புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண் பெண் கிணறு தெரியுமா?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த தலைமுறைக்கு கிணறை பற்றித் தெரியாது. கிணற்றில் குளிப்பது, விளையாடுவது, கிணற்று படிக்கட்டில் அமர்ந்து படிப்பது, கோபித்துக்கொண்டால் கிணற்று படிக்கட்டில் அமர்ந்து அழுவது என கிராமங்களில் வாழ்ந்தவர்கள், கிணற்றின் நெருக்கத்தை நன்கு அனுபவித்தனர்.
"நினைவுகள் கசியும் இடம் கிணறு' என்பார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மார்ந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு-
என திருவள்ளுவர், கேணி (கிணறுகளை) பற்றி எழுதியுள்ளார்.
அதாவது, மணலில் ஊற்று தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல மனிதருக்கு கற்ற அளவிற்கேற்ப அறிவு சுரக்கும். இதிலிருந்து கிணறுகளுக்கு, வயது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அணைகள், நீர்தேக்கங்கள் இல்லாத காலத்தில் நீர் ஆதாரமாக, கிணறுகள் தோண்டி பயன்படுத்தினர். மனிதன் மற்றும் பிற உயிரினங்களில் இருபாலினம் உள்ளதைப்போல் ஆண் கிணறு, பெண் கிணறு என வகைப்படுத்தினர். விவசாய நிலத்தில் இருப்பது ஆண் கிணறு. அதை, விவசாயிகள் தங்கள் பிள்ளைகளைவிட அதிகம் நேசிப்பர். கயிற்றில் மாடுகளை பூட்டி, நாட்டுப்புற பாடல் பாடியவாறே கமலை மூலம் "சால்' கிணற்றுக்குள் இறக்கி, நீரை வெளியே இறைப்பர். ஏற்றம் மூலம் மனிதர்களே நீர் இறைப்பர்.
கிணற்றில் நீர் மட்டம் உயர்வது, குறைவதை வைத்தே விவசாயம் செழிப்பா? அல்லது வறட்சியா? என முடிவு செய்வர். கிணறு வற்றிவிட்டால், விவசாயி முடங்கிப் போய்விடுவான். வீட்டின் பின்புறம் இருப்பது பெண் கிணறு. கிணற்றடிதான் பெண்களின் அந்தரங்க வெளி. தண்ணீர் இறைத்து பாத்திரம் கழுவுதல், குளித்தல், துணி துவைத்தல், ஏகாந்த மனநிலையில் பாடுதல், அழுதல் என பெண்களின் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளும் தோழி கிணறு. பஞ்சம் பிழைப்பதற்காக, நல்லதங்காள் 7 பிள்ளைகளுடன், உடன் பிறந்த அண்ணன் நல்லதம்பி வீட்டிற்கு வந்தாள். நல்லதம்பியின் மனைவி மூளி அலங்காரியின் கொடுமையால், 7 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொன்று, தானும் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.
நல்லதங்காள். அதற்கு சாட்சியாக வத்ராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரத்தில், "நல்லதங்காள் கிணறு' உள்ளது. இதன் நீட்சியாக, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டில் பெண்கள் கோபித்துக்கொண்டு தலைமறைவானால், கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வர். கிணறுகளின் நினைவாக, மதுரையில் தொட்டியன் கிணற்று சந்து, வாணியர் கிணற்று சந்து, நல்ல தண்ணீர் கிணற்று சந்து என நன்றியுடன் தெருக்களுக்கு பெயர் சூட்டியுள்ளனர். மதுரை அருகே காதக்கிணறு, விருதுநகர் மாவட்டம்
மல்லாங்கிணறு, ராமநாதபுரம் கேணிக்கரை, கோவை கிணத்துக்கடவு என ஊர்களின் பெயரில் கிணறுகள் ஒட்டிக்கொண்டு உள்ளன.
திருமணம் முடிந்ததும், புதுப்பெண்ணை உறவுக்கார பெண்கள் ஊர் பொதுக் கிணற்றிற்கு அழைத்துச் செல்வர். புதுமணப் பெண்ணின் இரு கைகளிலும் வெற்றிலைகளை கொடுத்து, அதே கிணற்றில் வாளியில் இறைத்த நீரை கைகளில் ஊற்றுவர். கிணற்றில் வெற்றிலைகள் மிதக்கும். அதன்பிறகே, புதுமணப்பெண் அக்கிணற்றில் தண்ணீர் இறைக்க அனுமதிக்கப்படுவாள்.
ஊர் பொதுக் கிணற்றை சுற்றி, வட்டமாக மேடை அமைத்திருப்பர். அதில், இரவு பஞ்சாயத்து கூடுவது, அரசியல் பேசுவது, தூங்குவது நடக்கும். வெளி உலகம் தெரியாத நபரை, "கிணற்றுத் தவளையா இருக்கேயப்பா...,' எனவும், ஒரு பணி அல்லது முயற்சியில் பாதி முடித்து, முழுமையடையாவிடில் ",பாதி கிணறு தாண்டிட்ட, அப்புறம் என்னப்பா தயக்கம்,' என்பர்.
குடும்ப சண்டையின் போது பெண்கள் அழுதுகொண்டே, "எங்கப்பன் போயும், போயும் இப்பிடி பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டானே' (புதர், பூச்சி மண்டிய பராமரிப்பில்லாத கிணறு) என புலம்புவர். ஒரு சிறிய சம்பவம் மேலும் பூதாகரமாகும் போது," என்ன...,கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா இருக்கு...,' என பழமொழிகள் நீளும்.
மழைநீரை சேமிக்க, கிணறுபோல் வேறு அமைப்பு எதையும் ஒப்பிட முடியாது. மழைநீரை உள்வாங்கி, பின் மக்களுக்கே தருகிறது கிணறு. "போர்வெல்', நீரை உறிஞ்சி வெளியே தள்ளுவதோடு சரி. அளவுகோல் இன்றி, எந்த சாமானியனும் நிலத்தடி நீர் மட்டத்தை தெரிந்துகொள்ளலாம் கிணற்றில். நீர் இறைப்பது உற்சாகமான உடற்பயிற்சியாக இருந்தது. "உனக்கென்னப்பா..., முப்பாட்டன் காலத்திலிருந்து கிணத்து தோட்டம் வச்சுருக்க, கவலையில்ல,' என பெருமை தேடித்தந்தன கிணறுகள். "ஏற்றமுன்னா ஏற்றம், இதிலே இருக்குது முன்னேற்றம்...,,' எனவும் "ஏத்தமய்யா, ஏத்தம்...,எங்கப்பன், உம்பாட்டன், முப்பாட்டன் சொத்து இது ஏத்தம்..,' என சினிமா பாடல்கள் கிணறுகளின் பெருமையை ஒலித்தன. மின் மோட்டார்கள் வந்தபின், கிணற்று நீரை உறிஞ்சி வெளியே தள்ளின. இன்று கிணறுகளில் கமலை ஓசை, ஏற்றம், கப்பி, துலா சத்தம் அடங்கி விட்டன. கிணறுகள் பயனற்று பாழுங்கிணறுகள் ஆகிவிட்டன. பல கிணறுகள் இருந்த சுவடு தெரியாமல் மூடப்பட்டு, கட்டடங்களாகிவிட்டன.
"விஞ்ஞான காலத்தில் எல்லாமே மிஷினு, மனித மனசுகூட மிஷினாச்சு போபுள்ள...,' திரைப்பாடல் வரிகள் உணர்த்துவது, நாம் தொலைத்தது முப்பாட்டன் சொத்தான 2 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமுள்ள ஈரமுள்ள கிணறுகளை மட்டுமல்ல, நம் நெஞ்சின் ஈரத்தையும்தான்.
தினமலர்

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அருமையான பகிர்வு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கிணற்றில் நீர் இறைப்பதே சுகம்
இறைத்து இறைத்து மூச்சு
இறைப்பதும் சுகமே
இறைத்து பின் மூச்சு இறைத்து
குளித்தால் எடுக்கும் குளிரில்
நடுங்கி துவட்டி வரும்
சுகமே தனி தான்
இறைத்து இறைத்து மூச்சு
இறைப்பதும் சுகமே
இறைத்து பின் மூச்சு இறைத்து
குளித்தால் எடுக்கும் குளிரில்
நடுங்கி துவட்டி வரும்
சுகமே தனி தான்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஏற்றம் இரைப்பவர் பாடிய பாட்டின் வரிக்குஅடுத்த வரிக்காக காத்திருந்த கவிஞர் சிந்தனையை தூண்டிய................ ஏற்றப்பாட்டு நீர் இறைப்பின்போது பாடின கற்பனை பாட்டிற்கு கவிஞனே திகைக்கும் அளவிற்கு இருந்தகாலம்.... அருமையானபதிவு....பகிற்வு.....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1