புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
3 Posts - 3%
Abiraj_26
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
2 Posts - 2%
Abiraj_26
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
மார்கழி மகிமை! I_vote_lcapமார்கழி மகிமை! I_voting_barமார்கழி மகிமை! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழி மகிமை!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 17, 2014 11:14 am

மார்கழி மகிமை! 8MhjTsa6QiSNOe2HhoK0+andal-green-parrot

‘‘மாதங்களுள் நான் மார்கழி’’ என்று கண்ணபிரான் கீதையில் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார். இதை தனுர் மாதம் என்றும் கூறுவர். இம்மாதம் சிறந்த புண்ணிய காலமாகும். மார்கழி மாதம் தேவர்களுக்கு அருணோதய காலமாகிறது. அதனால் அம்மாதம் முழுவதும் பகவானைத் தியானிப்பதும், அவனைத் தோத்திரம் செய்வதும், அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதும் நமக்கு சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறது. நாம் நமது மனத்தைத் தெளிவுபடுத்தி ஆன்மிக மார்க்கத்தில் லயிக்கச் செய்வதற்கு மார்கழி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

இம்மாதத்திலுள்ள ஒவ்வொரு நாளும் நித்ய விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீமந்நாராயணனின் கேசவா, நாராயணா, கோவிந்தா, மாதவா, மது சூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா என்ற பன்னிரெண்டு நாமங்களும் பன்னிரெண்டு மாதங்களாக கருதப்படுகின்றன. இதில் முதல் நாமமாக விளங்கும் கேசவா என்பது மாதங்களுக்கு மணிமகுடமான மார்கழியாக விளங்குகிறது. ஆன்மிக மார்க்கத்திற்குச் செல்ல தலையான மாதமாகக் கருதப்படும் இம்மார்கழி மாதம் ‘‘மார்க சீர்ஷம்’’ என்பர். அதுவே நாளடைவில் மருவி மார்கழி என்றானது.
மார்கழி மகிமை! IA6IXM3FQxmoDTPD3OSF+Astro-articles-128
இம்மாதத்தை கிரிபிரதட்சிணத்துக்கு உகந்த மாதமாகக் கருதுகிறார்கள். ராம காதையில் இளையபெருமாள் ஸ்ரீராமபிரானிடம், ‘‘ஸ்ரீ ராமா! உமக்கு ப்ரியமானதான காலம் வந்திருக்கிறது. இந்த மார்கழி மாதத்தினால் ஆண்டு முழுவதுமே அலங்கரிக்கப்பட்டது போல் விளங்குகிறது’’ என்று கூறுகிறார். இம்மாதத்தில் மாதர்கள் வைகறைத் துயிலெழுந்து வீட்டிற்கு முன்னால் சுத்தமாக மெழுகி கோலமிட்டு, சாணத்தினைப் பிடித்து வைத்து அதன் மீது பரங்கி பூவை, மகுடம் வைத்தாற் போல் அழகுற வைப்பர்.

தொடரும்......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 17, 2014 11:16 am

அதனைச்சுற்றி வித விதமான வகையில் வண்ண வண்ணப்பூக்களை கண்ணைக் கவரும் வண்ணம் அழகாக அடுக்குவர். இவ்வாறு வாயில் முன்புறத்தை அழகுற அலங்கரிக்கும் பழக்கம் பண்டு தொட்டே நிலவி வருகின்றது. அதற்குக் காரணமான முக்கிய பாரதக் கதை ஒன்றுண்டு. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் நடந்தது மார்கழி மாதத்தில் தான்! யுத்தத்தில் பாண்டவர்களில் மாண்டவர் சிலர், மீண்டவர் பலர். பாண்டவர்களின் வீட்டை அடையாளம் கண்டு கொள்வதற்காக வேண்டி, வியாசர், வீட்டு வாயிலில் சாணம் இட்டு மெழுகி ஊமத்தம் பூ வைப்பதற்கான ஏற்பாடு செய்தாராம்.

மார்கழி மகிமை! UvfCYLIRFqp2lV7QT8sN+download பெரியாழ்வார்

அந்த அடையாளத்தைக் கொண்டு யுத்த காலத்தில் பாண்டவர் சேனைகளின் வீடுகளை கௌரவர்களின் தாக்குதல் ஏற்படாமல், கண்ணன் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றினார். அன்று முதல் இந்தப் பழக்கம் தொடர்ந்து வர ஆரம்பித்தது. இம்மார்கழி மாதத்தில் பல வைஷ்ணவ ஆசாரியர்களும், சைவ பெரியார்களும், மாமன்னர்களும் தோன்றியுள்ளனர். இம்மாதத்தைச் சிறப்பித்துக் கொண்டாடுவதை மக்கள் பழக்கமாகக் கொள்ளலாயினர். இம்மாதத்தில் ஆண்களும், பெண்களும் திருப்பாவை,திரு வெம்பாவை மற்றும் தோத்திரப் பாடல்களையும் பாடிப் பரவசமுறுவர்.

மார்கழி மகிமை! ZeYE4VfTQWeVEGjMwtlU+download(1)

ஸ்ரீ வைஷ்ணவ ஆலயங்களில் ராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யப்படும். இம்மாதத்தில், எம்பெருமானுக்கு நெய் வழிய வழிய சர்க்கரைப் பொங்கல் செய்து நிவேதிப்பதனை ‘‘கூடார வல்லி’’ என்று வைஷ்ணவர்கள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடுகின்றனர். இதன் உண்மை தத்துவத்தை ‘‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’’ என்ற பாட்டால் பாவை ஆண்டாள் நமக்கு ஆழகுற மொழிகின்றாள். மார்கழி மாதத்தில் மதி மறைந்த நன்னாள் மூல நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் ஆஞ்ச நேயருடைய ஜயந்தி கொண்டாடப்படுகிறது.

தொடரும்.....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 17, 2014 11:19 am

மார்கழி மகிமை! 71iGUdcBRgKZop3WZme1+beautiful-lotus-design

இத்தகைய மங்களகரமான மார்கழி மாதத்தில் வைகறைத் துயிலெழுந்து, பகவானைத் துதி செய்ய வேண்டும். மார்கழி மாதம் ஒரு சிறப்பான மாதம்; புண்ணியம் தரும் ஆன்மிக மாதம். அதிக அளவு பிராண வாயு கலந்த ஓசோன் இம்மாதம் முழுவதும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தரையில் படியும். அப்போது நாம் அதிகாலை நீராடினால் நீரிலும் ஓசோன் கலந்திருப்பதால் உடலுக்கு நல்லது. திறந்த வெளியில் நடமாடுவதால் காற்றில் உள்ள ஓசோன் நம் உடலில் படியும். இதனால்தான் நம் முன்னோர்கள் மார்கழி நீராடல், அதிகாலை பஜனை செய்தல், பெண்கள் வீதியில் கோலமிடல் என ஏற்படுத்தியுள்ளனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆலயம் செல்ல வேண்டும் என வகுத்துள்ளனர். யாரும் நம்மை எழுப்ப வேண்டாம். ஊரிலுள்ள எல்லா ஆலயங்களில் இருந்தும் அதிகாலை ஒலிபரப்பப்படும் திருப்பாவை, திருவெம்பாவை தெய்வீகப் பாடல்களின் இன்னிசை ஒலியே நம்மை எழுப்பிவிடும். மார்கழி விழாக்கள் பல உள்ளன. அவற்றில் சிவாலயங்களில் நடைபெறும் நடராஜரின் ஆருத்ரா தரிசனமும், விஷ்ணு ஆலயங்களில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவும் அதிக சிறப்பு வாய்ந்தவை. ஆருத்ரா தரிசனம் சிதம்பரத்திலும், உத்தர கோசமங்கையிலும் அதிக சிறப்பு வாய்ந்தது. அதுபோல வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கத்தின் புகழ்பெற்ற திருவிழா. அன்று அதிகாலை சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்புதான் பக்தர்களை அதிகம் கவரும்.

தொடரும்......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 17, 2014 11:24 am

மார்கழி மகிமை! QAH0KuBWRkfiMvEPfaVg+vaikuntaekadasi

வைகுண்ட ஏகாதசி

ஸ்ரீரங்கத்தில் இவ்விழா திரு அத்யயன உற்சவம் என 21 நாட்கள் நடைபெறும். பகல் பத்து என்ற திருமொழி விழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாள்தான் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு. திருவாய் மொழி விழா என்னும் இராப்பத்து விழா பத்து நாட்கள், இயற்பா விழா ஒரு நாள் என 21 நாட்கள் விழா நடைபெறும். இவை தமிழ் விழாக்கள்.பகல் பத்தில் அரங்கன் அர்ச்சுன மண்டபத் தில் அனைத்து ஆழ்வார்கள், ஆச்சார்யார்களு டன் எழுந்தருளி சேவை சாதிப்பார். அப்போது பூர்வாச்சாரியார்களில் முதலாமவரான நாதமுனிகள் வைகுண்ட ஏகாதசி முன்பத்து நாள் விழாவை ஆரம்பித்து வைப்பார்.

பெரியாழ்வார் அருளிய திருமொழி, ஆண்டாள் நாச்சியார் அருளிய நாச்சியார் திருமொழி, குலசேகராழ்வார் பாடிய பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி ஆகிய திருமொழிப் பாசுரங்களைப் பாடுவார்கள். அதனால் இதைத் திருமொழித் திருநாள் என்பர். பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசியின்போது இந்தப் பாடல்கள் அபிநயத்துடன் அரையர்களால் சேவிக்கப்படும். பத்தாம் நாள் மட்டும்தான் அரங்கன் ரத்ன அங்கியுடன் ஜொலிப்பார். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவால் திருவரங்கனுக்கு அளிக் கப்பட்டது இந்த ரத்ன அங்கி.

வைகுண்ட ஏகாதசி யிலிருந்து ஏழு நாட்கள் மூலவருக்கு முத்துக் களாலான அங்கியை அணிவிப்பார்கள். இதற்கு ‘‘முத்தங்கி சேவை’’ எனப் பெயர். இந்த வெண்மைத் திருக்கோலம் ஓர் அரிய காட்சி; கண்களையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும் மாட்சி. சொர்க்க வாசல் என்ற பரமபத வாசல் திறப்பு வைகுண்ட வாசலுக்கு பூஜை செய்து நான்கு வேதங்களும் ஓதப்பட்ட பிறகு, பெருமாள் ஜோதி ஸ்வரூபமாக ஆபரண தேஜஸுடன் காட்சியளித்துக் கொண்டே மங்களவாத்தியம் முழங்க வாசலைக் கடந்து வருவார். பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பகவானைப் பின்தொடர்ந்து செல்வார்கள் “ரங்கா, ரங்கா’’ என ஜெபித்தபடி.

தொடரும்.....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 17, 2014 11:25 am

மார்கழி மகிமை! PNnRMH3QlS85vOh2B3dw+Evening-Tamil-News-Paper_44643366337

முன்பு நம்மாழ்வாரின் மோட்சத்துக்காக இந்த வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதைத்தான் இப்போதும் பரமபத வாசல் திறப்பு விழா என கொண்டாடுகின்றனர். இவ்வாசலின் அடியில் விரஜா நதி ஓடுகிறது. பக்தர்கள் வாசலைக் கடக்கும்போது இப்புண்ணிய நதியில் நீராடி பரமபத வாசல் வழியாக வைகுண்டம் போவதாக ஐதீகம். (பகல் பத்தின் பத்தாம் நாள் பெருமாள் நாச்சியார் கோலம் கொள்வார். இதற்கு மோகனாவதாரம் என்று பெயர்.) வைகுண்ட ஏகாதசியன்று இராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. நம்மாழ்வார், மதுரகவியாழ்வார்களை திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்தில் எழுந்தருளச் செய்வார்.

பின் பெருமாள் முன்னிலையில் சமஸ்கிருத வேதத் துடன் தமிழ் வேதமாகிய திருவாய்மொழி பிரபந்தத்தையும் பாடச் செய்து விழா நடத்துவார்கள். கடைசி நாள் நம்மாழ்வாரை பெருமாள் தம் திருவடியில் சேர்த்துக் கொள்வார். இராப்பத்தின் ஏழாம் நாள் கைத்தல சேவையும்; எட்டாம் நாள் திருமங்கை மன்னனின் வேடுபறி உற்சவமும்; பத்தாம் நாள் நம்மாழ்வாரின் மோட்சமும் நடைபெறும். இராப்பத்தின் 11ம் நாள் இயற்பாவை அமுதனார் மூலம் சேவித்து சாற்று முறை நடக்கும். இப்படி 21 நாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும். பரமபத விளையாட்டு வைகுண்ட ஏகாதசி இரவில் பரமபதம் விளையாடுவார்கள்.

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 17, 2014 11:27 am

இதில் எட்டு ஏணிகளும் எட்டு பாம்புகளும் உண்டு. இதில் ஒன்பது சோபனங்கள் என்ற படிகள் உள்ளன. முதல் ஐந்து படிகளான விவேகம், நிர்வேதம், விரகதிரு பீதி, பிரசாத ஹேது ஆகிய படிகளை பக்தன் முயற்சியுடன் தாண்ட வேண்டும். அடுத்த நான்கு படிகள் தாண்ட பரந்தாமன் கருணை கிடைக்கும். அதனால் எளிதில் உக்கிரமரணம், அர்ச்சி ராத்திரி, திவ்ய தேசப்பிராப்தி, பிராப்தி என்ற நான்கு படிகளைக் கடந்தால் பரமபதம் அடையலாம். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பரந்தாமனை வழிபட்டால் இந்த பிராப்தி கிடைக்கும்; மறுபிறவி இல்லை.

மார்கழி மகிமை! X6t9JnW2Tv7zoP79yieb+images

அன்று பட்டினி இருந்து, ஹரியின் நாமத்தை ஜெபித்து, நாராயணீயம், ஸ்ரீமத் பாகவதம், ஏகாதசி மகிமை, புருஷசூக்தம் போன்றவற்றைப் பாராயணம் செய்தால் அளவற்ற பயன்பெறலாம். ஏகாதசி நாள், அதற்கு முதல் நாள், மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் விரதமிருந்து, கண்விழித்து பெருமாளை வழிபட்டு துவாதசி பாரணை செய்ய வேண்டும். துவாதசியன்று நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. மாதத்திற்கு இருமுறை வரும் எல்லா ஏகாதசிகளிலும்கூட விரதம் இருக்கலாம்.

முடியாவிடில் மார்கழி வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடித்தால் மகாவிஷ்ணு மகிழ்வுடன் சொர்க்கத்தில் இடம் தருவார். இவ்விரதம் இருப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். கல்வி, பதவி, புத்திர பாக்கியம் கிட்டும். நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பாவம் விலகும். மறுமையில் சொர்க்கம் கிட்டும். எட்டு வயது முதல் 80 வயது வரை இவ்விரதத்தை ஆண் பெண் இருபாலரும் கடைப்பிடிக்கலாம். வைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங்களைக் கடைப்பிடித்த பலன் கிடைக்கும். அதனால் முக்கோடி ஏகாதசி என்றும்; மோட்ச ஏகாதசி என்றும்; பீம ஏகாதசி என்றும் இதற்குப் பெயருண்டு. பாற்கடல் நஞ்சினை ஈசன் விழுங்கியதால் நஞ்சுண்ட ஏகாதசி என்றும் கூறுவர்

தொடரும்...................




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 17, 2014 11:28 am

மார்கழி மகிமை! YCpwZXLSYSFNEkW2dgGw+TN_121229111103000000

ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் கூடிய பௌர்ணமியன்று கொண்டாடப்படுவது ஆருத்ரா தரிசனம் என்ற ஆடல்வல்லானின் ஆனந்த திருநடன நன்னாள். இது சிதம்பரத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். நடராஜருக்கு வருடம் ஆறு அபிஷேகம் நடைபெறும். அதில் சிறப்பானவை மார்கழி திருவாதிரை ஆருத்ரா

தரிசனமும், ஆனித் திருமஞ்சனமும்தான். ஆருத்ரா அன்று திருவாதிரைக் களி செய்து படைப்பர். "திருவாதிரைக் களி ஒரு வாய்' என்பது வழக்கு. அதை ஒரு கவளமாவது சாப்பிட வேண்டும்.

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 17, 2014 11:30 am

மார்கழித் திருவாதிரை

இது தேவர்களின் வைகறை பூஜை நேரமாகும். அதனால் திருவாதிரையன்று நடராஜருக்கு வைகறையில் ஆயிரங்கால் மண்டபத்தில் அபிஷேகம் நடைபெறும். இவ்விழா பத்து நாட்கள் நடை பெறும். பத்தாம் நாளான திருவாதிரைத் திருநாளில் திருத்தேர் உலா நடைபெறும். பத்து நாட்களும் நடராஜர் வாகனத்தில் உலாவருவார். முதல் நாள் கொடியேற்றம்; இரண்டாம் நாள் சந்திர பிரபை; மூன்றாம் நாள் சூரிய பிரபை; நான்காம் நாள் பூத வாகனம்; ஐந்தாம் நாள் ரிஷப வாகனம்; ஆறாம் நாள் ஆனை வாகனம்; ஏழாம் நாள் கைலாச வாகனம்; எட்டாம் நாள் பிட்சாண்டவர்; ஒன்பதாம் நாள் தேர்த் திருவிழா. அன்று மூலவரே தேரில் உலா வரும் அதிசயம் காணலாம்.பத்தாம் நாள் அதிகாலை வேளையில், சிறுசிறு மணிகள் அசையும் வெண்சப்பரத்தில் நடராஜர் திருவீதி உலா வருவார். அப்போது நடராஜர் சிலையைத் தூக்குபவர்கள் நடராஜர் ஆடுவதுபோல அசைந்தாடி வருவது மெய் சிலிர்க்கும் காட்சியாகும். பக்தர்கள் ஆர்வத்துடன் பக்தியுடன் நடராஜரைத் தரிசிப்பார்கள். அன்று மட்டும்களியும் படைப்பார்கள்.

மார்கழி மகிமை! P1sezzVmTQSQtr7A1ElQ+download(2)

கோவைத் திருவாதிரை


இந்நாளில் கோவை மாவட்டப் பெண்கள் மாங்கல்ய நோன்பு நோற்பார்கள். அன்று புது மாங்கல்யச் சரடு மாற்றிக் கொள்வர். பாவம் விலக நெய் தீபம் ஏற்றுவார்கள்.

தொடரும்..................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 17, 2014 11:32 am

உத்தரகோச மங்கை
மார்கழி மகிமை! JYfOUOyQQqKQEINYJSlW+TN_121226133657000000
இவ்வாலயத்தில் ஆறடி உயர மரகத நடராஜசர் சிலை அமைந்துள்ளது. எப்போதும் சந்தனக் காப்பால் மூடப்பட்டிருக்கும். இக்கோயிலில் நடராஜர் சந்நதி மூடப்பட்டே இருக்கும். வெளியில் இருந்து மட்டும் தரிசிக்கலாம். ஆருத்ரா தரிசன விழா பத்து நாட்கள் நடக்கும்.

மார்கழி மகிமை! IbTCp7kCT326FmMFPQkA+Tamil_News_large_381421

திருவாதிரையன்று முதல் நாள் மரகத நடராஜரின் சந்தனக்காப்பு களையப்படும். காலை 9.00 மணிக்கு காப்பு களைந்து அபிஷேகம் செய்வர். இரவு 11.00 மணி வரை மரகத மேனி தரிசனம் காணலாம். விடியற்காலை சந்தனக் காப்பிடப்படும். பின் அடுத்த வருடம் தான் இக்காட்சியைக் காணலாம். இங்குள்ள மரகத லிங்கத்திற்கும் ஸ்படிக லிங்கத்திற்கும் தினம் அன்னாபிஷேகமும் நடத்துவார்கள். பின் பெட்டியில் வைப்பார்கள். உத்தரகோச மங்கை தலம் ராமநாதபுரம் அருகேயுள்ளது.

தினகரன் ................ பரத்குமார்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 18, 2014 10:42 am

யாருமே படிக்கலையா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக