ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொரிமாவும் பெருமாளும்!

2 posters

Go down

பொரிமாவும் பெருமாளும்! Empty பொரிமாவும் பெருமாளும்!

Post by ayyasamy ram Mon Dec 08, 2014 10:44 am

பொரிமாவும் பெருமாளும்! CrOyLWSkTtmHmcqcrRcq+large_170140575
-

இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான சூழ்நிலையில்,
சிறிய குன்றின் மீது பெருமாள் சேவை சாதிக்கும்
தலம் ஒட்டப்பாளையம்.
-
இங்கு சுயம்பு மூர்த்தமாக கல்யாண லட்சுமி நாராயணப்
பெருமாள் என்னும் திருநாமத்தில் பகவான்
எழுந்தருளியுள்ளார். அக்காலத்தில் யானைகள் இம்மலைப்
பகுதிகளிலும், காட்டுப் பகுதிகளிலும் நிறைய காணப்பட்டதன்
பொருட்டு “ஆனைக்கரட்டுப் பெருமாள்’ என்றும் இவர்
அழைக்கப்படுகிறார்.
-
சாலையிலிருந்து துவங்கும் படி வழியாக குன்றின் மீது
சுமார் இருநூறு மீட்டர் ஏறிச் சென்றால் முதலில்
பன்னிரண்டு அடி உயரமுள்ள விஸ்வரூப வீர அஞ்சலி
ஹஸ்த ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.
-
இந்த அனுமனுக்கு வடமாலை சாத்தி வழிபட ராகு-கேது
தோஷங்கள் விலகி ஓடும் என்பது நம்பிக்கை! ஹனுமத்
ஜெயந்தி இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவருக்கு
நேர் எதிரே கோயிலுக்குள் கல்யாண லட்சுமி நாராயணப்
பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை
சாதிக்கிறார்.
-
திருமண்ணலா (நாமக்கட்டியைக் குழைத்து) இங்கே
எழுந்தருளியிருக்கும் இறைவன், இறைவியை தினசரி
அலங்கரித்து விசேஷ பூனைகள் நடத்தப்படுகிறது.
இதுவே பக்தர்களுக்குப் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.
-
திருமணத் தடை உள்ளவர்கள், மகப்பேறு இல்லாதவர்கள்,
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பதவி உயர்வு, வியாபார
அபிவிருத்திபெற விரும்புபவர்கள் சனிக்கிழமை தோறும்
இக்கோயிலில் அருள்பாலித்து வரும் பெருமாளை வழிபட்டு
நற்பேறு பெறுகிறார்கள்.
-
ஒரு சில சமயங்களில், குறிப்பாக பிரதோஷ காலத்தில்
இவ்விறைவன் உக்கிரமாக, நரசிம்மராக காட்சி தருவதாகச்
சொல்லப்படுகிறது. அச்சமயம் திருமண்ணால் அலங்கரிக்கப்
பட்ட திருமால் முகத்தில் வெடிப்புகள் ஏற்படும்.
அப்போது உக்கிர நரசிம்மமூர்த்தியாக மாறுகிறாராம்.
-
வலது புறத்தில் அன்னை பத்மாவதித் தாயாரோடு இறைவன்
திருமணக் கோலத்தில் காட்சி தருவதால், திருமணம்
ஆகாதவர்கள் தங்களது ஜாதகத்தை இங்கே வைத்து
பிரார்த்திக்கிறார்கள். அப்படி ஜாதகத்தை வைத்து
வணங்கியவர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கி, விரைவில்
திருமணம் நல்லபடியாக நடந்தேறியுள்ளது.
-
பெருமாளுக்கு விரதமிருந்து பக்தர்கள் சிலர் கம்பு மற்றும்
அரிசியை அரைத்து, அத்துடன் பனைவெல்லம் அல்லது
சர்க்கரை சேர்த்து, சிறிது ஏலப்பொடியும் கலந்து, வெள்ளைத்
துணியில் முடிந்து சுவாமிக்கு நைவேத்யமாகப் படைத்து
வழிபடுகிறார்கள்.
-
இந்த வழிபாட்டு முறை பல்லாண்டு காலமாக இருந்து
வருகிறது என்பதற்கு ஆதாரமாக, இம்மலை அருகே
பழங்காலக் கல்வெட்டில் “பொரிமாவும் பெருமாளும்’
என்ற வாசகம் காணப்படுகிறது.

-
இம்மலைக்கு வரும் பக்தர்கள் அர்ச்சகர் கொடுக்கும்
குங்குமம், துளசி தீர்த்தம் தவிர, இம்மலை மண்ணையே
பிரசாதமாக எடுத்துச் செல்வதையும் காணமுடிகிறது.
பேய், பிசாசு, பில்லிசூனியம் இவற்றை அகற்றும் அற்புத
ஆற்றல் இங்குள்ள பலிபீடத்திற்குள்ளதாம்.
-
இந்த ஆலயத்தில் “கருட சேவை’ முக்கியமான திருவிழா
ஆகும். உற்சவ மூர்த்தி கருடன் மீது அமர்ந்து உலா வருவது
“மெரவணை’ என்று சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமை அன்று
“சமாராதனை’ என அழைக்கப்படும் அன்னதானம் சிறப்பாக
நடைபெறுகிறது.

இந்த ஆலயப் பெருமாளை ஆதிசேஷனும், நாகவடிவில்
தேவர்களும் பூஜித்ததாக வரலாறு. இவ்வாலயத்தின் வட
மேற்குப் பகுதியில் மிகப் பெரிய பாம்புப் புற்று ஒன்ற இன்றும்
காணப்படுகிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக்கடன்
செய்வதாக வேண்டிக் கொண்டவர்கள், தங்களால் அங்கு
செல்ல முடியவில்லையெனில், அதற்குப் பதிலாக
இவ்வாலயத்திற்கு வந்து தங்களது வேண்டுதல்களை நிறை
வேற்றிக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

எங்கே இருக்கு:
ஈரோடு மாவட்டம், பவானியிலிருந்து அந்தியூர் செல்லும்
வழியில் பருவாச்சி உள்ளது. அங்கிருந்து சுமார் 3 கி.மீ.
தொலைவில் ஒட்டப்பாளையம் என்ற இடத்தில் இந்த
ஆலயம் அமைந்துள்ளது.
-
தரிசன நேரம்: காலை 7.30 – 12.30; மாலை – 5 – இரவு 7

-

—————————————–
நன்றி: குமுதம் – பக்தி

- மேவானி கோபாலன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொரிமாவும் பெருமாளும்! Empty Re: பொரிமாவும் பெருமாளும்!

Post by mbalasaravanan Mon Dec 08, 2014 1:19 pm

நல்ல பகிர்வு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum