ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்களப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சூர்யா

Go down

சிங்களப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சூர்யா Empty சிங்களப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சூர்யா

Post by aarul Sun Nov 08, 2009 11:10 am

பத்திரிகையாளர்களை வசைபாடி வழக்கு வம்பில் சிக்கியிருக்கும் சூர்யாவை நோக்கி அடுத்த
வில்லங்கம் கிளம்பியிருக்கிறது! "சிங்களப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்
சூர்யா. அந்தப் படத்தி லிருந்து சூர்யா விலகாவிட்டால் அவரின் வீட்டின் முன்
ஆர்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம்' என பரபரப்பை கிளப்புகிறது இந்து
மக்கள் கட்சி.

இது குறித்து விசாரணையில் இறங்கினோம்!

இந்தோ-லங்கன்
கூட்டுத் தயாரிப்பில் உருவாகவிருக்கும் சிங்களப் படம் "தேவ தாசிகள்'! இந்தப்
படத்தில் சூர்யா, சிம்ரன் ஆகியோருடன் சிங்கள நட்சத்திரங்களான க்ளட்டஸ் மெண்ட்டிஸ்,
ரெக்ஸ் கோடி பில்லி, சண்டன் விஜேஸ்ரீ மற்றும் பிரபல சிங்கள முன்னணி நடிகை மஞ்சுளா
ஆகியோரும் நடிக்கிறார் கள். இதில் சூர்யா ஜோடியாக நடிகை மஞ்சுளா நடிக்கிறார். கேமரா
மற்றும் நடனம் ஆகிய வேலைகளை தமிழ் சினிமா கலைஞர்கள் செய்கிறார் கள். பொலனருவா,
சிகிதியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக் கிறது. படத்தை இயக்குவது சிங்கள
சினிமாவின் பிரபல இயக்குநர் சுரேஷ் குமார சிங்கே. இப்படி ஒரு அதிரடி தகவல் கோலி
வுட்டைக் கலக்க... "இலங்கையில் சிங்கள அரசு தமிழர்களை கொன்று குவித்து, முகாம்களில்
அடைத்து சித்ரவதை பண்ணிக் கொண்டிருக்கும் நேரத் தில் சிங்களப் படத்தில் சூர்யா
நடிப்பதா?' என கோபக் குரல்களும் ஒலிக்கிறது.

இந்த விஷயத்தை கையிலெடுத்து
போராட தயாராகியிருக்கும் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர்
ஆ.அண்ணாத்துரையிடம் பேசினோம்.

""எங்களுடைய சினிமா நண்பர்கள் மூலம் பத்து
நாட்களுக்கு முன்பே சூர்யா சிங்கள படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக
தகவல்கள் வந்தது. உடனே நாங்கள் சூர்யா தரப்புக்கு தகவல் சொல்லியனுப்பினோம். ஆனால்
‘"சிங்களப் படத்தில் கமிட் ஆகவில்லை' என பதில் வந்தது! ஆனால் ஓரிரு மீடியாக்களில்
"சூர்யா நடிப்பது உண் மைதான்' என இப்போது செய்தி வந்துள்ளது. இதையடுத்து இந்த
படப்பிடிப்பிற்கு ஏற்பாடு செய்யும் மேனேஜர்களுள் ஒருவரை தொடர்பு கொண்டு பேசினார்
எங்கள் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணன். சூர்யா, சிம்ரன் ஆகியோருக்கு இலங்கை செல்ல
ஃப்ளைட் டிக்கெட்டெல்லாம் போட்டாச்சு! டிசம்பர் 5-ந் தேதி ஷூட்டிங் தொடங்குகிறது
என்று உறுதிபடுத்தியிருக்கிறார் அந்த மேனேஜர். அதனால்தான் சூர்யாவுக்கு எதிராக
போராட்ட எச்சரிக்கை விட்டிருக்கிறோம்.

சூர்யாவை பாலா, அமீர் போன்ற தமிழ்
கலைஞர்கள் தான் சிறந்த நடிகராக்கினார்கள். இப்போது அவர் திறமையை சிங்களர்கள்
பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். தமிழ் சினிமாவையும், நடிகர்களையும்
வாழவைப்பதே உலகம் முழுக்க இருக்கும் இலங்கை தமிழர்கள்தான். அவர்களின் உணர்வுகளுக்கு
எதிராக இலங்கை தமிழர்களை கொன்று குவித்து, கருவறுப்பு செய்து கொண்டிருக்கும்
சிங்களர்களோடு சூர்யா எப்படி கைகோர்க்கலாம்? உலகறிந்த ஒரு தமிழ் நடிகர் சிங்களப்
படத்தில் நடிப்பதிலிருந்தே தெரியவில்லையா... சிங்களர்கள் தமிழர்களுக்கு
எதிரானவர்கள் இல்லை என்று' என நாடகம் போட சிங்கள அரசு முயற்சிக்கிறது. இந்த சதிக்கு
சூர்யா உடந்தையாக இருக்கக் கூடாது!

இந்தப் பட திட்டத்தின் பின்னணியில்
சென்னையிலுள்ள இலங்கை தூதர் வடிவேலு கிருஷ்ணமூர்த்தி இருந்து கொண்டு குழப்புவதாக
சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது''’என ஆவேசப்பட்டார் அண்ணாத்துரை.

சினிமா
வட்டாரங்களில் இது குறித்து விசாரித்தோம்.

நடிகை ராதிகா நிறைய சீரியல்களை
தமிழ்-சிங்களத்தில் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார் இப்போதும். சிங்கள(அப்பா)-
இந்திய(அம்மா) கூட்டுத்தயாரிப்பான பூஜா இரண்டு நாட்டிலும் முன்னணி நடிகையாக
இருக்கிறார். இப்போது சர்ச்சைக்கு காரணமான தேவதாசிகள் பட இயக்குநரின் முந்தைய
படத்தில் சிங்கள ஹீரோ ரோஷன் ரணவா னாவுடன் நம்ம சிலந்தி மோனிகா நடித்திருக்கிறார்.
சிங்களப் படங்களை நமது சென்னை லேப்களில் பிரிண்ட் போட்டுக் கொண்டுதான்
இருக்கிறார்கள். நடிகர்களைப் பொறுத்தவரையில் முடிவு எடுப்பது பெரும்பாலும்
அவர்களின் மேனேஜர்தான். சூர்யாவிடம் "இது இலங்கையில் தயாராகும் தமிழ்ப்படம்'
என்றுகூட அவரின் மேனேஜர் தங்கதுரை சொல்லியிருக்கலாம். அதனால் சூர்யாவை குற்றம்
சொல்ல முடியாது! கலைஞர்களுக்கு இன,மொழி பேதம் கிடையாது. இருப்பினும் இப்போதுள்ள
சூழலில் உணர்வு ரீதியாக சிங்களப் படங்களில் தமிழ் நட்சத்திரங்கள் பங்கு பெறாமல்
இருப்பது நல்லது'' என்றார்கள்.

சூர்யாவிடம் இது குறித்து
கேட்டோம்.

""எங்களது அகரம் பவுண்டேஷன் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை
அகதிகளின் குழந்தைகள் படிக்க உதவுகிறோம். திரையுலகம் சார்பில் இலங்கை தமிழருக்கு
ஆதரவாக நடத்தப்பட்ட பல போராட்டங்களிலும் கலந்து கொண்டிருக் கிறேன்.
தகவல்-தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்கள் நடத்திய இலங்கை தமிழருக்கான மனித
சங்கிலி போராட்டத்தில் நானும் என் தம்பி கார்த்தியும் கலந்து கொண்டோம்! நானும்
இலங்கை தமிழரின் நலத்தில் அக்கறையுள்ளவன்தான். சிங்களப் படத்தில் நடிப்பதாக வந்த
செய்தி எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இப்போது ஹரி இயக்கத்தில் ‘"சிங்கம்'
படத்தில் நடித்து வரு கிறேன். தொடர்ந்து ராம்கோபால் வர்மாவின் இந்திப்படம்.
ஏ.ஆர்.முருகதாஸ் படம் நடிக்க வுள்ளேன்! இவைதவிர வேறு கமிட்மென்ட்ஸ் ஏதும் இல்லை.
சிங்களப் படத்தில் நடிப்பதாக சொல்வது உண்மையல்ல... எனக்கு அதில் விருப்பமும்
இல்லை''’என்றார் சூர்யா!

அதே நேரத்தில் கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி
மிரர் பத்திரிகை யில் பட ரைக்டர் சுரேஷ் குமார சிங்கே, தான் இயக்கும் "தேவ தாசிகள்'
படத்தில் சூர்யா- சிம்ரன் நடிப்பதாக அளித் திருக்கும் பேட்டி சூர்யா விஷயத்தில்
மேலும் சர்ச் சைகளை உருவாக்கு கிறது.
http://www.nakkheera...les.aspx?A=4016
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்களப்படத்தில் நானா? இல்லவே இல்லை - நடிகர் சூர்யா
» ''விஜய், சூர்யா மாதிரி என்னால் நடிக்க முடியாது!''
» ''விஜய், சூர்யா மாதிரி என்னால் நடிக்க முடியாது!'' - மாதவன்
» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்?-எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
» சூர்யா நடிக்க உள்ள புதுப்படத்தின் படப்பிடிப்பு, வருகிற மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum