ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்!

4 posters

Go down

கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்! Empty கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்!

Post by krishnaamma Wed Dec 17, 2014 7:57 pm

கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்! VYnNjhq6SuV1yc243Umt+ld2978

பிரைடல் மேக்கப்

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பது வேறு எதற்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, திருமண வைபவங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும். குறிப்பாக மணப்பெண் அலங்காரங்களுக்கு! போன வருடம் இருந்த ஃபேஷன், இந்த வருடம் இருக்காது. ‘அடடா… இன்னும் கொஞ்சம் லேட்டா கல்யாணம் பண்ணியிருக்கலாமோ…’ என ஒவ்வொரு பெண்ணையும் ஏங்க வைக்கிற மணப்பெண் அலங்காரத்தில், இன்றைய டிரெண்ட் என்ன? ‘நேச்சுரல்ஸ்’ வீணா குமாரவேல் விளக்கமாகப் பேசுகிறார்…

‘‘பல பெண்களுக்கும் கல்யாணம்கிற சம்பவம்தான் முதல் மேக்கப்புக்கான வாய்ப்பா அமையுது. அதுவரை பார்லருக்கு போய், புரொஃபஷனலா மேக்கப் போட்டுக்கிட்ட அனுபவம் இருக்காது. கல்யாணத் துக்கு மேக்கப் போடணும்னு வரும்போது, அது தனக்கு பொருந்துமா, எப்படி இருக்குமோனு ஏகப்பட்ட கேள்விகள் இருக்கும். அவங்க பார்த்த யாரோ ஒரு பிரபலம் அல்லது தோழியோட கல்யாண மேக்கப் மாதிரியே தனக்கும் பண்ணிக்கணும்னு மனசுல நினைச்சிருப்பாங்க. அது தனக்கு நல்லா இருக்குமாங்கிற சந்தேகமும் இருக்கும். இப்படி மேக்கப் தொடர்பான அவங்களோட எல்லா கேள்விகளுக்கும் விடை சொல்ற வாய்ப்புதான், இன்னிக்குப் பிரபலமாயிட்டிருக்கிற ‘ட்ரையல் மேக்கப்’. கல்யாணப் பெண்கள் மட்டுமில்லாம, அவங்களோட தோழிகளும்கூட இப்பல்லாம் இதை ட்ரை பண்றாங்க.

இன்னிக்கு 18, 19 வயசுல கல்யாணம் பண்ற பொண்ணுங்க ரொம்பக் கம்மி. பெரும் பாலும் 24, 25க்குப் பிறகு தான் பண்றாங்க. அது 30 வயசு வரைக்கும் போகுது. வேலை டென்ஷன், கல்யாண அலைச்சல், சுற்றுப்புற மாசு, வயசுனு பல காரணங்களாலயும், இவங்களோட சருமம் முதிர்ச்சியோடவும், பொலிவே இல்லா மலும் இருக்கிறதைப் பார்க்கறோம். கல்யாணத்துக்கு முந்தைய ப்ரீ பிரைடல் பேக்கேஜ்ல, கல்யாணப் பெண்களோட சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கிறது தான் முக்கியமான வேலை. 3 மாசத்துக்கு முன்பிருந்தே இந்த சிகிச்சைகளை ஆரம்பிக்கணும். கல்யாணப் பெண்ணோட சருமம் மற்றும் கூந்தலோட தன்மையையும் கண்டிஷனையும் பார்த்து, அவங்களுக்கு என்ன சிகிச்சை தேவைப்படுதுனு முடிவு பண்ணுவோம்.

ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங், கலரிங்னு கெமிக்கல் ட்ரீட்மென்ட்ஸ் அதிகம் பண்ணினதால பெரும்பாலும் அவங்களோட கூந்தல் வறண்டு, உயிரே இல்லாம இருக்கும். கூந்தலுக்கான ஸ்பாவும் மசாஜும் கொடுத்து, அதை சரி பண்ணணும். ‘என்னோட ஸ்கின்னை பளபளனு, சாஃப்டா மாத்த முடியுமா’ங்கிற கேள்வி எல்லா கல்யாணப் பெண்களுக்கும் இருக்கு. பாடி பாலீஷ் ட்ரீட்மென்ட்டுல அவங்களோட சருமத்தை ஆழமா சுத்தப்படுத்தி, இறந்த செல்களை நீக்கி, சொரசொரப்பு நீங்கி, ஊட்டம் கிடைக்கச் செய்யலாம்.

கல்யாணத்தன்னிக்கு அந்தப் பெண்ணோட சருமம், ரோஜா இதழ் மாதிரி அவ்ளோ மென்மையா, 10 வயசு குறைஞ்ச மாதிரி இளமையா மாறிடும். இதுல முக்கியமா சொல்ல வேண்டிய விஷயம் இருக்கு…
கல்யாணத்தன்னிக்கு மணமகள் மட்டும் இளவரசி மாதிரியும் மணமகன் சாதாரணமாகவும் நின்னா நல்லாருக்காதில்லையா? அதனால பிரைடல் பேக்கேஜ் புக் பண்ண வரும்போதே, மணமகனையும் சேர்த்துக் கூட்டிட்டு வந்து, அவங்களுக்கான ட்ரீட்மென்ட்டையும் ஆரம்பிச்சிடறாங்க கல்யாணப் பெண்கள்…’’ – புதிய தகவல் சொல்கிற வீணா, திருமண மேக்கப்பில் என்னவெல்லாம் லேட்டஸ்ட் என்றும் பேசுகிறார். ‘‘கல்யாணத்தைவிட, அதுக்கு முதல் நாள் ரிசப்ஷன்தான் மணமக்களைப் பொறுத்தவரை பெரிய நிகழ்ச்சி. ஃப்ரெண்ட்ஸ், முக்கியஸ்தர்கள்னு எல்லாரும் வருகை தரும் ரிசப்ஷன்ல ரொம்ப வித்தியாசமா தன்னைக் காட்டிக்கணும்னு நினைக்கிறாங்க.

லேட்டஸ்ட் டிரெண்ட் படி, நடுராத்திரி வரை நீளும் ரிசப்ஷனுக்கு 3 காஸ்ட்யூம், அதுக்கேத்த மேக்கப் மாத்தறாங்க. ஒரு வெஸ்டர்ன் காஸ்ட்யூம், ஒரு லெஹங்கா, அப்புறம் அவங்கவங்க விருப்பப்படி இன்னொரு காஸ்ட்யூம்னு மூணு கெட்டப்… ஒவ்வொண்ணுக்கும் மேக்கப்பும் ஹேர் ஸ்டைலும் மாறும். டிசைனர் புடவை கட்டறதானா, இடுப்பை மறைக்கிற மாதிரி லாங் பிளவுஸும், பின்பக்கத்துலேருந்து முன்னாடி வர்ற மாதிரி முந்தானையும் வச்சுக்கிறாங்க. ரிசப்ஷனுக்கான ஹேர் ஸ்டைல்ல அயர்ன் பண்றது, கிரிம்பிங்னு (கூர்மையான வேவ்ஸ்) எல்லாம் ஃபேஷன்.முகூர்த்த மேக்கப் பெரும்பாலும் பாரம்பரிய ஸ்டைல்லதான் இருக்கும். ரிசப்ஷனுக்கு தங்களோட விருப்பப்படி டிரெஸ், மேக்கப், ஹேர் ஸ்டைல்னு எல்லாத்தையும் செலக்ட் பண்ற மணப்பெண்கள், முகூர்த்தத்துக்கு பெரியவங்க விருப்பத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கறாங்க.

தலைவிரி கோலத்துக்கெல்லாம் இடமில்லை. ஜடை தச்சு, பூ வைக்கிறது, ஆண்டாள் கொண்டைக்குத் தான் முதலிடம். மடிசாரோ, பாரம்பரிய ஸ்டைல்லயோ புடவை கட்டிக்கிறாங்க. புடவை கட்டியே பழக்கமில்லாத பெண்கள்தான் அதிகம். அதனால அவங்களுக்கு பேன்ட்டுக்கு மேலதான் புடவை கட்டி விடறோம். அகலமான பட்டை வச்சுக்கிற ஃபேஷன் மாறி, மெலிசான ப்ளீட்ஸ் வச்சுப் புடவை கட்டறாங்க. முன்னல்லாம் வட இந்தியர்களோட கலாசாரமா இருந்த மெஹந்தி சடங்கு, இப்ப எல்லா கல்யாணங்கள்லயும் தவிர்க்க முடியாத ஃபங்ஷனாயிடுச்சு. கல்யாணத்துக்கு 2 நாள் முன்னாடி மெஹந்தி போட்டுக்கலாம். மணமகன், மணமகள் உருவங்களையும், பேரையும், பல்லக்குல தூக்கிட்டுப் போற மாதிரியும் டிசைன்ஸ்
போட்டுக்கிறாங்க. சிவப்பு கலர்தான் இப்ப ஹாட். முழங்கை வரை போட்டுக்கிட்ட மெஹந்தி, இப்போ வங்கி போட்டுக்கிற இடம் வரைக்கும் நீண்டிருக்கு.

மேக்கப்லயும் மணப் பெண்களோட மனநிலை மாறியிருக்கு. முன்னல்லாம் மேக்கப் போட்டதே தெரியக் கூடாதுனு கேட்பாங்க. இப்ப கண்களையும், ஸ்கின் டோனையும் பிரைட்டா காட்டச் சொல்றாங்க. நல்ல சிவப்பு, ஆரஞ்சு கலர்கள்ல லிப்ஸ்டிக் போட்டுக்கத் தயாரா இருக்காங்க. கண்களுக்கு பெரும்பாலான பெண்கள் லென்ஸ் வச்சுக்கிறாங்க. செயற்கை ஐ லாஷ் வச்சுக்கிறாங்க. பாரம்பரியமான பூக்களுக்கான வரவேற்பு இப்பவும் குறையலை. அதே நேரம் பொக்கே ஃப்ளவர்ஸ் எல்லா கலர்கள்லயும் கிடைக்கிறதால, புடவைக்கு மேட்ச்சா அதுல கலர் ஸ்பிரே பண்ணி, பூ அலங்காரம் பண்ணிக்கிறதுலயும் பெண்கள் ஆர்வமா இருக்காங்க.மொத்தத்துல பழமைக்கும் புதுமைக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கிற மன
நிலைக்கு மாறிட்டிருக்கிற இன்றைய மணப்பெண்களால அவங்களோட கல்யாணங்கள் இன்னும் கலர்ஃபுல் நினைவுகளாகிட்டிருக்குனுதான்
சொல்லணும்!’’

நன்றி : தினகரன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்! Empty Re: கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்!

Post by T.N.Balasubramanian Wed Dec 17, 2014 10:44 pm

money ஸ்பின்னிங் கலை .
செய்யும் முதலீட்டை , குறைந்த காலத்தில் மீட்டு ,
அபரிமிதமான லாபம் சம்பாதிக்க முடியும் .
ஒழுங்காக கலை கற்ற வல்லுனர்கள் குறைவு.
சில வேதிப்பொருட்கள் ஒத்துக்குமா இல்லையா என்று
பார்ப்பது இல்லை .
பின் விளைவுகளுக்கு அளிக்கவேண்டிய சிகிச்சை முறை
அறியாதவர்களும் உண்டு .
எல்லாம் தெரிந்த இடத்திற்கு போனால் , பணம் அதிகம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்! Empty Re: கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்!

Post by krishnaamma Thu Dec 18, 2014 9:57 am

T.N.Balasubramanian wrote:money ஸ்பின்னிங் கலை .
செய்யும் முதலீட்டை , குறைந்த காலத்தில் மீட்டு ,
அபரிமிதமான லாபம் சம்பாதிக்க முடியும் .
ஒழுங்காக கலை கற்ற வல்லுனர்கள் குறைவு.
சில வேதிப்பொருட்கள் ஒத்துக்குமா இல்லையா என்று
பார்ப்பது இல்லை .
பின் விளைவுகளுக்கு அளிக்கவேண்டிய சிகிச்சை முறை
அறியாதவர்களும் உண்டு .
எல்லாம் தெரிந்த இடத்திற்கு போனால் , பணம் அதிகம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110150

ரொம்ப சரி ஐயா.......ரொம்ப காஸ்ட்லி............போறாததற்கு கல்யாணத்துக்கு முன்னே வேற வந்து ரொம்ப படுத்தறா.................என் தங்கை பெண் கல்யாணத்தில் பார்த்தேனே..........மிடில் கிளாஸ் அப்பாக்களுக்கு கல்யாண செலவுடன் இதுவும் சேருகிறது வேறு என்ன சொல்வது? சோகம் ...........அப்புறம் ஸ்கின் இல் 'ரஷஸ்'..... தலை முடி கொட்டுவது என்று ரொம்ப கஷ்டமாகிறது....................சில பெண்கள் இதை எ பிடித்துக்கொண்டு ஏதோ இதிலேயே பிறந்து வளர்ந்தாப்ல புக்காத்துக்கு போயும் தொடருகிறார்கள் என்று கேள்வி...........மாசம் சில பல ஆயிரங்கள் செலவு .......வேற ஒண்ணும் பிரயோஜனம் இல்லை ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்! Empty Re: கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்!

Post by mbalasaravanan Thu Dec 18, 2014 10:31 am

நல்லது நான் அழகா தெரிவேனா என்ன பண்ணுனாலும் நம்ம சைடு கொஞ்சம் வீக் தான்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்! Empty Re: கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்!

Post by ayyasamy ram Thu Dec 18, 2014 10:37 am

கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்! 103459460
-
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
-
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்! Empty Re: கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்!

Post by mbalasaravanan Thu Dec 18, 2014 10:41 am

நன்றி அம்மா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்! Empty Re: கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்!

Post by krishnaamma Thu Dec 18, 2014 10:42 am

mbalasaravanan wrote:நல்லது நான் அழகா தெரிவேனா என்ன பண்ணுனாலும் நம்ம சைடு கொஞ்சம் வீக் தான்
மேற்கோள் செய்த பதிவு: 1110186

நான் உங்களுக்கு வரப்போகும் பெண்ணை பார்த்ததில்லை............நீங்க வீக் ஒன்றும் இல்லை................ஸ்மார்ட் ஆக த்தான் இருக்கீங்க.....ஆமாம் .........இங்கு போடுஉள்ள போட்டோ உங்களுடையது தானே சரவணன் ? ..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்! Empty Re: கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்!

Post by mbalasaravanan Thu Dec 18, 2014 11:35 am

krishnaamma wrote:
mbalasaravanan wrote:நல்லது நான் அழகா தெரிவேனா என்ன பண்ணுனாலும் நம்ம சைடு கொஞ்சம் வீக் தான்
மேற்கோள் செய்த பதிவு: 1110186

நான் உங்களுக்கு வரப்போகும் பெண்ணை பார்த்ததில்லை............நீங்க வீக் ஒன்றும் இல்லை................ஸ்மார்ட் ஆக த்தான் இருக்கீங்க.....ஆமாம் .........இங்கு போடுஉள்ள போட்டோ உங்களுடையது தானே சரவணன் ? ..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1110195
உண்மைய என்னோடது தான் அம்மா , அது நான் தான்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்! Empty Re: கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum