புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
85 Posts - 79%
heezulia
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
250 Posts - 77%
heezulia
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
8 Posts - 2%
prajai
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
3 Posts - 1%
Barushree
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_m10பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் என்ற தீர்க்கதரிசி:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 11, 2014 7:30 am

பாரதியார் என்ற தீர்க்கதரிசி:  98e3hnHcT8a6CJJISdDK+Tamil_News_large_1135034
-
-
தொலைநோக்குப் பார்வை உடைய கவிஞரே சிறந்த
கவிஞராக முடியும். பாரதி எதிர்கால இந்தியா வளமிக்க
நாடாக வேண்டும் என்று அன்றே தேசிய நிர்மாணத்
திட்டம் வகுத்தவர்.

-
''சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்''

-
என்று பாடி நதிநீர் இணைப்புத் திட்டம், சேது சமுத்திரத்
திட்டத்திற்கும் அன்றே பாதை வகுத்தார். வணிகம்,
அறிவியல், வளர்துறை அனைத்தையும் காவியம்,
ஓவியம் காண்பவை அனைத்தையும் ஒருமைப்பாட்டை
உருவாக்கினால் நல் கருவிகளாக காண்போம் என்றே
கவிகளை இயற்றினார்.

-
பெண்மையைப் போற்றிய பெருங்கவி:

-
அலங்கார பதுமையாகவும், அடிமைப் பொருளாகவும்,
அடங்கிக் கிடந்த பெண்மைக்கு உரிமைக்குரல் கொடுத்தவர்
பாரதி. அவர் காலத்திலும், அதற்கு முன்பும் வாழ்ந்த மற்ற
கவிஞர்களும் பெண்களின் கண்ணீரைத் தொட்டுத்தான்
கவிதை எழுதினார்கள். ஆனால் பாரதி பெண்களின்
கண்ணீரைத் துடைக்கக் கவிதைப் படைத்தவர்.
மாதருக்கும் இங்கே மா தருக்கு உண்டு என்று பெண்மையை
உச்சிக்கு உயர்த்தி பெருமை சேர்த்தார்.
-

'பூணு நல்லறத்தோடு இங்கு பெண்ணுருப்
போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்'

-
என்று பாடிப் பெண்மையைத் தெய்வநிலைக்கு உயர்த்தினார்

பாரதி.
பாரதியின் புதிய பார்வைக்குச் சான்று கண்ணன் பாட்டு.
கண்ணனைப் பெண்ணாக மாற்றி காதல் செய்தார்.
கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக,
அரசனாக, சீடனாக, குருவாக, குழந்தையாக, குல தெய்வமாக
பார்த்து ரசித்துக் கவிதை செய்த பெருமை பாரதியை சேரும்.
-

பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியாக பாரதி கண்டது தெய்வ
பாரத தேவி. அன்று கண்ணீர் விட்டு அழுதது பாஞ்சாலி
அல்ல பாரதம் என்கிறார் பாரதி.
மண்ணை மீட்க மறப்போர் நிகழ்த்திய கண்ணனே எனக்குக்
காதலன் என்கிறார் பாரதி.

-
'' இது பொறுப்பதில்லை தம்பி
எரிதழல் வைத்திழந்தான் அண்ணன்
கையை எரித்திடுவோம்''
என்று வீமன் பொங்கியதைப் போல,
தாயகப் பற்றிலா மக்களைத் தமது தமிழால் எரிக்கத் தாவினார்.
பறவை இனத்தில் காதல் வெறியில் ஆண்குயில் தான்
அழகாகக் கூவும். பெண்குயில் இங்கே கூவியதாகப் பண்குயில்
பாரதியார் குயில்பாட்டு பாடியிருக்கிறார்.
ஆன்மா அனைத்தும் இறைவனையே நாட வேண்டும் என்பதை
வேதாந்தமாக கூறினார். தத்துவ மறைபொருளை கத்தும்
குயிலின் குரலிலே சேர்த்து உரைத்தார் பாரதி.

-
புதிய ஆத்திசூடி தந்த புரட்சிக் கவிஞர்:

-
அவ்வைப் பாட்டியின் பழந்தமிழைப் பாங்காய் திருத்தி
நீட்டிய பாரதியாரது நீதிநூலில் ஈட்டியாய் சொற்கள் எதிர்
வருகின்றன. நாளும் வறுமையில் வாடும் மக்களைப் பார்த்து
அவ்வைப் பாட்டி நமக்கு மீதூண் அதுவும் வேண்டாம் என்கிறாள்.
ஆனால் உக்கிரம் கொண்ட பாரதியாரோ உணர்ச்சி மேலோங்க
'ஊண்மிக விரும்பு' என்றார்.

நலிவை எதிர்த்த பாரதி 'கோல் கை கொண்டு வாழ்க' என்றும்
'நையப்புடை' எனவும் சொல்கிறார். 'கேட்பிலும் துணிந்து நில்'
என்று பாட்டையேத் தீப்பந்தம் ஆக்கினார்.

நாட்டு வெடி போல நாவிலும் பழமைப் பாட்டு வெடியால்
தகர்த்தவர் பாரதி. தான் கண்ட எல்லாவற்றிலும் புதுமையை,
புரட்சியை வளர்த்த மகாகவிஞனை வணங்கி மகிழ்வோம்.
-

=============================
-
- முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, உதவிப் பேராசிரியர்,
செந்தமிழ்க் கல்லூரி, மதுரை. 94437 28028.
நன்றி: தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக