புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்நன்றி மறந்தோர்! Poll_c10செய்நன்றி மறந்தோர்! Poll_m10செய்நன்றி மறந்தோர்! Poll_c10 
29 Posts - 60%
heezulia
செய்நன்றி மறந்தோர்! Poll_c10செய்நன்றி மறந்தோர்! Poll_m10செய்நன்றி மறந்தோர்! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
செய்நன்றி மறந்தோர்! Poll_c10செய்நன்றி மறந்தோர்! Poll_m10செய்நன்றி மறந்தோர்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
செய்நன்றி மறந்தோர்! Poll_c10செய்நன்றி மறந்தோர்! Poll_m10செய்நன்றி மறந்தோர்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்நன்றி மறந்தோர்! Poll_c10செய்நன்றி மறந்தோர்! Poll_m10செய்நன்றி மறந்தோர்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
செய்நன்றி மறந்தோர்! Poll_c10செய்நன்றி மறந்தோர்! Poll_m10செய்நன்றி மறந்தோர்! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
செய்நன்றி மறந்தோர்! Poll_c10செய்நன்றி மறந்தோர்! Poll_m10செய்நன்றி மறந்தோர்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
செய்நன்றி மறந்தோர்! Poll_c10செய்நன்றி மறந்தோர்! Poll_m10செய்நன்றி மறந்தோர்! Poll_c10 
8 Posts - 3%
prajai
செய்நன்றி மறந்தோர்! Poll_c10செய்நன்றி மறந்தோர்! Poll_m10செய்நன்றி மறந்தோர்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
செய்நன்றி மறந்தோர்! Poll_c10செய்நன்றி மறந்தோர்! Poll_m10செய்நன்றி மறந்தோர்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
செய்நன்றி மறந்தோர்! Poll_c10செய்நன்றி மறந்தோர்! Poll_m10செய்நன்றி மறந்தோர்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
செய்நன்றி மறந்தோர்! Poll_c10செய்நன்றி மறந்தோர்! Poll_m10செய்நன்றி மறந்தோர்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
செய்நன்றி மறந்தோர்! Poll_c10செய்நன்றி மறந்தோர்! Poll_m10செய்நன்றி மறந்தோர்! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
செய்நன்றி மறந்தோர்! Poll_c10செய்நன்றி மறந்தோர்! Poll_m10செய்நன்றி மறந்தோர்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்நன்றி மறந்தோர்!

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Nov 08, 2009 4:21 pm

செய்நன்றி மறந்தோர்! Pd2033571

அறுவடைக்குப் பின்
தூற்றியப் பதர்களாய்...
செய்நன்றி மறந்தோர்!

.......கா.ந.கல்யாணசுந்தரம்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 08, 2009 5:24 pm

அன்புடையீர்
வணக்கம்
தான் பெற்ற நீருக்கும் உரத்துக்கும் தான் ஈயும் கதிர்களுடன் பதர்களும் பிறந்தமை குறித்து வெட்கப் படும் நெற்பயிரின் உள்ளக் குமுறல் உங்கள் வரிகளில் மின்னுகிறது. உளம் நிறைந்த பாராட்டுக்கள்.
ஓர் ஐயம்
ஐயன் வள்ளுவன் தன் பொய்யாமொழியில்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்றார்
நன்றியில் எத்துணை வகைகள் உள அதில் செய்ந்நன்றி எனப் படுதல் யாது ?
தயை செய்து விளக்குவீர்களா/
அன்புடன்
நந்திதா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 5:36 pm

nandhtiha wrote:அன்புடையீர்
வணக்கம்
தான் பெற்ற நீருக்கும் உரத்துக்கும் தான் ஈயும் கதிர்களுடன் பதர்களும் பிறந்தமை குறித்து வெட்கப் படும் நெற்பயிரின் உள்ளக் குமுறல் உங்கள் வரிகளில் மின்னுகிறது. உளம் நிறைந்த பாராட்டுக்கள்.
ஓர் ஐயம்
ஐயன் வள்ளுவன் தன் பொய்யாமொழியில்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்றார்
நன்றியில் எத்துணை வகைகள் உள அதில் செய்ந்நன்றி எனப் படுதல் யாது ?
தயை செய்து விளக்குவீர்களா/
அன்புடன்
நந்திதா

செய்ந்நன்றி அறிதல்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. 101

நாம ஒருத்தருக்கு ஒரு உதவியும் செஞ்சிருக்காதப்ப, அவர் நமக்கு ஒரு உதவி செய்யுறாருன்னா, அதுக்கு பதிலா இந்த உலகத்தையும் வானத்தையும் கொடுத்தா கூட ஈடு ஆகாது.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. 102

என்ன உதவிங்கிறத விட அது எப்ப கிடைக்கிறதுங்கிறது தான் முக்கியம். அதனால சரியான சமயத்தில கிடைக்கிற உதவி இந்த உலகத்தை விட பெரிசு.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. 103

இவருக்கு இந்த உதவி பண்ணா நமக்கு இந்த நன்மை கிடைக்கும் அப்படின்னு கணக்குப் போட்டுப் பார்க்காம ஒருத்தர் அன்பா செய்யுற உதவியோட சிறப்பு கடலை விடப் பெரிசு.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். 104

ஒரு உதவியோட மதிப்பு தெரிஞ்சவங்களுக்கு திணை அளவு ஒரு சின்ன உதவி செஞ்சாலும் அதை பனை மரம் அளவுக்கு ரொம்பப் பெரிசா மதிப்பாங்க.

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105

ஒரு உதவியோட மதிப்பு தெரிஞ்சவங்க சின்ன உதவியையும் பெரிசா மதிப்பாங்க. மதிப்பு தெரியாதவங்க எவ்வளவு தான் பெரிய உதவி செஞ்சாலும் கண்டுக்க மாட்டாங்க. அதுனால், ஒரு உதவியோட மதிப்பு யாருக்கு அதைத் தர்றோங்கிறதைப் பொருத்து தான்.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. 106

மாசு இல்லாத நல்லவங்க உறவை மறக்கக்கூடாது. துன்பத்தில நமக்கு உதவினவங்க நட்பை என்னிக்குமே கை விட்டுடக்கூடாது.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு. 107

ஏழு பிறவிக்கும தான் பெற்ற உதவியை மறக்காம நினைக்கிறவன் தான் நல்லவன்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. 108

ஒருவர் நமக்குச் செய்த நல்லதை மறப்பது தப்பு. அதுவே அவர் நமக்கு ஏதும் கெட்டது செஞ்சிருந்தா அதை உடனே மறந்திடுறது நல்லது.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். 109

நம்மள கொன்னே போடுற அளவுக்கு ஒருத்தங்க கெட்டது செய்யும் போது கூட அதால புண்பாடம இருக்க என்ன செய்யலாம்? அவர் நமக்கு முன்ன எப்பவாவது ஒரே ஒரு நன்மை செஞ்சிருந்தாக்கூட, அதை நினைச்சுப் பார்த்தா போதும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 110

என்னென்னவோ பாவங்கள் செஞ்சவுங்களுக்கு எல்லாம் மன்னிப்பு உண்டு. ஆனா, ஒருத்தர் செஞ்ச உதவிக்கு நன்றியில்லாம இருந்தோம்னா, நமக்கு மன்னிப்பே கிடையாது.

நன்றி என்பது

ஒரு காலத்தில் பிச்சைக்காரர்களுக்குக் காசு தந்தால் அவர்கள் கைகூப்பி "மகராசனாயிரு, மகராசியாயிரு" என்ற வார்த்தைகளை சொல்லி வாழ்த்துவதை சரளமாகக் கேட்க முடியும். இன்று பிச்சைக்காரர்களுக்குக் காசு தந்து பாருங்கள். ஏதோ கொடுத்த காசைத் திரும்ப வாங்குவது போல் சலனமே இல்லாமல் அவர்கள் நகர்வதை நீங்கள் சர்வசகஜமாகப் பார்க்கலாம். காசு தருவதற்கு முன்பாவது சில உருக்கமான வசனங்கள் வரலாம். காசு தந்த பின் நன்றி தெரிவிக்கும் பார்வையோ, வார்த்தைகளோ பெற்றால் அது அதிசயமே.

பிச்சைக்காரர்கள் வட்டத்தில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் இப்போது நன்றி என்கிற உணர்வு மிக அபூர்வமாகி வருகிறது எனலாம். குடும்பத்தில், அலுவலகத்தில், பொது இடத்தில் என எல்லா மட்டங்களிலும், எல்லா இடங்களிலும் அது மனிதனிடம் காணச் சிரமமான அபூர்வமான உணர்வாகி வருகிறது. பல சமயங்களில் நன்றி தெரிவிக்கப்படுவது கூட சம்பிரதாயமாகவும், வாயளவிலும் இருக்கிறதே ஒழிய அது ஆத்மார்த்தமாக இருப்பதில்லை.

தினையளவு உதவி செய்தாலும் அதைப் பனையளவாக எடுத்துக் கொள்ளச் சொன்ன திருவள்ளுவர் வாக்கு ஏதோ வேற்றுக் கிரக சமாச்சாரம் போல் தோன்ற ஆரம்பித்து விட்டது.

எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு செல்வந்தரிடம் பெரிய பெரிய உதவிகள் வாங்கி வந்தார். அதைப் பற்றிப் பேச்சு வந்த போது அலட்டாமல் சொன்னார். "வேணும்கிற அளவு இருக்கிறது. தருகிறார்".

"அதற்கும் மனம் வேண்டுமே சார். இருக்கிறவர்கள் எல்லாம் தருகிறார்களா?" என்றேன்.

"அதுவும் வாஸ்தவம் தான். என்னோட சொந்தத் தம்பி வேணும்கிற அளவு வச்சிருக்கிறான். ஆனா எனக்கு நயாபைசா உபகாரம் கிடையாது"

இருப்பவர்கள் எல்லாம் நமக்குத் தந்து உதவ வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதே தவிர நம்மை விடக் கீழே இருப்பவர்களுக்கு நாம் என்ன உதவி எந்த அளவு செய்கிறோம் என்கிற சிந்தனை சுத்தமாகப் பலரிடமும் வற்றி வருகிறது.

மேலும், தருபவன் எப்போதும் தந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்யும் வரை அவன் நல்லவன் என்று பெரிய மனதுடன் ஒத்துக் கொள்வேன். அவன் ஒரு தடவை மறுத்து விட்டால் வாயிற்கு வந்ததைச் சொல்வேன் என்ற மனோபாவமும் பலரிடமும் வலுத்து வருகிறது.

"அவன் முன்னை மாதிரி இல்லை" என்று சொல்வதன் அர்த்தமே பல இடங்களில் அவன் கொடுப்பதை நிறுத்தி விட்டான் என்பதே.

கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்யும் வரை அவன் நல்லவன் என்று பெரிய மனதுடன் ஒத்துக் கொள்வேன். அவன் ஒரு தடவை மறுத்து விட்டால் வாயிற்கு வந்ததைச் சொல்வேன் என்ற மனோபாவமும் பலரிடமும் வலுத்து வருகிறது.

"அவன் முன்னை மாதிரி இல்லை" என்று சொல்வதன் அர்த்தமே பல இடங்களில் அவன் கொடுப்பதை நிறுத்தி விட்டான் என்பதே.

"கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்று நன்று உளக் கெடும்" என்ற குறளுக்கெல்லாம் இப்போது ஆதரவு சுத்தமாகக் கிடையாது. குழந்தைகள் பெற்றோரிடம் "நீங்கள் பெரிதாக என்ன செய்தீர்கள்?" என்று கேட்பதை நாம் சர்வ சகஜமாகப் பார்க்கிறோம். கடவுள் எத்தனையோ கொடுத்திருந்தாலும் கொடுக்காத ஒன்றைக் காரணம் காட்டியே 'கடவுள் எங்கே இருக்கார்? இருந்தால் எனக்கு இப்படி செய்வாரா?' என்று புலம்புவதைக் கேட்கிறோம்.

இதில் பெரிய தமாஷ் என்னவென்றால் பிறரிடம் பெற்ற உதவிகளை உடனுக்குடன் மறக்கும் மனிதனுக்கு, தான் அடுத்தவருக்குச் செய்யும் கடுகளவு உதவிகளும் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருப்பது தான்.

இது ஒரு பெரிய மனப்பற்றாக்குறையே. நன்றி என்ற உணர்வு உயர்ந்த உள்ளங்களில் மட்டுமே உருவாகக் கூடியது. பெருகின்ற உதவியின் அருமை தெரிந்தவன் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பான். அது இல்லாமல் இருப்பது உள்ளம் இன்னும் உயரவில்லை அல்லது உள்ளம் மரத்து விட்டது என்பதையே சுட்டிக் காட்டுவதாக இருக்கும். அந்த விதத்தில் நம் மன வளர்ச்சியை அளக்கும் அளவுகோல் தான் நன்றியுணர்வு.

மேலும் நன்றியுணர்வு இல்லாதவன் எதையும் பெறத் தகுதியில்லாதவனாகிறான். எனவே இயற்கையின் விதி அவனுக்குத் தானாகக் கொடுப்பதைக் குறைத்து விடுகிறது. (அப்படி குறைக்கா விட்டாலும் அவன் பெற்றதை யாருக்காக சேர்த்து வைக்கிறானோ அவர்கள் அவனிடம் நன்றி காட்டாதபடி பார்த்துக் கொள்கிறது.) எனவே பெறும் எதற்கும் மனதார நன்றி தெரிவியுங்கள். நன்றியுடனிருங்கள். பெறுவது பெருகும். நல்ல விதத்தில் பலனும் தரும்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 08, 2009 5:42 pm

வணக்கம்
//எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 110

என்னென்னவோ பாவங்கள் செஞ்சவுங்களுக்கு எல்லாம் மன்னிப்பு உண்டு. ஆனா, ஒருத்தர் செஞ்ச உதவிக்கு நன்றியில்லாம இருந்தோம்னா, நமக்கு மன்னிப்பே கிடையாது.//
எந்நன்றி என்றால் என்னென்னவோ பாவங்கள் என்று பொருட்கோடல் முறைதானா?
அன்புடன்
நந்திதா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 5:59 pm

nandhtiha wrote:வணக்கம்
//எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 110

என்னென்னவோ பாவங்கள் செஞ்சவுங்களுக்கு எல்லாம் மன்னிப்பு உண்டு. ஆனா, ஒருத்தர் செஞ்ச உதவிக்கு நன்றியில்லாம இருந்தோம்னா, நமக்கு மன்னிப்பே கிடையாது.//
எந்நன்றி என்றால் என்னென்னவோ பாவங்கள் என்று பொருட்கோடல் முறைதானா?
அன்புடன்
நந்திதா

இது ஒரு உவமைக்காக எடுதுகொள்ளபட்டது

நான் கூரநினைதது உலகில் எந்த பாவங்களுக்கும் மன்னிப்புண்டு ஆனால்
நன்றி மறந்தவருக்கு மன்னிப்பில்லை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 08, 2009 6:06 pm

வணக்கம்
தாங்கள் கூர அல்லது கூற வந்ததைப் பற்றி அறிந்து கொண்டேன். நன்றி. ஆனால் என்னுடைய வினா வேறு, வள்ளுவன் தன் உள்ளக் கருத்து என்ன என்பதைத்தான் அறிய விரும்பினேன், என்னன்றி கொன்றார்க்கும் என்றதனால் பல விதமான நன்றிகள் உள என்பது தெளிவாகின்றது, அதில் ஒன்று தான் செய்ந்நன்றி, இல்லையேல் அதனை வேறு படுத்திக் கூற வள்ளுவப் பெருந்தகை ஒருப்படார், எனவே தான் செய்ந்நன்றி என்றால் என்ன என்று வினவினேன். விளக்குவீர்களா?
அன்புடன்
நந்திதா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 6:15 pm

நான் அறிந்தவரை ஒருவர் துன்பத்தில் இருக்கும்போழுது இன்னொருவர் செய்த
உதவியை என்றும் மறவாமல் இருப்பது செய்ந்நன்றி எனபடும்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 08, 2009 6:22 pm

வணக்கம்
விளக்கத்துக்கு நன்றி
வள்ளுவப் பெருந்தகை உதவி, நன்றி என்ற இரு சொற்களைக் கையாண்டுள்ளார், மூன்றாவதாக செய்ந்நன்றி என்ற ஒரு சொல்லை எடுத்தாள்கிறார், அது நன்றி என்ற சொல்லிலிருந்து வேறுபட்டதாகத்தான் இருக்க வேண்டும், எதுகைச் சிறப்புக்காக எடுத்தாண்டிருக்க மாட்டார் என்பதே என் துணிபு. ஆகவே அதற்கு வேறு ஏதாவது ஒரு வகையில் சிறப்பு இருக்க வேண்டும், என்றே கருதுகிறேன். தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்
அன்புடன்
நந்திதா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 6:29 pm

nandhtiha wrote:வணக்கம்
விளக்கத்துக்கு நன்றி
வள்ளுவப் பெருந்தகை உதவி, நன்றி என்ற இரு சொற்களைக் கையாண்டுள்ளார், மூன்றாவதாக செய்ந்நன்றி என்ற ஒரு சொல்லை எடுத்தாள்கிறார், அது நன்றி என்ற சொல்லிலிருந்து வேறுபட்டதாகத்தான் இருக்க வேண்டும், எதுகைச் சிறப்புக்காக எடுத்தாண்டிருக்க மாட்டார் என்பதே என் துணிபு. ஆகவே அதற்கு வேறு ஏதாவது ஒரு வகையில் சிறப்பு இருக்க வேண்டும், என்றே கருதுகிறேன். தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்
அன்புடன்
நந்திதா

இருக்கலாம் சாலமன் பாப்பையாவிடம் கேட்டு சொல்கிறேன்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 08, 2009 6:38 pm

வணக்கம்
தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள். மற்ற ஒன்பது குறள்களில் அறிவுறுத்தும் வள்ளுவப் பெருந்தகை செய்ந்நன்றி பற்றிக் குறிப்பிடும்போது மட்டும் சாபமிடுவது போன்ற வகையில் யாத்தது ஏன் என்றும் கேட்டுச் சொல்லுங்கள்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக