ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. !

Go down

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Empty அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. !

Post by krishnaamma Tue Dec 30, 2014 10:53 am

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. தமிழகம் முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும், குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே இயக்கப்பட்டன. போராட்டத்தை தீவிரப்படுத்த, தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளதால், ஓடாத பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்காததை கண்டித்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து, 11 தொழிற்சங்கங்கள், டிச., 29ம் தேதி (நேற்று) முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தன.ஆனால், நேற்று முன்தினம், திடீரென அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். திருச்சி கூட்டத்தில் பங்கேற்ற ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதால், இந்த வேலைநிறுத்தம் நடந்தது.

முடக்கம்:இதனால், 'வழக்கம் போல் பஸ்கள் ஓடும்' என்ற போஸ்டர் ஒட்டப்பட்ட பஸ்களும், பணிமனைகளில் முடங்கின. இதனால், அரசும், போலீசாரும் உஷார் அடைந்தனர். நேற்று காலை, மாநிலம் முழுவதும் உள்ள பணிமனைகளில், போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயங்கின. எனினும், 11 தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிக்கு வராததால், 50 சதவீதத்திற்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.

மக்கள் உஷார்:நேற்று திங்கட்கிழமை என்பதால், அலுவலகம், பள்ளி, கல்லுாரிக்கு செல்வோார் சிரமத்திற்கு ஆளாகினர். எனினும், நேற்று முன்தினம், அரசு பஸ்கள் ஓடாததால், மக்களும் உஷார் அடைந்தனர். நேற்று, அரசு பஸ்களை நம்பாமல், ரயில், ஆட்டோ, தனியார் வாகனங்களில் பயணித்தனர். சென்னையில், புறநகர் மின்சார ரயில்களில், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. காலை 10:00 மணிக்கு மேல், தமிழகம் முழுவதும், அனைத்து பணிமனைகளிலும், ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். மதியம் 12:00 மணிக்கு பின், சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகள், திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், வேலைநிறுத்தத்தை தீவிரப்படுத்துவது; அரசு, பேச்சுவார்த்தைக்கு அழைக்காத வரை, போராட்டத்தில் இருந்து, ஒரு போதும் பின்வாங்குவதில்லை என, முடிவு எடுக்கப்பட்டது.

கொட்டு மழையிலும்...

நேற்று, தமிழகத்தின் அனேக இடங்களில்,பரவலாக மழை பெய்தது. இருப்பினும், காலை, 11:00 மணிக்கு மேல், கொட்டும் மழையிலும், பஸ் ஊழியர்கள், பணிமனைகள் முன் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கை, நேற்று, நாள் முழுவதும் தொடர்ந்தது.

6,000 பேர் கைது: அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றாக தான் செயல்பட்டு வருகின்றன. அரசு பஸ்களை, பயிற்சி ஓட்டுனர்கள் மூலம் இயக்கி வருகின்றனர். அண்ணா தொழிற்சங்கத்தில், 91 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளதாகக் கூறுகின்றனர். பின், எதற்காக பயிற்சி ஓட்டுனர்களை கொண்டு பஸ்களை இயக்க வேண்டும். கடந்த, 2001ல் நடந்த போராட்டத்தின் போது, 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த, இரு நாட்களில், 6,000 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சவுந்தரராஜன்,தலைவர் - சி.ஐ.டி.யூ.,

ஆம்னி பஸ்களில் 'ஹவுஸ்புல்': கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, வெளியூர் சென்றவர்களும், புத்தாண்டு தினத்தில் பயணிப்போரும், அரசு பஸ்களில் முன்பதிவு செய்வதை தவிர்த்து வருகின்றனர். மாறாக, ஆம்னி பஸ்களில் முன்பதிவு சூடுபிடித்துள்ளது.ரயிலில் செல்வதற்காக, ஒருநாள் முன், முன்பதிவு செய்யும் வசதியான, தத்கலில் பெரும்பாலான பயணிகள் முன்பதிவு செய்தனர். இதனால், நேற்று காலை துவங்கிய சில நிமிடங்களில், பெரும்பாலான ரயில்களுக்கான தத்கல் முன்பதிவு, முடிவுக்கு வந்தது.

தோப்பில் தொழிலாளர்கள்: ஒரு சில போக்குவரத்து கழக தொழிலாளர்கள், தாங்கள் எந்த அமைப்புக்கும் கட்சியைசார்ந்தவரல்ல எனக்கூறி, கோபி, நஞ்சகவுண்டம் பாளையம் அரிஜன காலனி சுடுகாடு அருகே தென்னந்தோப்பில் முகாமிட்டிருந்தனர். போக்குவரத்து கழக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'அரசியல் கட்சியினரின் மிரட்டலுக்கு பயந்து தோப்பில் முகாமிட்டுள்ளோம். எம்.எல்.ஏ., அமைச்சர், நகரம், ஒன்றியம் கட்சி நிர்வாகிகள் மிரட்டுகின்றனர்' என்றனர்.

3 நாள் இழப்பு ரூ.20 கோடி: போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு டிக்கெட் கட்டண வகையில், 20.10 கோடி ரூபாயும், பிற வருவாய் வகையில், 4.52 கோடி ரூபாயும் என, மொத்தம், 24.62 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. வேலை நிறுத்த அறிவிப்பால், பஸ்களின் இயக்கம், டிச., 26ல் துவங்கி, தொடர்ந்து சரிந்து வருகிறது.டிச., 27ம்தேதி டிக்கெட் வசூல் வகையில், 16 கோடி ரூபாய்; டிச., 28ல் டிக்கெட் வசூலில், 15 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாயில் நேற்று மேலும் சரிவு ஏற்பட்டது.கடந்த, மூன்று நாளில் கழகங்களுக்கு, 20 கோடி ரூபாய் வரை வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளது.

தலைமை செயலகம் 'வெறிச்' : அனைத்து அமைச்சர்களும், நேற்று,தங்கள் மாவட்ட தலைநகரில் முகாமிட்டனர். பணிமனைக்கு சென்று, அதிகாரிகள் உதவியுடன், அ.தி.மு.க., தொழிற்சங்கத்தினரை வரவழைத்து, பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால், சென்னை தலைமை செயலகம் நேற்று, அமைச்சர்கள் வருகை இன்றி வெறிச்சோடியது.

'ஆன் டூட்டி, அதர் டூட்டி': சென்னையில் நேற்று முன்தினம், 90 சதவீத பஸ் சேவை பாதிக்கப்பட்டது. நேற்று, பஸ்களை இயக்க வேண்டிய கட்டாயத்திற்கு அண்ணா தொழிற்சங்கம் தள்ளப்பட்டது. 'ஆன் டூட்டி' என தொழிற்சங்க பணிகளில் இருந்தவர்களும், இலகுவான பணிகளை செய்து வந்த 'அதர் டூட்டி'யில் இருந்தவர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


60,120 பேர் வரவில்லை: தமிழகம் முழுவதும் உள்ள, 1.43 லட்சம் தொழிலாளர்களில், நேற்று, தற்காலிக தொழிலாளர்களையும் சேர்த்து, 50,125 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். இதிலும், 10 சதவீதத்தினர், பஸ் ஸ்டாண்ட், டெப்போவில் வண்டிகளுக்கான டிரைவர், கண்டக்டர்களுக்கு பணி ஒதுக்கீட்டில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட, 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த, 60,120 பேர் பணிக்கு வரவில்லை. இதனால், 20 ஆயிரம் பஸ்களில், 11,135 பஸ்கள் இயங்கவில்லை; 8,865 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. ! Empty Re: அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. !

Post by krishnaamma Tue Dec 30, 2014 10:54 am

வருடக்கடைசி இல் எத்தனை பேர் ஊருக்கு போவார்கள்......................புதுவருட கொண்டாட ......பாவம் அவர்கள் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அரசு ஊழியர்களின் சம்ப ளத்திலும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் பென்சனிலும் பத்து விழுக்காடு குறைக்க வேண்டுமாம்;
» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்
» சொத்து விவரம் தாக்கல்: மத்திய அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு விதிவிலக்கு
» அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுமுறை ரத்து - போக்குவரத்து கழகம்
» அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum