரெயில்வே துறைகளுக்கு இடையே யார் பெரியவர் என்ற கடும்போட்டி நிலவியது. அதனால் தனது ரெயிலை படம் பிடித்து உலகம் முழுக்க பப்ளிசிட்டி செய்துகொள்ள ஆல்டன் நிறுவனம் விரும்பியதால் ஜார்ஜ் ஆர்.லாரன்ஸ் கேட்டபோதெல்லாம் டாலர் நோட்டுகளை பெட்டிபெட்டியாக அனுப்பிவைத்தார்கள்.

..............................


Last edited by krishnaamma on Sat 3 Jan 2015 - 17:06; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! Empty Re: அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு!

Post by krishnaamma Sat 3 Jan 2015 - 17:04

செலவை பற்றி கவலைப்படாததால்தான் உலகின் மிக அழகிய ரெயிலை, உலகின் மிக பெரிய கேமரா படமாக்கி, சரித்திரத்தில் முத்திரை பதித்துவிட்டது.
இந்த கேமராவின் பெயர் என்ன தெரியுமா?

மமூத் (Momooth)!

ரொம்ப காலத்துக்கு முன்பு ஆப்பிரிக்க காடுகளில் ராட்சத உருவம் கொண்ட யானைகள் வசித்தன. இதுவும் அதுபோல் பிரமாண்டமாக அமைந்ததால் அதன் நினைவாக இதற்கும் அந்த பெயரை சூட்டிவிட்டார்கள்.

நீங்கள் லட்சக்கணக்கான போட்டோக்களை பார்த்திருப்பீர்கள். இன்று ஒவ்வொரு அபூர்வ போட்டோவை நீங்கள் பார்க்கும்போதும் உங்களுக்குள்ளே, 'உலகின் முதல் போட்டோவை நாம் பார்க்காமலே இருந்துவிட்டோமே!' என்ற ஏக்கம் ஏற்படும்.
...............................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! Empty Re: அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு!

Post by krishnaamma Sat 3 Jan 2015 - 17:05



அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! Yryx8kNHRdOGTaCm995H+BCECD0F8-DE1F-4758-B3D0-7FA096D0819A_L_styvpf

1826-ம் ஆண்டு இந்த முதல் போட்டோவை பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஜோசப் நிஸ் போர் எடுத்தார். அப்ஸ்க்யூரா என்ற பழங்கால கேமரா சாதனத்தை பயன்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டது. லி கிராஸ் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டையே அவர் முதல் காட்சியாக்க முயற்சித்தார். 8 மணி நேரம் 'போக்கஸ்' செய்ததன் பலனால் இந்த முதல் போட்டோ கிடைத்தது.

லூயிஸ் டேகுலார் என்ற விஞ்ஞானியும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்தான். இவர் தான் தயாரித்த டேகுலார் டைப் கேமராவை பயன்படுத்தி, 1838-ல் முதன் முதலில் மனிதன் இடம் பெற்ற போட்டோவை எடுத்தார். பாரீஸ் நகர தெருவீதியில் கம்பீரமாக நிற்கும் மாளிகைகள் இதில் தெளிவாக பதிவாயின. வட்டமிட்டிருக்கும் பகுதியில் ஒரு இளைஞர் ஒரு காலை அருகில் உள்ள பொருள் மீது தூக்கிவைத்திருப்பதுபோல் இந்த காட்சி பதிவாகியிருக்கிறது. போட்டோவில் பதிவான முதல் மனிதர் அவர்தான்!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! Empty Re: அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு!

Post by சிவனாசான் Sat 3 Jan 2015 - 20:40

கேமரா ஓர் காலக்கண்ணாடி. அதை கண்டு பிடித்தவரை வாழ்த்தி வணங்குவோம்...............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! Empty Re: அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு!

Post by ayyasamy ram Sat 3 Jan 2015 - 22:39

அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84868
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! Empty Re: அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு!

Post by அகிலன் Sun 4 Jan 2015 - 5:29

அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! 3838410834


நேர்மையே பலம்
அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! Empty Re: அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum