புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
432 Posts - 48%
heezulia
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
29 Posts - 3%
prajai
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஜூன் மாத பலன்கள் ! Poll_c10ஜூன் மாத பலன்கள் ! Poll_m10ஜூன் மாத பலன்கள் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூன் மாத பலன்கள் !


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 10:58 pm

மாத ராசிபலன் : மீனம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

மீனம்:

உங்கள் ராசி அதிபதி குரு 5-ல் உலவுவது விசேடமாகும். சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். பொருளாதார நிலை திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் அனுகூலம் உண்டாகும். திருமனம் போன்ற சுப காரியங்கள் நிகழும்.

திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டும். அரசியல்வாதிகளுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். போட்டிகளிலும், பந்தயங்களிலும் வழக்கு, வியாஜ்ஜியங்களிலும் வெற்றி கிட்டும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். புத்திசாலித்தனத்தாலும் செயல் வேகத்தாலும் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள்.

15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. நண்பர்கள் உறவினர்களால் மன வருத்தம் உண்டாகும். அலைச்சல் கூடும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும். பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கும். புத பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 11, 12, 18, 26 (முற்பகல்), 29,.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு..

எண்கள்: 1, 3, 6, 9,



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 10:59 pm

மாத ராசிபலன் : கும்பம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

கும்பம்:

உங்கள் ஜன்ம ராசிக்கு 4-ல் புதனும் 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவி புரிய முன்வருவார்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சியைக் காணலாம். மாணவர்களது திறமை வெளிப்படும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்து வரும். தோட்டங்கள், சுரங்கங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். வருவாயும் அதிகரிக்கும்.

எண்ணெய் வகயறாக்கள் லாபம் தரும். தொழில் சம்பந்தமான இடமாற்றம் உண்டாகும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பதால் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உணவுப் பழக்கத்திலும் பேச்சிலும் கட்டுப்பாடு தேவை. 4-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவதால் அலைச்சல் கூடும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் சிறுசிறு பிரச்னைகள் சூழும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது. சுக்கிரன் 6-ல் குருவுடன் இருப்பதும் சிறப்பாகாது. கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது.

பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது அவசியமாகும். பெண்களால் ஆடவர்களுக்குத் தொல்லைகளும் அவமானமும் உண்டாகும். கலைஞர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். 15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 5-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகா. மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மக்களால் மன அமைதி குறையும். ஜாதக பலம் இருக்குமானால் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலமும் இல்லாதவர்கள் இறை வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் அமைதி காணலாம்.

அவிட்டம், சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் கூடும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 8, 11, 12, 18, 29,.

திசைகள்: வடக்கு, மேற்கு.

எண்கள்: 5, 8.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 11:00 pm

மாத ராசிபலன்: மகரம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

மகரம்:

உங்கள் ராசிக்கு அதிபதி சனி 11-ல் இருப்பது விசேடமாகும். ராசியையும், ராசிநாதனையும் குரு பார்ப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். பொது நலப்பணிகளில் ஆர்வம் அதிகமாகும். பிறருக்காக உழைப்பீர்கள். பண நடமாட்டம் திருப்தி தரும். மன உற்சாகம் பெருகும். உங்களைக் காட்டிலும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு இல்லறம் நல்லறமாகத் திகழும். கூட்டாளிகள் உதவுவார்கள். குடும்ப நலம் சிறக்கும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், தோல் பொருட்கள், திரவப் பொருட்கள் ஆகியவை லாபம் தரும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். தெய்வத் திருப்பணிகள் இனிது நிறைவேறும். தனவந்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 6-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் மேலும் கூடும். எதிரிகள் பயந்து ஓடுவார்கள். வழக்கிலும் போட்டிகளிலும் விளையாட்டிலும் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். எலெக்ட் ரானிக், எலக்ட் ரிக்கல் சம்பந்தமான பொருட்கள் லாபம் தரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். பொருள் வரவு அதிகமாகும். பிரச்னைகள் எளிதில் தீரும். நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும். அவை நிறைவேறவும் சந்தர்ப்பம் உருவாகும்.

திருவோணம், அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 7, 8 11, 12, 18, 26, 29,.

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, வடமேற்கு.

எண்கள்: 3, 7, 8.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 11:01 pm

மாத ராசிபலன்: தனுசு
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

தனுசு:

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் 8-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப்பணிகளில் நல்ல திருப்பம் உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு இப்போது கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். நிர்வாகத்திறமை கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன் ஜினீயர்களது நிலை உயரும். எதிரிக்கள் அடங்குவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும் போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலம் சிறக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். விபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். மாணவர்களுக்குத் திறமை வீண்போகாது. குடும்பத்தில் நல்ல காரியங்கள் நிகழும். விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.

4-ல் கேதுவும் 8-ல் குருவும் 12-ல் சனியும் உலவுவதால் சுகம் குறையும். தாய் நலனில் கவனம் தேவைப்படும். எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். வீண் விவகாரங்களில் பிரவேசிக்கலாகாது. புதிய முயற்சிகளை இன்னும் சிறிது காலத்துக்கு ஒத்திப்போடுவது நல்லது. 15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. எதிர்ப்புக்கள் சற்று அதிகரிக்கும். பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. வாழ்க்கைத்துணைவரின் நலனில் கவனம் தேவைப்படும். சொத்துக்கள் சம்பந்தமாக காரியங்களில் விழிப்புடன் ஈடுபடவும்.

மூலம் பூராட நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகம் உண்டாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 8, 11, 12, 18, 26,.

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, தெற்கு, தென்கிழக்கு. .

எண்கள்: 1, 4, 5, 6, 9.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 11:03 pm

மாத ராசிபலன்: விருச்சிகம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

விருச்சிகம்:

உங்கள் ராசிக்கு 9-ல் குருவும் சுக்கிரனும் 11-ல் ராகுவும் உலவுவது விசேடமாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வ தரிசனமும் சாது தசிரனமும் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் அளவோடு நலம் உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் அளவோடு லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள், தோல் பொருட்கள், போக்குவரத்துச் சாதனங்கள் ஆகியவை ஆதாயம் கொண்டுவரும். ஜன்ம ராசியில் சனி உலவுவதால் உழைப்பு அதிகரிக்கவே செய்யும். அலைசாலும் கூடும். உடல்நலனில் கவனம் தேவைப்படும். 5-ல் கேது இருப்பதால் மக்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டு குரு பலத்தால் விலகும். வயிறு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். 7-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் உலவுவதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

வியாபாரிகள், இயந்திரப்பணியாளர்கள் கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஆகியோருக்கெல்லாம் சிறுசிறு பிரச்னைகள் சூழும். 15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. அரசியல், நிர்வாகம், பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் சோதனைகள் சூழும். உடன்பிறந்தவர்களின் நலனில் கவனம் தேவைப்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. தொழிலில் அதிக கவனம் தேவை.

அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 8, 11, 12, 26, 29,.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு. .

எண்கள்: 3, 4, 6.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 11:03 pm

மாத ராசிபலன் :துலாம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

துலாம்:

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 8-ல் புதனும்,உலவுவது சிறப்பாகும். இதர முக்கியமான கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எதிலும் விசேடமான நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. சிறுசிறு பிரச்னைகள் அவ்வப்போது ஏற்படவே செய்யும். பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாகப் பழகவும். எரிபொருள், மின்சாரம், ஆயுதங்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போதும், பயன்படுத்தும்போதும் எச்சரிக்கை தேவை.

அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். இயந்திரப்பணியாளர்கள், இன் ஜினீயர்கள் ஆகியோர் சங்கடங்களுக்கு ஆளாக நேரும். உடன்பிறந்தவர்களாலும் தந்தையாலும் சோதனைகள் சூழும். தொழில் ரீதியாகச் சில பிரச்னைகள் ஏற்படும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. பயணத்தின்போது பாதுகாப்பு அவசியமாகும்.

15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 9-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. தந்தை நலனில் அதிக கவனம் தேவைப்படும். ஜனன கால ஜாதகம் வலுத்திருந்து, தற்சமயம் யோக பலமுள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் சங்கடங்கள் பெருமளவுக்குக் குறையும். ஜாதக பலமும் இல்லாதவர்கள் இறைவழிபாட்டிலும், கிரக வழிபாட்டிலும் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி பெறலாம். பெரியவர்களது ஆசிகளைப் பெறுவது நல்லது. நூதன முயற்சிகளை ஒத்திப்போடவும்.

சித்திரை, சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலமான மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 8, 11, 12, 18, 26, 29,.

திசைகள்: வடக்கு, வடமேற்கு. .

எண்கள்: 5, 7.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 11:03 pm

மாத ராசிபலன்: கன்னி
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

கன்னி:

உங்கள் ஜன்ம ராசிக்கு 3-ல் சனியும் 11-ல் குருவும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். மக்களாலும் அனுகூலம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். கொடுக்கல்-வாங்கலில் வளர்ச்சி காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். பேச்சில் திறமை கூடும். பொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும்.

திரவப்பொருட்கள் லாபம் தரும். தொழிலாளர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களது எண்ணம் ஈடேறும். கலைஞர்களது நோக்கம் நிறைவேறும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்கள் லாபம் தரும். தகவல் தொடர்பு இனங்களால் ஆதாயம் கிடைக்கும். 9-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவைப்படும். ஜன்ம ராசியில் ராகுவும், 7-ல்கேதுவும் இருப்பதால் அலைச்சல் அதிகமாகும். பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவதன் மூலம் அவர்களது அதிருப்திக்கு ஆளாகாமல் மீளலாம்.

15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 10-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். போட்டிகள், விளையாட்டுகள் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். இசைக்களைஞர்களுக்கு விசேடமான நன்மைகள் உண்டாகும். அரசுப்பதவி, அரசு உதவி ஆகியவை கிடைக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். காரியத்தில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள்.

ஹஸ்தம், சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான சுப பலன்கள் உண்டாகும் மாதமிது,

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 8, 11, 18, 26, 29,.

திசைகள்: வடகிழக்கு, வடக்கு, மேற்கு, தென்கிழக்கு.

எண்கள்: 3, 5, 6, 8.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 11:04 pm

மாத ராசிபலன் : சிம்மம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

சிம்மம்:

உங்கள் ராசிக்கு அதிபதி சூரியன் இந்தமாதம் முழுவதும் சிறப்பாக உலவுகிறார். செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் உயர்ப் பதவிகளும் பொறுப்புக்களும் உங்களைத் தேடிவரும். பெரியவர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது ஆதரவைப் பெறுவீர்கள். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை மேலோங்கும். எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். எலெக்ட் ரிக்கல், எலக்ட் ரானிக்ஸ் இனங்கள் லாபம் தரும்.

தந்தையாலும் உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும். சுப காரியங்களுக்காகவும், மக்கள் நல முன்னேற்றத்துக்காகவும் செலவு செய்வீர்கள். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் பெருகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். ராகு, கேது, சனி ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்படும். பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. பிற மொழி, மத, இனக்காரர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம்.

உடல் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. இதயம், வயிறு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும் நண்பர்கள், உறவினர்களால் நன்மைகளும் அல்லாதவைகளும் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. 15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் லாப ஸ்தானத்திற்கு இடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். அரசுப்பணிகள் லாபம் தரும். அரசியலைப் பற்றிய ஞானம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
மகம் பூர நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள அதிகரிக்கும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 8, 11, 18, 26, 29,.

திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.

எண்கள்: 1, 5, 6, 9.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 11:04 pm

மாத ராசிபலன் : கடகம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

கடகம்:

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் ராகுவும், 11-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரும் உலவுவதால் தோற்றப்பொலிவு கூடும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப்பொருட்களும் வாசனைத் திரவியங்களும் சேரும்.
அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். புகழும் மதிப்பும் உயரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் நிர்வாகத்துறையினருக்கும் சுபிட்சம் கூடும்.

எரிபொருட்கள், மின்சாரம், ஆயுதங்கள், கட்டடப் பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு ஆதாயம் அதிகமாகும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். முக்கியமான எண்ணங்கள் மாத முன்பகுதியில் இனிது நிறைவேறும். அரசு உதவி கிடைக்கும். தந்தையாலும் உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும்.

கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டாளிகள் உதவுவார்கள். 5-ல் சனியும், 9-ல் கேதுவும் இருஇப்பதால் மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏறபட்டு விலகும். 15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 12-ஆமிடம் மாறுவதால் குடும்ப நலனில் கவனம் தேவை. தந்தையாலும் அரசாங்கத்தாராலும் பிரச்னைகள் சூழும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. சகோதர நலனில் கவனம் தேவைப்படும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை உண்டாகும். கண், தலை சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.

பூச நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும் மாதமிது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 11, 12, 18, 26, 29,.

திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

எண்கள்: 1, 4, 5, 6, 9.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 11:04 pm

மாத ராசிபலன் : மிதுனம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

மிதுனம்:

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், சுக்கிரனும் 6-ல் சனியும் 10-ல் கேதுவும உலவுவதால் குடும்ப நலம் திருப்தி தரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும். பண வரவு அதிகமாகும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். ஆசிரியர்களது நோக்கம் நிறைவேறும். திரவப்பொருட்கள் லாபம் தரும். தோற்றப்பொலிவு கூடும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு அதிகமாகும். அதனால் மனத்தில் தெளிவும் பிறக்கும்.

தொழிலாளர்களது கோரிக்கைகள் சில இப்போது நிறைவேறும். ஆன்மிகவாதிகளுக்கு நற்பெயர் கிட்டும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்களால் ஆதாயம் கிடைக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். 4-ல் ராகுவும், 12-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரும் உலவுவதால் அலைச்சல் அதிகமாகும். உஷ்ணாதிக்கம் கூடும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அரசியல், நிர்வாகம், பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதும் சிறப்பாகாது. உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. எதிலும் வேகத்தைக் குறைத்துக் கொள்ளவும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் குரு பலத்தால் சமாளித்து வருவீர்கள்.

மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு பொருளாதார சுபிட்சம் கூடும் மாதமிது. மக்களால் மன மகிழ்ச்சிபெருகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 8, 11, 12, 18, 26, 29,.

திசைகள்: மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

எண்கள்: 3, 6, 7, 8.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக