ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

+13
கௌசிகன்
சிவா
Mano Red
mbalasaravanan
Dr.S.Soundarapandian
ராஜா
rajaalways
T.N.Balasubramanian
M.Saranya
யினியவன்
M.M.SENTHIL
krishnaamma
விமந்தனி
17 posters

Page 3 of 28 Previous  1, 2, 3, 4 ... 15 ... 28  Next

Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 Empty கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Wed Dec 31, 2014 12:00 am

First topic message reminder :

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 YQqKaon7S42OfUH6nYTz+karudapuranam-1

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.



கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய


Last edited by விமந்தனி on Sat Aug 08, 2015 12:56 am; edited 1 time in total


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Sun Jan 04, 2015 12:01 am

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 Ziac11BRWW58v81qTrhg+2

9. வேத வடிவனாகிய கருடன், சர்வலோக நாதரான ஸ்ரீமந் நாராயணனை வணங்கி, “ஹே பரமாத்மா!  ஒருவன் மனத்தூய்மையோடு தானதர்மங்களைத் தன கையாலே செய்வானாயின், அதனால் அவன் அடையும் பயன் என்ன? அவனுக்காக அவனுடைய மகன் முதலியோர் தான தர்மம் செய்பவர்களானால் அதனால் உண்டாகும் பயன் என்ன? இவற்றைத் திருவாய் மலர்ந்தருள வேண்டுகிறேன்!” என்று விண்ணபஞ் செய்ய பாம்பணையில் துயிலும் பரமாத்மா கூறலானார்.

“கருடனே! மனத்தூய்மை இல்லாமலும், மனவுறுதி இல்லாமலும் செய்யப்படும் நூறு கோதானங்களுக்கு எத்தனைப் பயன் உண்டோ?

“ அதனை சித்த சுத்தத்தோடு சாஸ்திரங்களில் விதித்த வண்ணம் ஒரு பசுவை நல்லவருக்கு தானம் செய்தால், அதன் பயனும் கிடைக்கும். கோதானம் கொடுப்பவரும், வாங்குபவரும் மனத்தூய்மை உள்ளவராகயிருக்க வேண்டும். வாங்குபவர் உத்தமராக இருக்க வேண்டும். கற்றுணர்ந்த சான்றோருக்குக் கொடுக்கப்படும் தானம், தானம் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் புண்ணியமுன்டாகும்.

“வேத சாஸ்திரங்களை ஓதாமலும், ஒழுக்க வழியில் நில்லாமலும், பிராமணன் என்ற பெயரை மட்டும் கொண்டவனுக்கு தானம் கொடுத்தால், அந்த தானமே தானங் கொடுத்தவனுக்கு நரகத்தைக் கொடுக்கும். மேலும் தானம் வாங்குவதற்கே தகுதியில்லாதவன் தானம் வாங்குவானாயின் அவன் இருபத்தோரு தலைமுறை உள்ளவர்களோடு நரகம் புகுவான்.
                                                         
“ஒரு பசுவை, ஒருவருக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும். சாதுக்களிடம் நல்லப் பொருள்களைப் பக்தி சிரத்தையோடு தானம் கொடுத்தவன், அந்தப் பிறவியிலாவது, மறுபிறவியிலாவது அதற்குரிய நற்பயனைச் சந்தேகமின்றி அடைவான்.

“தானம் கொடுப்பவன் எளியவனாக இருந்தால் ஏதாவது ஒருபொருளைக் கொடுத்தாலும் போதுமானது. கருடா! மரித்த பிறகு செய்ய வேண்டிய கிரியைப் பற்றி உனக்கு ஒருவாறு கூறினேன்.” என்று ஸ்ரீமந் நாராயணர் கூறியருளினார்.


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Sun Jan 04, 2015 12:04 am

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 B9hh8GlTPKDtWTW9eQhc+images(1)

10. வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர்.

உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமிர சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிராமணர்களுக்கு அளித்தல் வேண்டும்.

குடைதானம், ஜீவன் செல்லும் போது குளிர்ந்த நிழலில் அழைத்துச் செல்ல உதவும்.. மரவடி தானம், குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும். அதை பற்றி பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம்.


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Sun Jan 04, 2015 12:13 am

யம லோகத்திற்கு போகும் வழி

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 NeKHrTLREK8GzpW7UeVf+challaram_karudapuranam_12815

11. ஸ்ரீ வேத வியாச முனிவரின் மாணவரான, சூதபுராணிகர் நைமிகாரணியவாசிகளான மகரிஷிகளை நோக்கி,  “அருந்தவ முனிவர்களே கருடாழ்வான். திருமகள் கேள்வனைப் பணிந்து வணங்கி, ‘சர்வலோக நாயகா! யமலோகம் என்பது இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? அதன் தன்மை யாது? அவற்றைத் தயை செய்து கூறியருள வேண்டும்...’ என்று கேட்கவும், கருணைக் கடலான கார்மேக வண்ணன், கருடனை நோக்கிக் கூறலானார்.
                   
“கருடனே! மனிதர்கள் வாழும் மானுஷ்ய லோகத்திற்கும் யமபுரிக்கும் இடையில் எண்பத்தாறாயிரம் காதம்( 1காதம் =7km ) இடைவெளியுள்ளது.                     அந்த யம லோகத்தில் யெழும் எமதர்மராஜன் கூற்றவன் உலகத்தினர் ஒவ்வொருவருக்கும் ஆயுட்காலம் முடிந்ததும் ஜீவனைப் பிடித்து வரும்படியாகத் தன் தூதர்களிடம் கூறுவான்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 HJ4zMNiNRcyfqzP5a8fQ+ujiladevi.blogpost.com(32)

“விகாரமான மூவகைத் தூதர்களை ஏவியனுப்புவான். வாழ்நாள் முடிந்த ஜீவனைப் பாசத்தால் கட்டிப் பிடித்து காற்றின் உருவமான தேகத்தில் அடைத்து யமலோகத்திற்குச் செல்வார்கள். ஆவி உருவ உயிர்களை யமபுரித் தலைவன் கால தேவன் முன்னால் நிறுத்துவார்கள்.

“அவர் அத்தூதர்களை நோக்கி, “ஏ கிங்கரர்களே! இந்த ஜீவனை மீண்டும் கொண்டு போய் அவன் வீட்டிலேயே விட்டுவிட்டு பன்னிரெண்டாம் நாள் கழிந்த பிறகு முறைப்படி மீண்டும் நம் சபை முன்பு நிறுத்துங்கள்.” என்று கட்டளையிடுவான்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 1alKN2YxTv2auY4DlxRa+ujiladevi.blogpost.com(30)

“உடனே ஒரு நொடி நேரத்திற்குள் சீவனின் இல்லத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள். ஆவி வடிவுடைய அந்த உயிர் சுடுகாட்டிலே தன் சிதைக்கு பத்து முழ உயரத்தில் நின்று, தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரியும் தன் உடலைப் பார்த்து, ‘அந்தோ! ஐயையோ...!’ என்று ஓலமிட்டு அழும்.

“தீயிலோ உடல் எரிந்து வெந்து சாம்பலாகும் போது தன் உறவு பொருள் மீது இருந்த ஆசையானது ஒழியாது. அவன் வாழ்ந்த வீட்டின் முன்பு நின்று, அங்கு இருப்பவர்களைப் பார்த்து பசி தாகத்தால் ‘ஆ..ஆ...’ என்று கதறி பதறி நிற்பான்.

“ஜீவனுக்குப் பிண்டத்தலான சரீரம் உண்டாகும். புத்திரன் பத்து நாட்கள் போடும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உண்டாகும்.
பன்னிரெண்டாம் நாளில் பிராமணர் மூலமாய் புத்திரனால் கொடுக்கப்பட்டவற்றை உண்டு, பதின்மூன்றாம் நாளன்று பிண்டவுருவத்தில் பாசத்தால் பிணித்து கட்டிப் பிடித்துக் கொண்டு போகும் போது தன் வீட்டை திரும்பித் திரும்பிப் பார்த்து கதறிக் கொண்டே யம லோகத்தை அடைவான்.

“பிண்ட சரீரம் பெற்ற உயிர், யம கிங்கரர்களால் பாகத்தால் பிணைத்துக் கட்டப்பட்ட நிலையில் நாள் ஒன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காத வழி இரவுபகலுமாக நடந்து செல்ல வேண்டும். அவன் போகும் வழியில் கல், முள், அடர்ந்த காடுகளைக் கண்டு பிண்ட ஜீவன் பசியாலும், தாகத்தாலும் வருந்தித் தவிப்பான்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 ZbFOFv4NSPqNQ2tiucDg+VaitaraniRiver

“வைவஸ்வத பட்டணம் என்ற பட்டணமுண்டு. அங்கு அச்சம் தரும் மிகவும் கோரமான பிராணிகளுக்கு இருப்பிடமாகவும்,  துக்கத்தையே கொடுப்பதாகவும் அமைந்திருக்கும். பாபம் செய்தவர்கள் மிகப் பலர் எப்போதும் ‘ஆ, ஆ, ஊ, ஊ...’ என்று ஓலமிடுவார்கள்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 7stCb1hxRCGtkcCeSbKo+20141103_122016

“அங்கு வெப்பத்தால் கொதிக்கும் கொதிநீர்தான் காணப்படும். குடிக்க ஒரு துளித் தண்ணீர் கூடக் கிடைக்காது. அருந்துவதற்கு அருகதையற்ற ரத்தம் பொழிவதாக இருக்கும். ‘நான் உயிரோடிருந்த போது எத்தனை பாவங்கள் செய்தேன். ஞானிகளையும், பாகவத சந்நியாசிகளையும் ஏசிப் பேசிப் பரிகாசம் செய்தேன். அவற்றையெல்லாம் இப்போது அனுபவிக்கின்றேன். மலை போன்ற ஆயுதத்தால் யமகிங்கரர்கள் இரக்கமில்லாமலே என்னை அடித்துப் புடைக்கிறார்களே! அந்தோ! உடலுமில்லாமல் ஆவியாய் அவதியால் அலறித் தவிக்கிறேன்.’ ஜீவனின் ஒவ்வொரு குரலுக்கும் தூதர்கள் அவனைத் துன்புறுத்த, அவன் அவர்களால் யமபுரிக்கு இழுத்துச் செல்லப்படுவான்!” என்று திருமால் கூறியருளியாதகச் சூதபுராணிகர் கூறினார்.


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Sun Jan 04, 2015 12:22 am

இறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்???

12. இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும்.

மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் ஓர் உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச் சுற்றிக்கொண்டு இருக்கும் பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுகிறது.
மற்ற சூழ்நிலைகளில் உயிரானது(பிராண சக்தியானது) தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல.

இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத் திறந்துகொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன பிராண சக்தியானது அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உடலுக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.

எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின்(பிராண சக்தி) முயற்சி இப்போது பலிக்காது. மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில சக்திகளும் முயலக்கூடும். அது எதிர்மறையான காந்த அலைகளை உருவாக்கும். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும்.

அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும்.
அதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன...


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by krishnaamma Sun Jan 04, 2015 12:42 am

//உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிராமணர்களுக்கு அளித்தல் வேண்டும்.

ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில்  அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும். அதை பற்றி பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம்.//


அருமை விமந்தினி புன்னகை.......சில இடங்களில் எழுத்து பிழைகள் இருக்கு, மேலே சில பதிவில் கூட பார்த்தேன்................சொல்லாமல் விட்டு விட்டேன்.இப்போ இதில் இருப்பதை 'திக்' எழுத்துகளில் காட்டுகிறேன் ...........திருத்திவிடுங்கள் புன்னகை
.
.
அது தாமரை சொம்பு அல்ல .......தாமிர சொம்பு..............
.
.
அதேபோல , 'ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில்  அழைத்துச் செல்லப்படும்.'

இந்த வரி இப்படி இருக்கணும் தானே? புன்னகை ................ குடைதானம், ஜீவன் செல்லும் போது குளிர்ந்த நிழலில்  அழைத்துச் செல்ல உதவும்.........புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Sun Jan 04, 2015 12:50 am

தவறுகளை சுட்டியதற்கு நன்றி கிருஷ்ணாம்மா. ஆனால் என்னால் மேற்சொன்ன பதிவில் திருத்தம் செய்யமுடியவில்லை. அரைமணிநேரம் கடந்து விட்டிருக்கிறது. நீங்கள் திருத்திவிடுகிறீர்களா....?

இப்படியே தொடர்ந்து வாருங்கள் கிருஷ்ணாம்மா... எனக்கு உதவியாக.... அன்பு மலர் அன்பு மலர்


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by krishnaamma Sun Jan 04, 2015 10:01 am

விமந்தனி wrote:தவறுகளை சுட்டியதற்கு நன்றி கிருஷ்ணாம்மா. ஆனால் என்னால் மேற்சொன்ன பதிவில் திருத்தம் செய்யமுடியவில்லை. அரைமணிநேரம் கடந்து விட்டிருக்கிறது. நீங்கள் திருத்திவிடுகிறீர்களா....?

இப்படியே தொடர்ந்து வாருங்கள் கிருஷ்ணாம்மா... எனக்கு உதவியாக.... அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1113318

நோ ப்ரோப்ளேம், நான் சரி செய்து விடுகிறேன் புன்னகை......................கண்டிப்பாக தொடருவேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Tue Jan 06, 2015 12:20 am

13. ஜீவன் செல்லும் பாதையில் பரிதவித்தல்

“யமதூதர்களால் பாசக் கையிற்றால் கட்டுண்டும், அவர்களிடம் உதையுண்டும் செல்லும் ஜீவன் தன் மனைவி மக்களோடு வாழ்ந்த காலத்தில் அடைந்திருந்த இன்பத்தை நினைத்து,  துன்பமடைந்து பசியாலும் தாகத்தாலும் மெலிந்து சோர்வுற்று இளைத்து, ஈன ஸ்வரத்தோடு ‘ஐயகோ! நம்மோடு வாழ்ந்த உற்றார் உறவினர் எங்கே? இந்த யம படர்களிடம் சித்ரவதைப்படும்படி விட்டு விட்டார்களே! நான் சேர்த்த பொருள்கள் எங்கே? ஊரையடித்து உலையில் போட்டோமே, உழைத்தவன் உழைப்பை உறிஞ்சி நயமாக வஞ்சித்து வாழ்ந்தோமே!’ என்று அலறித் துடிப்பான்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 IDRATvo8Rm2Rii9kyOkr+1234

“கருடா! தீய தொழில் புரிந்தோர் அடையும் கதியைப் பார். பிறகு அந்த சேதனன் சிறிது தூரம் அனாதையாக காற்றின் வழியிலும், புலிகள் நிறைந்த வழியிலும் இழுத்துச் சென்று ஓரிடத்தில் தங்கி, இறந்த இருபத்தெட்டாம் நாளில் பூமியில் புதல்வனால் செய்யப்படும் ஊனமாகிய சிரார்த்த பிண்டத்தைப் புசித்து, முப்பதாம் நாளன்று யாமியம் என்று நகரத்தைச் சேர்வான்.

“அங்கு பிரேதக் கூட்டங்கள் கூட்டம் கூட்டமாக கூடியிருக்கும். புண்ணிய பத்திரை என்ற நதியும் வடவிருட்சமும் அங்கு உள்ளன. பிறகு அவ்யாமியம் என்ற நகரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து, இரண்டாவது மாசிக பிண்டத்தை அருந்தி, இரவும் பகலும் தூதர்களால் இழுத்துச் செல்லப்பட்டு யாருக்கும் பயத்தை ஏற்படுத்தும் ஆரண்யத்தின் ஊடே சென்று வழிநடக்கும் வேதனையோடு ஓவென்று அழுது தூதர்கள் செய்யும் கொடுமையால் வருத்தித் துன்புறச் செல்லும் வழியில் திரைபக்ஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற அரசனுக்குரிய சௌரி என்ற நகரத்தைச் சார்ந்து அங்கு மூன்றாம் மாசிக பிண்டத்தை புசித்து அப்பால் சென்று, வழியிலே பொறுக்க முடியாத குளிரினால் மிகவும் வருந்துவான்.

“பிறகு குருரபுரம் என்ற பட்டணத்தை அடைந்து அங்கு ஐந்தாவது மாசிக பிண்டத்தையுண்டு, அப்பால் நடந்து கிரௌஞ்சம் என்ற ஊரையடைந்து, அந்த ஊரில் ஆறாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கு வாழ்ந்ததை நினைத்து வாய்விட்டு புலம்புவான்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 N6IUTyb3SrCFPCznyLcp+120

“அப்போது யமபடர்கள் சினங்கொண்டு அவ்வாயிலே புடைப்பார்கள். வருந்தி செல்லும் வழியில் அஞ்சத்தக்க ரூபமுடைய படகோட்டிகள் பதினாறாயிரம் பேர்கள் கூட்டமாக அவன் முன்பு ஓடிவந்து தீப்பொறி பறக்க விழித்து, ‘ஏ ஜீவனே! எப்போதாவது வைதரணி சோதானம் என்ற தானத்தைச் செய்திருந்தாயானால் இனி நீ கடந்து செல்ல வேண்டிய வைதரணி நதியை, நீ இனிதாகக் கடக்க நாங்கள் உனக்கு உதவி செய்வோம். இல்லையெனில் அந்த நதியிலே உன்னைத் தள்ளிப் பாதாளம் வரையிலும் அழுத்தித் துன்பப்படுதுவோம். அந்த நதியிலே தண்ணீரே இராது. இரத்தமும், சீழும், சிறுநீரும் மலங்கலுமே நிறைந்து துஷ்ட ஜந்துக்களிலும் கோடி ஜந்துக்கள் வாழும் இடமாகும். பசு தானத்தை நீ செய்திராவிட்டால், வைதரணி நதியிலே, நீண்ட நெடுங்காலம் மூழ்கித் தவிக்க வேண்டும்.’ என்று ஓடக்காரர்கள் கூறுவார்கள்.

“பூமியில் வாழ்ந்த காலத்தில் வைதரணி "கோதானம்" என்ற தானத்தை செய்யாமல் போனாலும் அவன் இறந்த பிறகு அவன் குலத்தில் பிறந்த அவன் மகனாவது அவனைக் குறித்துச் செய்ய வேண்டும். செய்திருந்தால் ஜீவன் அந்த நதியைக் கடந்து யமனுக்கு இளையோனாகிய விசித்திரன் என்பவனது பட்டினத்தைச் சார்ந்து ஊனஷானி மாசிகப் பிண்டகத்தை உண்ணும் போது, சில பிசாசுகள் அவன் முன்பு பயங்கரத் தோற்றத்துடன் தோன்றி, அந்த ஜீவனைப் பார்த்து, ‘அட மூடனே! நீ யாருக்கும் தானம் செய்யாதவனாக இருந்தால், உன் பசிக்கென்று உனக்காக மாதந் தவறாமல் மாசிக சிரார்த்ததைச் செய்து, உன் கைக்கு கிடைத்து, நீ ஆவலோடும், பசியோடும் புசிக்க துடிக்கும் அன்னத்தை, பேய் பிசாசுகள் புடிங்கிச் சென்று விடும்.’

“பறவைகளின் அரசே! ஒரு பொருளுமே இல்லாத வறிஞனாகப் பூவுலகில் வாழ்ந்தாலும் கூட, தன்னை யாசித்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல்  தன்னால் இயன்ற சிறு உதவியாவது செய்ய வேண்டும்.

“அப்படி செய்யாதவர்கள், இறந்த பிறகு தூதர்களால் இழுத்துவரப்பட்ட ஜீவன், புத்திரன் அவன் பொருட்டு கொடுக்கும் மாசிக பிண்டம் அவனுக்கு சேராமல் பிசாசுகளின் கரங்களிலேதான் சேரும். ‘ஐயகோ! பசியால் என்னை நாடி வந்தவர்களுக்கு கொடுக்காத பாவத்தின் பயனோ இது? வயறு பசிக்க, நாக்கு வறல நான் தவிக்கும் தவிப்பை காண ஒருவருமில்லையே! பூமியில் பொருள் மிகுந்தவனாக வாழ்ந்த என்னை நவ்விய பொது, அவனுக்கு அரை வயிற்றுப் பசிதீரவாவது அன்னம் கொடுத்தேனா! சாக்காடு என்று ஒன்று நிச்சயமாக இருக்கிறது என்று புராணங்களில் படித்ததை நம்பினேனா! "செத்த பிறகு என்ன கதி வந்தால் என்ன, இருக்கும்போது நமக்கு ஏன் கவலை!" என்று இருமாந்திருந்தேனே! இப்போது இங்கு நான் படும் தொல்லையை யாரிடம் சொல்வேன். என்னவென்று சொல்வேன்!’ என்று துக்கப்படுவான்.

“அப்போது அவன் அருகே இருக்கும் தூதர்கள் அவனைப் பார்த்து' முழு மூடனே! பூமியில் மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பைப் பெற்று, மானிட ஜென்மம் கிடைப்பது அரிது.

“அவன் இம்மைக்கும் மறுமைக்கும் தருமங்களையும் ஏராளமாகத் தான் வாழ்கின்ற காலமெல்லாம் செய்து புண்ணியங்களை சேர்த்திருக்கலாமே, அதை விட்டு மறுமைக்கு பயன் தராத பொருளைச் சேர்ப்பதிலேயே காலங்கழித்த மானிடனை என்னவென்று சொல்வது? பூமியில் வாழ்கின்ற காலத்திலேயே சேர்க்கிற நல்வினைத் தீவினைப் பயன்களை அடையாமல் உடலை இழந்து ஆவியான பின்பு எதையுமே செய்ய இயலாது.

“மண்ணுலகத்திலே ஆடம்பரமாக, அகம்பாவமாக, ஆனந்தமாகப் பெரியோரை மதிக்காமல் செல்வதும், உழைப்பாளியை உதைக்கச் செய்வதும் மனிதர்கள் செய்யும் புண்ணிய பாவங்களின் பயனேயாகும் என்பதை அறிவாயாக. இறந்தபின் நினைத்து என்ன பயன்?.

“கருடனே! உதக கும்பதானம் என்ற ஒருவகைத் தானமாக செய்யப்பட்டதாயின் ஜீவன், அந்த உதக கும்பத்திலுள்ள நீரைப் பருகியாவது சிறிதளவாவது தாகவிடாய் தீர்ந்து ஏழாம் மாதத்தில் அவ்விடத்தை விட்டு மீண்டும் நடந்து செல்வான்.

“இதுவரை பாதி தொலைவைக் கடந்தவனாய் அம்மாதத்தில் அவனுக்குரியவர் பூவுலகில் அன்னதானம் செய்ய வேண்டும். பிறகு அந்த ஜீவன் “பக்குவபதம்” என்ற பட்டினத்தைச் சார்ந்து எட்டாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து நடந்து ‘துக்கதம்’ ஊரை அடைந்து உண்பான்.

“விருஷோற்சனம் செய்யாமையால் அநேகம் ஜீவர்கள் பிரேத ஜென்மத்தோடு அப்பட்டணத்தில் கூட்டம், கூட்டமாக கூடி, ஒ ஒ வென்று ஓயாமல் ஓலமிட்டுக் கதறிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு கதறும் அச்சீவர்களை பாது அங்குவந்த ஜீவனும் கத்தி கதறிவிட்டு, அப்பால் நடந்து "அதத்தம்" என்ற ஊரையடைந்து பதினொன்றாம் மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து "சீதாப்ரம்" என்ற நரகத்தை அடைந்து அங்கு சீதத்தால் வருந்தி, பன்னிரெண்டாவது மாதத்து வருஷாப்தியப் பிண்டத்தை உண்டு, அங்கிருந்து புறப்பட்டு நான்கு திசைகளையும் பார்த்து ஈனக் குரலில், ‘யமகிங்கர்களே! என் உற்றார் உறவினர்களை காணோமே! ஏழையேன் என் செய்வேன்...’ என்று அழுவான்.

“அப்போது எமதூதர்கள் அந்த சீவனை நோக்கி, ‘முழுமூடனே! உன் மனைவி மக்கள் இன்னமுமாயிருப்பார்கள்? அவர்கள் மேல் உனக்குள்ள ஆசைகள் இன்னும் நீங்கவில்லையா? நீ செய்த புண்ணிய பாவங்களின் பயன்களைத்தான் இங்கு நீ காண முடியும்’ என்று அறைவார்கள். ‘ஐயோ! முன்னமே நீங்கள் சொன்னது மறந்து ஏதேதோ பிதற்றுகிறேன்...’ என்று தனக்குள் தானே மனம் புழுங்கி நடந்து வைவஸ்வத பட்டினம் என்ற நகரத்தைச் சேர்வதற்கு முன்பே ஊனற்பதிக பிண்டத்தை அருந்தி யமபுரி பட்டினமாகிய வைவஸ்வத பட்டினத்தை அடைவான்.

“யமபுரி நூற்றி நாற்பத்து நான்கு காதவழி அகலமுள்ளதால் காந்தர்வ அப்சரசுகளோடு கூடியதாய் என்பது நான்காயிரம் பிராணிகள் வாழுமிடமாகயிருக்கும் ஜீவன்கள் செய்யும் பாப புண்ணியங்கள் அறிந்து, எமதர்மனுக்குத் தெரிவிக்கும் பன்னிரண்டு சிரவணர்கள் என்பவர்கள் அந்த நகரில் இருப்பார்கள். ஜீவர்கள் அனைவரும் அந்தப் பன்னிரு சிரவணர்களையும் ஆராதனை செய்து ஆராதித்தால், ஜீவன் செய்த பாபங்களை யெல்லாம் மறைத்து புண்ணியங்களை மட்டும் சிரவணர்கள் யமதர்மராஜனுக்கு எடுத்துரைப்பார்கள் என்று திருமால் கூறியருளினார்.


Last edited by விமந்தனி on Tue Jan 06, 2015 12:31 am; edited 1 time in total


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by krishnaamma Tue Jan 06, 2015 12:30 am

//“அவன் இன்மைக்கும் மறுமைக்கும் தருமங்களையும் ஏராளமாகத் தான் வாழ்கின்ற காலமெல்லாம் செய்து புண்ணியங்களை சேர்த்திருக்கலாமே//

அவன் 'இம்மைக்கும்' என்று வரணும் விமந்தனி புன்னகை........'இம்மை' என்றால் இந்த பிறப்பு, 'இன்மை' என்றால் 'இல்லாமல்' இருப்பது  புன்னகை


//“யமபுரி நூற்றி நாற்பத்து நான்கு காதவழி அகலமுள்ளதால் காந்தர்வ அப்சரசுகளோடு கூடியதாய் என்பது நான்காயிரம் பிராணிகள் வாழுமிடமாகயிருக்கும் ஜீவன்கள் செய்யும் பாப புண்ணியங்கள் அறிந்து, //
என்பது இல்லை ...'எண்பது' (80) புன்னகை

தொடருங்கள் விமந்தனி புன்னகை கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 3838410834 கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 3838410834 கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 3838410834


Last edited by krishnaamma on Tue Jan 06, 2015 12:39 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Tue Jan 06, 2015 12:33 am

தாங்க்ஸ் கிருஷ்ணாம்மா. திருத்திவிட்டேன். பார்த்து, பார்த்து edit செய்தாலும் எப்படியாவது நழுவி விடுகிறது...


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 3 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 28 Previous  1, 2, 3, 4 ... 15 ... 28  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum