ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

+13
கௌசிகன்
சிவா
Mano Red
mbalasaravanan
Dr.S.Soundarapandian
ராஜா
rajaalways
T.N.Balasubramanian
M.Saranya
யினியவன்
M.M.SENTHIL
krishnaamma
விமந்தனி
17 posters

Page 23 of 28 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 28  Next

Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 Empty கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Wed Dec 31, 2014 12:00 am

First topic message reminder :

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 YQqKaon7S42OfUH6nYTz+karudapuranam-1

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய

Last edited by விமந்தனி on Sat Aug 08, 2015 12:56 am; edited 1 time in total

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by T.N.Balasubramanian Sat Mar 28, 2015 12:09 pm

விமந்தனி wrote:

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

21. பரிபாதனம்

துவை தானும் உட்கொண்டு, பிறர்க்கும் கொடுத்து குடிமக்களை கெடுப்பவர்கள் அடையும் நரகம் இது. நெருப்புக்குழம்பை குடிக்கச்சொல்லி இங்கு வதைப்பார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1127315

அதிகம் பேர் இங்குதான் போவார்களோ ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by M.Saranya Sat Mar 28, 2015 12:37 pm

அருமை அருமை...................

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Sun Mar 29, 2015 11:23 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

21. பரிபாதனம்

துவை தானும் உட்கொண்டு, பிறர்க்கும் கொடுத்து குடிமக்களை கெடுப்பவர்கள் அடையும் நரகம் இது. நெருப்புக்குழம்பை குடிக்கச்சொல்லி இங்கு வதைப்பார்கள்.
அதிகம் பேர் இங்குதான் போவார்களோ ?
ரமணியன்
அதிலென்ன சந்தேகம் ஐயா? அதுமட்டுமில்லை மொத்த டிபார்ட்மென்ட்களிலும் (28 நரகங்கள்) Q நிரம்பி வழியுமோ என்னவோ........

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Sun Mar 29, 2015 11:26 pm

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

22. க்ஷாரகர்த்தமம்

தீய செயல்களை புரிந்தும், நல்லோரையும், பெரியோரையும் அவமதித்து, நானென்ற அகந்தையுடன் வாழ்ந்த ஜீவன்கள் அடையும் நரகம் இது. இங்கு கோரமான உருவம் கொண்ட பிசாசுகள் ஜீவனை துன்புறுத்தும்.

Post by விமந்தனி Sun Mar 29, 2015 11:27 pm

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

23. ரக்ஷோகனம்

ரமேத யாகம் செய்தவனும், மனித மாமிசத்தை புசித்தவனும், வாயில்லா சாதுவான பிராணிகளை வதைத்து கொடுஞ்செயல் புரிந்த பாவிகளும் அடையும் நரகமிது. இங்கு ஜீவன்களால் பாதிக்கப்பட்டவர்களே முன்னின்று வதைப்பார்கள். பாதிக்கப்பட்ட மிருகங்களும் வதைக்கும்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by T.N.Balasubramanian Mon Mar 30, 2015 9:00 pm

விமந்தனி wrote:

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

22. க்ஷாரகர்த்தமம்

தீய செயல்களை புரிந்தும், நல்லோரையும், பெரியோரையும் அவமதித்து, நானென்ற அகந்தையுடன் வாழ்ந்த ஜீவன்கள் அடையும் நரகம் இது. இங்கு கோரமான உருவம் கொண்ட பிசாசுகள் ஜீவனை துன்புறுத்தும்.
மேற்கோள் செய்த பதிவு: 1127658

இங்கேயும் நீ  ------------------ண்-----ட ----க்யு இருக்குமே  .
இங்கே அனேக அரசியல்வாதிகள் நின்றுகொண்டு இருப்பார்கள் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Wed Apr 22, 2015 12:16 am

உடலியல் பற்றிய விளக்கங்களும்

தேவேந்திரன் மயங்கிய கதையும்

ருடன் பரமபத நாதனைத் தொழுது சர்வலோக சரண்யரே, “மனிதனின் உடலில் தோல், நரம்பு, எலும்பு, இரத்தம், மாமிசம், தலை, கைகள், கால்கள், நாக்கு, நாசி, இரகசிய உறுப்பு, நகம், ரோமம் முதலியவற்றால் அமைக்கப்பட்டு, இந்திரஜாலம் போலத் தோன்றுகிறதே! இந்த சரீரம் எங்கனம் உண்டாகிறது? அதை அடியேனுக்குச் சொல்ல வேண்டும்.” என்று பிரார்த்திக்கிறேன்.

“பரந்தாமன் கருடனை நோக்கிக் கூறலானார்: மாத விலக்கான பெண்கள், நான்கு நாட்கள் வரையில் குடிமனைக்குப் புறம்பேயிருக்க வேண்டும்.

“அதன் விளக்கம் இந்திரன் தன் அரியணையில் அமர்ந்து அரம்பையர்கள் ஆடிய ஆட்டத்திலும், கந்தர்வர்கள் இசைத்த கானத்திலும் மதிமயங்கியிருந்தான். அந்த சமயத்தில் தேவ குருவான வியாழ பகவான் அங்கு வந்தார். தன் ஆசிரியன் வந்ததையும் கவனியாமல், மரியாதையையும் செலுத்தாமல் மங்கையர் மயக்கத்திலிருந்தான். ஆசிரியநுத் தன்னை, ஆயிரங் கண்ணால் வரவேற்று கௌரவிக்காமல் இருந்ததைக் கண்டு மனம் புழுங்கி அங்கிருந்து வெளியேறினார்.

“ஆசிரியனை மதியாததால், இந்திரனின் செல்வ வளங்கள் சிதைந்தன. அதை அறிந்த இந்திரன் திகைத்தான். ஆசிரியனைத் தேடிச் சென்றான். அவர் இருப்பிடத்திலும் பிற இடங்களிலும் காண முடியாததால் குழம்பிய உள்ளத்தோடு, நான்முகனிடம் சென்று நடந்தவற்றை அவரிடம் முறையிட்டான்.

“நான்முகன் சிந்தித்தான். குல குருவை இழிந்ததால் தீவினை கொழுந்து விட்டு வளர்ந்துள்ளது. இந்திரனை நோக்கி, ‘இந்திரா!   நீ செய்த பிழை பிழையே தான்!. உன் ஆசிரியன் அளித்த தண்டனையும் சரியானது தான். ஆகையால் உன் ஆசான் வருமளவும் இடைக்கால ஆசான் வேண்டும். தானவனான துவஷ்டா என்று ஒருவனிருக்கிறான். அவன் மகன் விச்சுவவிருவன் என்று ஒருவனிருக்கிறான். அவன் முத்தலையன், சீரிய ஒழுக்கமுடையவன் அறிவிற் சிறந்தவன். அவனையே உனது குருவாக் கொள்வாயாக!’ என்று கூறினார்.

“பிரம தேவன் கூறிய படி வச்சுவவுருவனைத் தன் ஆசிரியனாகக் கொண்டான். இந்திரன் வேள்வியோன்று செய்ய விரும்பி புதிய ஆசானிடம் புகன்றான். வேள்வி துவங்கியது.

“வஞ்சகனான தானவன், அந்த வேள்வியில் தன் குலத்தைச் சேர்ந்த தானவர்களுக்கு ஆக்கங் கூறி, மந்திரங்களைச் சொல்லி வேள்வியைச் செய்தான். புதிய ஆசிரியனது வஞ்சகச் செயலை அறிந்த இந்திரன் கோபங் கொண்டு தன் குருவாகிய வச்சுவவுருவனைத் தன் வஜ்ராயுதத்தால் அவனை வெட்டினான்.

“அவனது மூன்று தலைகளையும் இந்திரன் வெட்டியவுடன் அந்த வஞ்சகன் ஒழிந்தான். ஆனால், அவனுடைய தவ வலிமையினால் சோமபானஞ் செய்யும் அவன் தலையில் ஒன்று காடையாயிற்று. சுரா பானஞ்  செய்யும் தலை ஊர்க்குருவியாயிற்று. அன்னபானஞ் செய்யும் தலை கிச்சிலிப் பறவை ஆயிற்று.
                       
“விசுவவுருவன் தானவனாயினும் அவன் குருவானபடியால் அவனைக் கொன்ற இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தேவர்கள் தங்கள் தலைவனை பீடித்த பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்திப்பதற்கு ஒரு வழி செய்தார்கள்.

“அவர்கள் பெண்களையும் மண்ணையும் தண்ணீரையும் வேண்டி இந்திரனைப் பிடித்த தோஷத்தை பங்கிட்டுக் கொடுத்தார்கள். அவர்கள் தேவர்களை நோக்கி, இதனை நாங்கள் போக்கிக் கொள்வது எப்படி என்று கேட்டார்கள். அதற்குத் தேவர்கள், ‘நீரிலே தோஷம் நுரையாகக் கழியும். மண்ணிலே உவராகக் கழியும், பெண்களுக்கு பூப்பாகக் கழியும்’ என்றார்கள்.

“இவ்வாறு இந்திரனைப் பிடித்த பிரம்மஹத்தி பாவம், மங்கையர் முதலானவர்களிடம் போய்ச் சேர்ந்தது. அதன்படியே ரஜஸ்வலையாகும் அப்பெண்கள் அந்தப் பாவத்தை ஏற்றுக் கழிக்கலாயினர். ஆகையால், பயிஷ்டையான ( மாத விலக்கான) ஸ்திரியை நான்கு நாட்கள் வரை பிறர் பார்க்கலாகாது. பார்த்தால் பாவம் வந்து அடையும்.

“பயிஷ்டையானவள், முதல் நாளன்று சண்டாள ஸ்திரியை போலிருப்பாள். இரண்டாம் நாள் பிரம ஹத்தி செய்தவனை ஒப்பாவாள். மூன்றாம் நாள் ஆடை ஒலிப்பவனைப் போலாலாவாள். நான்காவது நாள் புனலாடிய பிறகு சிறிது தூய்மையடைவாள். ஐந்தாம் நாள் குடும்பக் காரியங்களை எல்லாம் செய்வதற்கு உரியவளாக சுத்தியை அடைவாள்.

“பயிஷ்டையான ஆறாவது நாள் முதல் பதினெட்டாவது நாள் வரையின்ன இரட்டை நாள் எழில் இரவில் அவளோடு கூடி மகிழ்ந்தால் புருஷர் பிரஜை உண்டாகும். ஆகையால் ஆண்மகனைப் பெற விரும்புகின்றவன் மனைவியை இரட்டை நாளிலேயே சேர வேண்டும்.

“நான்கு தினத்து மேல் பதினெட்டு நாள் வரையில் இரவு காலத்தில், இரட்டை நாளில் கர்ப்பந் தரித்தால் குணவானாகவும், தனவானாகவும், தர்மிஷ்டனாகவும், ஸ்ரீ விஷ்ணு பக்தி உடையவனாகவமுள்ள ஒரு புத்திரன் பிறப்பான்.

“பயிஷ்டையான நான்கு தினங்களுக்கு மேல் எட்டு நாளைக்குள் பெரும்பான்மையாகக் கர்ப்பத்தரிக்கு ஏஜஸ்வலையான ஐந்தாம் நாள் ஸ்திரிகள் பாயசம் முதலிய மதுர பதார்த்தங்களையே அருந்த வேண்டும். காரமான பதார்த்தங்களை உண்ணலாகாது. ஸ்திரி புருஷர்கள் சந்தன, புஷ்ப, தாம்பூல வஸ்துக்களை தாரணம் செய்து கொண்டு குவிந்த மெய்யினர்களாய், சித்தத்தில் அதிக மோகமுடையவர்களாய்ச் சேர்தல் வேண்டும்.  அவ்வாறு அவர்கள் இருவரும் சேர்ந்ததால், சுக்கில சுரோணிதக் கலப்பால் ஸ்திரி வயிற்றில் கருத்தரித்து, வளர்பிறைச் சந்திரனைப் போல அந்தக் கருவானது விருத்தியாகும்.

“மன்மதனும் மனமும் ஒத்த காலத்தில் இருவராலும் விடப்படும் சுக்கில சுரோணிதன்களால் ஆணின் சுக்கிலம் அதிகமானால் ஆண்பிள்ளையும், பெண்ணின் சுரோணிதம் அதிகமானால் பெண்ணும் பிறக்கும். சுக்கில சுரோநிதங்கள் இரண்டும் ஏற்றக் குறைவில்லாமல் சமமாயின் பிறக்கும் பிள்ளை அலியாக இருக்கும்.

“கருத்தரிக்குமானால் புணர்ந்த ஐந்தாவது நாளன்று கர்ப்பப் பையினுள்ளே ஒரு குமிழியுண்டாகும். அது பதினான்கு நாட்களில் தசையால் சிறிது பெருக்கும். இருபதாவது நாளில் மேலும் அதற்குச் சிறிது தசையுண்டாகும். இருபத்தைந்தாவது நாளில் அது மேலுஞ் சிறிது புஷ்டியாகிறது. ஒரு மாதத்தில் அதனிடம் பஞ்ச பூதத்தின் சேர்க்கை உண்டாகிறது.

“மூன்றாவது மாதத்தில் நரம்புகள் உண்டாகின்றன. நான்காவது மாதத்தில் காதுகளும் மூக்கும் மார்பும் தோன்றும். ஆறாவது மாதத்தில் கழுத்துச் சிரசும், பற்களும் உண்டாகும். ஏழாவது மாதத்தில் ஆண் மகவாயின் ஆண் இனக்குரியும், பெண் மகவாயின் பெண் இனக் குறியும் உண்டாகும்.

“எட்டாவது மாதத்தில் எல்லா அவயங்களும் உண்டாகி ஜீவனும் பிரவேசிக்கிறான். ஒன்பதாவது மாதத்தில் ஜீவன் சுழிமுனை என்ற நாடியின் மூலத்திலிருந்து பூர்வஜென்ம கர்மங்களை நினைத்து தனக்குப் புதிய பிறவி வந்ததைக் குறித்து துக்கித்துக் கொண்டே பத்தாவது மாதத்தில் பிறக்கிறான்.”

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Wed Apr 22, 2015 12:18 am

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

24. சூலப்ரோகம்

தனக்கு எந்தவித கெடுதல்களையும் செய்யாதவர்களை கொல்லுதல், சூழ்ச்சி செய்து கொல்லுதல், தற்கொலை செய்து கொல்லுதல், நம்பிக்கை துரோகம் செய்தல் ஆகிய பாவச்செயல்களை செய்த ஜீவன்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவன்களை, கொடிய பறவைகள் குத்திக் குத்திக் குதறும், சூலத்தாலும் குத்துவார்கள்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Wed Apr 22, 2015 12:18 am

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

25. சுசீமுகம்

அறத்தை செய்யாமல் தீயவழிகளில் பொருளைச் சேர்த்து, பிறரை துன்புறுத்தி கர்வத்துடன் நடந்து, பொருள்களையும், பணத்தையும் பதுக்கி வைத்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கும் ஜீவன், உதவி செய்ய யாருமின்றி பசியாலும், தாகத்தாலும் தவிக்கும். எம தூதர்கள் துன்புறுத்துவார்கள்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Wed Apr 22, 2015 12:27 am

ஈமக்கிரியைகள்

ருடன் முராரியை நோக்கி, “சர்வேசா! தாயைப் பெற்றவளும், அவளைப் பெற்றவளும், அவனைப் பெற்றவளும், தந்தையைப் பெற்றவனும், அவனைப் பெற்றவனும் உயிரோடு இருக்கும் பொது, தாயாவது தந்தையாவது இறந்துவிட்டால், அவர்களுக்குப் புத்திரன் எவ்வாறு பிண்டம் சேர்க்க வேண்டும்? என்பதை அடியேனுக்குக் கூற வேண்டும்.” என்று வேண்டினான்.

அதற்குப் பகவான் கூறலானார், “வைனதேயா!   தாயின் தலைமுறையிலும், தந்தையின் தலைமுறையிலும் உயிருடன் இருப்பவர்களுக்கு மேலே மூன்று தலைமுறைப் பிதுர்க்களின் பிண்டத்தோடு இறந்தவனின் பிண்டத்தையும் சேர்க்க வேண்டும்.

“பிண்டம் உண்ணும் பிதுரர் மூவர், தியாசகர் மூவர், லோபகர் மூன்று பேர் பிண்டம் போடும் பந்தியில் வருவான். ஒருவனுக்கு இவ்வாறு தந்தையின் மரபிற்குப் பத்துப் பேர்களும் உள்ளார்கள். ஒருவன் மரித்தும் பிதுரர்களோடு சேர்த்தும் நான்காம் பாட்டன் முதல் தியாசகன் ஆகிறான். மூன்றாம் லோபகன் பந்தியில் வருவோனாகிறான். புத்திரன் சிரார்த்தம் செய்தால் மாண்டுபோன தந்தை மகிழ்ந்து அந்தப் புத்திரனுக்கு ஒரு புத்திரனை தருகிறான்.

“சிரார்த்தம் செய்வதில் பிதுரர்களுக்குத் திருப்தியுண்டானால் செய்பவனுக்கு மிக்க பயன் உண்டு. உயிர் நீங்கிய பிறகு தேகத்தை வைத்திருக்க கூடாது. அதனால் உடனே சம்ஸ்காரம் செய்ய வேண்டும்.

“தனிஷ்டா பஞ்சகத்தில் இறந்த தோஷ நிவர்த்தியின் பொருட்டுச் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி சிலகருமங்களை அதிகமாக செய்தல் வேண்டும். எள்ளும், கோவும், ஹிரண்யமும், நெய்யும் தானம் கொடுக்க வேண்டும். தனிஷ்டா பஞ்சகத்தில் மாய்ந்தவருக்கு சாஸ்திரத்தில் சொல்கிறபடிச் செய்யாவிட்டால் கருமஞ் செய்யும் கர்த்தா துன்பம் அடைவான்.

“கருடா!    ஒருவன் மரித்தவுடன் அவனது கால்களையும் கைகளையும் கட்ட வேண்டும். உறவினரெல்லாம் சவத்தின் அருகிலேயே இருக்க வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரு சவம் கிடந்தால் யாரும் சோறும் நீரும் உண்ணலாகாது. அப்படி உண்டால் மாமிசம் உண்ட தோஷமும் இரத்தம் பருகிய தோஷமும் அடைவார்கள். தந்த சுத்தியும் செய்யலாகாது. இரவில் பிணங் கிடக்கும் பொது ஆண் பெண் கூடியின்புறுதல் கூடாது.” என்றார் திருமால்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 23 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 23 of 28 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 28  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum