ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் தூக்கி எறியும் பணம்

+5
ராஜா
M.Saranya
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
mbalasaravanan
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீங்கள் தூக்கி  எறியும்  பணம் Empty நீங்கள் தூக்கி எறியும் பணம்

Post by mbalasaravanan Fri 12 Dec 2014 - 11:34

உங்களுக்கு தெரியாமல் நீங்கள் தூக்கி எறியும் பணம்...!
நீங்கள் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவரா? அப்படியானால் உங்களுக்கே தெரியாமல் 150 ரூபாய் குப்பைக்கு போகிறது. அது எப்படியென்று தெரியுமா? நீங்கள் உங்கள் பயன்பாட்டுக்காக வாங்கிய பெர்ப்யூம் அடங்கிய ஈயா கேன், கண்ணாடி பாட்டில்கள், தீர்ந்து போன ரீபிள்கள், டப்பாக்கள் என்று அவை தீர்ந்து போன பிறகு குப்பைக்கு போகிறதே…அது தான் உங்கள் பணம். மறைமுகமாக நீங்கள் பணத்தை குப்பை வடிவில் தூக்கி எறிகிறீர்கள்.
சரி…இப்படி காலியான பாட்டில், டப்பா,கண்ணாடி,பாலிதீன், காகிதங்கள் என்று அத்தனையையும் வீட்டின் மூலையில் ஒரு சாக்கில் சேமித்து வைத்து மாதம் ஒரு முறை பழைய பேப்பர் கடையில் போட்டால் எனன விலைக்கு போகும் என்று ஒரு பரிசோதனை செய்து பாருங்கள். அப்போது தான் தெரியும். இவ்வளவு நாளாக நீஙகள் எவ்வளவு பணத்தை இழந்திருக்கிறீர்கள் என்று!
தரமான பாலிதீன் பைகளில் இருந்து பிளாஸ்டிக் ஹோஸ்,பிளாஸ்டிக் டப்பாக்கள் தயாரிக்கிறார்கள். அதாவது சின்டெக்ஸ் தொட்டி போன்றவை தொடங்கி பைப்புகள் வரை தயாரிக்கிறார்கள். நாம் தூக்கி போடும் பாலிதீன் பைகளை இது போன்ற பொருட்கள் தயாரிக்க வாங்கிக் கொள்கிறார்கள். ஆக..பாலிதீன் பைகளை சேர்த்து வைத்தால் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
பிளாஸ்டிக்கில் ‘கடக்’ பிளாஸ்டிக் என்று ஒரு வகை. அதாவது கையால் உடைத்தால் உடைந்து போகும் ரகம். இது கிலோ ஒன்றுக்கு விலை 4 ரூபாய். இந்த பிளாஸ்டிக்கை இரண்டாம் தர பிளாஸ்டிக் என்கிறார்கள். இந்த வகை பிளாஸ்டிக்குகள் பெயிண்ட் பிரஷ் கைப்பிடி, குடம் தயாரிக்க போகிறது.
நீஙகள் டிவி.மிக்சி என்று பொருட்கள் வாங்கும் போது அட்டையில் சுற்றி பேக்கிங் செய்து வரும். இந்த வகை அட்டை பெட்டிகள் கிலோ 3 ரூபாய்க்கு போகிறது. இந்த அட்டைகள் மீண்டும் புதிய பேக்கிங் அட்டைகள் செய்ய பயன்படுகிறது.
சிகரெட் பெட்டிகள் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலை தருகிறார்கள். இந்த சிகரெட் பெட்டிகளை மறுசுழற்சி செய்து மீண்டும் அட்டைகள், பேப்பர் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.
பிளாஸ்டிக் வயர்களை துண்டுதுண்டாக கிடந்தால் அவற்றையும் குப்பையில் போடுவோம். ஆனால் அவற்றின் உள்ளே உள்ள காப்பர் கம்பியின் விலை கிலோ ரூ.80 க்கு வாங்கிக் கொள்கிறார்கள்.
தேங்காயை எடுத்து சட்னி அரைத்து விட்டு சிரட்டையை தூக்கி எறிந்து விடுவோம். இது போன்ற சிரட்டையின் மதிப்பு 1 டன் ரூ.2500க்கு விலை போகிறது. இந்த சிரட்டையை வைத்து செங்கல் சூளையில் விறகுக்கு பதிலாக செங்கலை சுட பயன்படுத்துகிறார்கள். இது தவிர கொசுவர்த்தி, தயாரிக்கவும் சிரட்டை பயன்படுகிறது.
பால் கவர்கள் கிலோ ரூ.10 முதல் 15 வரை கொடுத்து வாங்கி கொள்கிறார்கள்.
தகரம் கிலோ 4 ரூபாய்க்கும், பழைய இரும்பு கிலோ 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.
வீட்டில் தினமும் டீ தயாரித்து சாப்பிடுகிறீர்களா? வீணாகும் டீத்தூளை அப்படியே சேர்த்து வைத்திருங்கள். இவற்றை வைத்து உரம் தயாரிக்கிறார்கள். காபி தூளிலிருந்தும் தான் இப்படி உரம் தயாரிக்கிறார்கள். ஆக..வீணான இந்த டீ.காபி தூள்களில் விலை 10 கிலோவுக்கு 5 ரூபாய் தருகிறார்கள்.
பெட்பாட்டில் வாங்கி விட்டு தூக்கி போடாதீர்கள். வீணான பெட்பாட்டிலின் விலை கிலோ 8 ரூபாய்.
பழைய வெள்ளை பேப்பர் கிலோ ஒன்றுக்கு 6 முதல் 10 வரை கிடைக்கும்.
அரசு அலுவலகங்களிலிருந்து வரும் பேப்பர் கழிவுகள் மற்றும் பிரிண்டிங் பிரஸ் கழிவுகளிலிருந்து வெள்ளை பேப்பர் கழிவுகளை மறு சுழற்சி செய்து மீண்டும் பேப்பர்கள் தயாரிக்கிறார்கள்.
அலுமினியம் பாயில் பேப்பர்( உணவு பொருட்களை பார்சல் செய்ய பயன்படுவது) கிலோ 18 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். இதை மறுசுழற்சி செய்து அலுமினிய பேப்பராக மீண்டும் செய்கிறார்கள்.
தலைமுடி கிலோ 1 ரூபாய் முதல் 2 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
நெர்லான் செருப்புகள் கிலோ 8 ரூபாய்க்கு விலை போகிறது.
வீணான டியூப்லைட் ஒன்றுக்கு 1 ரூபாய் விலை நிர்ணயித்து வாங்குகிறார்கள்.
ரப்பர் கழிவுகள்,டயர்களை மறுசுழற்சி செய்து ரப்பர் பொருளாக தயாரிக்கிறார்கள். எனவே வீணான டயர்கள், டியூப்களை வைத்திருங்கள். இவற்றை கிலோ 5 முதல் 10 வரை தருகிறார்கள்.
ஆக…இனி எதையும் வீட்டுக்கு வெளியே தூக்கி போடும் போது ஒரு முறை சிந்தியுங்கள். அது உங்கள் பணம். அப்படியே வைத்திருந்து மாதம் ஒரு முறை பழைய பேப்பர்காரரிடம் கொடுங்கள். அவர் உங்களுக்கு ரூபாய் நோட்டுக்களை திருப்பி தருவார். இந்த பழக்கத்தை பார்க்கும் உங்கள் குழந்தைகளும் எதையும் வீணாக்காமல் இருக்க கற்றுக் கொள்வார்கள்.--சுற்றுப்புறசூழலும் சுத்தமாகும்.
முகநூல்


Last edited by T.N.Balasubramanian on Sat 13 Dec 2014 - 10:46; edited 1 time in total (Reason for editing : correction)
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நீங்கள் தூக்கி  எறியும்  பணம் Empty Re: நீங்கள் தூக்கி எறியும் பணம்

Post by ஜாஹீதாபானு Fri 12 Dec 2014 - 13:47

பயனுள்ள தகவல் பாலா

நான் சேர்த்து வைத்து எடைக்கு தான் போடுவேன்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீங்கள் தூக்கி  எறியும்  பணம் Empty Re: நீங்கள் தூக்கி எறியும் பணம்

Post by T.N.Balasubramanian Fri 12 Dec 2014 - 13:59

ஒரு சில விஷயங்கள் கடைப்பிடிக்கலாம் .
.
இவைகளை சேகரித்து வைத்து 1 மாதமோ /2 மாதத்திற்கு ஒரு முறையோ தான் பழைய சாமான் வாங்கும் இடத்தில் இவைகளை சேர்ப்பீர்கள் .சிறிது கவனம் தப்பினால் , கஷ்டம்தான்
( உம்)1. பால் பைகள் . இதை சேர்த்து வைக்கும் போது , உட்பாகத்தை நீர் விட்டு அலம்பி சேர்த்து வைக்கவேண்டும் . இல்லையேல் , அது சேர்த்து வைத்துள்ள இடம் அருகில் போகும் போதே , உவ்வா எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் . நாற்றம்தான்
2. Tube light ஒரு ரூபாய்க்கு ஆசைப்பட்டு வீட்டில் ஒரு ஓரமாக எடுத்து வைத்து இருப்பீர் .வீட்டில் வேலை செய்பவரோ , குழந்தையோ , கை, கால் தவறி உடைத்து , அந்த வேதிய பொருள் கலந்த கண்ணாடி , குழந்தையின் கையையோ காலையோ சேதப்படுத்தி septic ஆகி , டாக்டரிடம் ஓடி , 100/- தண்டம் அழவேண்டும் .
3.தலை முடியோ / டி தூளோ ஒரு கிலோ சேர எவ்வளவு காலம் பிடிக்கும் .
வீடே ஒரு அழுக்கு கோடவுன் ஆகி விடும் .

பழைய பேப்பர் , அலுமினியம் கண்டைனர்கள் பரவாயில்லை . மாதத்திற்கு ஒரு முறை , கழித்து , போட்டுவிட்டால் , ஓகே .
மற்றவை அவரவர் இஷ்டம் , பணமா / வீட்டு சுத்தமா ? தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நீங்கள் தூக்கி  எறியும்  பணம் Empty Re: நீங்கள் தூக்கி எறியும் பணம்

Post by M.Saranya Fri 12 Dec 2014 - 15:02

நல்ல தகவல்...
நன்றி...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நீங்கள் தூக்கி  எறியும்  பணம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

நீங்கள் தூக்கி  எறியும்  பணம் Empty Re: நீங்கள் தூக்கி எறியும் பணம்

Post by mbalasaravanan Fri 12 Dec 2014 - 15:03

சோகம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நீங்கள் தூக்கி  எறியும்  பணம் Empty Re: நீங்கள் தூக்கி எறியும் பணம்

Post by ஜாஹீதாபானு Fri 12 Dec 2014 - 16:17

நான் பால் பாக்கெட் பிளாஸ்டிக் இது தவிர எதுவும் சேமிக்க மாட்டேன். அட்டையை கூட குப்பையில் போட்டுருவேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீங்கள் தூக்கி  எறியும்  பணம் Empty Re: நீங்கள் தூக்கி எறியும் பணம்

Post by ராஜா Fri 12 Dec 2014 - 22:46


பொதுவாக அவசரத்தில் unicode எழுதியை பயன்படுத்தி type செய்யும்போது நெடில் குறில் தவறு வருவதை தவிர்க்க முடியாது. ஆனால்

"எரியும்" இது போன்ற பிழைகளை தவிர்க்கலாமே.... தலைப்பின் அர்த்தமே மாறுகிறதே சோகம்

ரமணீயன் ஐயா சொல்வது போல இதை படிப்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும் கடைபிடிப்பது வேலையற்ற வேலை.

தேங்காயை எடுத்து சட்னி அரைத்து விட்டு சிரட்டையை தூக்கி எறிந்து விடுவோம். இது போன்ற சிரட்டையின் மதிப்பு 1 டன் ரூ.2500க்கு விலை போகிறது
இது செம காமடி புன்னகை வீட்டில் சட்னி அரைக்க பயன்படுத்தும் தேங்காய் சிரட்டை ஒரு டன் சேருவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும். அதுவும் சென்னையில் பெரும்பாலான குடும்பங்கள் தேங்காயை சில்லுகளாக தான் வாங்கிகொள்வார்கள் பார்த்திருக்கிறேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீங்கள் தூக்கி  எறியும்  பணம் Empty Re: நீங்கள் தூக்கி எறியும் பணம்

Post by T.N.Balasubramanian Sat 13 Dec 2014 - 10:43

முகநூலில் இருந்து C & P பண்ணியதின் விளைவு .
FB இல் தமிழை கொலை பண்ணினாலும் கண்டு கொள்ளமாட்டார்கள் .
பதிவர்களிலும் அநேகர் , எண்ணிக்கைக்காக பதிவிடுகிறார்கள் .
எழுத்து பிழை அறியாமையாலா அல்லது எப்பிடி வேண்டுமானாலும் எழுதலாம் .
மக்கள் ரொம்பவே அட்ஜிஸ் பண்ணிப்பாங்க என்ற உயர்ந்த எண்ணம் தான் காரணம் .
ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நீங்கள் தூக்கி  எறியும்  பணம் Empty Re: நீங்கள் தூக்கி எறியும் பணம்

Post by T.N.Balasubramanian Sat 13 Dec 2014 - 10:47

தலைப்பு பிழை திருத்தப்பட்டது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நீங்கள் தூக்கி  எறியும்  பணம் Empty Re: நீங்கள் தூக்கி எறியும் பணம்

Post by ராஜா Sat 13 Dec 2014 - 12:52

T.N.Balasubramanian wrote:தலைப்பு பிழை திருத்தப்பட்டது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1109213 நன்றி நன்றி ஐயா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீங்கள் தூக்கி  எறியும்  பணம் Empty Re: நீங்கள் தூக்கி எறியும் பணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum