ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதை மாறிய பழமொழிகள்..

+9
சந்திரா ப்ரிய தர்ஷினி
ayyasamy ram
T.N.Balasubramanian
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
உதயசுதா
பாலாஜி
ராஜா
soplangi
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பாதை மாறிய பழமொழிகள்.. - Page 2 Empty பாதை மாறிய பழமொழிகள்..

Post by soplangi Sat Dec 13, 2014 1:13 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

பல ஆண்டுகளாக நம் சமுதாயத்தில், பண்பாட்டில் உருவான அனுபவங்களை, கருத்துக்களை, எண்ணங்களை நறுக்கு தெறித்தாற் போல நாலு வார்த்தைகளில் சொல்லியவை பழமொழிகள்.

சமூகத்தின் அனுபவ பிழிவாக திகழ்ந்த இப்பழமொழிகள், ஒரு கால கட்டத்திலிருந்து, இன்னொரு கால கட்ட மக்களுக்கு செவி வழி இலக்கியங்களாகவே பரிமாறப்பட்டிருக்கிறது. அப்போது சில சொற்கள் திரிந்தோ, உருமாறியோ, வேறு பொருள் தருமாறு புரிந்தோ, பாதை மாறி பயணம் செய்ய தொடங்கியிருக்கின்றன.

சைவர்கள், சமணர்களை வாதத்திற்கு அழைத்து தோல்வியுறச்செய்து, எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிய செய்தியை எட்டாயிரம் சமணர்கள் என்று தவறாக பொருள் கொண்டவர்களே அதிகம். விழுப்புரம் அருகே உள்ள "எண்ணாயிரம்” என்ற ஊரை சேர்ந்த சமணர்களை கழுவில் ஏற்றப்பட்டதே உண்மை நிகழ்வு.

இலங்கை வேந்தன் ராவணன் பத்து கலைகளில் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கியதால், அவனை 'பத்து கலை ராவணன்' என்று அழைத்திருக்கிறார்கள். அது திரிந்து பத்து தலை ராவணனாக மாறியிருக்கிறது.

பழமொழியின் திரிபு :

"வக்கத்தவன் வாத்தியார் வேலைக்கு போ, ''போக்கத்தவன் போலீஸ் வேலைக்கு போ” என்ற பழமொழி கூட"வாக்கு கற்றவன் வாத்தியார் வேலைக்கு போ, போக்கு கற்றவன் போலீஸ் வேலைக்கு போ” என்ற பழமொழியின் திரிபே ஆகும்.

"சோழியன் குடுமி சும்மாடு ஆகாது” என்ற பழமொழி உருமாறி "சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்று மாறி போயிருக்கிறது. "சும்மாடு” என்பது தலையில் சுமை தாங்க பயன்படும் பொருள்.

புதிதாக வந்த மருமகள் வீட்டிற்குரிய மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்றும் செயலுக்கும், அதற்கு இணையான நிகழ்வுகளுக்கும் எடுத்தாளப்படும் பழமொழியே, "ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்” என்பதாகும்.

இதில் பிடாரி என்பது பெண் தெய்வத்தை குறிக்கிறது. லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்கு ஊரின் நடுவே கோயில் அமைக்கப்பட்டு, கொற்றவையும், காளிக்கும் ஊரின் எல்லையில் கோயில் அமைக்கப்பட்டன. அந்த நிகழ்வை குறிக்க உருவான பழமொழியே இது.


மகாபாரத போரின்போது, குந்தியிடம் கர்ணன் கூறும் "ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்ற வாசகம் பின்னர் பொருள் புதைந்து மாறிப்போயிருக்கிறது. ஐந்து சகோதரர்களோடு ஆறாவதாக கர்ணன் சேர்ந்தாலும் போரில் சாவு உறுதி. துரியோதனன் கூட்டத்தார் நூறு பேரோடு இருந்தாலும் சாவு உறுதி என்பதே உண்மை பொருள்.

புழக்கத்தில் பழமொழிகள் :


"ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” -பின்னாளில் "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” என்றும் "ஆயிரம் முறை போய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்” என்று சொன்னதை "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்” என்று பொருள் இன்றளவும் நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது.

"கண்டதை கற்பவன் பண்டிதன் ஆவான்” என்ற தொடரில் கண்டதை கற்கும் ஒருவன் எப்படி வல்லுனன் ஆக முடியும்? கண்ணால் மட்டுமே கண்ட ஒரு செயலை, அல்லது கலையை கற்று கொள்பவன் பண்டிதன் ஆகி விடுவான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

"களவும் கவறும் மற” அல்லது "களவும் கத்தும் மற” என்ற தொடரே, "களவும் கற்றுமற” என முரண்பட்டு நிற்கிறது. களவாகிய திருட்டை செய்து பின் மறந்து விட வேண்டும் என்ற பொருளிலேயே இன்று வரை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். 'கத்து' என்ற சொல் 'பொய்' 'சூது' 'கயமை' போன்ற பொருளை குறிக்கிறது. களவாகிய திருட்டையும், கயமையாகிய பொய் சூதையும் மறந்து விட வேண்டும் என்பற்கான பழமொழியே இது.

தாயும் பிள்ளையும் :

"சேல் (விழி) அகட்டும் (அலைபாயவிடும்) பெண்ணை நம்பாதே”தான் "சேலை கட்டும் பெண்ணை நம்பாதே” என்றாகி போனது.

"தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்” என்ற பழமொழி கூட 'தாய்' என்பது வாழையையும் 'பிள்ளை' என்பது தென்னையையும் குறித்து எழுந்ததாகும். வாழை மரத்துக்கு எட்டடி இடைவெளியும், தென்னை மரத்துக்கு பதினாறடி இடைவெளியும் வேண்டும் (அதன் வேர் நீளும் அளவு) என்பதையே இப்பழமொழி வெளிப்படுத்துகிறது.

"விருந்தும் மருந்தும் மூன்று நாள்” என்ற தொடர் கூட விருந்து படைக்க திங்கள், புதன், வெள்ளி என்ற மூன்று நாட்களையும், மருந்து உட்கொள்ள ஞாயிறு, செவ்வாய், வியாழன் என்ற மூன்று நாட்களையும் நம் முன்னோர் பயன்படுத்தியதை குறித்து வந்தது. சனிக்கிழமையை "சனி நீராடு” என்று கூறி எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு உகந்த நாளாக கொண்டனர்

'பாத்திரமறிந்து பிச்சையிடு” என்ற பழமொழியும் தவறாகவே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. "பாத்திறம் (பா+திறம்) அறிந்து பிச்சையிடு” என்று தான் இருந்திருக்கிறது. புலவர்களும், பாணர்களும், அரசர்களை, வள்ளல்களை புகழ்ந்து பாடி பொருளுதவி (பிச்சை) பெற்று வாழ்க்கை நடத்தி வந்த சூழலில் அவர்களின் "பா”த்திறம் (பாட்டுத்திறன்) அறிந்து அதற்கேற்றாற்போல் பொருளுதவி செய்திட வலியுறுத்தி வந்ததே இப்பழமொழி.

அகத்தின் அழகு :

"நல்ல மாட்டுக்கு ஒரு சுவடுதான்” -'சூடு' என்று திரிந்து போனது. மாட்டின் அடிச்சுவட்டை வைத்தே அதன் வலிமை, உடல்நலத்தை கணித்ததை இப்பழமொழி உணர்த்தியது.

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற முதுமொழியை கூட நாம் மேலோட்டமாகவே அணுகி வருகிறோம். இப்பழமொழி தனக்குள்ளே பொதிந்து வைத்திருக்கும் பொருள்கள் ஏராளம்.நம் அகத்தினுள் இருக்கும் நுரையீரல், இருதயம், மண்ணீரல், கல்லீரல், சிறுநீரகம் என்ற ஐந்து உறுப்புகளும் சீராக இயங்கினால் தான் நம் உடல் நலமாக இருக்கும். அந்த ஐந்து உறுப்புகளின் இயக்கத்தை அறிந்து கொள்ள, இன்றைய அறிவியல் உலகில் கருவிகள் வந்து விட்டாலும், நம் முன்னோர்களுக்கு நமது 'முகமே' கருவியாக பயன்பட்டிருக்கிறது.

நுரையீரலுக்கு மூக்கு, இருதயத்திற்கு 'நாக்கு', மண்ணீரலுக்கு உதடு, கல்லீரலுக்கு கண், சிறுநீரகத்துக்கு காது என்று நமது ஐந்து ராஜ உறுப்புகளுக்கும் முகத்தில் உள்ள இந்த ஐந்து உறுப்புகளோடு தொடர்பு இருப்பதை அறிந்து, அதன் நிலையறிந்து சிகிச்சை அளித்தனர். இப்படி நம் முகத்தில் தெரியும் அழகை கண்டு, இனி நாம் நம் உடல் நலத்தை காத்து கொள்வோம்.

நம் முன்னோர்களின் பொக்கிஷங்களான பழமொழிகளை சரியான பாதைகளில் பயணிக்க செய்வோம்.

கவிஞர் தமிழ்மதி நாகராசன்,
முதுகலை தமிழாசிரியர்,
ராமநாதன் செட்டியார் மேல்நிலை பள்ளி,
புதுவயல்.
83445 50111.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down


பாதை மாறிய பழமொழிகள்.. - Page 2 Empty Re: பாதை மாறிய பழமொழிகள்..

Post by Achudhan Mon Jun 15, 2015 1:27 pm

அருமை. வெகு நாட்களாக புரியாமலே இருந்தது. இன்று புரிந்து கொண்டேன்.
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

Back to top Go down

பாதை மாறிய பழமொழிகள்.. - Page 2 Empty Re: பாதை மாறிய பழமொழிகள்..

Post by விமந்தனி Mon Jun 15, 2015 1:57 pm

அருமையான பகிர்வு + பதிவு. பாதை மாறிய பழமொழிகள்.. - Page 2 1571444738


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பாதை மாறிய பழமொழிகள்.. - Page 2 Empty Re: பாதை மாறிய பழமொழிகள்..

Post by Preethika Chandrakumar Mon Jun 15, 2015 4:41 pm

பாதை மாறிய பழமொழிகள்.. - Page 2 103459460 பாதை மாறிய பழமொழிகள்.. - Page 2 3838410834 பாதை மாறிய பழமொழிகள்.. - Page 2 1571444738
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

பாதை மாறிய பழமொழிகள்.. - Page 2 Empty Re: பாதை மாறிய பழமொழிகள்..

Post by சரவணன் Thu Jul 16, 2015 5:50 pm

அருமையான பதிவு. நன்றிகள்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பாதை மாறிய பழமொழிகள்.. - Page 2 Empty Re: பாதை மாறிய பழமொழிகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum