ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை சொல்றேன் கேளுங்க..!

3 posters

Go down

கதை சொல்றேன் கேளுங்க..! Empty கதை சொல்றேன் கேளுங்க..!

Post by Tamilzhan Sun Nov 08, 2009 1:22 pm

அழுக்குப் பாவாடை, தாவணி, சட்டை எனத் திரிந்து கொண்டிருக்கும் இளம்பெண்கள் திருவிழா அன்றுதான் சீவிச் சிங்காரித்து வருவர். இவர்களைப் பார்ப்பதற்காகவே ஒவ்வொரு தெரு முனையிலும் வாலிபர்கள் காத்திருப்பர். அந்தக் கூட்டத்திலுள்ள யாரையாவது பார்த்து ஒரு பெண் சிரித்து விட்டால் போதும். அன்றைய மொத்தச் செலவும் அவன் தலையில் தான் விழும். இதுதவிர, இளவட்டங்கள் தங்களுக்குப் பிடித்தவர்கள் உடலில் மஞ்சத்தண்ணி ஊத்தி தங்களுக்குள் ஒளித்து வைத்திருந்த காதலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் இந்த திருவிழாக் காலங்களில்தான்.
*********************************************************************************
கலர் கலரான வளையல்கள், தொங்கட்டான்கள், பாசிமணிகள், மிட்டாய்கள், இனிப்புகள், வாட்ச், பொம்மை, குச்சி ஐஸ், பலூன், சுக்கு காபி, சீட்டாட்டம், ஓட்டல் என கலகலக்க வைக்கும் திருவிழாக் கடைகள்தான் திருவிழாவின் ஸ்பெஷல். அக்காவுக்கு கல் தோடு, தங்கச்சிக்கு துப்பாக்கி, தம்பிக்கு மிட்டாய், நண்பனுக்கு சிக்கன் புரோட்டா என வெளிïரில் வேலை பார்த்த காசைக் கரைய வைக்கும் கடைகள் திருவிழாவில் ஏராளம் உண்டு.
*********************************************************************************
பஞ்சாயத்து நடக்காத கிராமங்களே கிடையாது. சொத்துத் தகராறு, வெட்டுக்குத்து, வாய்க்காய்த் தகராறு, அடிதடி, திருட்டு, காதல், சாதிப்பிரச்சினை, விவாகரத்து என ஊர்ல நடக்குற ஒவ்வொரு பிரச்சினையும் பஞ்சாயத்தில்தான் பேசி தீர்க்கப்படும். ஆலமரத்தடியும், சொம்பும் பஞ்சாயத்தின் இரு கண்கள். இவை இல்லாமல் எந்தவொரு பஞ்சாயத்தும் நடக்காது. அதேபோல பஞ்சாயத்துக்கு வர்றவங்க எல்லாரும் சட்டையை கழட்டி வச்சிட்டுதான் உட்காரணும். கத்தி, கம்பு, சூரின்னு ஆயுதங்கள பதுக்கி வச்சிருந்தா கண்டுபிடிக்கிறதுக்கு தான் இந்த ஏற்பாடு. எவ்ளோ உஷார் பாருங்க.
*********************************************************************************
பிரச்சினையை அவங்களாகவே பேசி தீர்க்குறதுக்காக ஒவ்வொரு பிரச்சினைக்கும் பஞ்சாயத்துல கெடு கொடுப்பாங்க. உதாரணமா விவாகரத்துன்னா அதுக்கு 5 கெடு கொடுப்பாங்க. ஒரு கெடுவுக்கு 8 நாள், 16 நாள்னு கணக்கு உண்டு. அந்த நேரத்துக்குள்ள பேசித் தீர்க்கலைன்னா இரண்டு பக்கத்து நியாயத்தையும் கேட்டு தீர்ப்பு சொல்லிருவாங்க. கூரைக்குச்சியை இரண்டா ஒடைச்சு, ஆளுக்கு ஒன்னா கொடுத்தா விவாகரத்து செஞ்சாச்சுன்னு அர்த்தம்.
*********************************************************************************
சில கிராமங்களில் கிடாமுட்டு விழா நடக்கும். செம்புளிக் கிடா, குரும்பக் கிடா போன்றவைதான் முட்டுவதற்கு ஏற்றவை. அதேபோல் இரண்டரை வயதுடைய கிடாவை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்தக் கிடாக்களுக்கு தினமும் பாதாம் பருப்பு, மாட்டுப்பால், நாட்டுக்கோழி முட்டை, கரும்பு, சோளம், உளுந்து, பச்சரிசி, பருத்தி விதை, கொள்ளு போன்றவை உணவாகத் தரப்படுகிறது. தினமும் ஐந்து கிலோமீட்டர் நடக்க வைக்கிறார்கள். அப்போதுதான் உடம்பில் கொழுப்பு சேராதாம். பந்தயத்தில் 40 அடி, 50 அடி பின்னோக்கிப்போய் பாய்ந்து வந்து முட்டும் கிடாக்கள்தான் `நம்பர்1'.
********************************************************************************
கரகாட்டம் இல்லாத திருவிழாக்களே கிராமங்களில் கிடையாது. சாமி வீதி உலா செல்லும்போதும், முளைப்பாரி எடுத்துச் செல்லும்போதும் நாதஸ்வரம், மேளத்தோடு தலையில் கரகம் வைத்து ஆடிக்கொண்டே செல்வர். அந்தக் கரகம் பித்தளையால் செய்யப்பட்டிருக்கும். அதனுள் பச்சரிசியைக் கொட்டி வாய்ப்பகுதியில் தேங்காய் வைத்து கட்டி விடுவர். அதன்மீது குளத்துத் தண்ணீரில் வளரக்கூடிய கிளச்சிக் கட்டை வேரைச்சுற்றி, பூவால் அலங்காரம் செய்தால் கரகம் தயாராகி விடும். இதைத் தலையில் வைத்து அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு மொத்தக் கூட்டமும் சொக்கி நிற்கும்.
***********************************************************************************
கிராமப்புறங்களில் `பசு மிதித்தல்' என்ற சொல்வழக்கம். அதாவது வயதுக்கு வந்த பசுவை, திடகாத்திரமான காளையோடு சேர வைத்து இனவிருத்தி செய்வது. எல்லா காளைகளையும் பசுவோடு சேர வைக்க முடியாது. இரண்டு கால்களும் நல்ல வளர்த்தியாகவும், வலுவாகவும் இருக்கும் காளைகளே இனவிருத்திக்கு ஏற்றவை. இது போன்ற காளைகளுக்கு பருத்திக் கொட்டையை அரைத்து ஊற்றியும், பச்சைப்புல்லை உண்ணக் கொடுத்தும் கொழுகொழுவென வளர்க்கிறார்கள். பசுமாட்டைக் கண்டால் பாயும் அளவுக்கு அதன் வளர்ப்பு இருக்கும். பருவமடையாத பசுக்களைக் கண்டால் இந்தக் காளைகள் பக்கத்தில் கூட செல்வதில்லை. சில காளைகள் ஒருநாளைக்கு 8 பசுக்கள் வரை `மிதிக்கின்றன.'


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கதை சொல்றேன் கேளுங்க..! Empty Re: கதை சொல்றேன் கேளுங்க..!

Post by செரின் Sun Nov 08, 2009 1:25 pm

என்ன தமிழன்ணா இப்ப என்னமோ கதை சொல்லுறன் என்றீங்களே.. எங்க..??ஃ காணாமே கதை சொல்றேன் கேளுங்க..! Icon_eek கதை சொல்றேன் கேளுங்க..! Icon_eek
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

கதை சொல்றேன் கேளுங்க..! Empty Re: கதை சொல்றேன் கேளுங்க..!

Post by Tamilzhan Sun Nov 08, 2009 1:28 pm

கதைனு சொன்னா ஒடிவந்துடுவீங்க...மேலே சொன்ன தகவல்தான் கதை.. கதை சொல்றேன் கேளுங்க..! 755837


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கதை சொல்றேன் கேளுங்க..! Empty Re: கதை சொல்றேன் கேளுங்க..!

Post by செரின் Sun Nov 08, 2009 1:31 pm

Tamilzhan wrote:கதைனு சொன்னா ஒடிவந்துடுவீங்க...மேலே சொன்ன தகவல்தான் கதை.. கதை சொல்றேன் கேளுங்க..! 755837

என்னமா.. விங் பண்ணுறாங்க... உக்காந்து யோசிப்பீங்களா..? இப்படி எல்லாம் தலைப்பு போட
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

கதை சொல்றேன் கேளுங்க..! Empty Re: கதை சொல்றேன் கேளுங்க..!

Post by மீனு Sun Nov 08, 2009 1:35 pm

கதை சொல்றேன் கேளுங்க..! 56667 கதை சொல்றேன் கேளுங்க..! 56667


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கதை சொல்றேன் கேளுங்க..! Empty Re: கதை சொல்றேன் கேளுங்க..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum