ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை!

4 posters

Go down

பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை! Empty பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை!

Post by Powenraj Sun Dec 28, 2014 11:38 am

வடுகபட்டியில் என் கால்சட்டை நாட்களில் எனக்கு ஒரு கனவு இருந்தது. கலைஞர் எம்.ஜி.ஆர் – சிவாஜி பி.சுசீலா கே.பாலசந்தர் என்ற ஆளுமைகளைச் சந்திக்க வேண்டும் என்பதே அந்தக் கனவு. ஆனால் என் கனவுக்குரிய பாலசந்தர் என்னைச் சந்திக்க தொலைபேசியில் அழைப்பார் என்று நான் நினைக்கவில்லை. கமல்ஹாசனின் ராஜபார்வையில் 'அந்தி மழை’ எழுதப்பட்ட நேரம்... புதிய திரைமொழியோடு ஒரு கவிஞன் தமிழ் சினிமாவுக்குள் புகுந்திருக்கிறான் என்ற செய்தியை பாலசந்தருக்குச் சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். அப்போது சொந்தமாக தொலைபேசியோ, வாகனமோ இல்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்த எனக்கு மாடிவீட்டுத் தொலைபேசியிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. 'உங்களுக்கு ஒரு போன்; உடனே வாருங்கள்’ என்று. நான் சென்று எடுத்தால் எதிர்முனைக்குரல் நான் பாலசந்தர் பேசுகிறேன் என்றது. நான் நெகிழ்ந்தே போனேன். நாளை என் வீட்டுக்கு வந்து சந்திக்க முடியுமா என்று கேட்டார். மகிழ்ச்சியோடு வருகிறேன் என்றேன். மறுநாள் காலையில் சாலையில் வந்து பார்த்தால் சென்னையில் முழு அடைப்பு. எந்த வாகனமும் ஓடவில்லை. ட்ரஸ்ட்புரத்திலிருந்து மயிலாப்பூர் வாரன் சாலைக்கு 35 நிமிடத்தில் நடந்து சென்றேன். வியர்வையோடு என்னைப் பார்த்த பாலசந்தர் வியந்துபோனார். பாட்டெழுத வாய்ப்பு வரும் என்று போனால் வசனம் எழுத வாய்ப்பு தந்தார் பாலசந்தர்.

பாரதியார் வரலாற்றைப் படமாக்கப் போகிறேன். கமல்ஹாசன் தான் பாரதியார். நீங்கள் வசனம் எழுத வேண்டும் என்றார். அச்சத்தோடு ஒப்புக்கொண்டேன்... பாரதியார் குறித்த 300 நூல்கள் திரட்டி இரவு – பகல் குறிப்பெடுத்தேன். ஆனால் அந்தப் படம் தயாராகவில்லை. அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., பாரதியார் படத்தை அரசே தயாரிக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பில் பாலசந்தர் சோர்ந்துபோனார். பின்னாளில் புதுக்கவிதையில் பாரதியாரின் சரிதை 'கவிராஜன் கதை’யாக என்னால் எழுதப்பட்டதற்கு இயக்குநர் சிகரமே முழுமுதற்காரணம்.

அவர் மகாரசிகர். குழந்தையை 'இடுப்பிலுள்ள நந்தவனம்’ என்று தண்ணீர் தண்ணீர் படத்துக்கு நான் எழுதியதை திரையுலகில் அவர் சொல்லாத ஆளில்லை. திருத்தம் சொன்னாலும் அது நெற்றிக்குப் பொட்டு வைத்தது மாதிரி நேர்த்தியாக இருக்கும். சிந்து பைரவியில் –

'கவல ஏதுமில்ல

ரசிக்கும் மேட்டுக்குடி

சேரிக்கும் சேரவேணும்

அதுக்கும் பாட்டுப்படி

எண்ணியே பாரு

எத்தன பேரு

தங்கமே நீயும்

தமிழ்ப்பாட்டுப் பாடு’ – என்று எழுதியிருந்தேன். ஒற்றெழுத்தை அவர் 'ம்’ என்று மாற்றினார். தமிழ்ப்பாட்டும் பாடு என்று வருகிறபோது அது இரண்டு மொழிப் பாடல்களுக்கும் கட்டப்பட்ட பாலமாகிவிட்டது. அவர் தொழில்நுட்பக் கலைஞர் மட்டுமல்ல; தமிழ்நுட்பக் கலைஞர்.

அவர் கற்றுக் கொண்டேயிருந்தார். தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தார். தெரியாத செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள அவர் தயங்கியதே இல்லை. 'அச்சமில்லை அச்சமில்லை’ படத்திற்கு 'ஆவாரம் பூவு’ என்று ஒரு பாட்டு எழுதியிருந்தேன். ஆவாரம் பூ என்றால் என்ன என்று கேட்டார். அதுகுறித்த விவரங்களையெல்லாம் விளக்கினேன். படம் பார்க்கும்போது பார்த்தால் ஒரு கயிற்றுப்பாலத்தில் வண்டி வண்டியாகக் கொண்டுவந்த ஆவாரம் பூக்களைக் கொட்டி நிரப்பியிருந்தார். பாட்டு வரிகளுக்கு உயிர்கொடுக்க வேண்டுமென்பதில் அதிக அக்கறை உள்ளவர். 'புன்னகை மன்னன்’ படத்தில் 'என்ன சத்தம் இந்த நேரம்’ பாட்டில் 'ஆரிரரோ யார் இவரோ?’ என்ற வரியை படமாக்கும்போதும் கேமராவையே தூளிகட்டி ஆடவிட்டிருப்பார்.

பாலசந்தர் அவர்களுக்கு என் திரைவாழ்க்கை நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் வெற்றி தோல்வி என்று எது வந்தாலும் அதை சமமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைக் காலம் கொடுத்திருக்கிறது. இனி பெறப்போகும் எதுவும் வெற்றியுமில்லை; அடையப்போவது எதுவும் தோல்வியும் இல்லை. ஆனால் 90களில் நான் தோற்றுப்போய்விட்டதாக துவண்டுகிடந்தேன். 92-ல் ஒரே ஆண்டில் பாலசந்தரின் கவிதாலயா மூன்று படங்களைத் தயாரித்தது. வானமே எல்லை – அண்ணாமலை – ரோஜா. மூன்று படங்களுக்கும் இயக்குநர்கள் வேறு, இசையமைப்பாளர்கள் வேறு – நடிகர்கள் வேறு. ஆனால் பாடலாசிரியர் மட்டும் ஒருவன் வைரமுத்து என்று எனக்குப் பெருவாய்ப்பு வழங்கியிருந்தார் பாலசந்தர். அந்த மூன்று படங்களுக்கும் என் உயிர் மூச்சையே ஊற்றி எழுதினேன். மூன்றும் வெற்றி பெற்றன. நான் இன்று வரைக்கும் தொடரும் என் பாட்டுப்பாதை அவர் போட்டுக்கொடுத்தது.

கமல் மீது காதல் அவருக்கு. தன்னை விட்டு வளர்ந்து வெகுதூரம் போய்விட்டதில் ஒரு சின்ன ஆதங்கமும் அவருக்கிருந்தது. அவன் நாத்திகனாகவே இருக்கட்டும்; அதை ஏன் வெளியே சொல்லி அலைகிறான் என்று என்னிடம் அவரைச் செல்லமாகக் கோபித்ததுண்டு. அவர் கூப்பிட்டு 'வயலும் வாழ்வும்’ எடுத்தாலும் நான் நடிப்பேன்; அவர் மீது நான்கொண்ட பக்தி அப்படியென்று கமலும் என்னிடம் மனம் திறந்திருக்கிறார்.

ரஜினியை எப்படித் தேர்வு செய்தீர்கள் என்று அவரிடம் ஆர்வமாக நான் கேட்டிருக்கிறேன். 'கனவு மிதக்கும் அந்தக் கண்கள்... கலகம் செய்யும் கண்கள்... அதுதான் ரஜினியை நான் தேர்வு செய்யக் காரணம்’ என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.

எங்கள் வாழ்வுக்குப் பக்கத்திலேயே வரமாக வந்த மாபெரும் கலைஞன் மறைந்துவிட்டார் என்ற செய்தி இதயத்தை உடைத்தெறிந்துவிட்டது. சில மரணங்கள் வெறும் செய்திகள். சில மரணங்கள் வாழ்வின் கடைசிச் சம்பவங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் பாலசந்தரின் மறைவு என்பது என் தகப்பன் இரண்டாம் முறை இறந்து போனதுபோல் துக்கமானது. அன்று மாலை பாலசந்தர் இல்லத்தில் அவரது பூத உடலுக்குப் பக்கத்தில் ரஜினியும் நானும் கவிதாலயா நடராஜனும், இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும், மகன் மதன் கார்க்கியும் இரண்டு மணி நேரங்களுக்குமேல் அமர்ந்து துக்கம் பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு வந்துவிட்டார் ரஜினி. மயானமேடைக்கு அருகே ரஜினியும், நானும், தங்கை ஐஸ்வர்யாவும் சோகம் கப்பிப்போய் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தபோது திடீரென்று ரஜினி என்னைப் பார்த்துக் கேட்டார்; 'சாருக்கு நான் வாய்க்கரிசி போடவேண்டுமே.’ நான் சம்பந்தப்பட்ட ஒரு நண்பரை அழைத்து அதற்கு ஏற்பாடு செய்து ரஜினியை வெளியே அனுப்பிவைத்தேன். இயக்குநர் சிகரத்துக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு மீண்டும் எங்களை வந்தடைந்தார். ஒரு தகப்பனாருக்கு மகன் செய்ய வேண்டிய கடைசி மரியாதையை செய்துவிட்ட நிறைவோடு ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டார்.

பாலசந்தர் மார்பின் மீது கற்பூரம் கொளுத்தப்பட்டது. அது கொழுந்துவிட்டு குபுகுபுவென்று எரிந்தது. அந்த நெஞ்சில் எரிந்த 60 வருட அக்கினிதானே தமிழ் சினிமாவைப் புடம்போட்டுக்கொடுத்தது. அந்தக் கற்பூரத்தீ அணைந்துவிடலாம். அந்தக் கலைத்தீ அணையுமா? என்று கருதிக்கொண்டு கண்களில் நீர்முட்ட நின்றபோது... 'தடக்’கென்ற சப்தத்தோடு உள் எரிவாயில் சென்று விழுந்தது பாலசந்தரின் உடல். உடனே திரை விழுந்தது; இரும்புத்திரை. கனத்த நெஞ்சோடு கலங்கிய கண்களோடு கலைந்தோம். பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை.

நன்றி:ஜினியர்விகடன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை! Empty Re: பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை!

Post by ayyasamy ram Mon Dec 29, 2014 3:55 pm

பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை! 103459460
-
பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை! JouHaHUqQhe5abNCBX61+bala
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை! Empty Re: பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை!

Post by M.Saranya Mon Dec 29, 2014 4:31 pm

நெஞ்சை கசக்கிய நிகழ்வு அவர் மறைவு....
தாங்கள் கூறியது போல் அவர் கலை
என்றுமே கலையாது....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை! Empty Re: பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை!

Post by mbalasaravanan Mon Dec 29, 2014 6:10 pm

நன்றி நன்றி நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை! Empty Re: பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாரிஸும் இல்லை, சிங்கப்பூரும் இல்லை: இதுதான் உலகின் காஸ்ட்லியான நகரம்
» ”தி.மு.க.-வில் வந்த மாட்டைக் கட்டுவதும் இல்லை. போன மாட்டைத் தேடுவதும் இல்லை!”
» “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை
» கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள்
» பார்வை இல்லை; கடலில் பயம் இல்லை: படகு ஓட்டி பிழைக்கும் 70 வயது "இளைஞர்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum