ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

+13
கௌசிகன்
சிவா
Mano Red
mbalasaravanan
Dr.S.Soundarapandian
ராஜா
rajaalways
T.N.Balasubramanian
M.Saranya
யினியவன்
M.M.SENTHIL
krishnaamma
விமந்தனி
17 posters

Page 5 of 28 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 16 ... 28  Next

Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 Empty கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Wed Dec 31, 2014 12:00 am

First topic message reminder :

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 YQqKaon7S42OfUH6nYTz+karudapuranam-1

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.



கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய


Last edited by விமந்தனி on Sat Aug 08, 2015 12:56 am; edited 1 time in total


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Fri Jan 09, 2015 12:23 am

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே....

02. அந்ததாமிஸ்ரம்


ணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரையொருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும், மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள் சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Fri Jan 09, 2015 12:37 am

15. பாப புண்ணியங்களை ஆராய்ந்து சொல்லும் பன்னிரு சிரவணர்கள்


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 I2XyVMqRvmPmba1UVI1F+1349695989Lord-Vishnu---jpg

சூதமாமுனிவர், சௌகாதி முனிவர்களை நோக்கிக் கூறலானார். வேத வடிவிலான பெரிய திருவடி பரம காருண்யரான திருமாலின் திருவடிகளைத் தொழுது, “பெருமாளே! தேவரீர்! முன்பு கூறியருளிய அச்சிரவணர்கள் பன்னிருவர்களும் யாவர்? அவர்கள் யாருடைய புதல்வர்கள்? வைவஸ்வத நகரத்தில் அவர்கள் இருப்பதற்கு காரணம் என்ன? மனிதர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அச்சிரவணர்கள் எவ்வாறு அறிவார்கள்? இவற்றையெல்லாம் அடியேனுக்கு நவின்றருள வேண்டுகிறேன்.” என்று வேண்டினான். அதற்கு திருமால் மகிழ்ந்து கூறலானார்.

“புள்ளரசே! கேட்பாயாக! ஊழி காலத்தில் தன்னந் தனியனான ஸ்ரீ மகா விஷ்ணுவானவர் அயனாராதி தேவரோடு யாவரும் யாவும் தன்னுள்ளே ஒடுக்கிக் கொண்டு நெடும்புணலில் பள்ளி கொண்டிருந்தார்.

“அப்போது மகா விஷ்ணுவின் உந்திகமலத்தில் நான்முகனாகிய பிரம்மன் தோன்றி, ஸ்ரீ ஹரியைக் குறித்து நெடுங்காலம் மாதவம் புரிந்து வேதங்களையும் படைத்தருளினார். அவ்வாறு படைத்தவுடனேயே உருத்திரன் முதலிய தேவர்கள் எல்லாரும் அவரவர் தொழில்களைச் செய்யத் துவங்கினார்கள்.

“எல்லோரையும் விட ஆற்றல் மிக்க யமதர்மராஜனும் ஜைமினி என்ற நகரத்தை அடைந்து சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஜீவர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிய வேண்டும் என்று ஆராய்ந்தார். அறிய தொடங்கிய அவனுக்கு சேதனர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிந்து கொள்ள முடியவில்லை.

“பல காலம் முயன்றும் அவனால் அந்தச் செயலில் வெற்றியடைய முடியவில்லை. எனவே யமதர்மராஜன் மனம் வருந்தி நான்முகனைக் கண்டு வணங்கி, ‘சதுர்முகனே! மஹா தேவனே! அடியேன் ஜீவர்களின் பாவ புண்ணியங்களை நீண்ட நாட்கள் ஆராய்ந்தும் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. அறிந்தால் அல்லவோ பாவிகளை தண்டிக்கவும், புண்ணியசாலிகளை இரட்சிக்கவும் முடியும். ஆகையால் அவற்றை உணர்ந்து, அறிந்து தக்கவை செய்யவும் எனக்கு அருள் புரிய வேண்டும்.’ என்று பிரார்த்தித்தார்.
                   
“அதைக் கேட்டதும் நான்முகன், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்தெறிந்து, நீண்ட கண்களை உடையவர்களும் மிக்க மேனி அழகுடையவர்களும் மனக்கண்ணால் யாவற்றையும் அறிந்து கொள்ளக் கூடியவர்களான பன்னிரண்டு புதல்வர்களைப் படைத்து,

“யமதர்மனைப் பார்த்து, ‘தர்மனே! உலகத்தில் பிறந்த ஜீவர்கள் அனைவரும் நினைப்பதையும் பேசுவதையும் செயல்புரிவதையும் உணர்ந்தறிய வல்லவர்கள். இவர்கள் ஜீவர்கள் செய்வதை எல்லாம் அறிந்து உனக்கு அறிவிப்பார்கள். நீ பாப புண்ணியங்களை அறிந்து சிஷையும்  ரகைஷயும்  செய்வாயாக!’ என்று சொல்லி, அப்பன்னிருவரையும் யமதர்மனுடன் செல்லும்படிப் பணிக்க,

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 Jze7jniLQiWAiQD66hOh+lord_brahma

“காலனும் பிரம்மனை வணங்கி அந்தப் பன்னிரு சிரவணர்களோடு தென்புலத்தை அடைந்து, சேதனர்களுடைய புண்ணியங்களையும், பாவங்களையும் அறிந்து அவற்றுக்குத் தக்கவாறு தண்டித்தும் காத்தும் வருவானாயின்.

“பக்ஷி ராஜனே! பூவுலகில் வாழ்வின் இறுதிக் காலம் முடிந்தவுடனே, வாயு வடிவனான ஜீவனை யம கிங்கர்கள், யமபுரிக்கு இழுத்துச் செல்வார்கள். அறம்,பொருள்,இன்பம்,வீடு என்ற நான்கு வகை புருஷார்த்தங்களில் தர்மஞ் செய்த உத்தமர்கள் யாவரும் தர்ம மார்க்கமாகவே வைவஸ்வத நகரம் என்னும் யமபுரிக்குச் செல்வார்கள்.  

“மோட்சத்தில் இச்சை கொண்டு வேத சாஸ்திர புராணங்களை அறிந்து தெய்வ பக்தி செய்பவர்கள் தேவி விமானம் ஏறி தேவருலகை அடைவார்கள். பாவிகள் கால்களால் நடந்தே செல்வார்கள். கடுமையான, கொடுமையான கரடுமுரடான பாதையை கடந்து செல்ல வேண்டும்.

“வாழுங்காலத்தில் ஜீவன் சிரவணரைப் பூஜித்தவனாகயிருந்தால், ஜீவனின் பாவங்களை மறைத்து புண்ணியங்களை மட்டுமே யமதர்ம தேவனிடம் சொல்வார்கள்.

“பன்னிரண்டு கலசங்களில் தண்ணீர் நிறைந்து அன்னம் பெய்து அக்கலசங்களை அந்தந்தச் சிரவணரைக் குறித்து தானதர்மங்கள் செய்தால் ஜீவனுக்கு யமலோகத்தில் சகலவிதமான நன்மைகளையும் செய்வார்கள்.

“கருடா! பன்னிரண்டு சிரவணர்களின் தோற்றம் முதலியவற்றைச் சொல்லும் இந்த புண்ணிய சரிதத்தை பக்தியோடு கேட்டவர்கள் பாபம் நீங்கிய புனிதராவார்கள் என்று கூறியருளினார்.


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Fri Jan 09, 2015 12:39 am

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே....

3. ரௌரவம்


பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தை பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களை பறிப்பது என்பது குற்றமாகும். இதற்கு தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தி துன்புறுத்துவார்கள்.


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Fri Jan 09, 2015 12:46 am

16. சித்திரகுப்தன் கணக்கும் நரகங்களும்


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 Raw6JU5eQFuOm6ktjhRe+20141103_120731

சூதமா முனிவர் சௌனகாதி முனிவர்களுக்கு பன்னிரண்டு சிரவணரின் சரிதத்தைச் சொல்லிய பிறகு மேலும் தொடர்ந்து சொன்னார்.  

திருமால் கருடனை நோக்கி கூறலானார், “கருடா! ஜீவர்கள் பூவுலகில் வாழ்ந்த காலத்தில் செய்த பாப புண்ணியங்களை எல்லாம் சித்திர குப்தன் என்ற யம லோக கணக்கன் சிரவணர்களின் மூலமாக அறிந்து யம தர்மராஜனுக்கு அறிவித்து, அவனது உத்தரவுப்படியே அவரவரது பாவங்களின் தன்மைக்கேற்ற தண்டனை வாசித்துச் சொல்ல, யமதர்மன் தன் கிங்கர்களைக் கொண்டு அத்தண்டனைகளை அவ்வவ்போதே நிறைவேற்றிச் செய்து விடுவான்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 Eool3Q4uRkuQUMGnKMsE+adambreath

“ஜீவனானவன் வாக்கால் செய்த பாவங்களை வாக்காலும், உடலால் செய்த பாவப் புண்ணியங்களை உடலாலும், மனத்தால் செய்த பாவப் புண்ணியங்களை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

“பெரியோரை இகழ்ந்து நீச மொழிகளால் ஏசி பேசினால்  பாவங்கள் உண்டாகி வாயிலிருந்து புழுக்களாக சொரியும்.

“புண்ணியங்களை மட்டும் செய்தவர்கள் நல்ல சரீரத்தோடு நோய் இன்றி இன்பமாக வாழ்வார்கள்.

“பிறவுயிர்களை ஊட்டி வதைத்தவர்கள் கொடூரமான சரீரத்தை அடைந்து துன்புறுவார்கள்.”

பக்ஷி ராஜனான கருடன், திருமகள் கேள்வனைச் சிரம் வணங்கி, கார்மேக வண்ணரே! “நரகங்கள் என்பவை யாவை? அவை எவ்வாறு இருக்கின்றன? அவற்றில் யார் யார் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்கள்? அவற்றை அடியேனுக்கு விபரமாக தெரிவிக்க வேண்டும்.” என்று கேட்க,

கார்மேக வண்ணன் கருடனை நோக்கி, “காசிப் புத்திரனே காலதேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன. அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை……………………..”


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by krishnaamma Fri Jan 09, 2015 1:46 am

விமந்தனி wrote:
M.Saranya wrote:அற்புதம்  அற்புதம் தோழி....
சிரார்த்தம் ,தர்ப்பணம், எனக்கு புரிந்தது...
ஆனால் படையல் என்றால் என்ன? எப்போது செய்ய வேண்டும்?

நேரம் இருந்தால் விளக்குங்களேன் ...........

நன்றி சரண்யா. சிரார்த்தம் ,தர்ப்பணம் மற்றும் படையல் பற்றிய விளக்கம் அந்த பதிவிலேயே இருக்கிறதே. மேலும் படையல் என்பது நம் வீட்டில் சிரார்த்தம் முடிந்ததும் பூஜையறையில் வழக்கம் போல் இறந்தவர் நினைவாக நாம் போடும் படையலை குறிப்பது. இது எனக்கு தெரிந்த விளக்கம்.  

உங்களுக்கு அது சரியாக புரியவில்லை என்றால், நம் உறவுகளில் இது பற்றி தெரிந்தவர் யாரேனும் வந்து விளக்குவார்கள். காத்திருங்கள்.

அதாவது , நம்ப ஆத்துல வாத்தியார் அல்லது சாஸ்த்திரிகள்  வந்து பண்ணி வைப்பது அல்லது நாம்  அஹோம்பில மடம் ஆண்டவன் சுவாமிகள் மடம் போன்றவற்றில் போய்   செய்து விட்டு வருவது  ஸ்ரார்ர்த்தம். இது வருடம் ஒருமுறை செய்வோம்.

ஆனால் சிலர் குளக்கரை,  ஆற்றங்  கரைகளுக்கு போய் 'திதி' குடுப்பார்கள் இல்லையா , ஆடி அமாவசை மற்றும் தை அமாவாசைக்கு, ..............அவர்கள் வீட்டுக்கு வந்து 'நடுவீட்டு படையல்' என்று சொல்லி இறந்தவர்களுக்காக , அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து அவர்களின் போட்டோ முன் வைத்து வழி படுவார்கள்...............பிறகு தான் சாப்பிடுவார்கள் ......... .அதுவே படையல் ஆகும் புன்னகை

ஓகே வா? சரண்யா? .................இன்னும் விவரமாக வேண்டும் என்றால் அடுத்த பதிவை பாருங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by krishnaamma Fri Jan 09, 2015 1:50 am

இது நான் நெட் இல் பார்த்தது புன்னகை.இதைப்படித்தால் உங்களுக்கு ஒரு 'ஐடியா' வரும் 'படையல்' பற்றி என்று நினைக்கிறேன் சரண்யா புன்னகை

//அமாவாசை அன்று தர்ப்பணம் செய்ய வருகை தரும்பொழுது கொண்டு வரவேண்டிய பொருட்கள் பட்டியல்

பூஜைப்பொருட்கள்

மஞ்சள்தூள் 25 கிராம்
குங்குமம் 25 “
எள்ளு 25 “
பூணூல் (அணிபவர்கள் மட்டும்) 1
வெற்றிலை 25
பாக்கு 25 கிராம்
ஊதுவத்தி சிறிய பாக்கெட்
கற்பூரம் 10 கிராம்
தீப்பெட்டி 1

பூஜை செய்ய பாத்திரங்கள்
பித்தளை கலச சொம்பு, பஞ்சபாத்திரம், தாம்பாள தட்டு

வாழை இலை (தலை இலை) 1
வாழைப்பழம் 6
உரித்த தேங்காய் 2
பூச்சரம் 5 முழம்

பசுவிற்கு தானம்

கோதுமை தவிடு 2 கிலோ
வெல்லம் 250 கிராம்

அகத்திகீரை 1 கட்டு


தானம்
காய்கறிகள் 5 வகை
(பூசணி, வாழைதண்டு தவிர்க்கவும். ஏன் எனில், சீக்கிரம் உபயோகிக்க வேண்டியுள்ளது.. முழு பூசணி பிஞ்சு எனில் பரவாயில்லை. வாழைதண்டு தவிர்க்கவும்.)
தரமான பச்சரிசி 1 கிலோ
1 ரூபாய் காசு 11
கடலை பருப்பு 250 கிராம்
பயத்தம் பருப்பு “
துவரம் பருப்பு “
உளுத்தம் பருப்பு “
வர மிளகாய் “
புளி “
உப்பு 100 கிராம்
மிளகு 25 கிராம்
சீரகம் 25 கிராம்
கடுகு 25 கிராம்
வெந்தயம் 25 கிராம்
வீட்டில் படையல்
கடல் / ஆறு / குளம் - தர்ப்பணம் முடித்தவுடன் வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு

1. மறைந்தவர் படத்தை சுத்தம் செய்து வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைத்து சந்தனம், குங்குமம் இடவும். படத்திற்கு துளசி மாலை, வில்வ மாலை சாற்றுவது நல்லது.
2. மரமணை வைத்து அதில் அவர் பயன்படுத்திய துணி, நகை, கண்ணாடி வைக்கவும்.
3. இரண்டு குத்து விளக்கு (ஒரு முகம் ஏற்றவும்). மறைந்தவருக்கு பிடித்த இனிப்பு,காரம்,பழங்கள்
4. தங்கள் குலவழக்கப்படி முழு தலைவாழை இலை படையல் போடவும்.
5. ஓட்டலில் உணவு ஏற்பாடு செய்திருந்தாலும் வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்யவும்.
அன்ன தானம்
கோதுமை தவிடு -2 கிலோ, அகத்திக்கீரை, வெல்லம் -¼ கிலோ, வாழைப்பழம் -3 ஆகியவற்றை கலந்து முந்திய நாளே ஊற வைத்து தெவசம் அன்று காலையில் பசுவிற்கு தானம் செய்யவும்.

** ராகு காலம், எமகண்டம் ஆகியன தர்பணத்திற்கு பொருந்தாது.
** மதியம் உச்சிக்காலம், அபரான்ன காலம் தர்பணம் செய்ய மிகவும்
உகந்த காலம்.
** தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலை முறை பெயரை
அறியவும்.
** பூஜையின் பொழுது பாரம்பரிய, கலாசார பருத்தி, கதர்,
பட்டாடைகளை உடுத்தவும்.
** தேவையான –பட்டியலில் உள்ள பொருட்களை தயாராக
வைக்கவும்.
** பிராமணருக்கு தருவது தட்சணை. அதாவது அவர் செய்த
பணிவிடைக்கு அளிக்கும் சம்பளம். அது தானம், தர்மம்,
புண்ணியம் என்று தவறாக கருதவேண்டாம்.

இந்து மதத்தின் அடிப்படையே தர்மம்தான். தர்ப்பணம் மற்றும் தானம் மூலமாகவே புண்ணியம் கிட்டும். மேலும் தானம் செய்வது அவரவரின் வசதிக்குட்பட்டது.//


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by krishnaamma Fri Jan 09, 2015 1:58 am

//“அதைக் கேட்டதும் நான்முகன், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்தெறிந்து, நீண்ட கண்களை உடையவர்களும் மிக்க மேனியசகுடயவர்களும் மனக்கண்ணால் யாவற்றையும் அறிந்து கொள்ளக் கூடியவர்களான பன்னிரண்டு புதல்வர்களைப் படைத்து, //

இது " மேனி அழகுடையவர்களும்" என்று இருக்கணும், நீங்க போய் விட்டதால் நானே சரி செய்து விட்டேன் விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by krishnaamma Fri Jan 09, 2015 2:01 am

சூப்பர் விமந்தனி....தொடருங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Fri Jan 09, 2015 11:15 pm

நன்றி கிருஷ்ணாம்மா. சரண்யாவின் சந்தேகத்திற்கு விளக்கமாய் பதில் கொடுத்ததற்கும்...புன்னகை புன்னகை புன்னகை


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by M.Saranya Sat Jan 10, 2015 12:13 pm

மிக்க நன்றி அம்மா !!!!



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 5 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 28 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 16 ... 28  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum