புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_m10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_m10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_m10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_m10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_m10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_m10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_m10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_m10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_m10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_m10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_m10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_m10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_m10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_m10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_m10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_m10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_m10மார்கழி மாத பலன்கள் ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழி மாத பலன்கள் !


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 16, 2014 8:48 pm

First topic message reminder :

மார்கழி மாத பலன்கள் கணித்தவர்....ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம்

பள்ளிப் பருவத்திலேயே வைராக்கியத்துடன் எதையும் செய்து முடிக்கும் நீங்கள், மனதில் பட்டதை பளிச்சென பேசு பழக்கம் உடையவர்கள். இந்த மாதத்தின் மத்தியப்பகுதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்றுக் காணப்படுவதால் தைரியம் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்து ஏமார்ந்து போன உதவிகள் கிடைக்கும். பிரபலங்கள் பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டாகும். கௌரவப் பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகர மாக முடிவடையும். ஷேர் மூலமாக பணம் வரும். எதிர்த்தவர்களெல்லாம் அடங்குவார்கள்.

வழக்குகள் சாதகமாகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் நட்பு வட்டம் விரிவடையும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழிவகை பிறக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட வகையில் யோசித்து தீர்வு காண்பீர்கள். உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் சனி நுழைந்திருப்பதால் மறதி அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும். அஷ்டமத்துச் சனி என்பதால் திருட்டு பயம் வந்து நீங்கும். தங்க ஆபரணங் களை வங்கி லாக்கரில் வைத்து பாதுகாப்பது நல்லது. குரு 4ல் நீடிப்பதால் அடுத்தடுத்து வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.

சிலர் உங்களை பயன்படுத்திக் கொண்டு தூக்கியெறிவார்கள். அதற்காக கலங்கிக் கொண்டிருக்காதீர்கள். தாயாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அக்கம்-பக்கம் வீட்டாரை அனுசரித்துப் போங்கள். பிரச்னைகள் என்றால் பேசித் தீர்ப்பது நல்லது. வழக்கு என்றெல்லாம் அலைய வேண்டாம்.

மாணவ- மாணவிகளே! விடைகளை எழுதிப் பாருங்கள். மொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வேதியியல் சமன்பாடுகளை எழுதிப் பார்ப்பது நல்லது. எல்லாம் தெரிந்ததுதானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களைச் சுற்றியிருக்கும் நண்பர்களில் நல்லவர்கள் யார் என்பதனை இனம் கண்டறிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனஇறுக்கங்கள் குறையும். தாழ்வுமனப்பான்மையும் விலகும்.

அரசியல்வாதிகளே! வீண் பழி, சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். வழக்குகள் சாதகமாகும். உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ராகு நிற்பதால் வியாபாரம் சூடுபிடிக்கும். விற்பனை உயரும். பாக்கிகளும் வசூலாகும். வாடிக்கையாளர்களும் அதிகரிப்பார்கள். பங்குதாரர்கள் உங்களுடைய புதிய திட்டங்களை வரவேற்பார்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும் அமைப்பு உருவாகும். அஷ்டமத்துச் சனி தொடங்கியிருப்பதால் வேலையாட்களிடம் வியாபார ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். கோபப்பட்ட அதிகாரி உங்களிடம் சாந்தமாக நடந்து கொள்வார். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு கன்னடம், ஹிந்தி மாநிலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் கூடி வரும்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை குறையும். மகசூல் பெருகும். மாற்றுப் பயிர் மூலமாக ஆதாயமடைவீர்கள். யதார்த்தமான முடிவுகளும், சகிப்புத் தன்மையும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 16, 17, 25, 26, 27, ஜனவரி 2, 3, 4, 5, 11, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 19ந் தேதி மாலை 3 மணி முதல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: பழனி முருகனை வணங்குங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 16, 2014 8:55 pm


தானுண்டு தன் வேலையுண்டு என்றில்லாமல் நாலு பேருக்கு நல்லது செய்யும் நீங்கள், எதிர்ப்புகளை கண்டு அஞ்சமாட்டீர்கள். குருவும், செவ்வாயும் சாதகமாக இல்லாததால் முன்கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அவசர முடிவுகளெல்லாம் வேண்டாம். விவாதங்களையும் தவிர்க்கப்பாருங்கள். உங்கள் மீது வீண் பழிகளும் வந்து சேரும். சகோதர வகையிலும் அலைச்சல், செலவுகள் இருக்கும். சொத்துப் பிரச்னையும் தலைத்தூக்கும். பூர்வீக சொத்தில் பணத்தை முதலீடு செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். 2ல் கேது நிற்பதால் அவசரப்பட்டு பேசி உங்களுடைய அந்தஸ்தை இழந்துவிடாதீர்கள்.

பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. உங்கள் ராசியை சனிபகவான் நேரடியாக பார்க்க தொடங்கியிருப்பதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். கொழுப்புச் சத்துள்ள, மசாலாக்கள் அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. நாக்கு ருசிக்காக சாப்பிடாமல் உடல் ஆரோக்யத்திற்காக நீங்கள் இனிமேல் சாப்பிடுவது நல்லது. லேசாக பல் வலி வந்து நீங்கும். ராகு சரியில்லாததால் மனைவியுடன் மோதல்கள் வரும். மனைவி வழி உறவினர்களுடன் பிணக்குகள் வரும்.

உங்கள் ராசிநாதன் சனிபகவான் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு இப்போது 10ல் நுழைந்திருப்பதால் சிலருக்கு வேலை கிடைக்கும். தந்தையாருக்கு இருந்து வந்த நோய், உடல் உபாதைகள் நீங்கும். புதுத் தொழில் தொடங்கும் அமைப்பு உண்டாகும்.

மாணவ-மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கவனத்தை திருப்புங்கள்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலில் ஈடுபடாதீர்கள். சகாக்களின் ஒத்துழைப்பு குறையும். புதிய வேலையாட் களை பணியில் அமர்த்தும்போது விசாரித்துச் சேர்ப்பது நல்லது. அண்டை மாநில வேலையாட்களிடம் கவனமாக இருங்கள். மனைவிக்கு முதுகு வலி, கழுத்து வலி வந்துபோகும். அவ்வப்போது வீண் விவாதங்களும் வரும். பழைய சம்பவங்களை மேற்கோள் காட்டிப் பேசிக் கொண்டிருக்காதீர்கள். நள்ளிரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் உண்டு. போட்டிகளால் திணறுவீர்கள்.

தொழிலை விரிவுப்படுத்த முயற்சிப்பீர்கள். விளம்பர யுக்திகளை கையாளுவது நல்லது. ஏற்றுமதி-இறக்குமதி, துணி, உணவு வகைகளாலும் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். சனி 10ல் நுழைந்திருப்பதால் உங்களுடைய உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். ஒரு பக்கம் பிரச்னைகள் இருந்தாலும் மற்றொரு பக்கம் இழந்த உரிமைகளை மீண்டும் பெறுவீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் குறையும்.

கலைத்துறையினரே! சின்ன சின்ன வாய்ப்பு களையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப்பாருங்கள். கிசுகிசுத் தொல்லைகளும் வந்து போகும். யதார்த்தமான முடிவுகளும், சகிப்புத் தன்மையும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 21, 28, 29, 31, ஜனவரி 2, 6, 7, 8, 9, 10.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 16 மற்றும் ஜனவரி 11, 12, 13ந் தேதி மதியம் 2.20 வரை புது முயற்சிகள் தாமதமாகி முடியும்.

பரிகாரம்: சுசீந்திரம் அனுமனை தரிசியுங்கள். தீப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்றளவு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 16, 2014 8:58 pm

தன் குறையை பிறர் சுட்டிக் காட்டினால் உடனே திருத்திக் கொள்ளும் நீங்கள், மற்றவர்கள் செய்யும் தவறையும் தயங்காமல் தட்டிக் கேட்பீர்கள். உங்களுடைய ராசிக்குள்ளேயே கேது நிற்பதால் அடிக்கடி குழம்புவீர்கள். சில நேரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த அஷ்டமத்துச் சனி இப்போது விலகியிருப்பதால் முன்பிருந்த குழப்பங்கள் நீங்கும். சிக்கல்களும் தீரும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். தன்னம்பிக்கை உண்டாகும். கோபம் படிப்படியாக குறையும்.

இழந்த பணத்தை மீண்டும் பெறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். சோம்பல், அலட்சியம், மறதி, அதிக தூக்கமெல்லாம் விலகும். சுறுசுறுப்பாவீர்கள். கணவன்-மனைவி பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். விபத்திலிருந்து மீள்வீர்கள். திருடு போன நகையும் வந்து சேரும். சொந்த ஊரில் செல்வாக்கடைவீர்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். சூரியன் 10ல் நுழைந்திருப்பதால் புது வேலை கிடைக்கும். புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் புது வாகனம் வாங்குவீர்கள்.

மனைவி வழியில் உதவிகள் உண்டு. தாயாருக்கு இருந்த ஆரோக்ய குறைவு நீங்கும். உயர்கல்வி, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் யோகாதிபதி செவ்வாய் மையப்பகுதி வரை சாதகமாக இருப்பதால் உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும். ஆனால், 1ந் தேதி முதல் செவ்வாய் 12ல் மறைவதால் சகோதரங்களால் அலைச்சல், டென்ஷன் இருக்கும். சொத்து விஷயங்களிலும் உஷாராக இருப்பது நல்லது.

மாணவ-மாணவிகளே! இனி மறதி நீங்கும். படிப்பில் முன்னேறுவீர்கள். அதிக மதிப்பெண் பெறுவீர்கள். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

கன்னிப் பெண்களே! தவறானவர்களை நல்லவர்கள் என்று நினைத்து ஏமாந்தீர்கள். காதலில் தெளிவு கிடைக்கும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் விலகும்.

அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்திற்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். தொகுதி மக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்கள் ராசிநாதன் குரு உச்சம் பெற்று காணப்படுவதால் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். மருந்து, எரிபொருள், ஸ்டேஷனரி, எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன் வகைகளால் லாபமடைவீர்கள். கடையை மாற்றுவீர்கள். விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சூரியன் 10ல் நிற்பதால் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். மூத்த அதிகாரியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். சிலருக்கு அதிக சம்பளத்துடன் அயல்நாட்டிலிருந்தும் வேலை வாய்ப்பு வரும்.

கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள்.

விவசாயிகளே! பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். விளைச்சல் பெருகும். நெல், கரும்பு வகைகளால் ஆதாயமடைவீர்கள். திடீர் யோகங்களையும், வெற்றிகளையும் தரும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 16, 24, 25, 31, ஜனவரி 2, 4, 5, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 17, 18, 19ந் தேதி மாலை 3 மணி வரை மற்றும் ஜனவரி 13ந் தேதி மதியம் 2.20 முதல் 14 ஆகிய தேதிகளில் நாவடக்கத்துடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லங்களுக்கு உதவுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Dec 17, 2014 4:51 am

தனுர்மாதத்தில் இராசி பலன் பதிவு நல்ல பதிவு.........

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 17, 2014 7:46 am

திண்டிவனம் திந்திரீணீஸ்வரர்
-
வடமொழி பெயராக உள்ளதே என்று நினைக்கிறீர்களா...?
-
திந்திரீணி என்றால் புளி - புளிக்காட்டில் சுயம்புவாக
இறைவன் தோன்றியதால் திந்திரீணீஸ்வரர்....
-


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Dec 17, 2014 4:50 pm

நல்ல பதிவு

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக