ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!”

+2
ayyasamy ram
Powenraj
6 posters

Go down

இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Empty இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!”

Post by Powenraj Sat Dec 20, 2014 5:43 pm

வைகோவின் அரசியல் பயணத்தில் இன்னுமொரு திருப்பம்!

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் அமைத்த கூட்டணியை முறித்துக்கொண்டு முதல் ஆளாக வெளியேறிவிட்டார். 'பொருந்தாக் கூட்டணியில் ஏன் சேர்ந்தீர்கள்... ஏன் விலகினீர்கள்?’ எனக் கேட்டால், ஆதி முதல் அந்தம் வரை உணர்ச்சித்ததும்பப் பேசினார்...



''அது ஓர் அக்னிப்பரீட்சை காலகட்டம். நாடாளுமன்றத் தேர்தல் சமயம், ஈழத் தமிழர்களை அழிக்க ஆயுதம் கொடுத்து, நம் சொந்தங்கள் கொல்லப்படக் காரணமா இருந்த சோனியா காந்தியிடம் மீண்டும் ஆட்சி அதிகாரம் செல்லாமல் இருக்க என்ன வழி என யோசிச்சா, எனக்கு வேற ஒண்ணுமே புலப்படலை. அப்போ பா.ஜ.க தரப்பில் இருந்து முரளிதர ராவ், பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜுலு ஆகியோர் தொடர்ந்து என்கிட்ட கூட்டணிக்காகப் பேசினாங்க. 'நீங்க புலிகளை ஆதரிக்க வேணாம். இலங்கைப் பிரச்னையில் வாஜ்பாய் என்ன கொள்கையைப் பின்பற்றினாரோ, அதையே பின்பற்றுவோம்னு உறுதி கொடுத்தால், கூட்டணியில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’னு சொன்னேன். அதுக்கு 'சரி’னு சொன்னாங்க. தேர்தல் பிரசாரத்துக்காக வண்டலூர் வந்த மோடியை அவர் தங்கியிருந்த ஹோட்டலில் சந்தித்தேன். 'ஈழத் தமிழர்கள் பிரச்னையில் வாஜ்பாய் அணுகுமுறையைப் பின்பற்றுவோம்னு சொன்னால் போதும்’னு சொன்னேன். அவரும் 'நோ ப்ராப்ளம்’னு சொன்னார். ஆனா, தேர்தலுக்குப் பிறகு மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்ஷே வர்றார்ங்கிற செய்தி வந்ததும் எனக்குக் கை-கால் ஆடிடுச்சு.

அடுத்த அரை மணி நேரத்துல எதிர்ப்பு அறிக்கை கொடுத்துட்டு, மோடிக்கு ஒரு கடிதத்தை இ-மெயில் அனுப்பினேன். அப்ப ராஜ்யசபாவில் எனக்குப் பதவி கொடுக்கப்போறதா பேச்சு அடிபட்டது. எங்கேயோ டூர்ல இருந்த மோடியைத் தொடர்புகொள்ள முடியலை. உடனே வசுந்தரா ராஜே சிந்தியாவைச் சந்திச்சு, 'ராஜபக்ஷே வருகையைத் தடுக்கணும்’னு சொன்னேன். 'ஆமா, இது ரொம்பத் தப்பான முடிவுதான். நீங்க மோடிகிட்ட பேசுங்க’னு சொன்னாங்க. ராஜ்நாத் சிங், 'இதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாது’னு சொல்லிட்டார்.

அப்புறம் மோடியைச் சந்திச்சேன். அப்போ அமித்ஷாவும் அருண் ஜெட்லியும் உடன் இருந்தாங்க. சுமார் முக்கால் மணி நேரம் பேசினேன். என் மனவேதனைகளை எல்லாம் கொட்டினேன். ஒரு ஸ்டேஜ்ல,

'ஐ ஃபால் அட் யுவர் ஃபீட்... உங்க கால்லகூட விழுறேன். தயவுசெஞ்சு அவரைக் கூப்பிடாதீங்க’னு சொன்னேன். 'சார்க் நாட்டு தலைவர்களைக் கூப்பிட்டுட்டோமே’னு ஜெட்லி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிட்டு இருந்தார். 'இன்னைக்கு ராத்திரிக்குள்ள ஒரு முடிவெடுங்க. இல்லைனா, கறுப்புக் கொடி காட்டுறதைத் தவிர எனக்கு வேற வழி இல்லை’னு சொல்லிட்டு வந்துட்டேன்!

போராட்டம் நடத்தினோம். ஆனாலும் இலங்கை மீதான இந்திய அரசின் அணுகுமுறையில் எந்தவித மாற்றமும் இல்லை. வரிசையா சூழ்ச்சிகள்தான் அரங்கேறின. சேஷாத்திரி சாரியையும், சுப்ரமணியன் சுவாமியையும் அனுப்பி, இலங்கை ராணுவ மாநாட்டுல போய் ராஜபக்ஷே அரசின் ராணுவ நடவடிக்கைகளைப் பாராட்ட வெச்சாங்க. இலங்கை மந்திரி பெரீஸ் இந்தியா வந்தப்ப, '2015-ம் ஆண்டு மார்ச் மாசம் நடக்கப்போற மனித உரிமை கமிஷன் கூட்டத்தில், இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கப்போறோம்’னு சுஷ்மா ஸ்வராஜ் சொன்னதை வெளியுறவுத் துறைச் செயலர் வெளிப்படையாகப் பத்திரிகையாளர் சந்திப்புலயே சொன்னார். இதையெல்லாம்விட பெரிய அதிர்ச்சி, கொலைகாரன் ராஜபக்ஷேவுக்கு பாரத் ரத்னா விருது கொடுக்கணும்னு பேச்சு கிளம்பியதுதான். பா.ஜ.க-வில் யாரும் அதைக் கண்டிக்கவே இல்லை. உச்சக்கட்ட அதிர்ச்சியா, 'இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துகள்’னு மோடி அந்தக் கொடுங்கோலனை வாழ்த்தியிருக்கார். ஈழத் தமிழர் நலனில் காங்கிரஸைவிட பா.ஜ.க மோசமா நடந்துக்கிறதால, கூட்டணியில் இருந்து வெளியேறுவதைத் தவிர எங்களுக்கு வேற வழி இல்லை.''

''ஈழம் தவிர, பிரதமர் மோடியின் மற்ற செயல்பாடுகள் மீது உங்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லையா?''

''இவங்க இந்துத்துவா கொள்கைகளைக் கொண்டுவந்து திணிக்கணும்னுதான் திருக்குறளையும், பாரதியையும் பிரபலப்படுத்துறோம்னு கிளம்பியிருக்காங்க. தமிழ் மொழி, திருக்குறளுக்கு ஆதரவாகப் பேசும் பா.ஜ.க எம்.பி தருண்விஜய்யைப் பாராட்டி, ஒரு திருவள்ளுவர் சிலையை நானே அவருக்குக் கொடுத்துவிட்டேன். ஆனா, அவர் 'சம்ஸ்கிருதம்தான் இந்தியாவின் எல்லா மொழிகளுக்கும் தாய்’னு பேசியிருக்கார்னு பிறகுதான் தெரியவந்துச்சு.

இவங்க ஏன் புதுசா ராஜேந்திர சோழனுக்கு விழா, ராஜராஜ சோழனுக்கு விழானு வர்றாங்க? தமிழர்கள் உணர்ச்சிபூர்வமானவர்கள். அதுல புகுந்து விளையாடினோம்னா, இவங்களுக்குள்ள ஊடுருவிடலாம்னு வர்றாங்க. சம்ஸ்கிருதத்தையும் திணிச்சு, திராவிட இயக்கத்தின் ஆணிவேரை அறுக்கிற அளவுக்கான திட்டம் அது. இதையெல்லாம்விட பெரிய ஆபத்து... இவங்க அமல்படுத்தும் கல்விமுறை மாற்றம். உண்மை வரலாற்றை மறைச்சுட்டு, புராணச் செய்திகளை குஜராத்தில் வரலாறு ஆக்கிட்டாங்க. அந்த ஆபத்தான கல்விமுறையை இந்தியா முழுக்கக் கொண்டுவரப்போறாங்க. இப்படி இவங்களோட உண்மை சொரூபம் தெரிஞ்சதும், கூட்டணியில் இருந்து வெளியேற ஒரு காரணம்.''

''ஏதோ பா.ஜ.க ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி ஆரம்பிச்ச கட்சி மாதிரி, 'அந்தக் கட்சியைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை’னு சொல்றீங்களே. அவங்க எப்பவும் இந்துத்வா ஆதரவுக் கொள்கைகளோடுதானே இருக்காங்க?''

''அத்வானிக்கு கட்சியில் ஒரு ரோல் இருக்கும். அவர் நாம சொன்னா ஓரளவுக்குக் கேப்பார்னு தேர்தலுக்கு முன்னாடி நினைச்சோம். ஆனா, அந்தக் கட்சியில் இப்போ எல்லாமே தலைகீழ்.''

''பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறிட்டீங்க... தே.மு.தி.க., பா.ம.க-வுடன் நட்பு தொடருதா?''

''எல்லாரோடும் நட்பாவும் மதிப்பாவும் இருக்கேன். தேர்தல் வரும்போது அன்றைய சூழ்நிலைக்கு ஏற்றபடி கூட்டணி குறித்து முடிவெடுப்போம்.''



''நீங்கள் பொதுவாழ்க்கைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில், பொன்விழா மாநாடு நடத்தப்போறாங்களாமே?''

''நான் என் பிறந்த நாளைக்கூடக் கொண்டாட மாட்டேன். காரணம், என் ஒரிஜினல் பிறந்த நாள் எனக்கே தெரியாது. பள்ளிச் சான்றிதழ்படி மே 22-னு இருக்கும். வாஜ்பாய், ஒரு மே 22-ல் போன் பண்ணி என்னை வாழ்த்தினார். 'இன்று என் பிறந்த நாள் இல்லை’னு சொன்னேன். '365 நாள்ல ஏதோ ஒருநாள் உங்க பிறந்த நாளா இருக்கும்ல. இந்த வாழ்த்து அந்த நாளுக்கானது’னு சொன்னார்.

கட்சித் தொண்டர்கள்தான், 'நீங்க, பிறந்த நாள் கொண்டாடுறது இல்லை; அரசியலுக்கு வந்து

50 வருஷங்கள் ஆகிடுச்சு. அதுக்கு ஒரு பொன்விழா மாநாடு நடத்துறோம்’னு சொன்னாங்க. நான் மறுத்தேன். ஆனா, என்னைக் கட்டாயப்படுத்தி சம்மதிக்கவெச்சுட்டாங்க. மே 5, 6 தேதிகளில் சென்னையில் விழா. பிரகாஷ் சிங் பாதல், ஃபரூக் அல்லது ஒமர் அப்துல்லா, மம்தா பானர்ஜி, நிதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ், சரத் பவார், சந்திரபாபு நாயுடுனு பலரை அழைக்க உள்ளோம். இவர்களுடன் முன்னாள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங். அவரை, காங்கிரஸ்காரராக அழைக்கவில்லை; என் மேல் அன்பும் மதிப்பும்கொண்ட நண்பராக அழைக்கிறோம். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க தவிர்த்து அனைத்துக் கட்சியினரையும் அழைக்கிறோம். என்னுடைய 1,531 நாடாளுமன்ற ஆங்கிலப் பேச்சுக்களை நாலு பவுண்டு வால்யூம்களாகத் தொகுத்து வெளியிடுகிறார்கள்.''

''அரசியலில் 50 வருடங்களாக ஏகப்பட்ட பயணம், உழைப்பு, அனுபவங்கள்... ஆனால், சொந்தத் தொகுதியில்கூடத் தோல்விதான் மிஞ்சுகிறது. இதை நினைத்து வருந்தியிருக்கிறீர்களா?''

''வருத்தப்படலை! ஏன்னா, 2,61,000 மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். அது பெரிய விஷயம். 500, 1,000, 2,000 ரூபாய்னு பணம் கொடுக்கும்போது, 'இன்னைக்கு செலவுக்குக் கொடுத்தாங்களே’னு ஒரு நன்றிக்கடன்ல எதிர்தரப்புக்குக்கூட ஓட்டு போட்டுடுறாங்க. வசதியானவங்களே அரசாங்கத்தின் இலவசப் பொருட்களை வாங்கும்போது, ஏழை மக்களை நான் குறைசொல்ல விரும்பலை.

என் தோல்வி, கட்சி எதிர்காலத்தைப் பாதிக்குமேனு நானாவது கொஞ்சம் வருத்தப்பட்டேன். ஆனா, என் தோழர்கள் அதை ஒரு பொருட்டாவே எடுத்துக்கலை. 'ஸ்பார்ட்டா’ வீரர்கள் மாதிரி முன்னைவிடத் துடிப்பா இயங்கிட்டு இருக்காங்க. கடந்த 50 ஆண்டு அரசியல் பயணத்தில் வாய்தவறிக்கூட, 'நான்தான் முதலமைச்சர்’னு இதுவரை நான் சொன்னதும் இல்லை; அந்தக் கனவில் நான் இருக்கேன்னு வெளிப்படுத்தினதும் இல்லை. ஆனா, என் தோழர்களுக்கு அந்த ஆசை உண்டு.''

''ராமதாஸ் பேத்தி திருமணத்தில் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தது, முல்லைப் பெரியாறு விவகாரத்தில்ஜெயலலிதாவைப் பாராட்டியது... 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான முஸ்தீபுகளா?''

''இன்று ஒன்று சொல்கிறேன்... குறித்துக்கொள்ளுங்கள். இன்று மட்டும் அல்ல,

வருங்காலத்திலும் அ.தி.மு.க-வோடும் கூட்டு கிடையாது; தி.மு.க-வோடும் கூட்டு கிடையாது. ஆனால், இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே. இது தொடர்பாக இறுதி முடிவெடுக்க வேண்டியது என் கட்சித் தோழர்கள்தான். திருமண வீட்டில் ஸ்டாலினிடம் பேசியது நட்பும் அரசியல் நாகரிகமுமான ஒரு விஷயம். முல்லைப் பெரியாறு விவகாரத்தில், உண்மையிலேயே அந்த வழக்கை சட்டபூர்வமா நடத்தி வெற்றி பெறவைத்தது ஜெயலலிதாவின் வியூகம்தான். நான் பாராட்ட வேண்டியதைப் பாராட்டுவேன்; விமர்சிக்க வேண்டியதை விமர்சிப்பேன். ஒரு கட்சித் தலைவரைப் பாராட்டினால், உடனே கூட்டணிதான் என்ற ஹேஷ்யம் கிளம்பும் அளவுக்கு, தமிழ்நாட்டில் சிந்தனை மலிவுபட்டிருப்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.''

'' 'திராவிடக் கட்சிகளின் சித்தாந்தம் காலாவதி ஆகிடுச்சு’னு அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் பேசியிருக்காரே?''

''அதன் அரிச்சுவடிகூட அன்புமணிக்குத் தெரியாது. அதைப் பற்றி தெரியாத ஒருவர், 'முடிஞ்சிடுச்சு’னு எப்படி சொல்ல முடியும்?''

''சுப்ரமணியன் சுவாமியை 'அரசியல் ஜோக்கர்’ என்கிறார்கள் சிலர். ஆனால், ஈழத் தமிழர் விவகாரம், கூட்டணிக் கட்சிகளின் இருப்பு... என, பல விஷயங்களில் அவர் நினைப்பதுதானே நடக்கிறது?''

''அவர் ஜோக்கர் அல்ல. அவரிடம் நல்ல ஆங்கிலப் புலமை இருக்கிறது. சட்டநுணுக்கம் தெரிந்தவர். ஹார்வேர்டில் போய் லெக்சர் தருகிறார். ஆனால், தன் அறிவு அனைத்தையும் அழிவுக்குப் பயன்படுத்தும் மிக மிக ஆபத்தான ஒரு மனிதர். அவர் ராஜபக்ஷேவால் பா.ஜ.க-வுக்குள் திணிக்கப்பட்ட ஓர் ஏஜென்ட். இது நூற்றுக்கு நூறு உண்மை.''

''சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனை காரணமாக 'இனி 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாவால் தேர்தலில் நிற்க முடியாது’ என்கிறார்கள். அவரின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?''

''ஈழம், தமிழக அரசியலில் உள்ள வாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்ள, டெல்லியில் இருக்கும் ஐரோப்பிய யூனியன் தூதுவர்கள் சிலர் சென்னையில் என்னைச் சந்தித்தனர். அப்போது 'தமிழகத்தில் இன்று தேர்தல் நடந்தால், யார் ஜெயிப்பார்கள்?’ எனக் கேட்டனர். 'ஜெயலலிதா. காரணம், ஊழல் குற்றச்சாட்டைத் தாண்டி மக்களிடம் அவர் மேல் ஓர் அனுதாபம் இருக்கு’னு சொன்னேன். அதுவே உங்கள் கேள்விக்கும் பதில்.''

''தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்-ஐ எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் சகட்டுமேனிக்கு விமர்சிப்பது பற்றி...''

''ஒரே நாளில் திடீரென முதல்வர் ஆனவர் அல்ல அவர். அந்தக் கட்சியில் அடிமட்டத் தொண்டராக இருந்து முன்னேறியவர். அவர், விவரம் தெரியாதவர் அல்ல; நுணுக்கமாகப் பேசக்கூடியவர்; பதில் சொல்லக்கூடியவர். எனவே, அவரை எவரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என்பது என் கருத்து!''

''தங்கள் கொள்கைகளைக் காக்க திராவிடக் கட்சிகள் ஒண்ணுசேரணும்னு சொல்றீங்க. ஆனா, ஈழ ஆதரவு கட்சிகள் இடையிலேயே இணக்கமான நட்பு இல்லையே. அப்புறம் திராவிடக் கட்சிகள் எங்கிருந்து ஒன்று சேர்வது?''

''நம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களே தாங்கள் கோலோச்சிய 10 ஆயிரம் ஆண்டுகளில் மிகச் சில காலகட்டத்தைத் தவிர, ஒற்றுமையாக இருந்தது இல்லை. காரணம், எமோஷன்ஸ்; சென்டிமென்ட்; ஈகோ. அது நம் ரத்தத்திலும் ஊறியிருக்கு. கேரளாக்காரர்கள்10 பேர் எங்க போனாலும் ஒண்ணாவே இருப்பார்கள். ஆனா, நாம 15 திசைகள்ல நிப்போம். மூணு தமிழர்கள் தூக்கைத் தடுக்க எங்க சொந்த செலவில் எல்லாரையும் அழைச்சிட்டு வந்தோம். அதில் எதுவும் அபிப்பிராயப் பேதம் வந்துடக் கூடாதுனு எங்க பேரைக்கூடப் போடாம ஒரு மூலையில நின்னோம். அப்பக்கூட ரெண்டு, மூணு பேர் அந்த மேடைக்கு வரவே மாட்டேன்னு சொல்லிட்டாங்களே! நாங்கள் முடிந்த அளவுக்கு உணர்வாளர்களை ஒண்ணு சேர்த்துக்கொண்டுபோகணும்னு நினைக்கிறோம். ஆனா, தனக்குன்னு ஒரு அஜெண்டா வெச்சுக்கிட்டு விடுதலைப்புலிகள் பெயரைச் சொல்லி, பிரபாகரனைச் சொல்லி தங்களை வளர்த்துக்கலாம், சில வசதிகளைத் தேடிக்கலாம்னு நினைக்கிறவங்களை நான் எதுக்கு மதிக்கணும்? மேலும், திராவிடக் கட்சிகள் ஒண்ணுசேர வேண்டும் என நான் சொல்லவில்லை; திராவிடக் கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைத் தடுப்பதில் ஒன்றுபட்ட சிந்தனை வேண்டும் என்றே சொன்னேன்!''

நன்றி:ஆனந்தவிகடன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Empty Re: இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!”

Post by ayyasamy ram Sat Dec 20, 2014 6:08 pm

எல்லாம் இவரது தனிப்பட்ட கருத்தாம்..!
இறுதி முடிவெடுக்க வேண்டியது அவரது கட்சித் தோழர்கள்தானாம்..!!
-
தேவைன்னா கட்சித் தோழர்கள் சொல்றாங்கன்னு
கூட்டு வெச்சுக்குவார்..!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Empty Re: இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!”

Post by SajeevJino Sat Dec 20, 2014 6:42 pm

.

கடைசியில்  அந்த வார்த்தைகளை கூற மறந்துட்டரே

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை

அவர் சிறந்த ஒரு அரசியல் வாதி ..அரசியலைத் தாண்டி நாங்கள் நல்ல நண்பர்கள்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Empty Re: இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!”

Post by T.N.Balasubramanian Sat Dec 20, 2014 9:08 pm

ayyasamy ram wrote:எல்லாம் இவரது தனிப்பட்ட கருத்தாம்..!
இறுதி முடிவெடுக்க வேண்டியது அவரது கட்சித் தோழர்கள்தானாம்..!!
-
தேவைன்னா கட்சித் தோழர்கள் சொல்றாங்கன்னு
கூட்டு வெச்சுக்குவார்..!!
மேற்கோள் செய்த பதிவு: 1110603

திமுக , பாமக . கையாளுகிற  உத்திதானே இதுதானே .
அதிமுக இதில் தனி .அம்மாதான் எல்லாம் .
திமுக வில் முக வைச்சதுதான் சட்டம் . ஆனால் பொது குழுவில் வைப்பார் . ஏக மனதாக நிறைவேறும்.
பாமக --ஒரு காலத்தில் ராமதாஸ் , இப்போது அன்பு மணி . பொது குழுவில் வைப்பார் . ஏக மனதாக நிறைவேறும்.
பதவி வருமெனில் ,பல்டி அடிப்பர், நம் அரசியல்வாதிகள் .
அரசியலில் ,ஆர்வம் வருவதும் , நகைச்சுவையை ரசிப்பதும் ,இந்த காமெடி பபூன்களால்தான்.
வளர்க ,இவர்கள் இனம் .
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Dec 20, 2014 9:11 pm; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Empty Re: இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!”

Post by Muthumohamed Sun Dec 21, 2014 12:08 am

அடுத்த தேர்தல் வரட்டும் இவரின் கூட்டணி பற்றி தெரிந்துவிடும்



இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Mஇனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Uஇனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Tஇனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Hஇனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Uஇனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Mஇனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Oஇனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Hஇனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Aஇனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Mஇனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Eஇனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Empty Re: இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!”

Post by சிவனாசான் Sun Dec 21, 2014 9:18 am

எலியும் பூனையும் தோழமை எப்படி கொள்ளுங்க ஒருபோதும் ஒட்டாதுங்க........ஒன்று படாதுங்க......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!” Empty Re: இனி அ.தி.மு.க., தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது!”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum