ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

+3
அகிலன்
T.N.Balasubramanian
ராஜா
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்  - Page 3 Empty விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by ராஜா Sun Dec 07, 2014 11:56 am

First topic message reminder :

இந்த சனிபெயர்ச்சி குறிப்புகள் அனைத்தும் தினத்தந்தியில் இருந்து எடுத்து பகிரப்பட்டது.
நன்றி - தினத்தந்தி


விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்  - Page 3 Aries

அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை - (45/100)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

கவனத்துடன் செயல்பட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்!

தளராத மனதோடு பணியாற்றி வரலாறு படைக்கும் மேஷ ராசி நேயர்களே!

திட்டம் போட்டு செயலாற்றுவதில் கெட்டிக்காரர்களாக விளங்கும் உங்களுக்கு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வந்துவிட்டது. இதுவரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், இப்பொழுது எட்டாமிடத்தில் சஞ்சரித்து உங்களுக்கு ஏராளமான மாற்றங்களை வழங்கப்போகிறார்.

உங்கள் ராசியைப் பொறுத்தவரை 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்குபவர் சனிபகவான். தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான், எட்டில் சஞ்சரிக்கும் பொழுது தொழில்மாற்றச் சிந்தனைகள், இடமாற்றச் சிந்தனைகள், வீடு மாற்றச் சிந்தனைகள் மற்றும் நாடுமாற்றச் சிந்தனைகள் போன்றவை ஏற்படுவது இயல்புதான்.

வலிமை வாய்ந்த சனியால் நாம் வளர்ச்சியைக் காணவும், தளர்ச்சியில் இருந்து அகலவும் செலுத்த வேண்டியது பக்தியும், யுக்தியும் தான். நீங்கள் தினந்தோறும் பக்தி செலுத்தி பாராயணமாக, 'கருநிறக் காகம் ஏறிக் காசினி தன்னைக் காக்கும்' என்ற கவசத்தைப் பாடுவதன் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். யுக்தி என்பது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்க காலத்தில் நீங்கள் எதையும் யோசித்து நுணுக்கமாக செய்வதாகும்.

மூன்றாண்டு காலங்கள் எட்டாமிடத்தில் முற்றுகையிடும் சனியால், வேண்டிய நற்பலன்களைப் பெற வேண்டுமானால் தன்னம்பிக்கையும், தைரியமும் தான் உங்களுக்கு அவசியம் தேவை. உங்கள் ராசிநாதன் செவ்வாய், 'தைரிய காரகன்' தானே!. எனவே தாக்குதல்களைச் சமாளித்து முன்னேறும் தன்மை இயல்பாகவே உங்களுக்கு உண்டு.

இருப்பினும் உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலை அறிந்து, நவாம்சத்திலும் அது இருக்கும் இடம், பார்க்கும் கிரகம், அதோடு இணைந்திருக்கும் கிரகம் ஆகியவற்றை ஆராய்ந்து, அதன் தாராபலம் பார்க்க வேண்டும். பின்னர் உங்களுக்குரிய யோகபலம் பெற்ற நாளில் சிறப்பு வழிபாடுகளையும், தசாபுத்திக்கேற்ப அனுகூலம் தரும் தெய்வத்தைக் கண்டறிந்து அதற்குரிய வழிபாடுகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் முன்னேற்றத்தின் முதற்படிக்கு நீங்கள் செல்லலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வந்த துயரங்கள் வாயிலோடு நின்றுவிட, இனி டிசம்பர் 16 முதல், காக வாகனத்தானை கைகூப்பித் தொழ வேண்டியது அவசியமாகும்.
அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம்!

மாபெரும் கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் சனிபகவான். இதுவரை உங்களுக்கு கண்டகச் சனியாக இருந்தது. இனி மார்கழி 1-ந் தேதி முதல் அஷ்டமத்துச் சனியாக அடியெடுத்து வைக்கிறது. அஷ்டமத்துச் சனி எல்லோருக்கும் பாதிப்பை கொடுத்தாலும், உங்களைப் பொறுத்தவரை உற்சாகத்தோடு பணிபுரிய வைக்கப்போகிறார். காரணம் சனிப்பெயர்ச்சியான சில நாட்களிலேயே குருபகவான் கடக ராசிக்கு வக்ரமாக சென்று, அஷ்டமத்தில் அடியெடுத்து வைத்துள்ள சனியை தனது அருள் பார்வையால் பார்க்கப் போகிறார். எனவே ஆச்சரியப்படும் விதத்தில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது.

உங்களுக்கோ அல்லது குடும்பத் தினருக்கோ ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்பட்டு அகலும். எனவே சனியையும், குருவையும் வாரந்தோறும் வழிபட்டு வருவது நல்லது.

அதே நேரத்தில் சுக்ரன் மற்றும் புதனின் ஆதிக்க திசாபுத்தி நடப்பவர்கள், எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு நல்ல திசாபுத்தி நடைபெற்றால், சனியால் ஏற்படும் சோதனைகளை வெல்லக்கூடிய வாய்ப்பு உருவாகும். நல்ல தெசாபுத்திகள் நடைபெறுமானால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு வந்து சேரும். குடும்பத்தில் வீண் விரயங்களை தடுக்க, சுபவிரயங்களைச் செய்யலாம்.

மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனிபகவான் எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். அதன் பார்வை 2, 5, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கும் சனியால், குடும்பச் செலவுகள் கூடும். இரவு, பகலாக கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்ப உறுப்பினர்களை திருப்திப் படுத்த பலவித போராட்டங்களைச் சந்திக்க நேரிடும். படபடப்பு, கோபம் போன்றவை வந்திணையும்.

நிதானத்தோடு செயல்படுவதாலும், கோபத்தைக் குறைத்துக் கொண்டு குணத்தோடு நடந்து கொள்வதாலும், சண்டை சச்சரவுகளில் இருந்து விடுபட இயலும்.

சனியின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால், பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவிற்கு வரும். அவர்களுக்குத் தேவையான ஆடை, ஆபரணங்களை அதிகம் வாங்கிக் கொடுப்பீர்கள். கல்யாணக் கனவுகளை நனவாக்கத் திட்டமிடுவீர்கள்.

எந்தக் காரியத்தையும் உங்கள் நேரடிப் பார்வையில் வைத்துக் கொள்வதே நல்லது. பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினையை, பேச்சு வார்த்தையிலேயே சுமுகமாக முடித்துக் கொள்ளுங்கள்.

சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால், குடும்ப பெரியவர்களின் உடல்நலனில் கவனம் தேவை. முதல் ஆறு மாதங்களும், கடைசி 6 மாதங்களும், நடுவில் 6 மாதங்களும் சனியின் வலிமை அதிகரிக்கும். அக்காலத்தில் விநாயகர் மற்றும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

யோகபலம் பெற்ற நட்சத்திரம், உங்கள் ராசிநாதனுக்குரிய கிழமையோடும், பாக்கியாதிபதிக்குரிய கிழமையோடும் இணையும் நாளில் சிறப்பு வழிபாடுகளை செய்தால், உத்தி யோகம் மேன்மை அடையும்.

தெசாபுத்தி பலம் இழந்து இருப்பவர்களுக்கு, செய்யும் வேலையைவிட்டுவிட்டுப் புதிய வேலை தேடும் சூழ்நிலை உருவாகும். ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, தனித்து இயங்க முற்படுவார்கள். அனுசரித்துச் செல்வதன் மூலமே நன்மைகளைப் பெற முடியும்.

குதூகலம் தரும் குருப் பெயர்ச்சி காலம்!

விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப் போகின்றது. 5.7.2015-ல் சிம்ம ராசியிலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகின்றார்.

சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை பலத்தால் 1, 9, 11 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே உடல் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். பங்காளிப் பகை மாறும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மதிப்பு, மரியாதை உயரும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களைக் குரு பார்க்கப் போகின்றார். எனவே குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். தொழில் பங்குதாரர்களாக புதியவர்களைச் சேர்த்துக் கொள்வீர்கள். வியாபார இழப்புகளை ஈடுசெய்வீர்கள். அந்நிய தேசம் அல்லது பிற மாநிலங்களில் பணிபுரிய செய்த ஏற்பாடுகளில் வெற்றி கிடைக்கும். வீடு கட்டும் முயற்சி அனுகூலமாக இருக்கும்.

துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் நேரடிப் பார்வை உங்கள் ராசியிலும், 3, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. எனவே நீடித்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும். எதிர்காலத்திற்கான திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வழக்குகள் சாதகமாகும். வங்கிச் சேமிப்பு உயரும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழிலுக்கு மாற்று இனத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். கோவில் திருப்பணிக்கு செலவிட்டு மகிழ்வீர்கள். சர்ப்பசாந்தி செய்தால் சந்தோஷ வாய்ப்பு தேடிவரும்.

27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, தாயின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்துச் செல்வது நல்லது. பணத்தேவைகள் கடைசி நேரத்தில்தான் பூர்த்தியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வது கடினம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். ராகு-கேது பிரீதி நலம் தரும்.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..

உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை வக்ரம் பெறுகிறார். 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டிலும் மூன்று முறை வக்ரம் பெறும்பொழுது, வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறியே வந்துகொண்டு இருக்கும். குடும்பச் சுமை கூடும். தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. கடுமையாக முயற்சித்தும் காரியம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். அந்நிய தேசத்தில் இருப்பவர்கள் அரைகுறையாகப் பணியை முடித்துக் கொண்டு வர நேரிடலாம். இல்லத்தில் உள்ளவர்கள் எல்லாம் எதிரியாக இருக்கிறார்களே! என்று நினைப்பீர்கள். ஆயினும் அஷ்டமத்துச் சனி வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, விஸ்வரூபம் எடுத்த பிரச்சினைகள் விரைவில் சுமுகமாக முடியும். அதற்கு அடித்தளமாக காலையில் கணபதியையும், மாலையில் சனி பகவானையும், அதன்பிறகு அனுமனையும் வழிபட்டு வந்தால் துயரங்கள் விலகி ஓடும். தொடர்கதையாய் வந்த கடன் சுமை குறையும்.

தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!

சனி பகவான் சன்னிதியில் எள்தீபம் ஏற்றி வழிபடுங்கள். சனி உங்களுக்கு சகல யோகமும் வழங்குவார். சிறப்பு வழிபாடாக யோகபலம் பெற்ற நாளில், தஞ்சை மாவட்டம் சூரியனார் கோவில் சென்று விநாயகர் மற்றும் நவக்கிரகம் அனைத்தையும் வழிபட்டு வருவது நல்லது. அருகிலுள்ள திருமங்கலக்குடி மங்களேஸ்வரர் வழிபாடும், மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொடுக்கும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்  - Page 3 Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by ராஜா Tue Dec 09, 2014 11:31 am

ayyasamy ram wrote:ஜோசியம் என்பது ஒரு கணக்குதான்...

ஆகவே கண்டம் இருக்கிறது என்று பொதுவாகதான்
சோதிடர் சொல்வார்கள்..

மேலும் இவை பொதுவான பலன்களே...
அவரவர் சுய ஜாதகத்தில் தெசாபுத்தி வலுவாக
இருந்தால் அதற்கேற்ப பலன்கள் மாறும் என்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும்


உண்மை , பெரும்பாலான ஜோதிடர்களுக்கு ஒழுங்காக ஜோதிடம் பார்க்க தெரியாது , அப்படியே தெரிந்தவர்களும் சில விஷயங்களை பார்ப்பவரிகளின் மனதை குழப்ப கூடாது என்பதற்காக மேலோட்டமாக சொல்லுவார்கள். உதாரணதிற்கு நீங்கள் சொல்லிய "கண்டம்" கூட அந்த ஜோதிடருக்கு சரியாக யார் இறப்பார்கள் என்று தெரிந்திருக்கும் ஆனால் பார்ப்பவரை பீதிக்கு உள்ளாக்க வேண்டாம் என்று சொல்லாமல் விட்டிருப்பார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்  - Page 3 Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by krishnaamma Tue Dec 09, 2014 12:17 pm

ஆஹா.....இது எத்தனாவது முறை ? புன்னகை......ஏற்கனவே 2 முறை போட்டிருக்கு ராஜா, மேலும் நான் வீடியோ கூட போட்டிருக்கேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்  - Page 3 Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by ராஜா Tue Dec 09, 2014 12:23 pm

krishnaamma wrote:ஆஹா.....இது எத்தனாவது முறை ? புன்னகை......ஏற்கனவே 2 முறை போட்டிருக்கு ராஜா, மேலும் நான் வீடியோ கூட போட்டிருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1108571ஏற்கனவே ஒருவர் போட்டிருந்தது , ஒவ்வொரு ராசிக்கும் ஒரு பாரா அளவிற்கு எதோ ஒரு வெளிநாட்டில் வாழும் தமிழ் ஜோதிடர் குறித்தது , நீங்கள் போட்டிருந்தது காணொளி அதை எல்லாவளவு பேர் ஒலியுடன் பார்க்க முடியும் என்பதால் தான் இதை பதிவிட்டேன்.

தவிர ஒவ்வொரு வருடமும் , தினத்தந்தியில் வரும் இதை தான் சிவா பதிவிடுவார் அதனால் தான் இதை பதிவிட்டேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்  - Page 3 Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by T.N.Balasubramanian Tue Dec 09, 2014 12:30 pm

ராஜா wrote:
ayyasamy ram wrote:ஜோசியம் என்பது ஒரு கணக்குதான்...

ஆகவே கண்டம் இருக்கிறது என்று பொதுவாகதான்
சோதிடர் சொல்வார்கள்..

மேலும் இவை பொதுவான பலன்களே...
அவரவர் சுய ஜாதகத்தில் தெசாபுத்தி வலுவாக
இருந்தால் அதற்கேற்ப பலன்கள் மாறும் என்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும்


உண்மை , பெரும்பாலான ஜோதிடர்களுக்கு ஒழுங்காக ஜோதிடம் பார்க்க தெரியாது , அப்படியே தெரிந்தவர்களும் சில விஷயங்களை பார்ப்பவரிகளின் மனதை குழப்ப கூடாது என்பதற்காக மேலோட்டமாக சொல்லுவார்கள். உதாரணதிற்கு நீங்கள் சொல்லிய "கண்டம்" கூட அந்த ஜோதிடருக்கு சரியாக யார் இறப்பார்கள் என்று தெரிந்திருக்கும் ஆனால் பார்ப்பவரை பீதிக்கு உள்ளாக்க வேண்டாம் என்று சொல்லாமல் விட்டிருப்பார்
மேற்கோள் செய்த பதிவு: 1108562

உண்மை ராஜா.!
ஜாதகத்தில் நிச்சயமாகத் தெரியும் .
பித்ரு /மாத்ரு கர்மா வா
அல்லது புத்திர சோகமா என்று.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்  - Page 3 Empty Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum